Tuesday, August 27, 2013

மஞ்சள் விவசாயுடன் மதிமுக

மஞ்சள் வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த
விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

ஈரோடு தொகுதி #மதிமுக மக்களவை உறுப்பினர் ஏ. கணேசமூர்த்தி, தெலுங்குதேசம் எம்.பி.க்கள் நாம நாகேஸ்வர ராவ், ரமேஷ் ரத்தோடு ஆகியோருடன் மஞ்சள் விவசாயிகள் சங்க தேசிய தலைவர் பி.கே. தெய்வசிகாமணி, ஆந்திர பிரதேச மாநில தலைவர் நரசிம்ம நாயுடு ஆகியோர் நாடாளுமன்ற வளாகத் தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை திங்கள் கிழமை சந்தித்தனர்.
அப்போது, விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அளித்த மனு:

சராசரியாக ஒரு குவிண்டால் மஞ்சள் விளைவிக்க ரூ. 8,700 வரை செலவா கிறது. ஆனால், ஒரு குவிண்டால் மஞ்சளுக்கான கொள்முதல் விலையை ரூ. 4,000 ஆக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதனால், உற்பத்திக்கு ஆகும் செலவைக்கூட அரசு நிர்ணயித்த விலை மூலம் ஈடுசெய்ய முடியவில்லை.

இந்த நிலைக்கு தேசிய பண்டக வகையீடு சந்தை (என்சிடிஇஎக்ஸ்) செயல்பாடுதான் காரணம் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment