இந்திய அரசு மீது விசாரணைக் கமிசன் அமைக்க வேண்டும்-#வைகோ
2008 ஆம் ஆண்டு, நோர்வே நாட்டில் கூடிய மாநாட்டின்போது, ஐரோப்பிய ஒன் றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னிடம் சொன்னார்கள்; ஏன், நோர்வே
அமைச்சர்களும் சொன்னார்கள்.
உலகத்தின் எந்த நாடும்,இந்தியாவைக் கடந்து வந்து, ஈழத்துக்கு விடுதலை பெற்றுத் தந்து விடாது. ஏனெனில், இன்றைக்கு இந்தியா 100 கோடி மக்களைக் கொண்டு இருக்கின்ற ஒரு வல்லரசு ஆகி விட்டது.எனவே, இந்தியாவைக் கடந்து வந்து, ஐரோப்பிய நாடுகளோ, அமெரிக்காவோ தலையிடும் என்று
எதிர்பார்க்காதீர்கள். எதிர்காலத்தில், இந்தியப் பெருங்கடலில்,இந்தியாவுக்கும், சீனாவுக்கும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடல் ஆதிக்கப் போட்டி வரக்கூடும்.
ஆனால், இலங்கைத் தீவில், தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையில், அவர்கள் ஒரு எல்லை தாண்டி வர மாட்டார்கள். இந்தியாவில் ஏழு கோடித் தமிழர்கள்
இருக்கின்றீர்கள். ஆனால், இந்திய அரசு, இத்தனை இலட்சம் மக்கள் படு கொலை செய்யப்பட்டபோதும், சுதந்திரத் தமிழ் ஈழக் கோரிக்கையை ஆதரிக் காவிட்டால், மற்றவர்கள் எப்படி ஆதரிப்பார்கள்?

என்று கேட்டார்கள்.
இந்தக் கேள்வி, என் மனதுக்கு உள்ளே விஸ்வரூபம் எடுத்தது. இனி, அடுத்த
கட்டம் என்ன? இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் இந்த நோக்கத்தை
எடுத்துச் செல்வோம் என்று கருதித்தான், நேற்றைக்கு இந்தி மொழிப் பதிப்பின் வெளியீட்டு விழாவை நடத்தினோம். இந்தி மொழியில் புத்தகமாகவும் அச்சிட்டு வெளியிட்டு இருக்கின்றோம்.
தலைமை தாங்கியவர் யார் தெரியுமா? இன்றைக்கு இந்திய அரசியலில் எல் லோரது கவனத்தையும் ஈர்த்துக் கொண்டு இருக்கின்ற ராம் ஜெத்மலானி. பேர றிவாளன், சாந்தன், முருகனின் மென்னியை முறிக்க இருந்த தூக்குக் கயிற்றை அறுத்து எறிவதற்கு,சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடி,தடை ஆணை வாங்கிக் கொடுத்தாரே, என்றைக்கும் நமது நன்றிக்கு உரிய அந்த ராம் ஜெத்மலானி அவர்கள்.
அவர் பேசு கின்ற போது நிறைய செய்திகளைச் சொன்னார்;அதில் ஒரு கருத் தை அருமையாகச் சொன்னார்: பிரபாகரனை அரசாங்க விருந்தாளியாக
ஏமாற்றி இந்தியாவுக்கு அழைத்துக் கொண்டு வந்து, நம்பிக்கைத் துரோகம்
செய்து, இந்திய இராணுவத்தை ஈழத்துக்கு அனுப்பி, புலிகளையும் தமிழர்களை யும் கொன்று குவிக்கக் காரணமாக இருந்தார் ராஜீவ் காந்தி.
நாம் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாகப்பேசுகின்றபோது, காஷ்மீரிலும் இதே நிலை மை தானே என்று சிலர் கேள்வி எழுப்பலாம். ஆனால், இந்தியாவில் காஷ்மீர் பிரச்சினை வேறு; இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களின் பிரச்சினை வேறு. இரண்டையும் ஒன்றாக்கிக் குழப்பாதீர்கள். விடுதலைக்கு முன்பு,காஷ்மீரம், ஒரே அரசாகத்தான் இருந்தது.ஒரே மன்னரால் ஆளப்பட்டது. ஆனால்,1947 க் குப் பிறகு, அதன் ஒரு பகுதியை, பாகிஸ்தான் கைப்பற்றிக் கொண்டது.
இருப்பினும், காஷ்மீர் மாநிலத்தில் பொது வாக்கெடுப்புக்கு நேரு ஒப்புக் கொண்டார்.ஆனால்,அன்றைக்கு ஐ.நா.மன்றம், புத்திசாலித்தனமாக ஒரு தீர் மானத்தை நிறைவேற்றியது. தன் பிடிக்குள் பிடித்து வைத்து இருக்கின்ற காஷ் மீர் மாநிலத்தின் பகுதிகளை விட்டு, பாகிஸ்தான் படைகள் வெளியேறினால்
தான், அந்த பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றுதான், தீர்மானம்
நிறைவேற்றி இருக்கின்றது.
ஆனால், இலங்கைத் தீவில் நிலைமை அப்படி அல்ல. அங்கே தமிழர்கள் தனி
அரசு; சிங்களவர்கள் தனி அரசு அமைத்து ஆண்டார்கள். இரண்டுமே, தனித் தனியானவை. ஈழத்தமிழர்களை, ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவிப்ப தற்கு, இந்திய அரசு துணை நின்றது என்றார்.
தமது உரையை நிறைவு செய்யும்போது,ஜெத்மலானி அவர்கள் நெஞ்சு நெகி ழத் தக்க வகையில் சொன்னார்: என் நண்பன் வைகோவுக்காக, நான் எந்தப்
போராட்டத்தையும் நடத்தத் தயாராக இருக்கின்றேன். அது மட்டும் அல்ல, என்
உயிர் இருக்கின்றவரையில், (still i am alive) வைகோவுக்காகவும், தமிழர்களுக்
காகவும், என் சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் செய்வேன்’ என்றார். (பலத்த கைதட்டல்).
அதே நிகழ்ச்சியில் குல்தீப் நய்யார் பேசும்போது சொன்னார்: விடுதலைக்காகப் போராடுகின்றவன், அறவழியில் இலட்சியத்தை அடைய முடியவில்லை என் றால், ஆயுதம் ஏந்திப் போராடுவதைத் தவிர அவனுக்கு வேறு என்ன வழி? அவர்களை பயங்கர வாதிகள் என்று சொல்ல முடியாது. அப்படி யானால், பகத்சிங் ஒரு பயங்கரவாதி என்று சொல்வீர்களா? என்று கேட்டார்.
ஆம்; ஒரு காலத்தில் விடுதலைப்புலிகளைப் பற்றி வேறுவிதமான கருத்துக் கொண்டு இருந்த பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் அவர்கள்தாம், இன் றைக்கு இந்தக் கருத்தைப் பதிவு செய்தார். பண்டித நேரு உள்ளிட்ட பெருந் தலைவர்களோடு பழகியவர்; இந்தியாவின் புகழ்மிக்க எழுத்தாளர் அவர்.
அந்தக் குறுந்தட்டை வெளியிட்டவர்,டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை
நீதிபதியாக இருந்த ராஜேந்திர சச்சார். சிறுபான்மை இஸ்லாமிய மக்களின்
விடியலுக்காக அறிக்கை தந்தாரே, அந்த சச்சார். அவர்தான், ஈழத்தமிழர்களுக் கான டப்ளின் தீர்ப்பு ஆயத்தில் உறுப்பினராக இருந்தவர். அவர் சொன்னார்: ஈழத்தைச் சேர்ந்த சின்னஞ்சிறு பிள்ளைகள் எல்லாம் வந்து சாட்சியம் சொன் னார்கள்; இலங்கை இராணுவ விமானங்கள் குண்டுகளை வீசி, மக்களைக் கொன்றதைச் சொன்னார்கள் என்று மிக உருக்கத் தோடு தன்னுடைய கருத்து களை எடுத்து வைத்தார்.
நான் அங்கே உரை ஆற்றும்போது வெளியிட்ட ஒரு அறிவிப்பை, இதுவரை
சொல்லாத ஒரு கருத்தை, இந்தக் கூட்டத்தில் எடுத்து வைக்கின்றேன்: சோனி யா காந்தி தலைமை தாங்குகின்ற இந்த அரசு, காங்கிரஸ் கட்சி தலைமை வகிக்கின்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, எங்கள் தொப்புள் கொடி
உறவுகளை, இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இராஜபக்சே அரசுக்கு அனைத்து விதத்திலும் உதவிய கூட்டுக் குற்றவாளி. ஈழத்தமிழர் இனப் படுகொலையின் கூட்டுக்குற்றவாளி.
இந்த அரசு தூக்கி எறியப்படும். வேறு ஒரு அரசு அமையும். அப்போது, ஒரு
விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும். 2004 ஆம் ஆண்டில் இருந்து, இந்த அரசு செய்த துரோகங்கள், இந்திய இராணுவத்தின் தரைப்படை, கடற்படை,
விமானப்படைத் தளபதிகள், எத்தனை முறை கொழும்புக்குப் போனார்கள்?
எத்தனை நாள்கள் தங்கினார்கள்? என்னென்ன ஆலோசனைகள் நடத்தினார் கள்? எவ்வளவு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தார்கள்? எந்த வழிகளில் தாக்கு தல் நடத்தலாம் என்று காட்டிக் கொடுத்தார்கள்? எப்படியெல்லாம் குண்டுமழை பொழிவதற்கு உதவினார்கள்?என்பதையெல்லாம் விசாரித்து வெளிக்கொண்டு வர வேண்டும்.
எங்களுடைய சகோதர, சகோதரிகள் சிந்திய ஒவ்வொரு சொட்டு இரத்தத்துக் கும், இந்த அரசு பதில் சொல்லியாக வேண்டும்.
விசாரணைக் கமிசன் அறிக்கையின் அடிப்படையில்,குற்றவாளிகளைக் கூண் டில் நிறுத்த வேண்டும். இந்த அரசுக்குத் தலைமை தாங்கியவர்கள், உடன் இருந்து உதவியவர்களை விசாரிக்க வேண்டும்.
(சென்னை மாவீரர் நாள் பொதுக் கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரையின் ஒரு பகுதி - நவம்பர், 27-2012)

No comments:
Post a Comment