Wednesday, August 28, 2013

திருப்புமுனையை உருவாக்கும்!

விருதுநகரும் திருப்புமுனையை உருவாக்கும்!

தொலைக்காட்சியில் நிகழ்வுகள் ஓடிக் கொண்டிருந்தன; டில்லியில் மாண்பு மிகு பாரதப் பிரதமர் அவர்களும், சென்னையில் மாண்புமிகு முதல்வர் அவர் களும் தேசியக் கொடியினை ஏற்றி வைத்த புனிதமான நிகழ்வுகள்!

அதையடுத்து, மக்களின் அங்கங்களாகஉள்ள பல்வேறு துறைகளைச் சார்ந்த வர்களுக்கு - பலவகை விருதுகளும் வழங்கப்பட்டன. ஆம், இது ஆகஸ்ட் 15-
2013 இந்திய விடுதலை நாள்!

“மகுடமெனும்” விருதுகளை ம.தி.மு.க.வினருக்குச் சூட்டிட, மக்களே உறுதி
பூணும் நாள்தான் செப்டம்பர் 15-2013 அண்ணா பிறந்த நாள் விருதுநகரில்!

ஆகஸ்ட் 6-2013 இல் விருதுநகரில்“கால்கோள் விழா” நடத்தியுள்ளார் வைகோ;

செப்டம்பர் 15-2013 இல்நடைபெறும் அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டுக் கான பந்தலை நிர்மாணிக்க நடத்தப் பட்ட கால்கோள் விழா மட்டுமல்ல!

ஏமாற்றங்களுக்கு ஆளான பொதுமக்கள்- மாற்றங்களுக்கு வழிகாணத் துடிக் கும் மாணவச் சமுதாயம் - முன்னேற்றம் காண முனைப்புடன் தொண்டாற்றி டத் தொடரும் வாலிபப் பட்டாளம் -இவர்கள் எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு - வரலாறு படைத்திட வழிகாண - ம.தி.மு.க.-வின் “அரியணை” - அலங்காரப் பந்தலுக்கான கால்கோள்விழா என்றால் அது மிகையல்ல!

திராவிட இயக்க வரலாற்றில் திருப்பு முனைகளை உருவாக்கியது திருச்சி
என்று இன்றளவும் சொல்லப்படுவது உண்டு.

இல்லை! இல்லை! விருதுநகரும் திருப்பத்தை ஏற்படுத்தியது என எதிர் காலத் தில் திராவிட இயக்க வரலாற்றில் பதிவு செய்யப்படும்.

வெற்றி விருதுகளை அள்ளிக் குவிக்கும் 2014 தேர்தல் களத்திற்கு - முன்னோட் டமாக - விருதுநகர் மாநாடு (2013) - நமது ஆடுகளத்திற்கான பயிற்சிக்கள மாகும்!

2009 இல் சோகக் குளமான நமது கண்கள், 2014 இல் ஆனந்தக் குளமாக வேண் டும்!

முடியாது என்பது மூடநம்பிக்கை! முடியுமா? என்பது அவநம்பிக்கை!! முடியும்
என்பதுதான் தன்னம்பிக்கை!!

ஆம்; கடந்த கால கசப்புகளைக் களைந்தெறிவோம்; நிகழ்கால நடப்புகளை நினைவில் கொள்வோம்;எதிர்காலம் எங்களுடையதே என எக்காளமிடுவோம்; ஏறுநடைபோட்டு             வீறுகொண்டு எழுவோம்!

வரலாறு படைக்க காத்திருக்கும் வைகோ அவர்களை, சமீப நாட்களாக நிதி யளிப்பு விழாக்களால் திக்குமுக்காடச் செய்து உள்ளனர் தமிழ் மக்கள்!

மானமிகு கழகத்தோழர்களும் -மாவட்டச் செயலாளர்களும்தானே -மாபெரும் சாதனையை நடத்திக் காட்டியவர்கள் என்று எண்ணலாம்;உண்மை தான்; ஆனால், அதற்கு அடித்தளம் அமைத்துத் தந்தவர்கள் தமிழக மக்கள் அல்லவா!

கூட்டத்துக்கு வந்தவர்களிடத்தில்,கைத்தறித்துண்டு ஏந்தி கூட்டச் செலவுக் காகத் தொண்டர்கள் நிதி வசூலிக்கும் வழக்கம் அண்ணா காலத்தில் இருந்தது;

அந்த அதிசய மனிதர் அண்ணாவின் வழியில் நடப்பவர் அல்லவா வைகோ!
“அரசியல் அதிசயம்” என்று ஆனந்த விகடனால் கணித்தும்-துணிந்தும் பாராட் டப்பட்டவர் அல்லவா நமது வைகோ! எனவே,

மனதில் மாசு இல்லை; கையில் காசுமில்லை; தமிழ் நாட்டு மக்களுக்கு மாறு தலும் ஆறுதலும் தந்திடத் தேர்தலைச் சந்திக்கும் - ம.தி.மு.க.வுக்கு “நிதி தாரீர்” என்று பகிரங்கமாக வேண்டுகோள்விட்டார் வைகோ!

அந்தத் தகுதியும், துணிவும் ம.தி.மு.க.வுக்குத்தானே உண்டு; மக்களும், தலை வர் வைகோவின் வேண்டு கோளுக்குச் செவி சாய்த்தனர். மாவட்டச் செயலா ளர்களும் சாதித்துக் காட்டினர்.

பணத்தைக் குவிப்பதற்கு நாம் என்ன மோடி மஸ்தான்களா? ஜெகன் மோகினி களா? நமக்குப் பணம் அலையில் வருமா? ஆலையில் வருமா? விமானம் ஹெலிகாப்டரில் வருமா?நமக்குத் தெரியவில்லையே பணம்குவிக்கும் கலை; இதுதானே நமது எதார்த்த நிலை!

‘வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்’என்பதைப் போல, வாய்விட்டுக் கேட்டார் வைகோ. தமிழ் நாட்டு மக்களும் தாராளமாக தந்துள்ளார்கள்.தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்றிட உழைக்கும் ம.தி.மு.க.வுக்கு இந்த நிதி பேருதவியாக இருக்கும்.

விடுதலை பெற்றிடக் காரணமானவர்கள் நாங்கள் என வீராப்புடன் வாலாட்டி யவர் களை-அண்ணா தன்னுடைய நாவன்மையால் தாலாட்டித் தூங்க வைத் தார் 1967 இல்.

தூக்கத்திலிருந்து எழ முடியாமல்,யாருடைய தோள் மீதாவது தொற்றிக் கொண்டு முகத்தைக் காட்டுகின்ற -வாலறுந்த நரியாய் -மூக்கறுந்த மூளியாய்  - உலா வரும் கூட்டத்திற்கு துதிபாட ஒரு கலைக்கூட்டம்.

என்ன விலை கொடுத்தாகிலும் வெற்றி களைக் குவித்து “ஜெ” போடலாம் என
நினைப்போரும் உளர் இங்கு!

“நாடுகெட்டுப் போச்சு - நாடு கெட்டுப் போச்சு” என வீடெங்கும் - வீதியெங்கும்
- ஊரெங்கும் மூச்சாகப் பேசித் திரியும் தமிழ்ப் பெருமக்களே!

பட்டினி கிடப்பவனுக்கு பழைய சோறு போடுவதற்குக்கூட மனசு இல்லை.

நாடுகெட்டுப் போகக் காரணமானவர் களுக்கு“பருப்புச் சோறும் -பால் சோறும்” மாற்றி மாற்றி பரிமாறுவது ஏன்?

நாற்றம் அடிப்பதாக மூக்கைப் பொத்திக் கொண்டு - கூவம் ஆற்றின் சேற்றில்
முகம் கழுவிட முனைவது ஏன்?

சாக்கடையில் சந்தனம் தயாரிப்பதாகக்கயிறு திரிப்போர்களிடம் சரணடைவது
ஏன்?

போர்வாளின் சுழற்சிகண்டு அன்று பொய்யுரைத்த புல்லர் கூட்டம் புறமுது கிட்டு ஒடும் நாளை;

வீறுகொண்டு எழுந்து நிற்கும் வேங்கையின் (வைகோ) தோற்றம்கண்டு -பாசக் கூண்டில் அடைக்க நினைத்தோர் “வியந்து பார்க்கின்றனர்! வேர்த்து நிற்கின் றனர்!”

பேருக்குத் தளபதியல்ல; வைகோ போராடும் தளபதி! வைகோ போராடாத
- குரல் ஒலிக்காத பிரச்சினைகள் உண்டா?

மஞ்சள் பயிரிடும் விவசாயிகளுக்குப் போராடவில்லையா?

தென்னைமர விவசாயிகளுக்காகப் போராடவில்லையா? கரும்பு விவசாயி
களுக்காகப் போராட வில்லையா? கரிசல் காட்டு விவசாயிகளுக்காகப் போரா ட வில்லையா? காவிரி டெல்டா விவசாயிகளுக்காகப் போராட வில்லையா?
அணுஉலையின் ஆபத்தை உணர்த்தப் போராடவில்லையா? நச்சுக் காற்றைப்
பரப்பும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடவில்லையா? பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை எதிர்த்துப் போராட வில்லையா?

ஆற்றுமணல் சுரண்டப்படுவதை எதிர்த்துப் போராடவில்லையா? சத்துணவு ஊழியர்களுக்காகப் போராட வில்லையா? சாலைப் பணியாளர் களுக்காகப் போராடவில்லையா? மக்கள் நலப் பணியாளர்களுக்காகப் போராட வில்லை யா? அரசு ஊழியர்களுக்காகப் போராடவில்லையா? மீனவர்களுக்காகப் போரா டவில்லையா? பாலாற்றுப் பிரச்சினைக்குப் போராடவில்லையா? ‘உள்ளாறு’ பிரச்சினைக்குப் போராட வில்லையா? அமராவதி ஆற்றுப் பிரச்சினைக்குப் போராடவில்லையா? காவிரிப் பிரச்சினைக்குப் போராட வில்லையா? முல் லைப் பெரியாறுப் பிரச்சினைக்குப் போராடவில்லையா?நெய்வேலி நிலக்கரித் தொழிலாளர் களுக்காகப் போராடவில்லையா? மதுவின் கோரத்தாண்டவத் தால் சின்னா பின்னமாகிப்போன தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்கப் போராட
வில்லையா?

சாதி-மதம்-கட்சி கடந்து பாதிக்கப்பட்டஎந்த மக்களுக்காகவாவது வைகோ
போராடவில்லை என்று எவரேனும் சொல்ல முடியுமா?

உலகமெலாம் வாழும் ஒட்டுமொத்தத் தமிழ் இனத்திற்காகவும் குரல் கொடுக் கும் வைகோ போர்க்களத்திற்கு அழைக்கிறார்! பார் அதிர படை திரட்டி வாருங் கள் விருதுநகருக்கு!

தமிழில் பன்னிரண்டு மாதங்கள் உண்டு; ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வகையில் சிறப்புப் பெறும்.

கூடல் நகராம் மதுரை மாநகர், மக்கள் கடலால் சூழப்பட்டிருக்கும். கள்ளழகர்
ஆற்றில் இறங்கும் திருவிழா சித்திரை மாதம்.

அலைபாயும் நீலக்கடல்; ஊர் முழுவதும் மக்கள் கடல்; விசாகத் திருவிழா
திருச்செந்தூரில் வைகாசி மாதம்.

தில்லை நடராஜர் திருவீதி உலா வரும் திருமஞ்சனத் திருவிழாவிற்குச் சிதம் பரத்தில் மக்கள் கடல் ஆனி மாதம்.

வள்ளி மணாளனைத் தரிசிக்க படியேறிச் செல்லும் மக்கள் கூட்டம் கிருத்தி கைக்குத் திருத்தணியிலும்,ஆண்டாளைத் தரிசிக்க ஆடிப்பூரத்தில் திருவில்லி புத்தூரிலும், ஆலவாயனின் தபசு காட்சியைக் காண சங்கரன் கோவிலிலும் மக்கள் அலைமோதும் ஆடிமாதம்.

பாரதப்போரின் சூத்திரதாரியான கண்ணனைக் கடவுளாகக் கருதும் பெருமாள் கோவில்கள் எங்கும் மக்கள் கூட்டம்! புரட்டாசி மாதம்!

வரங்கள் பல பெற்றதால் - வரம் பில்லாமல் வாலாட்டிய சூரபத்மனை சம்ஹா ரம் செய்த திருச்செந்தூரில் நீலக்கடற் பரப்பிற்கு இணையாக மக்கள் கடல் ஐப்பசி மாதம்!

கண்ணில் பட்டால் போதும் என எட்டுத் திக்கிலிருந்தும் மக்கள் கடல் சங்க மிக்கத் தூபம் இடும் திருவண்ணாமலைத் தீபம் கார்த்திகை மாதம்!

பட்டி தொட்டி முதல் பட்டணம் வரை அதிகாலைப் பொழுதில் - மங்கள ஒலி
எழுப்பும் இசையும்-நறுமணமும் கமழமக்கள் அலை அலையாய் வந்து கூடுவர்
ஆலயங்கள் தோறும் மார்கழி மாதம்!

பழனி நகரமே திக்குமுக்காடும் தைப்பூசத் திருநாள் தை மாதம்!

மக்கள் கடல் சங்கமிக்கும் மற்றுமொரு நிகழ்வு கும்பகோணம் ‘மகாமகம்’ மாசி
மாதம்!

மீண்டும் முத்திரைப் பதிக்கும் உத்திரத் திருவிழா பழனியில் மக்கள் அலை
மோதும்; பங்குனி மாதம்!

பன்னிரண்டு மாதங்கள் வரிசையில் “ஆவணி” மாதம் வரவில்லையே என்று
எண்ணுகிறீர்களா?

காஞ்சித் தலைவன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை சமீப ஆண்டுகளாக -
மாநில மாநாடாக வெவ்வேறு நகரங்களில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற் றக் கழகம் நடத்தும் மாநாட்டுத் திடலே மக்கள் கடல் சங்கமிக்கும் நிகழ்வாக உள்ளது; இது தான் ஆவணி மாதம்!

2013 இல் ஆவணி மாதம் மக்கள் கடல் சங்கமம் ஆவது விருதுநகரில்!

கொங்குச் சீமையிலிருந்தும் - கொல்லி மலைச் சாரலில் இருந்தும் - கொள்ளி டம் கரையிலிருந்தும் - கோடியக்கரையில் இருந்தும் - சிவகங்கைச் சீமையிலி ருந்தும் - சேதுபதி நாட்டில் இருந்தும் - குமரிக் கோட்டத்திலிருந்தும் - முத்துக் குளிக்கும் கத்துக் கடல்சூழ் தூத்துக்குடியிலிருந்தும் - சைவமும் தமிழும் இரண் டறக் கலந்தது என்பதைப் பரணிக்குப் பறைசாற்றும் தாமிரபரணி ஆற்றங்கரை யிலிருந்தும் - சிலம்பு ஒலித்த மதுரை மண்டலத்திலிருந்தும் -நடுநாட்டி லி ருந்தும் - மலைக்கோட்டை மாநகரிலிருந்தும் - அதியமானின் தகடூரில் இருந் தும் - பல்லவர் பாசறையில் இருந்தும் - சீர்மிகு சென்னை யிலிருந்தும் வகை வகையாய் - தொகை தொகையாய் - அலை அலையாய் அணிவகுக்கத் தயா ராகி வருகிறது வைகோவின் பட்டாளம் விருதுநகருக்கு!

அமாவாசை நாளில் கால்கோள்விழா நடத்தப்பட்டதே;பவுர்ணமி நாளில் மாநா டு இருக்குமோ என்றால், அதுதான் இல்லை. மாநாடு முடிந்து இரண்டு நாள்
கழித்துதான் பவுர்ணமி வருகிறது.(செப்டம்பர் 18)

இரண்டு நாள்கழித்து பவுணர்மி வருவதைப் போல, மாநாடு (2013) முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் - ஆம்; ம.தி.மு.க. முழு நிலவாகப் பரிண மித்து, வெற்றிகளைக் குவிக்கும் சட்டமன்றத் தேர்தல் 2016 இல் தானே நடக்க இருக்கிறது! 

நாளும் கோளும் திராவிட இயக்கத்தார் பார்ப்பதில்லை தான் - இயற்கையாகப்
பொருத்தம் ஏற்பட்டுள்ளதே!

அந்தப்பக்கம் -இந்தப்பக்கம் - ஏதோ ஒரு பக்கம் சாய்ந்திருக்கலாம் சில நேரங் களில் நாம்; சரிந்து விழவில்லை! புரிந்து கொண்ட தோழா! புதுமை படைக்க விரும்பும் தமிழா! புறப்பட்டு வா என விருதுநகருக்கு அழைக்கிறார் வைகோ!

நாளை விடியும் உங்களை நம்பி;
நீங்கள்தானே அண்ணனின் தம்பி! 
நாளை நமதே! இனி எந்த நாளும் நமதே!

என வரலாறு படைக்க அழைக்கிறார் வைகோ!

வளரட்டும் ம.தி.மு.க.! வெல்லட்டும் வைகோ!!

சொல்லட்டும் நாளைய வரலாறு!!

தாயகம் பா.செல்வராஜ்

No comments:

Post a Comment