Sunday, August 25, 2013

வைகோவின் உழைப்பும் வீண் போகாது

எவருடைய உழைப்பையும் இயற்கை விரயமாக்கியதில்லை...

#வைகோ வின் உழைப்பும் வீண் போகாது!


தீரர்கள் கோட்டமாம் திருச்சி மாநகரில் திருப்பத்தை ஏற்படுத்தும் விதமாக நிதி
வழங்கும் விழாவும், பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநிலத்தில் முதல் மூன்று
இடங்கள் என்னும் முத்திரை பதித்த மாணவர்களைப் பாராட்டுகின்ற அரிய தோர் விழாவும் மகிழ்ச்சியாகவும், எழுச்சியாகவும் நடந்து முடிந்தது.திருச்சி மாவட்ட மாணவர் அணி நடத்திய பாராட்டு விழா நிகழ்வானது கஜப்ரியா அரங்கத்திலும், நிதி வழங்கும் விழா அருண் தங்கும் விடுதி அரங்கத்திலும் நடந்தேறியது.

பெரம்பலூர் - அரியலூர் மாவட்ட நிதி வழங்கும் விழாக்களில் 11.08.2013 அன்று பங்கேற்றுவிட்டு, மாலை 6.30 மணிக்கு நமது தலைவர் வைகோ மாணவர் களுக்கான நிகழ்ச்சி அரங்கத்திற்குள் நுழைந்தார்.அது வரை தலைவர் வைகோ உரையாற்றிய இளையராஜாவின் திருவாசக சிம்பொனி குறுந்தகடு வெளி யீட்டு விழா மற்றும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் எழுத்து என்னும் கருவறை என்ற தலைப்பில் பேசிய உரைகளையும் பார்த்தும்,கேட்டும் பரவசமான மாண வர்களும், பெற்றோரும் கரவொலி எழுப்பி நம் தலைவரை வரவேற்றனர்.

நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்டச் செயலாளர் அ.மலர்மன்னன் தலைமை ஏற்க, கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் துரை. பாலகிருஷ்ணன், கொள்கை விளக்க அணிச் செயலாளர் வழக்கறிஞர் க.அழகுசுந்தரம், மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இராசேந்திரன்,புறநகர் மாவட்டப் பொறுப்பாளர் டி.டி.சி. சேரன், மருத்துவர் ரொஹையா, ரோவர் வரதராசன் ஆகியோர் முன்னிலை யில் தொடங்கியது விழா.

தலைவர் வைகோ பேசும்போது,“மதிப்பிற்குரிய மாணவக் கண்மணிகளுக்கும்,
அவர்தம் பெற்றோருக்கும் தாமதமாக நான் வந்தமைக்கு முதலில் வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றேன்.பொதுவாக கல்லூரி விழா, மாணவர்கள் பங் கேற்கும் விழாக்களில் குறித்த நேரத்தில் நான் கலந்து கொள்வதை வழக்க மாகக் கொண்டிருப்பவன்,தொடர் நிகழ்ச்சிகள் காரணமாக தாமதமாகி விட்டது. மதிநுட்பமும்,அயராத உழைப்பும் காரணமாக மாநிலத்தில் அதிக மதிப்பெண் கள் பெற்ற உங்களை மனதாரப் பாராட்டுகின்றேன். உயர்ந்த சிகரத்தை எட்டிப் பிடிப்பதற்கு நீங்கள் பட்ட சிரமத்தை எண்ணிப் பார்க்கிறேன், சிகரங்களின் உச்சிக்குச் சென்று வெற்றி வாகை சூடுவது, திடீரென்று சாதித்து விடக் கூடிய தல்ல.

எல்லோரும் தூங்கியதற்குப் பின்பு,நீங்கள் விழித்துப் படித்ததால் பெரும் வெற் றியைப் பெற்றிருக்கின்றீர்கள்.கடுமையாக உழைத்த நீங்கள் உங்கள் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும். நாங்கள் உங்களுக்கு வழங்கி யிருப்பது எளிய தொகைதான், அதேநேரத்தில் பரந்த மனதோடு உங்களை வாழ்த்துகிறேன். உங்கள் பெற்றோருக்கு பெருமையை ஏற்படுத்தித் தந்திருக் கிறீர்கள். தாயை -தந்தையை நீங்கள் தெய்வமாக மதித்து நடக்க வேண்டும். தொடர்ந்து நீங்கள் கல்வியில் பெரும் வெற்றி பெற்று பிறந்த பொன்னாடாம் நம் தமிழ்நாட்டுக்கு உங்கள் மதிநுட்பத்தையும், ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும்.

ஒரு சில நேரங்களில் எதிர்பார்த்த மதிப்பெண்களைக் காட்டிலும் ஓரிரு மதிப் பெண்கள் குறையலாம், அதற்காக வருத்தப்படக் கூடாது. எத்தனை சோதனை களையும், தோல்விகளையும் நான் சந்தித்திருக்கிறேன் என்பதை நன்கு அறி வீர்கள். ஆனால், தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பவன். வெற்றி, உயர்வு என்பதை இலக்காகக் கொண்டு செயல்படுங்கள், வாழ்வில் இதுபோன்ற தொடர் வெற்றிகளைப் பெறுவதற்கு வாழ்த்துகள், உங்கள் முயற்சி வெல்லட் டும்” என்று தலைவர் பேசி முடித்தபோது மாணவர்களும் - பெற்றோரும் அவரை உற்று நோக்கி கவனித்தனர்.

உரையாற்றி முடித்த பின்பு நம் தலைவர் வைகோ, மாநிலத்தில் முதலிடம்
பிடித்த மணப்பாறை மாணவிகள் மு.காயத்ரி,த.மெர்சியா செரின் ஆகியோ ருக்கு தலா ஐந்தாயிரம் வீதம் பத்தாயிரமும், நினைவுப் பரிசையும் வழங்கி னார்.இரண்டாம் இடம் பெற்ற திருச்சி மாணவி சு.ஈஸ்வரி, துறையூரைச் சேர்ந்த மாணவி ம.காயத்ரி ஆகியோருக்கு தலா மூன்றாயிரம் வீதம் ஆறா யிரம் ரொக்கமும், மூன்றாம் இடம் பெற்ற மணப்பாறை மாணவி பி.பிரதிக்ஸா,
திருச்சியைச் சேர்ந்த ஜனனி,திவ்யலட்சணா, வீ.காயத்ரி,கி.சிந்தாமணி, அ.மோகனப்ரியா,செ.நிவேதா, சு.சங்கீதா, மண்ணச்சநல்லூர் மாணவன் கே.ஆர்.விஜய் ஆகிய ஒன்பது பேருக்கும் தலா இரண்டாயிரம் வீதம் பதினெட் டாயிரம் என மொத்தம் 34 ஆயிரம் பணம் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி நம் தலைவர் பாராட்டினார்.

பரிசு பெற்ற மாணவர்களும் -பெற்றோரும் மாறாத புன்னகை யோடும்,  உரி மை கலந்த பாசத்தோடும் நம் தலைவர் வைகோவுடன் படம் எடுத்துக்கொண் டதை பெருமிதத்துடன் விவரித்தனர்.

இதுகுறித்து பரிசு பெற்ற மாணவிகளும், அவர்களது பெற்றோரும் கூறியது,

மு.காயத்ரி, “வைகோ ஒரு நல்ல தலைவர், அவரிடம் பரிசு பெற்றதை பெரு மையாகக் கருதுகிறேன். அவர் பேசிய பேச்சு எங்களுக்கு நல்ல ஊக்கத்தைத் தந்துள்ளது. அவர் எங்களிடம் பழகிய விதமும், காட்டிய பரிவும் என்றும் மறக்க முடியாது” என்றார்.

தமிழ்ச்செல்வி (ஆசிரியர்), “பரிசு பெற்ற மாணவர்களை அரசியல் கட்சித்
தலைவர்கள் பாராட்டுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், உரிமையோடும், அதே நேரத்தில் அக்கறையோடும் மாணவர்களிடத்தில் பேசிய ஒரே தலைவர் வைகோ மட்டுமே. அவர் பேசும் போது கால தாமதமாக வந்ததற்கு வருந்துவ தாகத் தெரிவித்தார். அவர் வருந்த வேண்டியதில்லை, பிடித்தத் தலைவருக் காக, மக்களுக்காக தொடர்ந்து போராடுகின்ற தலைவருக் காக காத்திருப்பது மகிழ்ச்சிதான். என் மகள் அய்யாவைப் பார்த்ததில் இருந்து புத்துணர்வோடு இருக்கின்றாள்.அடுத்து அவள் பெறப்போகும் வெற்றியின் போதும் இவர் பரிசு வழங்கு வதைப் பெருமையாகக் கொள்வோம்” என்று தனது ஆவலைத் தெரி வித்தார்.

பி.பிரதிக்ஷா, “வைகோ மிக எளிமை யானவர். அதே நேரத்தில் பிறருக்கு முன் னுதாரணமானவர்.அடிக்கடி தொலைக்காட்சி ஊடகங்களில் அவர் பேசியதைக் கேட்ட என் போன்றவர் களுக்கு, அவரை நேரடியாகக் காணும் வாய்ப்பு கிடைத் ததில் பெரும் மகிழ்ச்சிதான். இந்தத் தலைமுறைக்கான தலைவர் வைகோ ஒருவரே. அவரிடம் பரிசு பெற்றதை கெளரவமாகக் கருதுகின்றோம்” என்று கம்பீரத்தோடு கூறினார்.

அ.பிரேம்குமார் (கால்நடை மருத்துவர்),“தமிழகத்தின் அனைத்து பிரச்னை களுக்காகவும் போராடி வருகின்ற தமிழினத் தலைவர் வைகோ ஒருவரே. அவர் அளிக்கின்ற பணத்தை எளிய தொகை எனக் குறிப்பிட்டார். ஒரு வலிமை யான இலட்சிய தாகம் கொண்ட ஒரு தலைவர் தரும் தொகை சிறிதல்ல, அது எங்களுக்கு மிகப் பெரிதுதான்” என்று பெரும் உவகை அடைந்தார்.

மு.மஞ்சுளா (கால்நடை மருத்துவர்),“செய்தித்தாள், ஊடகங்களில் அவர் பேசுவதைக் கேட்ட எங்களுக்கு,அவரைப் பார்த்ததும் பேசவே வர வில்லை. ஒரு குடும்ப நிகழ்வில் கலந்து கொண்ட உணர்வோடும், அதே நேரத்தில் உரிமைக்குரியவர் தந்த பரிசாகவே கருதத் தோன்றுகின்றது. மாணவர்கள் தாய், தந்தையரை மதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டதும், அனைவரும் தூங் கியதற்குப் பின்பு நீங்கள் விழித்திருந்து படித்தவர்கள் என்று மாணவர்களின் உழைப்பை உணர்ந்து அவர் அங்கீகரித்தது பெருமையாக இருந்தது. ஒரு பெற் றோரின் மனநிலையில் இருந்து மாணவர்களின் உடல்நலத்தை பேணச் சொன்னது என அவருடைய பேச்சு முழுவதும் நன்றாக அமைந்தது” என்று
மனம் உருகிப் பாராட்டினார்.

மெர்சியா செரின், “மிகுந்த உற்சாகமாக இருந்தது.வைகோ பேசிய பேச்சு முழு மையாக எங்களை ஈர்த்தது.இன்னும் சாதிக்க வேண்டும் என்ற வைராக்கி யத் தை அளித்துள்ளது.எங்கள் உடல் நலனில் அவர் காட்டிய அக்கறை அனைத் துமே அவர் மீதான மதிப்பை உயர்த்துவதாகவே அமைந்தது” என்று உற்சாகத் துடன் கருத்துரைத்தார்.

தந்தை தனபால் (புள்ளியியல் துறை அலுவலர்): “பண்பு, குணநலம், உயர்ந்த
இலட்சியம் கொண்ட தலைவர் வைகோ.இவர் திமுகவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதே முரசொலியில் இரண்டாம் பக்கத்தில் அவர் பேச்சை நன்கு படித்து தெளிந்தவன் நான். பத்து நிமிடம் அவர் பேசிய பேச்சில் மாணவர்கள் கட்டுண்டு போனார்கள். இதற்கு முன்பு அரங்கத்தில் நீங்கள் வெளியிட்ட திருவாசகம்,எழுத்து என்னும் கருவறை பேச்சுகள் மிகுந்த பிரமிப் பை ஏற்படுத்தியது. நிறைய புள்ளி விவரங்களை எடுத்தாளும் ஆளுமை கண்டு என் மகள் பிரமித்துப் போனாள். விடுதிக்கு சென்ற என் மகள் மிகக் கஷ்டம் எனக் கருதிய ஒரு நுழைவுத் தேர்வை நான் எழுதப் போகிறேன் என்று அவள் சொன்னது வைகோவின் பேச்சு ஈர்ப்புதான். இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த
வைகோவுக்கு என் மகள் ஒரு நன்றிக் கடிதம் எழுதி அனுப்பப் போவதாகத்
தெரிவித்தாள்” என்று தனது அரசியல் பார்வையைப் பதிய வைத்தார்.

ஈஸ்வரி பேசும்போது,“வைகோ அவர்களிடம் பரிசு பெற்றது மிகுந்த சந்தோசத் தைத் தருகின்றது. எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆங்கில ஆசிரியர் வைகோ வைப் பற்றி நிறைய சொல்லியிருக்கின்றார். வைகோ சிறந்த நாடா ளுமன்றவாதி. அவர் நமது தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அனு தினமும் போராடி வருகின்றார்.அவருடைய இலட்சிய தாகம் பாராட்டுதற்குரியது. நிகழ்ச்சியில் அவருடைய சி.டி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. வியப்படைந் தோம், விரல் நுனியில் விந்தை செய்யும் நினை வாற்றல் இவையனைத்தும் எங்களை மிகவும் ஈர்த்தது” என்றார்.

செ.நிவேதா: “மிக எளிமையாக ஒரு அரசியல் தலைவர் நடந்து கொண்டதைக் கவனித்தோம். அவர் எங்களோடு படம் எடுத்துக் கொண்டது, ஒரு சிறிய சந்திப் பிலேயே அக்கறையாக எங்களை அவர் பாராட்டியது மிகுந்த ஊக்கத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது” என தனது அக்கறையை வெளிப்படுத்தி னார்.

ஆர்.செந்தில்குமார் (உதவிப் பேராசிரியர்):“என்னுடைய இளைய மகள் சிவானி, மூன்றாம் வகுப்பு படிக்கின்றாள்.வைகோ வரும் வரை ஒளிபரப்பப் பட்ட காட்சிகளில் அவர் ஆவேசமாகப் பேசினார், இப்போது ஏன் அப்பா மிகவும்
மெதுவாகப் பேசினார் எனக் கேட்டாள்.அது உணர்வுப் பூர்வமானப் பேச்சு, இது
அக்கா போன்றவர்களை பாராட்டும் கனிவான,அதாவது உன்னை கொஞ்சுவது போன்ற பேச்சு என்று அவள் மொழியிலேயே பதில் சொன்னேன். நான் முதல மைச்சர் பரிசு கொடுத்த நிகழ்ச்சிக்கோ அல்லது ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச் சிக்கோ போகவில்லை. என் மனைவியும்,மகளும் மட்டுமே போனார்கள். நான்
வைகோவைப் பார்ப்பதற்காகவே வந்தேன். அவர் எந்தளவிற்கு பெரிய மனிதர் என்பதை பேச்சின் முதலிலேயே வெளிப்படுத்திவிட்டார். தாமதமாக வந்த தற்கு வருத்தம் தெரிவித்தது அனைவரையும் நெகிழ வைத்தது.பெற்றோர் களில் சிலர் பேசிக் கொண்டதை கவனித்தேன், இவ்வளவு நல்ல தலைவருக்கு மக்கள் வாக்களிக்க மறுக்கிறார்களே என ஆதங்கப் பட்டார்கள். எவருடைய உழைப்பையும் இயற்கை விரயமாக்கியதில்லை. வைகோவின் உழைப்பும் வீண் போகாது” என நம்புகின்றேன் என்றார்.

எஸ்.சங்கீதா: வைகோ அவர்கள் எங்களை அழைத்துப் பாராட்டியதை மறக்க
மாட்டோம். எந்த வசதியும் இல்லாத கட்சித் தலைவர் இயன்றதை எளிய
தொகை என உண்மையைச் சொல்லி தந்தது அவருடைய பெருந்தன்மையை
உணர்த்துகின்றது. அரசியல்வாதிகள் உண்மை பேசுவது அரிது, உண்மை பேசு கின்ற ஒருவரும் அரசியலில் இருக்கின்றார் என்பதே பெருமைதான்.

கே.ஆர்.விஜய்: “என் தந்தை பாண்டியனுக்கு திருமணம் செய்து வைத்ததே வைகோதான். இன்றைக்கு அவருடைய கைகளில் பரிசு பெற்றது பெருமை தான். நான் மருத்துவம் படித்து இந்திய ஆட்சிப் பணிக்கு வருவேன்.அப்போதும் வைகோவிடம் பரிசு பெறுவேன். என் அப்பா இப்போது திமுக, ஆனாலும், வைகோ மீது மாறாத அன்பு கொண்டவர். அதே அன்பை நானும் அவர் மீது வைத்திருக்கிறேன்” என அன்பு மழை பொழிந்தார்.

பழக்கடை பாண்டியன் (திமுக நகர செயலாளர்): “வைகோ தலைமையில் திருமணம் செய்து கொண்ட பழைய படங்களை அன்று காட்டினேன். மிகுந்த
மகிழ்ச்சியடைந்தார். நான் வேறு கட்சியில் இருக்கிறேனே என்ற உணர்வு
அவருக்கும் இல்லை, மாறாக எனக்கும் ஏற்படவில்லை. மாறாத அவர் மீதான
அன்பு நிரந்தரமாக உள்ளது. என் மகன் அவரிடம் பரிசு பெற்றதை கெளரவமாக வே கருதுகின்றான்” என தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

சிந்தாமணி: “வைகோவைப் பற்றி என் தந்தை நன்றாகக் கூறியுள்ளார். இது
போன்ற நல்ல தலைவரைப் பார்க்கும் போது அரசியல் மீது புதிய நம்பிக்கைப்
பிறக்கின்றது. அவர் நன்றாக இருக்க வேண்டும், நாட்டுக்கு பல நன்மைகள்
செய்ய வேண்டும்” என்று தலைவரின் நலனில் அக்கறை செலுத்தினார்.

டாக்டர் கிருபா சங்கர் (மத்திய அரசுப் பணி): வைகோ குறித்து எனக்கு நன்கு
தெரியும். அவர் நேர்மையாளர் என்ற மதிப்பை எதற்காகவும் இழக்க மாட்டார்.
அவரை சந்திப்பதற்கும், என் மகள் தகுதிகள் அனைத்தும் கொண்ட ஒரு தலை வரிடம் பரிசு பெறுவதற்கும் ஏற்பாடு செய்த திருச்சி மாவட்ட மதிமுக மாண வர் அணி நண்பர்களுக்கு நன்றி, பாராட்டுகள்.

இப்படி பாராட்டு பெற வந்த மாணவர் களும், பெற்றோரும் நம் தலைவர் வைகோவை பாராட்டியதையும்,அவர்களின் புளகாங்கிதங்களையும் கேட்கும் போது இந்த இயக்கத்தில் இருப்பதால் கிடைக்கும் நற்பயனை அனுபவித் தோம். இதற்கான களம் அமைவதற்கு சிறப்பாக பணியாற்றிய மாணவர் அணி நிர்வாகிகள் வைகோ பழனிசாமி, வழக்கறிஞர் கனகராசு,ஆ.மகுடீஸ்வரன், கே.என்.அன்புநிதி,சாத்தனூர் ஆ.சுரேஷ், சேகர்,ஹென்றி சின்னப்பன், குமரகுரு ஆகியோரை மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இராசேந்திரன் வெகுவாகப்
பாராட்டினார்.

இந்த நிகழ்வின் மகிழ்வோடு அருண் தங்கும் விடுதி அரங்கத்திற்குச்சென்ற நம் தலைவர் வைகோவிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி காத்திருந்தது. உரையாற்றிய
திருச்சி புறநகர் மாவட்ட அவைத் தலைவர் புலவர் க.முருகேசன், அரசியல்
ஆய்வு மைய உறுப்பினர் கொப்பம்பட்டி மு.தமிழ்மாறன், சட்டத்துறைச் செய லாளர் வழக்கறிஞர் மு.வீரபாண்டியன் இவர்களின் பேச்சு நம் தலைவருக்கு புதிய தெம்பை உற்சாகத்தைத் தந்தது. மக்கள் நலன் காக்கும் மருத்துவர் ரொஹையா பேசும் போது அரங்கமே அதிர்கின்ற அளவிற்கு கரவொலி எழுந்தது.

தலைவர் அவர்களே நீங்கள் ஒருமுறை திருச்சியில் போட்டியிடும் வாய்ப் பைத் தாருங்கள், செலவைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். உங்களை வெற்றி பெறச் செய்வதற்கு காவிரி தீரத்து மக்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். மாவட் டச் செயலாளர் மலர்மன்னனும், நாங்களும் உங்களை நாடாளுமன்றத்திற்கு
அனுப்புவோம். ஒரு வாய்ப்பு கொடுங்கள் என தமது கோரிக்கையை முன் வைத்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.நிதியளிப்பு நிகழ்விற்கு தலை மைப் பொறுப்பேற்ற மலர்மன்னன் பேசிய பேச்சு அவர் மீதான மதிப்பை பன் மடங்கு உயர்த்தியது.

என்னைக் காட்டிலும் வயதில் இளையவரான சேரனை பொதுச் செயலாளர் மாவட்டப் பொறுப்பாளராக அறிவித்தார். அவருடைய சுறுசுறுப்பையும், புற நகர் மாவட்டத்திற்கு உள்பட்ட ஒன்றிய, நகர செயலாளர்களின் உழைப்பையும்
மனதாரப் பாராட்டுகிறேன். எவ்வளவு முயன்றும் சேரன் அளவிற்கு என்னால்
நிதி திரட்ட முடியவில்லை.உண்மையாகவே சொல்லுகின்றேன், நான் நிதி வசூலில் சேரனிடம் தோற்றுப் போயிருக்கிறேன் என அவர் சொல்லச் சொல்ல மொத்தக் கூட்டமும் ஆரவாரம் செய்தது.

பிறர் இருப்பை ஒத்துக் கொள்ளும் மனோபலம் நம் தலைவரிடம் மட்டுமில் லை, இதோ திருப்புமுனை ஏற்படுத்திய திருச்சியிலிருந்து மலர் மன்னன் தொடங்கி வைத்திருக்கிறார் என பிறை பல கண்ட பெரியவர்கள் பேசியதை உணர முடிந்தது.மொத்தத்தில் இளையவர்களை ஊக்கப் படுத்துவதில் அய்யா மலர்மன்னன் பெரியவர் என்பதைக் காட்டிலும், அவரே அந்தப் பணியில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையைத் தக்கவைத்துள்ளார்.

நிறைவாக நம் தலைவர் வைகோ பேசும்போது “இதே திருச்சி வாசவி மண்ட பத்தில் என்னை கழகத்தின் பொதுச்செயலாளராக அண்ணன் மலர்மன்னன் முன்மொழிய பெருமைக்குரிய புலவர் முருகேசன் வழி மொழிந்தார். அந்த நாளையும் நினைத்துப் பார்க்கின்றேன். இன்று அதே மாறாத அன்புடன் தாங் கள் வழங்கும் இந்தப் பெரு நிதியைப் பெற்று அளவு கடந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்” எனப் பேசி அனைவரையும் பாராட்டினார்.

நிகழ்ச்சி முடிந்ததும் துணைப் பொதுச் செயலாளர் துரை.பாலகிருஷ்ணனை
அழைத்து வரச்சொல்லி, நான் கவனிக்க வில்லை, நீங்கள் பேசவில்லையே என நம் தலைவர் வருத்தப்பட, நான் தான் தலைவர் பேசட்டும், நான் பேச வில்லை என மலர் அண்ணனிடம் தெரிவித்தேன் என அவர் சொல்ல கூடி யிருந்தவர்கள் அண்ணாவின் குடும்பப் பாசமான இயக்கம் இதுவன்றோ என பேருவகை அடைந்தனர்.

தன்னை வழியனுப்பிட மழையில் நனைந்தவாறே வந்த மாவட்டச்செயலாளர் மலர்மன்னனைப் பார்த்ததும், தனக்குக் குடை பிடித்திருந்த உதவி யாளரை உரிமையோடு கண்டித்து,அண்ணனுக்கு குடை பிடியுங்கள் உடல்நிலை சரி யில்லாதவர் என்று பதற்றப்பட்டார். ஒரு அரசியல் இயக்கம்,அதுவும் தேர்த லில் போட்டியிடுகின்ற இயக்கத்தில் எவ்வித போட்டி, பொறாமைகளுக்கும் கிஞ்சிற்றும் இடம் தராத தலைமை, தலைமையை ஒட்டிய தளபதிகள், மாறாத இயக்கப் பாசம், சிறியதான இயக்கமென்றாலும் பெரிய,வலிமையான கட்டுப் பாடான இயக்கம் இதுவே நமக்குப் போதும்.

இன்னொரு பிறப்பு என்பது அமையுமானால் நான் தமிழனாகப் பிறக்க வேண் டும் என்றார் நேதாஜி. அதுபோல வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நாம் அனை வரும் தலைவர் வைகோவின் சகாக்களாகவே பிறந்து, அவரோடு களப் பணி யாற்றுவதையே பெரும் பேறாகக் கொள்வோம். உரிமைக்குரிய தலைவர் வைகோ இன்று நம்மையும்,நம் சமூகத்தையும் பாராட்டி படை நடத்துகின்றார். நாளை அந்தத் தலைவனை உரிய இடத்தில் அமர வைத்து உலகம் நிச்சயம் ஒரு நாள் பாராட்டும்...!

நன்றிகள் 

கட்டுரையாளர் :- 
மணவை தமிழ்மாணிக்கம்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment