சங்கொலி தலையங்கம்
உச்ச நீதிமன்றம் ஜூலை 18 ஆம் தேதி அளித்துள்ள மிக முக்கியமான தீர்ப்பு, சமூக நீதிக்காகப் போராடி சரித்திரம் படைத்த தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ள வெற்றி ஆகும்.மருத்துவப் படிப்புகளுக்கு பொதுநுழைவுத்தேர்வு நடத்திட வேண்டும் என்ற மத்திய அரசின் விடாப்பிடியான உத்தரவை உச்ச நீதிமன்றம் தகர்த்து இருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற மாண் பமை நீதிபதி அல்டமாஸ் கபீர் அவர்கள் ஓய்வு பெறும் நாளில் அளித்த வர லாற்றுச்சிறப்புமிக்க தீர்ப்பு இது. அவர் தலைமையில் நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், ஏ.ஆர்.தவே ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, மருத்துவக் கல்விக்கான பொதுநுழைவுத் தேர்வு தொடர்பான வழக்குகளை விசாரணை செய்து வந்தது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2009 இல்
இரண்டாவது முறையாக பதவி ஏற்றபிறகு, மத்திய மனித ஆற்றல் மேம் பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், “நாடு முழுவதும் மருத்துவக் கல்விக் கான பொது நுழைவுத் தேர்வு நடத்தி, தகுதியும் திறமையும் உள்ளவர்கள்(?) மட்டுமே பொது மருத்துவப் படிப்பு (எம்.பி.பி.எஸ்), பல் மருத்துவப் படிப்பு (பி.டி.எஸ்) படித்திட அனுமதிக்கப்படுவர்” என்று அறிவித்தார்.
மத்திய அரசின் சமூக நீதிக்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ஒரு சிலர் (!) மட்டுமே பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு ஆதரவாக இருந்தனர். அந்த சிலர் யார் என்பதை நாம் சொல் லித் தெரிய வேண்டியது இல்லை.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர் கள், மத்திய அரசின் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ஆனால் மத்திய அரசு, பொது நுழைவுத் தேர்வை நடத்துவதில்தான் குறியாக இருக்கிறது.அகில இந்திய மருத்துவக் கவுன்சில் மூலம் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (National Eligibility -cumEntrance Test -NEET)நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தது. இதை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள உயர் நீதி மன்றங்களிலும், உச்ச நீதி மன்றத் திலும் 115 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, உச்ச நீதிமன்றம் விசாரித்து, 2012 டிசம்பர் 13 இல் ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.
அதில், அகில இந்திய மருத்துவ கவுன்சில் ‘நீட்’ தேர்வை நடத்திக் கொள்ள லாம். ஆனால், தேர்வு முடிவுகளை அறிவிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டது. மேலும் இந்த ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி, நீட் தேர்வு முடிவுகளை அறிவிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிக்கொண்டது. இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை ஜூலை 18 ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதி கள் வழங்கினர். தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், நீதிபதி விக்ரம்ஜித்சென் இருவரும், “பொது நுழைவுத் தேர்வை இரத்து செய்ய வேண்டும்” என்று தீர்ப்பளித்தனர். ஆனால் அமர்வின் இன்னொரு நீதிபதி ஏ.ஆர்.தவே பொது நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாக தீர்ப்பு எழுதினார். எனவே, இந்தத் தீர்ப்பு 2:1 என்ற பெரும்பான்மை அடிப்படையில் பொது நுழைவுத் தேர்வை இரத்து செய்துள்ளது.
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
பொது நுழைவுத் தேர்வு பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கலாம். ஆனால், அது
சுமைகளை, சிரமங்களைக் கொண்டதாகும். தகுதி என்ற அடிப்படையில் நகர்ப் புற மற்றும் கிராமப்புற மாணவர்களை இது நிரந்தரமாக பிளவு படுத்தும்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகள் மற்றும் முதுநிலை உயர் மருத் துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு முறை யை (NEET) அகில இந்திய மருத்துவக் கவுன்சில், பல் மருத்துவக் கவுன்சில் கொண்டு வந்து அறிவிப்பு வெளியிட்டது அரசியல் சட்டத்திற்கு அப்பாற் பட்ட தாக அமைந்துள்ளது.எனவே இது செல்லாது.
மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய பொது நுழைவுத்தேர்வு நடத்துவதற்கு
இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் கிடையாது.
பொது நுழைவுத் தேர்வு குறித்த அகில இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் பல் மருத்துவ கவுன்சில் அறிவிக்கைகள் அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 19, 25, 26, 29 மற்றும் 30 ஆகியவற்றுக்கு எதிரானது ஆகும்.
பொது நுழைவுத் தேர்வு என்பது தனியார், குறிப்பாக சிறுபான்மை கல்வி நிறுவ னங்கள் தங்கள் விருப்பப்படி மாணவர்களைச் சேர்ப்பதை நேரடியாக பாதிக் கிறது.
நாட்டின் பல்வேறு சமூக மாணவர்களிடையே சமத்துவமான நிலையை இந்தப் பொது நுழைவுத் தேர்வு ஏற்படுத்தாது.
ஏற்கனவே நடந்துள்ள மாணவர் சேர்க்கைக்கு இத்தீர்ப்பு பொருந்தாது.
இவ்வாறு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு மத்திய அரசு, மருத்துவக்
கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு முடிவைக் கைவிடுவதாக இல்லை. மாறாக, இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்து இருக்கின்றார்.
தகுதி, திறமை என்று சொல்லி காலம் காலமாக வாய்ப்பு மறுக்கப்பட்ட, சமூ கத் தில் பெரும்பான்மையாக உள்ள, ஒடுக்கப்பட்ட - பின்தங்கிய - பழங்குடி - மலைவாழ் இன மக்கள், கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய பிரதி நிதித்துவம் பெறுவதற்குத்தான் அண்ணல் அம்பேத்கர் முயற்சியால் அரசியல் சட்டத்திலும்; முன்னாள் பிரதமர் வி.பி.சிங் முயற்சியால் மண்டல்குழு நடை முறைப்படுத்தவும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், மத்திய காங் கிரஸ் கூட்டணி அரசு சமூக நீதியை ஆழக் குழிதோண்டி புதைத்துவிட வேண் டும் என்பதில் உறுதியாக இருக்கின்றது.
மருத்துவக் கல்லூரிகள் பெரும்பாலும் மாநில அரசுகளால் நடத்தப்படுகின் றன.மேலும், மாநில அரசின் கண்காணிப்பின் கீழ், தனியார் துறையிலும் மருத் துவக் கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. இக்கல்லூரிகளில் மாணவர் சேர்க் கைக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்துவது என்பது மாநில அரசின் உரிமையில் தலையிட்டு அதிகாரத்தைப் பறிக்கும் கூட்டாட்சி முறைக்கு எதிரான நடவடிக்கை ஆகும். மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வித்துறை நெருக்கடி நிலை காலத்தில் பொதுப்பட்டியலுக்கு மாற்றப் பட்டது.
தற்போது மத்திய அரசு கல்வித்துறையில் ஏகபோக ஆதிக்கம் செய்வதற்கு இதுவே காரணம் ஆகும். எனவே, கல்வித்துறையை மீண்டும் மாநிலப் பட்டிய லுக்கு மாற்றியாக வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் ஒலிக்க வேண்டும். மருத்துவக் கல்வி பொது நுழைவுத் தேர்வை கலைஞர் கருணாநிதி அரசு 2007 இல் இரத்து செய்து சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றியது. மீண்டும் தமிழ் நாட்டில் மத்திய அரசு நுழைவுத் தேர்வைத் திணிப்பதை எப்படி ஏற்க முடியும்?
பொது நுழைவுத் தேர்வைக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு தெரிவிக்கும் காரணம்,தனியார் மருத்துவக் கல்லூரிகளும், நிகர்நிலைப் பல்கலைக் கழகங் களும் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் முறைகேடாக நடந்து கொள் கின்றன. தாறுமாறாக கட்டணங்களையும், நன்கொடைகளையும் வசூலிக்கின் றன. இதை கட்டுப்படுத்துவதற்கு பொதுநுழைவுத் தேர்வு நடத்தி, ஒற்றைச் சாளர முறையில் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று கூறுகிறது. இதனை ஏற்கவே முடியாது.
மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் அதிகாரம் அகில இந்திய மருத்துவ கவுன்சில், பல் மருத்துவ கவுன்சிலுக்கு அளிக்கப்பட்டு இருக்கின் றது. மேலும், மாநில அரசின் மருத்துவக் கல்வி இயக்குநரகம், மருத்துவக் கல்லூரிகளின் செயற்பாட்டை இயக்குகிறது. இந்த அமைப்புகள் விதிமுறை களைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று முயன்றால், தனியார் மருத் துவக் கல்லூரிகளைக் கட்டுப்படுத்திட முடியும்.
மேலும், நாட்டில் உள்ள 366 மருத்துவக் கல்லூரிகளில் 196 கல்லூரிகள், தனி யார் மருத்துவக் கல்லூரிகளாகவும், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாகவும் உள்ளன.இவற்றுக்கான நுழைவுத்தேர்வு, மாணவர் சேர்க்கை குறித்து உச்ச நீதி மன்றம் கருத்து எதையும் சொல்லவில்லை.
ஆகவே, இவற்றில் கட்டாய நன்கொடை, கல்விக் கட்டணங்கள் நிர்ணயம், மாணவர் சேர்க்கைகளில் முறைகேடு ஆகியவற்றைக் கண்காணித்து உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவும் மத்திய-மாநில அரசுகள் விழிப்புடன் செயற்பட வேண்டும்.இதைவிடுத்து, பொது நுழைவுத் தேர்வை திணிப்பதில் ஆர்வம் காட்டுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
மாநிலங்களில் பல்வேறு பாடத்திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. மத்திய அரசு பாடத்திட்டம், சி.பி.எஸ்.சி., மெட்ரிக், மாநில அரசு பாடத்திட்டம் என்று பல வகைகளில் பயிலும் மாணவர்களும் பொதுவாக பொது நுழைவுத் தேர்வை நடத்தினால் எவ்வாறு சமநிலையாக இருக்க முடியும்? வேண்டு மானால், சி.பி.எஸ்.சி. மற்றும் மத்திய அரசு பாடத்திட்டத்தில் பயிலும் மாண வர்களுக்கு பொதுநுழைவுத் தேர்வு எளிதாக அமையும்.
ஆனால், கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் - குறிப்பாக ஒடுக்கப்பட்ட, பிற்
ப டுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் - நல்ல மதிப்பெண்கள்
பெற்றாலும் மருத்துவப் படிப்பு படிக்க வேண்டும் என்று கனவுகூட காண முடி யாது.ஏனெனில் மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வில், நகர்ப் புற மாணவர்களோடும், சமூகத்தின் மேல்தட்டு மாணவர்களோடும் அவர்களால்
போட்டியிட முடியாது.
தமிழ் நாட்டில் நீதிக்கட்சி ஆட்சி 1920 இல் ஏற்படுவதற்கு முன்பு வரை மருத்து வக் கல்லூரி பட்டப் படிப்பிற்கு சமஸ்கிருதம் தெரிய வேண்டும் என்று விதி முறை வகுத்திருந்தார்கள். அவர்களின் நோக்கம் ‘சமஸ்கிருதம் தெரிந்தவர் கள் மட்டுமே பட்டம் பெற்று மருத்துவர்களாக ஆக வேண்டும்’ என்பதுதான். நூற்றுக்கு தொண்ணுற்று ஏழு விழுக்காடு மக்களின் வாய்ப்பைத் தட்டிப் பறித்த இந்த ஏற்பாட்டைத் தகர்த்து தவிடுபொடியாக்கி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட் டவர்களும் மருத்துவக் கல்வி பெற வழிகோலியது திராவிட இயக்க நீதிக் கட்சி என்பது வரலாறு.
அன்று ‘சமஸ்கிருதம்’ தடையாக இருந்தது. இன்று ‘பொது நுழைவுத் தேர்வு’ தடையாக இருக்கின்றது. ஆக இன்னும் முற்றுப்பெறவில்லை சமூக நீதிக் கான போராட்டம்...

No comments:
Post a Comment