Thursday, July 18, 2013

சாஞ்சி அறப்போர்-பகுதி 2

என் இனிய தோழர்களே,

நாகபுரியில்,தீக்ஷா பூமியில் அமைக்கப்பட்டு இருக்கின்ற அந்த ஸ்தூபா,சாஞ்சி யில் மாமன்னர் அசோகர் கட்டி எழுப்பிய ஸ்தூபாவின் வடிவமைப் பிலேயே கட்டப்பட்டு இருக்கின்றது. ஆனால், இதற்கு உள்ளே இருக்கின்ற தியான அரங் கத்தைப் போல, உலகத்தில் வேறு எங்கும் இல்லை என்கின்றசெய்தியைப் பார்த்தோம். அந்த ஸ்தூபாவுக்குஉள்ளே சென்றோம். விரலைச் சொடுக்கி ஓசை எழுப்பினால் அதிர்கிறது.

புத்தரின் போதனைகளைக் குழிதோண்டிப் புதைக்கின்ற கொலைகாரன், எங் கள் குழந்தைகளை, எங்கள் தாய்மார்களை, எங்கள் சகோதரிகளைக் கொன்று குவித்த கொடியவனை, புத்தர் விழாவுக்கு அழைத்து வருகின்றீர்கள்.ஏ...பாரதிய ஜனதா கட்சியே, உன் கோர முகத்தை நாங்கள் அம்பலப் படுத்துகின்றோம். இந்துக்களுக்காக நீ கட்சி நடத்துகிறாயா?


இன்றைக்கு விநாயகருக்குப் பெருமை சேர்க்கின்ற விழா என்கிறார்கள். மராட் டிய மண்டலத்தில் கேட்கிறேன். திலகர் போற்றிய கணேசருக்கு விழா கொண் டாடுகின்ற மராட்டிய மக்களைக் கேட்கிறேன்.இலங்கையில் 2076 இந்துக் கோவில்களை இடித்துத் தள்ளியது சிங்களவர் கூட்டம். அதன் கொடிய பிரதி நிதி தான், இந்த ராஜபக்சே. இந்தத் தகவலைத் தந்தவர்கள் வேறு யாரும்
அல் ல; சிங்களஅரசே அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொண்ட செய்தி இது.

விவேகா னந்தரை,அனுராதபுரத்தில் கல்லால் அடித்தார்கள்.ஏ...பாரதிய ஜனதா கட்சியே,ஆர்.எஸ்.எஸ். கூட்டமே, நீங்கள் விவேகானந்தரைப் போற்றுகின்றீர் களா? எதற்காக அவனை இங்கே அழைத்துக் கொண்டு வருகின்றீர்கள்?

யார் அழைத் தது? மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதல் அமைச்சர் சிவராஜ்சிங் செளஹான் எனக்குக் கடிதம் எழுதி இருக்கிறார். நாங்கள் தான் அழைத்தோம்; பாரதிய ஜனதா அரசுதான் அழைத்தது என்று. எனவே, மத்திய அரசின் மீது பழிபோட முயற்சிக் காதீர்கள். அந்த மத்திய அரசு, தமிழ் இனப்படுகொலையின் பிரதானக் குற்ற வாளி. உங்கள் மாநில அரசு, அந்தக் கொடியவனை அழைத்துக் கொண்டு வந்த குற்றவாளி.

மகாத்மா காந்தியின் திரு உருவப் படத்துக்கு, கோட்சேயை மாலை போடச் சொல்லுகிறீர்களா? இயேசுநாதரின் சிலைக்கு, ஜூடாசைக் கொண்டு வந்து மாலை அணிவிக்கச் சொல்லுகின்றீர்களா? இவனுக்கு என்ன வேலை இங்கே? இவன் என்ன நெல்சன் மண்டேலாவா? இவனை எதற்காக அழைத்து வருகின் றீர்கள்?

பாரதிய ஜனதா கட்சியின் மாநில அரசுதான் அழைப்புக் கொடுத்தது; சுஷ்மா சுவராஜ், அவனைத் தனிமையில் சந்தித்தார். எதற்காகச் சந்தித்தார்? நீ ஒரு பெண் என்பதால், இதோடு விடுகிறேன்.

21 ஆம் தேதி போராட்டம் தொடங்கும் வேளையில் சொன்னேன். இதிகாசத்தில் நம்பிக்கை உடையவர்களுக்குச் சொல்லுகிறேன்: யுத்தத்துக்கு முன்பு கண் ணன், தூதுக்குப் போனான். அதைப்போல, காங்கிரசுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் சொல்லுகிறேன். சகுனிகளின் வலையில் நீங்கள் சிக்கி இருக்கின் றீர்கள். ஒட்டுமொத்தமாகக் காங்கிரஸ் கட்சியை நான் குற்றம் சாட்டவில்லை. சில பெண் சகுனிகள் கையிலே நீங்கள் சிக்கி இருக்கின்றீர்கள்.பாரதிய ஜனதா கட்சியையும் ஒட்டுமொத்தமாக நான் சொல்லவில்லை. அங்கே, ஆண் சகுனி களும், பெண் சகுனிகளும் இருக்கின்றார்கள். அவர்களிடம் நீங்கள் சிக்கி இருக் கின்றீர்கள் என்று சாடினேன்.

நம்முடைய டாக்டர் கிருஷ்ணன் அவர்கள், இரண்டு வார காலமாக, மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருக்கின்றார். தம்பி பாண்டியனும் உடன் இருக்கின்றார். எங்களை ஏமாற்றியது, செளகான் அரசு. போபாலில் இடம் ஒதுக்குகிறோம் என்று, காவல்துறை ஆணையர் விஜய் யாதவ் என்னோடு பேசியபோது சொன் னார். இங்கிருந்து புறப்படுகையில் நான் அதைத் தெரிவித்தேன். நான் அதை ஒப்புக்கொள்ள மறுத்தேன். சாஞ்சிதான் எங்கள் இலக்கு. அமைதியாகப் போரா டுவோம்;வன்முறையில் ஈடுபட மாட்டோம். ஆயுதம் ஏந்த மாட்டோம்.கல் வீச மாட்டோம். அமைதியாகக் கருப்புக் கொடி காட்டுவோம்; இது ஜனநாயக உரிமை என்று நான் சொன்னேன்.

மத்தியப் பிரதேச மாநில அரசு, போபாலில் இடம் கொடுப்பதாகச் சொன்னது. அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. போபால் நகர காவல்துறை ஆணையர், இரண்டு முறை என்னோடு பேசினார்.நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

டாக்டர் கிருஷ்ணன் அவர்களிடம், “நீங்கள் போபாலில் போராட்டம் நடத்த லாம்” என்று சொன்னார்களாம். ஆனால்,அதற்கு 330 கிலோமீட்டர்கள் தொலை வுக்கு அப்பாலேயே எங்களைத் தடுத்து நிறுத்தினார்கள். நான் நிலைமையைப் புரிந்து கொண்டேன். நான் எல்லாவற்றுக்கும் ஆயத்தமாகவே சென்று இருந் தேன். எதற்கும் தயாராக இருந்தேன். வன்முறையில் ஈடுபட அல்ல. அவர் களது குண்டாந்தடிகள், அவர்களுடைய துப்பாக்கிகள், எங்கள் மீது ஏவப்பட்டா லும் ஏற்றுக்கொள்வோம்; திருப்பித் தாக்க மாட்டோம்; எதிர்த்து முன்னேறு வோம் என்று நான் சொன்னேன்.

அரை கிலோமீட்டருக்கு அப்பால், இந்த இருபது பேருந்துகள், 15 கார்கள், ஒரு லாரி, ஒரு ஆம்புலன்ஸ் ஆகியவற்றை நிறுத்தி வைத்து விட்டு, நானும், துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா,நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி ஆகிய மூவரும் அங்கே சென்றோம். அங்கே ஒரு பெரும் பட்டாளம். ஐ.ஜி., எஸ்.பி., மாவட்ட ஆட்சியர், துப்பாக்கி ஏந்திய 2000 காவலர்கள். மேலும், ஒரு யுத்த களத்தைப் போன்ற ஏற்பாடுகள்.

எங்களை ஏற்றிச் சென்ற பர்வீன் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு நான் நன்றி தெரி விக்கின்றேன். ஒரு போர்க் களத்துக்குச் செல்லும்போது, வாகனங்களை  எவ ரும் தர மாட்டார்கள். அந்த பரந்த உள்ளம் கொண்ட இஸ்லாமியக் குடும்பத் துக்கு, இந்த இடத்தில் இருந்து நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

அன்றைக்கு நான் இங்கே பேசியதை, அங்கே ஆங்கிலத்தில் செய்தியாளர் களி டம் சொன்னேன்.மத்தியப் பிரதேச மாநிலத்து மக்களுக்குச்சொல்லுங்கள்.நான் பேசும் மொழி புரியாதவர்களுக்குச் சொல்லுங்கள். பெருங்கூட்டம் திரண்டு நிற்கின்றது. பக்கத்து கிராமத்து மக்கள் திரண்டு நிற்கின்றார்கள். அது, நாகபுரி யையும், போபாலையும் இணைக்கின்ற தேசிய நெடுஞ்சாலை எண் 69.

நீங்கள் சாஞ்சிக்குப் போகக்கூடாது;இந்தச்சாலையில்,நீங்கள் தொடர்ந்து சென் றால், உங்களைக் கைது செய்வோம் என்றார்கள். அப்படியானால், உங்கள் மாநிலத்துக்கு உள்ளே நாங்கள் நடமாடக் கூடாதா? கொலைகாரன் ராஜபக்சே வருவான்; அவனை, உங்கள் முதல் அமைச்சர் வரவேற்பார். நான் இன்னமும், இந்திய நாட்டின் குடிமகனாகத்தான் இருக்கின்றேன். நானும், என் தோழர் களும், இந்தச் சாலையில் நடக்கக் கூடாதா? என்று கேட்டேன்.

இல்லை; கைது செய்வோம் என்றார்கள். எங்கே கொண்டு போவீர்கள்? என்று கேட்டேன். அதை இப்போது தெரிவிக்க மாட்டோம் என்றார்கள். 

அவர்களுக்கு என்னைப் பற்றிச் சரியாகத் தெரியாது.I will consult my colleagures and get back to you என் தோழர்களிடம் கலந்து பேசிவிட்டு வந்து சொல்லுகிறேன் என் றேன். பின்னர் நாங்கள் மூவரும் திரும்பிச் சென்றோம். நமது படை அணி அங்கே ஆயத்தமாகி இருந்தது. சீருடை அணிந்த தொண்டர்கள். எல்லோரும் கைகளில் கொடிகளை எடுத்துக் கொள்ளுங்கள். கொடியவன் ராஜபக்சே பற் றிய பேனர்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன்.அவர்களை அழைத்துக் கொண்டு முன்னேறினேன்.

மூன்று மூன்று பேராக அணிவகுத்துச் சென்றோம். ஆயிரக்கணக்கான மக்கள்
கூட்டம். போலீஸ் பட்டாளம். ஒரு ஐம்பது மீட்டர் இடைவெளி விட்டு, நான் திரும்பவும் சொன்னேன்: “எங்களைக் கைது செய்வது அக்கிரமம். எங்களை எங்கோ ஒரு மண்டபத்தில் கொண்டு போய் வைத்து விட்டு, அரசாங்க விருந்தி னராகக் காட்டுகின்ற சூழ்ச்சியிலே உங்களுடைய அரசு ஈடுபட்டு இருக்கின்றது. 

நாங்கள் சாஞ்சியை நோக்கித்தான் செல்கிறோம். உங்களுக்குப் பலாத் காரத் தைப் பயன்படுத்த விருப்பம் இருந்தால், You could use your force and arrest us. எங்க ளைக் கைது செய்து கொள்ளுங்கள். நாங்கள் இந்த இடத்திலேயே அமர்ந்து இருப்போம்” என்று சொல்லி அப்படியே அமர்ந்து கொண்டேன்.

இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.It was a shock to them. ஊடகங் களுக்குக் காட்சி காண்பிக்கின்ற கூட்டம் அல்ல மறுமலர்ச்சி தி.மு.க.அங்கேயே அமர்ந் தோம். அன்றைய இரவில், எங்களுக்கு உணவு இல்லை.உணவு சமைப்பதற் கான ஏற்பாடு களோடுதான் இங்கே இருந்து சென்று இருந்தேன். ஆனால், கேஸ் சிலிண்டர் களை வாகனத்தில் கொண்டு போக முடியாது. காவல்துறை யினர், குடிப்பதற்குத் தண்ணீரும், கேஸ் சிலிண்டரும் கிடைக்காத வகையில்
ஆக்கி வைத்து இருந்தார்கள். பட் சிசோலா என்று சிசோலா அந்த கிராமத்தில்,
கடைகளில் எந்தப் பொருளும் கிடைக்காத வகையில் ஆக்கி விட்டார்கள். ஆனால், கருணை மிக்க குடும்பங்கள் அங்கே இருக்கின்றன.அவர்களாகவே முன்வந்து, கேஸ் சிலிண்டர்களைக் கொடுத்தார்கள். (கைதட்டல்). குடிக்கத் தண்ணீர் வாங்க முடியவில்லை. அதையும் அவர்களாகவே கொடுத்தார்கள்.
அங்கேயே சாலையில் அமர்ந்தோம். நள்ளிரவு 11 மணிக்கு, எளிய உணவைச் சமைத்தோம். அதைச் சாப்பிட்டு விட்டு, சாலையிலேயே நாங்கள் படுத்தோம்.

இரவு முழுவதும், கொட்டுகின்ற பனியில் கிடந்தோம். காலையில் எழுந்ததற் குப் பிறகுதான், வெப்பம் எப்படித் தாக்கும்? என்பதை உணர்ந்தேன். நெருப்பி னும் கொடிய வெப்பம். அனல் பறந்த வெயில். அங்கேயே இருந்தோம். ஐ.ஜி. வந்தார். என்னோடு பேச முயன்றார். வாங்கிக் கட்டிக்கொண்டு, வந்த சுவடு
தெரியாமல் திரும்பிப் போனார். நீண்ட விளக்கம் அளிக்க நேரம் இல்லை.


நாங்கள் உணவு அருந்தியபிறகு எஞ்சிய குப்பைகளையெல்லாம், இங்கே இருந்து கொண்டு சென்று இருந்த பைகளில் சேகரித்துக் கொண்டு போய், கிடங்குகளில் கொண்டு போய்ப் போட்டு மூடினோம். அதை அவர்கள் பார்த் தார்கள்.மறுநாள், இந்தி மொழி ஏடுகள், ஆங்கில ஏடுகள் எழுதின. இந்த ஒழுங் கையும், கட்டுப்பாட்டையும் எந்தக்கட்சியிலும் பார்க்க முடியாது என்று (பலத்த கைதட்டல்) இப்படிச் சுகாதாரத்தைப் பராமரிக்க முடியாது என்று அதிகாரிகள் வியந்தனர். அந்த ஊர் குழந்தைகள், பெண்கள், சாரை சாரையாக வந்தார்கள். எங்கள் மீது அன்பைக் கொட்டினார்கள்.

அன்றைய பகல், தகிக்கின்ற வெயில்.தாங்க முடியாத நெருப்பு வெயில். இரண் டே முக்கால் மணி நேரம் நான் பேசினேன். என் தோழர்களைப் பற்றித்தான் கவலைப்பட்டேன்.அந்தச் சாலையின் இருபுறங்களிலும், முதல் நாளில் இருந் த மனிதக் கழிவுகளுக்கு நடுவேதான், என்னுடைய சகோதரர்கள் படுத்துக்கிடந் தார்கள். நள்ளிரவில் நான் எழுந்து கடைசி வரை யிலும் போய்ப்  பார்த்தேன். அப்போதுதான்,இதைக்கண்டேன்.காலையில் அவற்றையும் சுத்தம்செய்தோம்.

முதல் நாள் இரவிலேயே எங்களுக்கு முன்பு, மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து இருந்தோம். மெழுகு வர்த்திகள், வெளிச்சம் தருவதற்காகத் தங்களை அழித்துக் கொள்வதைப்போல,எங்கள் முத்துக்குமாரும்,செங்கொடியும், விஜய ராஜூம் தங்களை அழித்துக் கொண்டார்கள்.மறுநாள் வெயிலில், அங்கே எஞ்சி
இருந்த மெழுகுவர்த்தித் துண்டுகள் உருகுவதை, வடநாட்டுத் தொலைக்காட்சி கள் வந்து படம் பிடித்தார்கள்.

நாங்கள் வெயிலில் உட்கார்ந்து இருக்கின்றோம். ஆனால், எங்களுக்கு எதிரில் உட்கார்ந்து இருந்த காவல் துறையினர், அந்த வெயிலைத்தாங்க முடியாமல், அருகில் இருந்த ஆலமரத்து நிழலுக்கு ஓடி விட்டார்கள்.இப்போது, எங்களுக்கு எதிரில் ஒரு காவலர் கூட இல்லை. அவர்கள் சம்பளத்துக்காக அங்கே வந்து
இருப்பவர்கள். ஆனால், நாங்கள் இலட்சியங்களுக்காக வாழ்  கின்றவர்கள்.

எங்களது உறுதியைப் பார்த்து அவர்கள் திகைத்தார்கள். 44 மணி நேரம் அதே இடத்திலேயே அமர்ந்து இருந்தோம். கொளுத்தும் வெயிலில், கொட்டும் பனி யில் அமர்ந்து இருந்தோம். அப்போது நான் சொன்னேன்: வாரக்கணக்கில், மாதக் கணக்கில், காயங்களுக்கு மருந்து இல்லாமல், பசிக்கு உணவு இல்லா மல், தாய் தகப்பனைப் பார்க்காமல், வாழ்க்கையின் சுகங்களை நாடாமல், எத்தனை இளைஞர்கள், எத்தனை இளநங்கைகள், அங்கே வன்னிக்காடுகளில் போராடி மடிந்தார்கள்?

இந்திய அரசின் உதவியோடு சிங்களவன் வீசிய குண்டுகளில்,எத்தனை அப் பாவி மக்கள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டார்கள்? இந்த வெயில் நம்மை என்ன செய்யும்? முத்துக் குமாரைப் பற்றி எரித்த நெருப்பை எண்ணிக் கொள் ளுங்கள் என்று, இரண்டே முக்கால் மணி நேரம் நான் பேசினேன்.

மாலை நேரத்தில், அந்த ஊர்த் தாய்மார்கள் எல்லாம், தங்களது சின்னஞ்சிறு குழந்தைகளை அழைத்துக் கொண்டு, சாரை சாரையாக வந்தார்கள். அவர் களிடம் நாங்கள் சொன்னோம்: இலங்கையில் இந்துக் கோவில்களை இடித்த தைப் பாருங்கள்; துர்க்கையின் சிலையை உடைத்ததைப் பாருங்கள் என் றோம்.அதையெல்லாம் பெரிய பெரிய படங்களாக வைத்து இருந்தோம். கூட் டம் கூட்டமாக வந்து மக்கள் பார்த்தார்கள்.

இந்தியில் மொழி பெயர்க்கப்பட்ட துண்டு அறிக்கைகளை அவர்களிடம்கொடுத் தோம். காவல்துறையினர் அதைப் படித்தனர். காலையில் நான் காலைக் கடன் களைக் கழிக்கச் செல்லுகின்றபோது, ஒரு எஸ்.பி., ஒரு டி.எஸ்.பி., மூன்று இன்ஸ்பெக்டர்கள், நான்கு சப் இன்ஸ்பெக்டர்கள், 25 காவலர்கள் என ஒரு படையே என் பின்னால் வந்தது. எனக்கே சற்றுக் கூச்சமாக இருந்தது.

அப்போது அவர்கள் என்னிடம் சொன்னார்கள்: நேற்று நீங்கள் பேசியபோது, மொழி புரியாவிட்டாலும் கூடப் பலருக்கு, உங்கள் பேச்சில் நியாயம் இருக் கின்றது என்றே எங்கள் காவல்துறையில் எல்லோரும் எண்ணினார்கள்.

44 மணி நேரம் கடந்தது. தேவையான ஏற்பாடுகளை நாங்களே செய்து கொண் டோம். ராஜபக்சேயின் உருவ பொம்மைக்கு, மணிமாறன் தக்க ஏற்பாடு செய்து இருந்தார்.கொடியவன் ராஜபக்சேயின் படத்தை, தம்பி ஜீவன் அச்சிட்டுக் கொண்டு வந்து இருந்தார். அதையும் கையில் பிடிக்க வேண்டிய நிலைமை
ஏற்பட்டதே? ஆயிரம் பேரிடமும் அதைக் கொடுத்து, தீப்பெட்டியும் கொடுத்து இருந்தோம். எல்லாமே திட்டமிட்டு நடந்தன.

21 ஆம் தேதி. காலை 11 மணிக்கு நான் ஒரு பிரகடனம் செய்யப் போகிறேன்; செய்தியாளர்களே வாருங்கள் என்றேன். வந்தார்கள்.அந்த வேளையில், அங் கே அபூர்வமாக என் கையில் சில செங்காந்தள் மலர்கள் கிடைத்தன. கார்த்தி கைப் பூ.ஈழத்து மக்கள் வீர வணக்கம் செலுத்துவதற்கு,கார்த்திகைப் பூக்களைத் தான் தூவுவார்கள். அதை, கணேசமூர்த்தியும், சத்யாவும், என் கையில் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
தொடரும்........

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment