Tuesday, August 13, 2013

தொடக்க கால காங்கிரசும், மது ஒழிப்பும்!

தொடக்க கால காங்கிரசும், மது ஒழிப்பும்!

(பாரதியின் மொழிபெயர்ப்பு)

ஆங்கிலேயர்களுக்கு எதிராக உருவான இயக்கத்தில் தொடக்க காலத்தில்
ஏ.ஓ.ஹ்யூம், வெட்டர் பர்ன், ஜார்ஜ் யூல்,ஷெர்லி நார்ட்டன் போன்ற ஆங்கிலே யர்களும் முக்கிய பங்கு வைத்தனர்.

தொடக்க காலத்தில் “பாரத ஜாதீய ஐக்ய சங்கம்” என்று பெயர் இருந்தது. இந்த
சங்கத்தின் கூட்டத்திற்கு வரும் பிரதிநிதி களுக்கு ஆங்கிலம் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும். இந்த சங்கம் முதன் முதலாக 1885 இல் பூனா நகரத் தில் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டது. ஆனால், அந்த நேரத்தில்
வாந்தி, பேதியுடன் பிளேக் நோய் தீவிரமாக இருந்ததால் பம்பாயில் நடத்துவ தாக தீர்மானம் செய்யப்பட்டது.


அடிமைப்பட்டுக்கிடந்த நாட்டில் தமிழ் கவிஞர் பாரதி ஒருவர் மட்டுமே ஆனந்த
சுதந்திர பாடலைப் பாடினார்.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்”
என்று கூறிய பாரதி வேற்று மொழிகளில் இருந்து மிக எளிய நடையில் தமிழ்
மொழிக்கு நூல்களை கொடுத்தது விந்தையிலும் விந்தையான செயலாகும்.

1885 இல் பம்பாய் நகரில் கூடிய சபையைக் குறித்து தமிழ்நாடு தவமுடையது ஏனெனில் பாரத ஜன சபையின் முதற்கூட்டத்தில் முதல் தீர்மானத்தைத் தமிழ்நாட்டுத் தலைவராகிய சுதேசமித்ரன் ஆசிரியர் சுப்பிரமணியம் அய்யர் கொண்டு வந்தார் என்று பெருமிதத்துடன் கூறினார்.

இந்திய தேசிய காங்கிரஸ் என்று குறிப்பிடாமல் பாரத ஜனசபை என்றே பாரதி யார் குறிப்பிட்டார். பாரதி சிறந்த மொழி பெயர்ப்பாளர் பல கலைச்சொற்களுக் குரிய தமிழ் சொற் களை கொடுத்தார். ஆங்கிலம் மூலத்தை ஒரு தடவை படித்துவிட்டபின் அதை மூடிவைத்து விட்டு தமிழில் மிக வேகமாக எழுதும் வல்லமை கொண்டவர்.

காங்கிரஸின் ஆரம்பகால வரலாற்றை பாரத ஜனசபை என்று 1919ஆம் ஆண்டு முதல் தொகுதியும், 1920 ஆம் ஆண்டு இரண்டாம் தொகுதியும் வெளியிட்டார். இந்த இரு நூல்களையும் சுதேசமித்திரன் புத்தகசாலையில் பிரசுரமாயின.

1890 ஆம் ஆண்டு கல்கத்தாவில் ஆறாம் ஜனசபை கூட்டம் நடைபெற்றது.நான்
காவது தீர்மானமாக ஆப்காரி சட்டத்தைப் பற்றி விளக்குகிறது.ஆப்காரி விஷ யத்தில் நம்முடைய பழைய வேண்டுதல்களைக் கருதி ஏற்கனவே, இந்தியா கவர்ன்மெண்டாரும் இந்தியா மந்திரியும் செய்திருக்கும் காரியங்களை ஒப்புக் கொள்ளுகிறோ மெனினும்; அதாவது, போதைச் சாறுகளின் மீது இறக்குமதித் தீர்வைகள் விதித்து இருப்பவையும் இந்தியாவில் வடிக்கப்பட்ட தானியச் சாறு களின் மேல் வரி போட்டிருப்பதையும் வங்காள கவர்ன் மெண்டார் வெளி வடிப்பு முறையை விட்டதையும், 1889-90 களில் வருஷத்தில் சென்னை கவர்ன்
மெண்டார் 7,000 சாராயக் கடைகளை மூடி இருப்பதையும் கண்டு மிகவும்
மகிழ்ச்சி கொள்ளுகிறோமாயினும்;

1890 மார்ச் முதல் தேதி இந்தியா கெஜட்டில் பிரசுரம் செய்யப்பட்ட அறிக்கை யின் 103, 104, 105 ஆம் பிரிவுகளில் ஆப்காரி விஷயத்தைக் குறித்துச் சொல்லப் பட்ட முறை முழுவதையும் அதிலும் விசேஷமாக 103 ஆம் பிரிவு நான்காம் உட்பகுதியில் கூறியபடி,

“அந்தந்த ஊர்களில் ஜனங்களுடைய கருத்தை அறிந்து கொண்டு இயன்ற
வரை அதைத் தழுவியே நடக்க முயல வேண்டும்” என்ற விதியையும்  பரி பூர்ணமாக அனுஷ்டிக்கும்படி எல்லா மாகாண கவர்ன்மெண்டுகளையும்
வற்புறுத்துமாறு இந்தியா கவர்ன்மெண்டாரை இந்த ஜனசபை அழுத்தமாக வேண்டிக் கொள்கிறது.

நன்றிகள் 

கட்டுரையாளர் :- உடுமலை ரவி

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment