Monday, August 5, 2013

தண்ணீர், தனியார் வசமா?

தண்ணீர், 21 ஆம் நூற்றாண்டின் நீலத் தங்கம் (Blue Gold) என்று அழைக்கப் படு கிறது. ‘தண்ணீர் தங்கத்திற்கு நிகரானது. அது ஒரு திரவத் தங்கம்.’(Water is liquid gold) என்றார் சர்.ஆர்தர் காட்டன். இவர் சென்னை இராஜ தானியின் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றியவர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், கல்ல ணைத் தொழில் நுட்பத்தைப் பின்பற்றி ஆந்திர மாநிலத்தின் தவனேஸ்வரம் என்ற இடத்தில் கோதாவரி நதியின் குறுக்கே ஓர் அணையைக் காட்டன் கட்டி னார்.அணை கட்டி முடியும் வரை, தன் மனைவி மகளுடன் ஒரு குடிசையில்
அணை கட்டும் பகுதியிலேயே வசித்தவர். இவரும் நம் மக்கள் தலைவர்
வைகோவைப் போன்று நதிகள் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி னார்.


வீட்டு உபயோகம், விவசாயம் மற்றும் தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்கான
தண்ணீர் தேவை அதிகரித்து வருவதாலும், கிடைக்கும் தண்ணீரின் அளவு குறைந்து வருவதாலும், பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கவனத்தை தண் ணீர் வர்த்தகத்தில் செலுத்துகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன், உலக வங்கி மற்றும் தனியார் தண்ணீர் நிறுவனங் களடங்கிய உலக தண்ணீர் குழு (World Water Council) தண்ணீரைப் பொதுப் பொருள் (Common Good) என்ற நிலையிலிருந்து வர்த்தகப் பொருள் (Tradeable commodity) என்று கருதத் தொடங்கி,இக்கருத்தை உலக நாடுகளிடம் வற்புறுத்தி யதால், பல நாடுகள் தண்ணீர் சேவையைத் தனியாரிடம் ஒப்படைக்க முனைந்தன.

இதன் பிரதிபலிப்புதான் நம் நாட்டிலும் வகுக்கப்பட்டுள்ள தேசிய நீர்க்கொள் கை. இது நீர்க் கொள்ளையாக மாறிவிடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

நீர்க்கொள்கை: மத்திய நீர்வள அமைச்சகம் வெளியிட்ட நீர்க்கொள்கை  அம லாக்கப்பட்டால், பல மோசமான விளைவுகள் ஏற்படும். விவசாயம் முற்றிலு மாக பன்னாட்டு நிறுவனங்கள் வசம் சென்றுவிடும். பணம் படைத்த வர்களே விவசாயம் செய்யவும், தண்ணீரை விலைக்கு வாங்க வசதியற்ற ஏழை விவ சாயிகள், தொழிலைக் கைவிடவும் வழி வகுக்கும்.இக்கொள்கையின்படி, நில உரிமையாளருக்கு அவரது நிலத்தடி நீரின் மீது எந்த உரிமையும் இல்லாத நிலை ஏற்படும். சுகாதாரப் பணிகளுக்கும் குடிப்பதற்கும் தவிர, ஏனையப்பணி களுக்கு தண்ணீரைப் பணம் கொடுத்துதான் வாங்க வேண்டிய கட்டாயம் உரு வாகும்.

தண்ணீர் பணம் கொடுத்து வாங்கப் படும் ஒரு வர்த்தகப் பொருள் என்கிறது
நீர்க்கொள்கை. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் போன்று, நீர் ஒழுங்கு முறை ஆணையம் அமைக்கப்பட்டு தண்ணீருக்கான கட்டணத்தைஆணையம் நிர்ணயிக்கும். விவசாயிகள் தண்ணீர் வாங்கப் பணம் இல்லாமல், நிலத்தைத் தரிசாகப் போட வேண்டிய நிலை அல்லது மானாவாரிப் பயிர்களை மட்டுமே பயிரிட வேண்டிய கட்டாயம் உண்டாகும். முடிவில், தண்ணீர் வினியோகம் முழுவதும் தனியார் வசம் போய்விடும் ஆபத்து ஏற்படும்.

இயற்கைச் சொத்தான தண்ணீரைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து, அரசு தன் னை விடுவித்துக்கொண்டு, தண்ணீர் சேவையைத் தனியாரிடம் ஒப்படைத்து விட்டு, ஒழுங்குமுறை ஆணையமாகச் செயல்பட முனைவது ஆபத்தானது. தண்ணீர் வினியோகத்தைத்தனியார் வசம் ஒப்படைத்தால்,தனியார்கொள்ளை
லாபம் அடைவார்களே தவிர, பொது மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

எனவேதான், இக்கொள்கையைக் கண்டித்து மக்கள் தலைவர் வைகோ அவர் கள் பொதுக்கூட்டங்களிலும், திருமண நிகழ்ச்சிகளிலும் நீர்க் கொள்கையால் வரும் பேராபத்தை மக்களிடம் விளக்கி வருகிறார். மேலும், இக்கொள்கையை எதிர்த்து கழகப் பொதுக்குழுவில் தீர்மானமும் இயற்றப் பட்டுள்ளது.

தண்ணீர் வர்த்தகம்: அண்மைக் காலமாக,டாடா வாட்டர் பிளஸ் என்ற தண் ணீர் பாட்டில் விளம்பரமும் பிஸ்லரி பாட்டில் விளம்பரமும் தொலைக்காட்சி யில் ஒளிபரப்பாகிறது. ‘தாகமான கோளம்-தண்ணீர் வர்த்தகத்தில் எதிர்காலத் தை உருவாக்குங்கள்’ என்று சுமார் 1400 கோடி டாலர் மதிப்புள்ள லார்சன் அண்டு டூப்ரோ குழுமம் தண்ணீர் வர்த்தகத்தில் வேலை வாய்ப்பிற்கான முழுப் பக்க விளம்பரத்தை மார்ச் மாதம் ‘இந்து’ நாளிதழில் வெளியிட்டிருந்தது.

மேற்படி விளம்பரங்கள் தண்ணீர் விநியோகத்திலும் தண்ணீர் சம்பந்த மான சேவைகளிலும் நுழைவதற்கு தனியார் நிறுவனங்கள் தயாராக உள்ளதைக் காட்டுகின்றன. இது நமக்கு விடுக்கப்படுகின்ற எச்சரிக்கையாகும்.

உலக வங்கியும் மன்சாண்டோவும் இந்தியாவிற்குள் தண்ணீர் வர்த்தகத்தில்
நுழைவதற்கு வாய்ப்புகள் உள்ளனவாம். காரணம், நம் குடிநீர்த் திட்டங்கள்
அனைத்திற்கும் கடன் அளித்திருப்பது உலக வங்கிதான். தமிழகத்தில் அனைத் து உள்ளாட்சிகளும் உலக வங்கிக் கடனில்தான் குடிநீர்த் திட்டங்களை நிறை வேற்றியுள்ளன.கடனை திரும்பச் செலுத்தாத நிலை வேறு தொடர்கிறது. மேலும் ஏதோ ஒரு வழியில் உயர்மட்ட அரசு நிர்வாகிகள் தங்கள் சுயலாபங் களுக்காக தண்ணீர் சேவைக்குத் தனியார் மயமாக்கலைத் திணிக்கின்றனர்.

தண்ணீர் சேவையில் தனியார் முதலீட்டை ஊக்குவித்து, தண்ணீர் விலையை மிக அதிகமாக உயர்த்தி குடிநீர் வர்த்தகத்தை உருவாக்குவது போன்ற கோணத்தில்தான் உலக வங்கியும் பன்னாட்டு நிறுவனங்களும் செயல்படு கின்றன. இதற்காக உலக வங்கி பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கடனையும் தாராளமாக வழங்குகிறது.அர்ஜென்டினா நாட்டில் குடிநீர் நிர்வாகத்தை அகஸ் அர்ஜென்டினா என்ற நிறுவனம் பெறுவதற்காக உகல வங்கி 1994 ஆம் ஆண் டில் 172 மில்லியன் டாலர் கடன் வழங்கியது.

தண்ணீர் வர்த்தகத்தில் நிறுவனங்கள்:2001 ஆம் ஆண்டு கணக்கின்படி, நம்
நாட்டிலேயே தண்ணீர் எடுத்து நம்மிடமே விற்பனை செய்ததில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு 1,10,000 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.அவர்கள் செய் திருந்த முதலீடு 50 கோடி ரூபாய் மட்டுமே. 12 ஆண்டுகளுக்குப்பின் தற்போது லாபக் கணக்கு எத்தனை மடங்கோ?

கோக், பெப்சி போன்ற நிறுவனங்கள் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சி தண் ணீர்த் தட்டுப்பாட்டை தத்தம் பகுதிகளில் ஏற்படுத்தியுள்ளன.தண்ணீர் சேவை, தனியார் வசமானால், மேலும் பல பன்னாட்டு நிறுவனங்கள் போட்டிபோட்டு தண்ணீர் வர்த்தகத்தில் குதித்து நிலத்தடி நீரை முற்றிலுமாக உறிஞ்சி விடு வார்கள்.

தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்வதில் இருந்தே தண்ணீர்
வர்த்தகம் ஆரம்பமாகிவிட்டது. நம் நாட்டில், தமிழகம்தான் பாட்டில் தண்ணீர் உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றது. பாட்டில் தண்ணீர் விற்பனை உலகி லேயே நம் நாட்டில் தான் அதிகமாகி வருகிறது.

இந்தியாவில் தண்ணீர் சந்தையின் மதிப்பு ரூ.8,000 கோடியாக உள்ளது. இதன் ஆண்டு வளர்ச்சி 19 சதம். வரும் 2015 ஆம் ஆண்டில் பாட்டில் தண்ணீரின் சந்தை மதிப்பு ரூ.15,000 கோடியாக உயரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

சுமார் 16,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தண்ணீர் பாட்டில் விற்பனையில் உள்ளன. ரூ.800 கோடி மதிப்புள்ள மாணிக் சந்த் (குட்கா) குழுமமும் தண்ணீர் வர்த்தகத்தில் Oxyrich  என்ற பெயரில் நுழைந்துள்ளது.

பிஸ்லரி நிறுவனம் ‘பிஸ்லரி’ என்ற பெயரில் பாட்டில் தண்ணீர் விற்பனை யில் முதலிடத்தில் உள்ளது.10 புதிய தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகளைத் தொடங்கத் தயாராகிறது.டாடா குளோபல் பிவரேஜஸ் நிறுவனம் ‘டாடா வாட் டர் பிளஸ்’ என்ற பெயரில் முதன் முதலாக ஊட்டச்சத்து கொண்ட தண்ணீரை விற்பனை செய்து வருகிறது.

துத்தநாகம், தாமிரம் தாதுக்கள் அடங்கிய தண்ணீருக்கு தென்னிந்தியாவில்
வரவேற்பு உள்ளது. கால்சியம், குரோமியம் தாதுக்களை அறிமுகப்படுத்துவது அடுத்த திட்டம். பார்லே அக்ரோ என்ற நிறுவனம் ‘பெய்லி’ என்ற பெயரில் குடிநீர் விற்பனை செய்கிறது. நாடு முழுவதும் 30 குடிநீர் சுத்திகரிப்பு தொழிற் சாலைகள் நிறுவ திட்டமிட்டு உள்ளது. கோகோ கோலா நிறுவனம் தனது ‘கின்லே’ விற்பனையை அதிகரிக்கப் பல திட்டங்களை மேற் கொண்டு உள்ள தாம். தண்ணீர் வர்த்தகத்தில் மிக அதிக வாய்ப்பு உள்ளதாகக் கருதி மேலும் பல
நிறுவனங்கள் நுழைய உள்ளன.

பாட்டில் தண்ணீர் விற்பனை ஒருபுறம்.மற்றொரு புறத்தில் டேங்கர்களில்தண் ணீர் வர்த்ககம் பரந்து விரிகிறது.மராட்டிய மாநிலம், மரத்வாடா பகுதியில்
ஜல்னா மாவட்டம் ஜல்னா நகரில் மட்டும் 1200 டேங்கர்கள் தண்ணீர் வர்த்தகத் தில் உள்ளனவாம். இங்கு ஒரு நாளில் மட்டும் ரூ. 60 முதல் ரூ.75 இலட்சம் வரை தண்ணீர் விற்பனை நடைபெறுகிறது என லோக்சட்டா நாளிதழ் தெரி விக்கிறது. ஒரு நாளில் ஒரு கோடியே 80 இலட்சம் லிட்டர் தண்ணீர் விற்பனை யாகின்றது. டேங்கர் உரிமையாளர்கள் 1000 லிட்டர் தண்ணீரை ரூ.1000 முதல் ரூ.1,500 க்கு வாங்கி, ரூ.3,500க்கு விற்பனை செய்கின்றனர். 

ஜல்னா நகரில் மட்டும் 100 டேங்கர் கட்டுமானத் தொழிற்சாலைகள் உள்ளன. கடந்த சில மாதங்களில் மட்டும் ரூ.200 கோடி மதிப்பிற்கு மேலாக டேங்கர் கட்டுமானத் தொழில் நடந்துள்ளது. இங்கு வீடு கட்டத் தேவையான ஜன்னல், இரும்புக் கதவு கள் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம். (ஜல் என்றால்
தண்ணீர், நா என்றால் இல்லை என்று பொருள். பாவம் ஜல்னா நகர்) பிற மாநி லங்களிலும் அதிக விலைக்கு டேங்கர் மூலம் தனியார் தண்ணீர் விற்பனை செய்கின்றனர்.

தற்பொழுது உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் தண்ணீர் வினியோகம்
உள்ள நிலையிலேயே தனியார் நிறுவனங்கள் ஏதோ ஒரு வழியில் தண்ணீர் வர்த்தகத்தில் அதிக லாபம் சம்பாதிப்பதை மேற்கூறிய தகவல்கள் மூலம் காண முடிகின்றது. தேசிய நீர்க் கொள்கை அமலாக்கப்பட்டால்,தற்போதுள்ள நிலை மாறி தண்ணீர் சேவை தனியார் வசம் ஒப்படைக்கப் பட்டால், விளைவு-பாதிப்புகள் கடுமையாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தனியார் தண்ணீர் சேவைக்கு எதிர்ப்பு: உலகில் பெரும்பாலான நாடுகளில்
தண்ணீர் வினியோகத்தைத் தனியாருக்கு வழங்கும் திட்டங்களை எதிர்த்து குரல் எழும்பியுள்ளது. இதை ஒருங்கிணைத்து ‘தண்ணீர் நியாய இயக்கம்’ என்ற அமைப்பு தோன்றியு உள்ளது. லத்தீன் அமெரிக்க நாடு களாகிய நிகர குவா, பொலிவியா, அர்ஜென்டினா, சிலி ஆகிய நாடுகளிலும் ஆசியா வின் இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடு களி லும், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடு களி லும் இந்த இயக்கம் வளர்ந்து வருகிறது.

உருகுவே நாடு இப்பிரச்சினையில் 2005 ஆம் ஆண்டில் உலக சரித்திரம் படைத் தது. தண்ணீர் சேவையைத் தனியாருக்கு ஒப்படைப்பது பற்றி பொது வாக்கெ டுப்பு நடத்தப்பட்டது. மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர்கள் இது சம்பந்தமாக அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என வாக்களித்தனர். அதன்படி, தண்ணீர் இயற்கை அளித்த கொடை. தண்ணீர் அடிப்படை மனித உரிமை. பொது மக்களுக்கான தண்ணீர் சேவையை நேரடியாகவும் முழுமை யாகவும் அரசே ஏற்று செயல்பட வேண்டும் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. உருகுவே நாட்டு மக்கள் செய்த சாதனையாகும் இது.

ஆனால், சிலி நாட்டில் 2000 ஆம் ஆண்டில் இதுபோன்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, 79.2 சதம் மக்கள் தனியார் மயமாவதை நிராகரித் திருந்தாலும், அரசு தண்ணீர் சேவையை தனியார் மயமாக்கிவிட்டது ஒரு சோகமான நிகழ்வே.

தண்ணீர் சேவையைத் தனியார் வசமாக்கும் முயற்சிக்குப் பல தொண்டு நிறு வனங்கள் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தன. 2004 மார்ச் மாதம் உலக தண்ணீர் அமைப்பு (World Water Forum) கியோட்டாவில் (ஜப்பான்) ஒரு கூட்டம் நடத்தியது. கூட்டத்தில் தனியார் சேவையைப் பற்றி விவாதிக்கும் தருணத் தில், மெக்சிகோ நாட்டின் கேன்கன் நகரைச் சேர்ந்த ஒரு ஆர்வலர் மேடைக்கு வந்து வயிற்றைக் குமட்டும் வாசனை கொண்ட கருமையான நிறம்கொண்ட தண்ணீர் டம்ளரைக் கொண்டுவந்து ஒலி பெருக்கி முன் வைத்து சூயஸ் என்ற தனியார் நிறுவனம் தன் வீட்டிற்கு தினசரி வழங்கும் தண்ணீர்தான் அது என் றும், அத்தண்ணீரை சூயஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பருக வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்த நிகழ்ச்சி தனியார் நிறுவனங்களிடையே மிகுந்த பர பரப்பை ஏற்படுத்தியது.

தோல்வியடைந்த தனியார் தண்ணீர் சேவை: தொழில் துறையில் வளர்ந்த
நாடுகளின் தண்ணீர் வர்த்தகம் பெரிய அளவில் நடைபெறுகின்றது. உலகில்
உள்ள 100 பெரிய தண்ணீர் வர்த்தக நிறுவனங்களின் பட்டியலில் ஜெர்மனியின் RWE, , பிரான்சின் விவண்டி மற்றும் சூயஸ், அமெரிக்காவின் என்ரான் ஆகிய
நிறுவனங்கள் முதல் நான்கு இடங்களில் உள்ளனவாம். என்ரான் தண்ணீர்
வர்த்தக வருமானம் மைக்ரோசாப்ட் வருமானத்தைவிட நான்கு மடங்கு அதி கம் என்கின்றன.

ஆனால், இவ்வளவு லாபம் ஈட்டினாலும், தனியார் நிறுவனங்கள் சுத்தமான
தண்ணீரை வழங்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும இல்லை. ஜூலை 1999
இல் சூயஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான நார்த்தம்பரியன் என்ற நிறுவ னம் மிக மோசமான தண்ணீர் வர்த்தக நிறுவனம் என்று இங்கிலாந்து நாட்டில் அறிவிக்கப்பட்டது.

பொதுத் துறையிடமிருந்து தண்ணீர் சேவை தனியாரிடம் ஒப்படைக்கும்போது உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகம் தண்ணீரின் தரம் மற்றும் முறை யான வினியோகத்தை கண்காணிக்கத் தவறுகின்றது. தரமான தண்ணீர் வழங் கவில்லை என்றால்,ஊழல், இலஞ்சம் காரணங்களால் தனியாரைத் தண்டிக்க தவறுகின்றனர்.இதனால் நாளடைவில் தனியார் சேவையில் பல்வேறு குறை பாடுகள் ஏற்பட்டு மக்களின் எதிர்ப்பிற்கு இலக்காகின்றன. பல நாடுகளின் தனி யார் சேவை தோல்வியடைந்து உள்ளாட்சி அமைப்புகளே மீண்டும் தண்ணீர் சேவையை ஏற்றுக்கொண்டுள்ளன.

இங்கிலாந்தில் தனியார் தண்ணீர் நிறுவனங்கள் லாப நோக்கோடு 2012 ஆம் ஆண்டில் கட்டணங்களை உயர்த்தின. ஆனால், ஸ்காட்லாந்தில் பொதுத் துறை வசம் உள்ள சேவையில் கட்டணம் உயர்த்தப்படவில்லை.பொலிவியா நாட்டில் தனியார் தண்ணீர் நிறுவனம் சுத்தமான தண்ணீரை வழங்காத கார ணத்தால் ஏராளமான குழந்தைகள் நோய்வாய்பட்டு இறந்து விட்டனர். அங்கு ‘பெக்டல்’ என்ற தனியார் நிறுவனம் பொறுப்பேற்றவுடன் விலையை 200 மடங்கு உயர்த்தியதால் அதன் உரிமம் இரத்து செய்யப்பட்டது.உலக வங்கி மற்றும் ஐ.எம்.எப்.கொள்கையான தண்ணீர் வர்த்தகத்தை கானா நாட்டில் அமல் படுத்தியதில், மூன்று வாளி தண்ணீருக்கு ஒரு குடும்பம் ஒரு நாளின் பாதி வருமானத்தை செலவழிக்க நேர்ந்தது.

ஜோகன்ஸ்பர்க், மணிலாவிலும் நம் நாட்டில் ஒரிசா மற்றும் புது டில்லியிலும்
தனியார் தண்ணீர் சேவை தோல்வி அடைந்தது. லத்தீன் அமெரிக்காவின் தண் ணீர் வினியோகம் தனியாருக்கு வழங்கப் பட்ட சில ஆண்டுகளில் ‘தி  நியூ யார்க் டைம்ஸ்’ என்ற பத்திரிகை லத்தீன் அமெரிக்காவில் தனியார் தண்ணீர் சேவை தோல்வியடைந்து விட்டதாக முதல் பக்க செய்தி வெளியிட்டது.

அர்ஜென்டினாவில் மக்கள் ஒத்துழைக் காத காரணத்தால், தனியார் நிறுவனம்
தானாகப் பின்வாங்கிக் கொண்டது. பொலிவியா நாட்டில் தனியார் தண்ணீர்
சேவையை எதிர்த்து மக்கள் போராடியதைச் சுட்டிக் காட்டும் அந்நாட்டு நீர்வள அமைச்சகத்தைச் சேர்ந்த நீர்வள நிபுணர் ஜூலியன் பீரிஸ் தண்ணீர் சேவை தனியார் வசம் சென்றால் மக்களுக்குப் பயன் தராது என்று கூறுகிறார்.

தெற்காசிய நதிகள், அணைகள் மற்றும் மக்கள் இணைப்பு அமைப்பின் நிபுணர்
ஹிமான்சு தாக்கர் அரசு உயிர் நாடியான நிலத்தடி நீரை எவ்வாறு தொடர்ந்து
பராமரித்து தக்க வைத்துக் கொள்வது என்பது பற்றி யோசிக்கவுமில்லை. சரி யான பாடத்தைக் கற்றுக் கொள்ளவும் இல்லை என்கிறார். தண்ணீரை வர்த்த கப் பொருளாக்குவதும் தண்ணீர் சேவையைத் தனியாரிடம் ஒப்படைப் பதும் மக்களுக்குப் பயன் தராது.மக்களிடையே எதிர்ப்பலைகளை ஏற்படுத்தி தோல் வி அடையும் என்பது தான் பல்வேறு நாடுகள் கண்டஅனுபவம். மத்திய அரசும் இதை  உணர வேண்டும்.

நன்றிகள்

கட்டுரையாளர் :- ஆர்.ஞானதாஸ்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment