Tuesday, August 20, 2013

முன்னோர் மொழியில் மதுவிலக்கு!

“மதுவை ஒரு தட்டிலும் மற்ற பாவங்களை எல்லாம் ஒரு தட்டிலும்  வைத் தால் சரிசமானமாய் இருக்கும்.குடிவெறியைவிடக் கொடிதான பாவம் எதுவும் இதற்கு முன்னும் இருந்த தில்லை; இனிமேலும் இருக்கப் போவது இல்லை” என்று சாணக்கியர் கூறுவார்.

“மக்களிடையே நன்னடத்தையும், கற்பும் நிலவ வேண்டுமாயின் மதுவை
விலக்கியே ஆக வேண்டும்.இல்லாவிடில் உலகம் முழுவதிலும் சத்திய தர்மங் கள் இல்லாமல் போகும்;பொறுப்பு உணர்ச்சியும் போய்விடும்” என்பார் பீஷ்மர்.
“குடி போதையிலிருக்கும் மனிதன் செய்யும் வெறுக்கத்தக்க காரியங்களுக்கு
கணக்கில்லை. அவனுக்கு இந்த உலகத்திலும் துன்பந்தான்; மேல் உலகிலும் துன்பந்தான்; குடிகாரன் பையிலுள்ள பணத்தைப் பிறர் பறித்துக் கொள்வார்கள். போதை நீங்கி நினைவு வந்த பிறகுதான் பறிகொடுத்த பணத்தைத் தேடி அவன் இங்கும் அங்கும் அலைவான்” என்பார் மகாவீரர்.

“பங்கியும், புகையிலையும், அபினியும்,கலியுகத்தின் எம தூதர்கள்” என்று
 கபீர்தாசர் கூறுகிறார்.

“நீங்கள் சாலையில் போய்க் கொண்டு இருக்கையில் சாலையின் ஒரு புறத் தில் மதங்கொண்ட யானை ஒன்றையும், மற்றொரு புறத்தில் ஒரு கள்ளுக்
கடையையும் கண்டால், யானையின் பக்கம் ஒதுங்கி அதனால் மிதிபட்டுச்
செத்தாலும் சாகுங்கள். ஆனால், மதுக்கடைப் பக்கம் மட்டும் செல்ல வேண் டாம்” என்று சங்கநாதம் செய்வார் சைதன்யர்.

ஜராதுஷ்புரர்


தன் மனைவி, குழந்தைகள்,பணியாட்கள் எல்லோருடனும், குடிகாரனுக்குத் தகராறுதான்.அவர்களுக்கு நிம்மதியே இல்லாதுபோகிறது. எல்லோரையும் பகைத்துக் கொள்வதால் குடிகாரனுக்கும் நிம்மதி இருப்பதில்லை.

அடிஸன்

மது வெறுப்பைக் காதலாக மாற்றுகிறது.பொறாமையை வெறியாக்குகிறது. நல்ல இதயம் படைத்த வீர புருஷனைக் கோமாளியாக்குகிறது. கோழையைக்
கொலைகாரன் ஆக்குகிறது.ஆண்டவனது படைப்பில் மது மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் மனிதனை விட கேடானது கிடையாது என்பர் அடிஸன்.

டாக்டர் ஸலீபி

எந்த நாட்டார் மதுவைக் குடித்து வருகிறார்களோ அவர்கள் நாளுக்கு நாள்
திறமை குறைந்து, முடிவில் உடலையும் மனத்தையும் கெடுத்துக் கொண்டு
சர்வநாசம் அடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

பெர் ஆர்தர் கோணன்டாயல்

மதுவைத் தொடாத மனிதன் அதிக மகிழ்ச்சி அடைவான்; சுகம் அதிகம் பெறு வான்; பணம் மிகுதி பெறுவான்.

கடலில் மூழ்கிய வரை விட 

கடலில் மூழ்கி இறந்தவரைவிட கள்ளில் மூழ்கி இறந்தவரே அதிகம் என்பர்
பப்ளியஸ்  ஸைரஸ்.

ஆர்ச்பிஷப் கீன்

‘பூமி பிளந்து உலகில் உள்ள மதுபானக் கடைகளை எல்லாம் விழுங்கிவிடச்
செய்வதற்கு என்னிடம் ஒரு மந்திரசக்தி இருந்தால், நான் உடனே அப்படிச்
செய்துவிட்டு, மனித சமூகத்துக்கு அளவிலாத நன்மை புரிந்ததாக எண்ணி
மகிழ்ச்சி அடைவேன்.

மில்டன்

மதுவை அடியோடு தடுத்துவிட்டால் மக்கள் எல்லோரும் தேக சுகத்துடன்
மன மகிழ்ச்சியுடன் வாழலாம்.

ஷேக்ஸ்பியர்

‘ஆண்டவனே! மக்கள் தங்கள் மதியென்னும் மாணிக்கத்தைத் திருடக் கூடிய பகைவனைத் தங்கள் வாயில் விட்டுக்கொள்கிறார்கள்.(மது அருந்து கிறார்கள்) இது ஒரு விந்தை. மகிழ்ச்சி ஆரவாரத்துடன், களியாட்டங்களுக்கு மத்தியில் மக்கள் தங்களை விலங்கு களாக மிருகங்களாகச் செய்து கொள்ளுவது ஓர் அதிசயம்தான்.

பெர்னாட்ஷா

உலகில் மக்கள் மிகவும் கேடான சமூக நிலைமைகளைச் சகித்துக் கொண்டு
முன்னேற்றமடையப் பெருமுயற்சி எதுவும் செய்யாதிருப்பதற்குக் காரணம்
கோடிக்கணக்கான பேர் மதுபானத்தால் மூளை மழுங்கி, மந்தமடைந்து இருப்ப தேயாகும் என்றால் பெர்னாட்ஷா.

மதுவெறி என்பது நாமாகத் தேடிக் கொள்ளும் பைத்தியம் என்பார் ெஸனிகா.
குடிப்பது தன்னை வேண்டுமென்று பைத்தியமாக்கிக் கொள்வது மட்டு மன்று, முட்டாளாக்கிக் கொள்வதும்தான் என்பார் எம் மான்ஸ்.

டாக்டர் நார்மென்கெர்

ஆசை காட்டி மோசம் செய்வதில் மதுவுக்கு மிஞ்சிய வேறொன்றுமில்லை. அது பலம் தருவதாய் ஆசை காட்டுகிறது.உண்மையில் பலவீனம் ஆக்குகிறது. உயிர் அளிப்பதாகச் சொல்லி அகால மரணத்தைத் தருகிறது. அறிவு தருவ தாய் ஆசை காட்டி மூளைக் குழப்பத்தை அளிக்கிறது.

கள்விற்று சம்பாதிப்பதைவிட கற்பூரம் விற்று கால் பணம் சம்பாதிப்பது மேல்
என்பது நம் நாட்டுப் பழமொழி ஆகும்.

ருஷ்யாவில் சொல்வார்கள் கணவன் குடித்தால் பாதி வீடு பற்றி எரிந்து
கொண்டிருக்கும். மனைவியும் குடித்தால் முழு வீடும் எரிந்து கொண்டிருக்கும்.

இத்தாலியில் சொல்வார்கள், மது உள்ளே சென்றால் அறிவு வெளியே சென்று
விடும்.

ஜப்பான் சொல்கிறது, முதலில் மனிதன் மதுவைக் குடிக்கிறான். அப்புறம்
கடைசியில் மது மனிதனைக் குடித்து விடுகிறது.

டால்ஸ்டாய்

“குடி, அபினி, புகையிலை இவற்றை உலகம் முழுவதிலும் உபயோகிப்பது
ருசிக்க அன்று, மகிழ்ச்சிக்கு அன்று, விளையாட்டுக்கு அன்று. ஆனால், மனச்
சாட்சியின் வேண்டுகோளை மறைப் பதற்கே குடிவெறியில் இல்லாதவன்
நினைக்கவும் ஒவ்வாத காரியத்தைக் குடிவெறியில் உள்ளவன்” செய்கிறான்
என்கிறார் ரஷ்ய மேதை டால்ஸ்டாய்.

ஒரு நாட்டின் நல்வாழ்வைச் சரியான முறையில் அமைக்க வேண்டுமானால்
மதுபான பாவத்தை ஒழிக்க வேண்டும்.போதை வியாபாரத்தின் மேல் எந்தக்
கட்டிடமும் நிற்காது.

தமிழர் தலைவர் வைகோ

‘முழு மதுவிலக்கே நமது இலக்கு’ என்று மார்தட்டி தமிழகமெங்கும் மது ஒழிப் புப் பிரச்சாரப்பயணமும் கொள்கை முழக்கமும் செய்து வருகிற தமிழர் த லை வர் வைகோவின் மதுவிலக்கு கொள்கைகள் வெற்றி பெறும்நாள் தொலை வில் இல்லை

நன்றிகள் 

கட்டுரையாளர் :- 
செ.திவான்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment