Saturday, August 31, 2013

பகத்சிங் நூற்றாண்டு விழா-பகுதி 2

07.10.2008 அன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் #வைகோ வின் உரை

அவன் எழுதிய நூல் கையெழுத்துப் பிரதியாக சிறையில் இருந்து வெளியே கடத்தப்பட்டது. அப்படிக் கடத்தப்பட்ட நூல்கள் மொத்தம் ஆறு. மரண தண்ட னைக்குமுன்பு அவர் எழுதிய ஆறு நூல்கள் வெளியே கடத்தப்பட்டன. அதில் ஒன்று நான் ஏன் நாத்திகன். அடுத்தது ‘கனவுலகத்துக்கு ஒரு அறிமுகம்.’ இந்த இரண்டு நூல்கள்தான் கிடைத்தன. இன்றைக்கு இருக்கிறது. அவர் எழுதிய இன்னொரு நூல், ‘இந்தியாவில் புரட்சிகர இயக்கத்தின் வரலாறு.’ கிடைக்க வில்லை, எவரிடமும் இல்லை. ‘சோஷலிச கோட்பாடு’ எனும் நூல் பகத்சிங் எழுதியது கிடைக்கவில்லை. பகத்சிங் தன்னுடைய “சுயசரிதை” என்ற பெய ரில் எழுதிய நூல் கிடைக்கவில்லை. “At the door of Death” மரண வாசலில் என்ற தலைப்பில் எழுதிய புத்தகம். அதுவும் கிடைக்கவில்லை.

ஆனால், இந்த ஆறு நூல்களும் சிறையில் இருந்து ரகசியமாக வெளியே அனுப்பப்பட்டன. இந்த நான்கு புத்தகங்களும் சிறையில் இருந்து வெளியே கடத்தப்பட்டு ஜலந்தரில் இருந்த குமாரி லஜ்ஜாவதி என்பவரிடம் அனுப்பப் பட்டு இருந்தது. அவர் அவற்றை 1939 இல் விஜய்குமார் சின்கா என்பவரிடம் ஒப்படைத்திருந்தார். 1939 இல் உலகப்போர் மூண்டதும் தன் வீடு சோதனை யிடப்படலாம் என்று எண்ணி - பகத்சிங் எழுதிய நூல்களின் கையெழுத்துப் பிரதிகளை தன் நண்பர் ஒருவரிடம் பாதுகாப்பாக வைத்திருக்கக்கூறி ஒப்ப டைத்தார். ஆனால், 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கக் காலத்தில் அடக்குமுறைக்கு அஞ்சிய அந்த நண்பர் அக்கையெழுத்துப் பிரதிகளை அழித்து விட்டார்.

அப்படி எழுதப்பட்ட நூல் நான் ஏன் நாத்திகன் என்ற நூல். பகத்சிங் 1931 மார்ச் 23 ஆம் தேதி முன்னிரவுப் பொழுதில் தூக்கில் இடப்பட்டபிறகு, அதே ஆண்டில் செப்டம்பர் 27 ஆம் தேதி, அன்று லாகூரில் The People 'மக்கள்' என்ற பெயருள்ள ஆங்கில வாரப்பத்திரிகையில் வெளியானது. அந்த நூல் தமிழ்நாட்டில் தமிழில் பிரசுரம் செய்யப்படவில்லை. பகத்சிங் பொதுவுடைமையாளர். நாட்டின் விடு தலைக்காகப் போராடியவர். தந்தை பெரியார் இந்தியா என்ற அமைப்பை ஏற்கா தவர். அவர் காங்கிரஸ் இயக்கத்தை விட்டு வெளியேவந்து, சுயமரியாதை இயக்கம் கண்டார். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் அமைப்பை ஏற்காத வர். காங்கிரஸ்சை ஒழித்துக் கட்டுவேன் என்று கர்ஜித்தவர்.

இன்றைய உலகமல்ல, இன்றைக்கு உலகம் சுருங்கிவிட்டது. ஒரு கிராமமாகி விட்டது என்கிறார்கள். நான் குறிப்பிடுகின்ற காலகட்டம் 1930 களில் தந்தை பெரியார் சோவியத் ரக்ஷ்யாவுக்குச் சென்றுவந்த தந்தை பெரியார், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பயணித்த பெரியார், எங்கள் பாட்டன், எங்கள் திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார், இந்தத் தமிழகத்தில் எவருக்கும் ஏற்படாத சிந்த னை அவருக்கு ஏற்பட்டதன் விளைவாக, பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தின் சார்பில், 1934 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி அன்று, இந்தப் புத்தகத்தைத் தமிழில் தோழர் ப.ஜீவானந்தம் மொழியாக்கம் செய்ததை, ‘உண்மை விளக்கம்’ என்ற அச்சகத்தின் சார்பில் வெளியிட்டார்.

அதற்குப்பிறகு ஈ.வே.கிருக்ஷ்ணசாமி வெளியிட்டார். தந்தை பெரியாரின் தமை
யனார். ஈ.வே.கே.சம்பத்தின் தந்தையார்.அதை மொழிபெயர்த்துத் தந்தவர் ஜீவா னந்தம். ஆகவே, திராவிட இயக்கத்தில், திராவிடர் கழகத்தில், பின்னாளில் திராவிடர் கழகமாக உதித்த எங்கள் இயக்கம், நாங்கள் அதற்குச் சொந்தக்காரர் கள். ஆக,பாட்டன் செய்ததை இந்தப் பேரப்பிள்ளைகள் செய்கின்ற உணர் வோடுதான், இந்த விழாவை நடத்துகிறோம் அன்றைக்கு யாரும் செய்ய முடி யாததை தந்தை பெரியாரின் கூட்டம் செய்தது.

பகத்சிங்கின் நூல் வெளியிட்டதற்காக ஜீவாவுக்கும் தண்டனை - ஈ.வே. கிருக்ஷ்ணசாமிக்கும் தண்டனை. பகத்சிங் எழுதிய நூலை தமிழில் தருகின்ற எண்ணம் தந்தை பெரியாருக்கு ஏற்பட்டது. ஆகவேதான் பகத்சிங் அவர்களின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்கு நாங்கள் முன்வந்து இருக் கிறோம். அதிலும், தியாக உணர்வும் - போராட்ட நெஞ்சமும் தமிழக இளைஞர் களுக்குத் தேவை என்பதால், எதைச் சொன்னால் அந்த உணர்ச்சி கூர்மைப் படுத்தப்படுமோ, அதற்காக பகத்சிங்கை நாங்கள் நினைவு கொள்கிறோம். பகத்சிங் கண்டங்களைக் கடந்தவன் - எல்லைகளைக் கடந்தவன். நாடு மொழி இனம் என எல்லைகளைக் கடந்தவன்.

தொடரும்......

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

No comments:

Post a Comment