Wednesday, August 21, 2013

வெற்றிக்குக் கட்டியம் கூறும்

வெற்றிக்குக் கட்டியம் கூறும் விருதுநகர் மாநாடு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற நமது மாபெரும் இயக்கத் தின் மகத்தான மாநாடு. சரித்திரத்தின் பக்கங்களில் சாதனை களை நிகழ்த்திக் காட்டிய தலைவர்களும், வரலாற்றின் பக்கங்களில் நிலைத்த புகழோடு
அழிக்கமுடியாத அத்தியாயங்களாய் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்ற தலைவர் களும் உலவிய விருதுநகர் மாவட்டத்தில், கையிலே கழகக் கொடிகள் - கருத் தில் தமிழ்மானம் - விண்ணை முட்டுகின்ற வீர முழக்கங்களோடு கழகத்தின் காளையர் சங்கமிக்கின்ற மாநாடு.

பிரிக்கப்படாத முகவை மாவட்டத்தில்,தேசிய இயக்கத்திற்குப் பெருமை
சேர்த்த தலைவர்கள் - தியாகச்சுடர் பெருந்தலைவர் காமராசர், பிரிட்டிஷ் ஏகா திபத்தியத்தின் பிடறி மயிரைப் பிடித்து உலுக்கிய தேசியத்தையும் தெய்வீகத் தையும் இருகண்களாக பாவித்த தேவர் திருமகன்,தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பெருந்தகையாளர் குமாரசாமிராஜா,தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயரிட வேண்டும் என்று உண்ணா நிலை அறப்போர் மேற்கொண்டு
உயிரையே தியாகம் செய்த தியாகி சங்கரலிங்கனார், முகவை மாவட்டத்தினு டைய மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் கரிசல் மண்ணில் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு கிடைத்த கருவூலம் மதிப்பு மிகு எஸ்.ஆர்.நாயுடு போன்ற தேசிய தலைவர்களும்,


திராவிட இயக்கத்திற்கு அணிகலன் களாய்த் திகழ்ந்த பெரியவர் பட்டி வீரன்
பட்டி (தற்போதைய திண்டுக்கல் மாவட்டம்) சவுந்தரபாண்டியனார், திராவிட இயக்கச் சிந்தனையாளர் வி.வி.இராமசாமி, மாணவர்இயக்கத்தைக் கட்டிக் காத்த தவமணி ராஜன், அண்ணாவின் அருமைத் தம்பியாக மாவட்டக் கழகச்
செயலாளராக, அக இருள் அகற்றி அறிவொளி பரப்பிய ஆசிரியர் பெருந்தகை தங்கபாண்டியன், திருவில்லிபுத்தூரில் அமுதன், “காந்தியார் சாந்தியடைய” என்ற புத்தகம் எழுதியதற்காக அன்றைய காங்கிரஸ் அரசாங்கத்தால் கைது
செய்யப்பட்டு காராகிருகத்தில் அடைக்கப்பட்டு, அடர்ந்த சுருண்டிருந்த கேசம் அடியோடு நீக்கி மொட்டை அடிக்கப்பட்டு அடக்கு முறைகளை சந்தித்த வாலி பப் பெரியார் என்று வாஞ்சையோடு அழைக்கப்படுகின்ற ஏ.வி.பி.ஆசைதம்பி, திராவிட இயக்க மாணவர் தளபதியாக களம் கண்டு வியக்கதக்க வெற்றி யினை கண்ட விருதுநகர் சீனிவாசன், மல்லிகை மணக்கும் தமிழ் சொற்களால் மேடைகளை அலங்கரித்த காளிமுத்து போன்றதிராவிட இயக்க முன்னோடி களும்,அரசியல் அதிசயங்களை அரங்கேற்றம் செய்த விருதுநகரில் நம்மு டைய மாநாடு.

“நான் எம்.ஏ. படித்த இளைஞனாக இருந்தபோதும் சிறை சென்று இருக்கிறேன். மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோதும் சிறை சென்றிருக்கிறேன். அமைச்சராக இருக்கும்போதும் சிறை செல்லும் வாய்ப்பு கிடைக்குமென்றால்
மகிழ்ச்சியோடு அதனை ஏற்றுக் கொள்வேன். அது என் வாழ்க்கை வரலாற்றி லேயே வசீகரமான அத்தியாயமாக இருக்கும்.

ஆகவே, சிறை எங்களை மிரட்ட முடியாது” என்று ஆதிக்கத்தை வேரறுப்பதற் காக சிறைச்சாலைகளை தவச்சாலைகளாக மாற்றி, தமிழ்நாட்டில் அதிகார மாற்றத்திற்கு ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமிட்ட அறிஞர் பெருந்தகை அண்ணாஅவர்களின் பிறந்தநாள் விழா வாகிய செப்டம்பர் திங்கள் 15 இல், எட்டு திசைகளிலேயும் வெற்றிச் செய்தி பட்டுத் தெறிக்கின்ற வகையில்
மாநாடு மணம்பெற இருக்கிறது.

அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் காவிரிக்கரை திருச்சியில் கழகம் மாநாடு கண்டபோது மாநாட்டின் பணிகளை இப்படி வரிசைப் படுத்துகிறார்:

“நாம் நமது குடும்பத்தின் முழு வலிவும், பூரணப் பொலிவும் திருச்சி மாநில மாநாட்டில் விளங்கிடும் வகையில் கூடிட வேண்டாமா?

களம் பல சென்று கடும் போரில் ஈடுபட்டுத் தியாகத் தழும்புகளை ஏற்றிருக்கி றோம். தாயக மீட்புப் பணிக்காக நம்மை நாமே ஒப்படைத்து விட்ட நிலையின ரானோம். 

பெற்ற தழும்புகளைக் கண்டு பெருமிதம் அடைந்திட மட்டுமல்ல; இழித்தும் பழித்தும் பேசிடும் இயல்பினரை இனி நாம் பொருட் படுத்தப் போவதில்லை என்பது பற்றிப் பேசிட மட்டுமல்ல; எதிர்ப்போர் ஏளனஞ் செய்வோர் ஆகியோ ரின் திட்டத்தைத் தகர்த்தெறிய வழி வகை காண மட்டுமல்ல;

நமது ‘வரலாறு’ பற்றிய ஆய்வுரையை நாட்டினர் அறியச் செய்ய மட்டுமல்ல;
சீரிய நம் கொள்கை வெற்றி பெறத் தக்க செயல் திட்டம் காணக் கூடுகிறோம். இதற்குச் சிந்தையின் உறுதிதான் சிறப்புறத் தேவையே தவிர, சிங்கார அமைப் புகளும் செல்வப் பெருக்கமும் அல்ல.

களம் செல்லத் துடிப்போருக்குக் கட்கம் முக்கியமே தவிர, கட்டில் - தந்தத் தாலா? தங்கத்தாலா? வட்டிலில் - பாலா? தேனா? வனிதையின் மொழி- யாழா? குழலா? என்பதல்ல முக்கியப் பிரச்சினைகள்.

வதைபடும் தாயகத்தைக் காண்கிறோம் - விடுதலைக்கான வழி வகை காணக் கூடுகிறோம். கஷ்ட -நஷ்டம் ஏற்கும் உள்ளம் படைத்தோர் கூடுகிறோம். நாவ லர் நெடுஞ்செழியனைக் கழகக் காவலராகக் கொண்டு கூடுகிறோம். நாவலர் - நம் கழகக் காவலர்.

தம்மிடம் ஒப்படைக்கப் பட்டுள்ள படை ஒப்புயர்வற்றது; உளத் திண்மை கொண்டது என்பதை உணரத் தக்க அளவிலும் வகையிலும் ஆற்றல் மிக்க
தம்பி.

“பந்தல் வேலை எந்த அளவில் உள்ளது? பாய்களை வாங்கி விட்டீரோ? பணி மனையில் இன்று என்ன நிலைமை? கொடிமரம் உயரம் எவ்வளவு?”

இப்படியெல்லாம் கேட்டுக் கொண்டும், ஒவ்வொரு வேலையையும் கவனித் துக் கொண்டும் இருக்கிறார்.அவர் உடனிருப்பதால் ஏற்படும் உற்சாகம், ஏற் கெனவே ‘சிட்டுப்’ போல் பறந்து பணியாற்றிக் கொண்டு வரும் திருச்சித் தோழர்களுக்கு மேலும் உரமும் திறமும் தரமும் தருகிறது. வேலை மும்முர மாக நடைபெற்று வருகிறது.

நாவலர் நல்ல தமிழ் அறிந்தவர்.இலக்கண இலக்கியங்களை முறையாகப் பயின்றவர். அவர் ஒரு நடமாடும் பல்கலைக் கழகம்”.

15.4.56 திராவிட நாடு இதழில் திருச்சி மாநாட்டின் சிறப்பு பற்றி அண்ணா அவர் கள் எழுதியதோடு மட்டுமல்ல,நாவலர் அவர்களுக்கு நடமாடும் பல்கலைக் கழகம் பட்டமும் சூட்டினார்.

அண்ணாவினுடைய இந்த விளக்கத்தை மீண்டும் ஒருமுறை நாம் படித்துப் பார்த்தால், முழுக்க முழுக்க வரிக்கு வரி - வார்த்தைக்கு வார்த்தை- நம்மு டைய கழகம் இப்பொழுது எடுத்திருக்கின்ற நடவடிக்கைகளுக்கு சாட்சியம் கூறுகின்ற வகையில் இருக்கும். சிங்கார சென்னையும், சிலம்பு ஒலித்த மதுரையும், நஞ்சை சூழ்ந்த தஞ்சையும், மலைக்கோட்டை திருச்சியும், முக் கனியில் முதற்கனியாம் சேலமும், பரணி பாய்ந்து பயிர் செழிக்கும் நெல்லை யும், பார்க்கின்ற இடமெல்லாம் பாக்கும் தென்னையும்,திரும்புகின்ற திசை யெல்லாம் தென்றல் காற்றும், அல்லியும் தாமரையும் அழகுமுகம் காட்டி
சிரிக்கும் அற்புத பொற்றாமரைக் குளங்களும், இயற்கை அன்னை எழில்
கொஞ்சி விளையாடும் குமரியும், எங்கும் புகழ் விரிக்கும் தொண்டை மண்டில மும், கொஞ்சு தமிழ் விளையாடும் கொங்குச் சீமையும், தமிழ் இனத்தின் சரித்தி ரத்தில் எப்படி பிரிக்க முடியாத அங்கங்களோ, அப்படித்தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழ்மக்கள் வாழ்வுடன் பின்னிப் பிணைந் துள்ள பிரிக்கமுடியாத சக்தியாகும்.

துள்ளி வருகுது வேல்! பகையே தள்ளி நில்! என்று புயல் வீசினாலும் பூகம்பம்
கிளர்ந்து எழுந்தாலும் கரையை உடைத்துக் கொண்டு பொங்கி வருகின்ற காட்டாறாக புதுப்புது இடர்ப்பாடுகள் எதிர்ப்பட்டாலும்,முகத்திற்கு நேராக சிரித்துவிட்டு, முதுகுக்குப் பின்னால் கத்தியைத் தூக்குகின்ற துரோகங்கள்
துரத்தினாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளும் போர்க்குணம் கொண்ட
வீரத்தின் இலக்கணமாகத் திகழ்கின்ற தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு,
தமிழ்மக்கள் என்று தன்னுடைய வாழ்க்கையை தியாக வேள்வியில் ஆகுதி யாக அர்ப்பணம் செய்து இருக்கின்ற தமிழ் இனத்தின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவர் ஊர் உறங்குகின்ற வேளையிலும் தன் உள்ளம் உறங்காது, தான் உறங்கும் வேளையிலும் தன் கொள்கை மறவாத தென்பாண்டிச் சிங்கம் தலைவர் வைகோ அவர்கள், “அணிவகுத்து வாருங்கள்! ஆர்ப்பரித்து வாருங் கள்! அணி அணியாய் வாருங்கள்!” என அறைகூவல் விட்டு அழைக்கிறார்.

தமிழகத்தினுடைய வரலாற்றில் ஒரு புதிய திருப்புமுனையை உருவாக்கவும், அரசியல் பார்வை யாளர்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தவும் இந்த மாநாடு அடித்தளமிட இருக்கிறது.

பிரெஞ்சுப் பேரறிஞன் எமிலி ஜோலா இரவெல்லாம் தூக்கம் துறந்து, பிரெஞ்சு நாட்டின் எழுச்சிக்காக எழுதிக் கொண்டு இருப்பாராம்.அப்பொழுது தூங்கிக் கொண்டிருக்கும் பிரெஞ்சு நாட்டைப் பார்த்துக் கூறுவாராம், “என் பிரெஞ்சு நாடே! நீ தூங்கிக் கொண்டிருக்கிறாய்.தூங்குகின்ற உனக்காக நான் விழித்துக்
கொண்டிருக்கிறேன்” என்று அப்படி சொன்ன எமிலி ஜோலாவைப் போல்
உறங்காத கண்களோடும், ஓய்வறியாத உழைப்போடும், இந்த இனத்தை
தொட்டுத் தூக்குவதற்கும், தூக்கி நிறுத்துவதற்கும் களம் அமைத்துப் போராடு கிற நமது தலைவர் வைகோ அழைக்கிறார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் ஒரு இயக்கத்தை ஆரம் பிக்க வேண்டும் என்ற எண்ணமோ,அரசியல் கட்சியை ஆரம்பித்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசையோ, எள்ளளவும் தலைவர் வைகோ அவர் களுக்கு இல்லை.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்பது காலத்தின் கட்டாயமாக
இருந்தது. கட்டளையாக இருந்தது.தேவையாக இருந்தது. அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் கழகத்தில் குடும்பத்தைக் கண்டார்.அதற்குப் பின்பு தலை மையேற்றவர் தன்னுடைய குடும்பத்தில் கழகத்தைக் கரைத்தார். சுயநலம் வேலி சுவரானது, பொது நலம் போலிச் சரக்கானது. 

அண்ணாவினுடைய தம்பி மார் களின் எண்ணங்களுக்கு,இயக்கப் பெருமூச் சுக்கு , இதய நெருடலுக்கு வடிவம் கொடுக்க வேண்டிய நிலை வந்தது. தலை வர் வைகோ அவர்களை சூழ்நிலை முற்றுகையிட்டது. அதன் விளைவாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முகிழ்த்து எழுந்தது.

கழகத்தின் 21 ஆண்டுகால வரலாற்றில் கழகம் மேட்டையும் பார்த்திருக்கிறது, பள்ளத்தையும் பார்த்திருக்கிறது. கோடையையும் சந்தித்திருக்கிறது. வசந்தத் தையும் வரவேற்றிருக்கிறது. கழகம் இழப்புகளை மீறி எழுந்து நிற்கிறது.துய ரங் களைத் தாண்டி தோள் நிமிர்த்துகிறது.சுடராகப் பிறந்தது அகலாக வளர்ந்து நிற்கிறது. இருண்ட தமிழகத்திற்கு தீபமாக நிமிர்ந்து நிற்கிறது. இன எழுச்சித் தீயைப் பற்ற வைக்கும் தீப்பந்தமாக மாறி இருக்கிறது.

1967 இல் ஆட்சிமாற்றத்திற்கு அச்சாரம் அமைத்த விருகம்பாக்கம் மாநாட்டில், “கல்லும், முள்ளும், புதருமாய் மண்டிக் கிடந்த இந்த இடம், திருத்தப்பட்டு செம்மைப்படுத்தப் பட்டு நான்கே நாட்களில் மாநாட்டிற் காகப் பயன்படுகிறது என்றால் இந்த நிலத்தை மாற்றி அமைத்த நாம் இந்த நாட்டைத் திருத்த எவ் வளவு நேரமாகும்?” என்று வினா எழுப்பினார் அறிஞர் பெருந்தகை அண்ணா
அவர்கள்.

தாயகத்தின் விடுதலைப் பணி நம் தலைக்கு மேல் உள்ளது. வீழ்ச்சி பள்ளத் தாக்கில் விழுந்துகிடக்கிற தாய்த் தமிழகத்தைத் தட்டி எழுப்பவும் பாழ்பட்டு கிடக்கிற பைந்தமிழ் நாட்டைப் பக்குவப்படுத்தவும் சிறப்பு இழந்து சீரிழிந்து கிடக்கிற செந்தமிழ் நாட்டைச் செழிப்புறச் செய்யவும் அதற்கான பணிகள் நம் கண்களுக்கு முன்னால் இமயமாய் எழுந்து நிற்கிறது.

நஞ்சை கக்குகின்ற நாசகார ஸ்டெர்லைட் அகற்றம், ஆபத்தை விளைவிக்கும் அணு உலை எதிர்ப்பு, காவிரியில் உரிமை, மதுவின் கொடுமையில் இருந்து மக்களுக்கு விடுதலை, எல்லாவற்றிற்கும் மேலாக கொடியவன் ராஜபக்சே வின் கொட்டம் அடங்கி சுதந்திர தமிழ் ஈழம் மலர, என வரிசையாக கடமைகள் அணிவகுத்து நிற்கின்றன. இந்தக் கடமைகளை ஈடேற்றுவதற்கும் தமிழகம்
தலைநிமிர்ந்து நிற்பதற்கும் நம்மைத் தவிர வேறு யார் களத்தில் நிற்பார்கள்?

திருச்சி பத்திரிகையாளர் சந்திப்பில் தலைவர் வைகோ அவர்கள் குறிப்பட்ட தைப்போல்,ம.தி.மு.க.வின் குரல் இந்திய நாடாளுமன்றத்தில் ஒலிக்கும். எட்டு திசையிலேயும் வெற்றிச் செய்தி கிடைக்கும். தலைவர் வைகோ கழுத்தில் மாலைகள் விழும்.கூண்டுப் பறவை சிறகை விரிக்கும், குனிந்த முகங்கள் நிமிர்ந்து சிரிக்கும்.வானம் நமது கொடியை அழைக்கும். மானம் நமக்கு ஒரு மகுடம் வழங்கும்.

பேரறிஞர் அண்ணாவுக்கு ஒரு விருகம்பாக்கம் மாநாடு.

தலைவர் வைகோவிற்கு விருதுநகர் மாநாடு.

நன்றிகள்

கட்டுரையாளர் :- ஈட்டிமுனை இளமாறன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment