Saturday, August 31, 2013

தொழிற்சங்க தொடக்கவிழா

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் மதிமுக தொழிற்சங்க தொடக்கவிழா வரும் 2ம் தேதி நடக்கிறது. இவ்விழாவில் #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ பங்கேற்கிறார் என்று மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி தெர்மல் அனல்மின் நிலையம் மற்றும் புதியதாக அமைக்கப்பட்டு வரும் என்.எல்.சி அனல்மின் நிலையங்களில் மதிமுக சார்பில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னேற்ற சங்கங்கள் துவங்கப்படுகிறது.
இதற்கான துவக்க விழா வரும் 2ம் தேதி நடக்கிறது. அன்று மாலை 4மணிக்கு
முதலில் புதியதாக அமைக்கப்பட்டுவரும் என்.எல்.சி தமிழ்நாடு மின்நிறுவனத் தில் மதிமுக சார்பில் புதியதாக துவங்கப்பட்டுள்ள தொழிற்சங்க தொடக்க விழா நடக்கிறது. விழாவிற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜோயல்
தலைமை வகிக்கிறார். என்.எல்.சி தொழிற்சங்க தலைவர் முருகபூபதி முன்னி லை வகிக்கிறார். செயலாளர் சுந்தர்ராஜ் வரவேற்கிறார். கவுரவத் தலைவர் நக்கீரன் விழாவினை தொகுத்து வழங்குகிறார்.

இவ்விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு தொழிற் சங்கங்களை துவக்கி வைத்து கொடியேற்றி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.

இதனையடுத்து மாலை 4.30மணிக்கு, தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின்
நுழைவுவாயில் முன்பு எம்.எல்.எப் தொழிற்சங்க துவக்க விழா நடக்கிறது.
இவ்விழா மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் தலைமையில் நடக் கிறது. சங்கத்தலைவர் சங்கரகோபால், பொருளாளர் டேவிட்ராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.சங்க பொதுச்செயலாளர் எபனேசர்தாஸ் வரவேற் கிறார்.மாநிலத்துணைத்தலைவர் எரிமலை வரதன் விழாவினை தொகுத்து வழங்குகிறார்.

விழாவில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு தொழிற் சங்கத்தை துவக்கி வைத்தும், கொடியேற்றி வைத்தும் சிறப்புரை ஆற்றுகிறார்.
விழாவில், தமிழ்நாடு மின்வாரிய மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னேற்ற
சங்கத்தின் மாநில தலைவர் இளங்கோ, மாநில பொதுச்செயலாளர் அந்திரி தாஸ், பொருளாளர் மணவாளன், துணைத்தலைவர் ஜார்ஜ் மற்றும் சங்க நிர் வாகிகள்,உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். முடிவில், சங்க நிர்வாகி கிருஷ் ணன் நன்றி கூறுகிறார்.

முன்னதாக அன்று மதியம் 2மணிக்கு தூத்துக்குடி சுகம் ஹோட்டலில் மதிமுக
நிர்வாகிகளிடம் மூன்றாம் கட்ட கழக வளர்ச்சி நிதி, தேர்தல் நிதி பெறும்
நிகழ்ச்சியும், செப்டம்பர் 15ம் தேதி விருதுநகரில் நடைபெறும் அண்ணா
பிறந்தநாள் விழா மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் மதிமுக
பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடக்கிறது.

இவ்விழாக்களில், மதிமுகவின் மாநில,மாவட்ட,ஒன்றிய, நகர, பேரூர்,கிளைக் கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் மாவட்டத்திலுள்ள தொழிற்சங்கங் களின் நிர்வாகிகள், செயல்வீரர்கள், அனல்மின்நிலைய தொழிலாளர்கள் மற் றும் பொதுமக்கள் அனைவரும் தவறாது பங்கேற்று சிறப்பித்திட வேண்டு மென்று தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment