Sunday, August 4, 2013

திருப்பரங்குன்றத்தில் வாலிப முறுக்கு!

இணையதள இளைஞர்கள் சந்திப்பு 
திருப்பரங்குன்றத்தில் வாலிப முறுக்கு!

“மாற்று அரசியல்: இளந்தலைமுறையின் கருத்துக் களம்” என்ற தலைப்பில்
திருப்பரங்குன்றத்தில் இணையதள இளைஞர் சந்திப்புக்கூட்டம், 28.07.2013 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்றோர் ஆற்றிய உரையில் இருந்து.

திருப்பரங்குன்றம்;தமிழக அரசியலில் ஒரு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத் திய இடம்; ஆம்; அங்கேதான், இந்திய விடுதலைக்கு முன்பு, சென்னை மாகா ணத்தில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத் தலைமை, காமராசரின் கைகளுக்கு வருவதற்கான அடித்தளம் அமைந்த மாநாடு நடைபெற்றது.
இன்றைய தமிழக அரசியலில் ஒரு புதுமையாக, இணையதளங்களில் கழகத் துக்கு ஆதரவாக இயங்கி வருகின்ற இளைஞர்கள் ஒருங்கு இணைந்து, மாநில அளவில் சென்னையில் இரண்டு கூட்டங் களையும், பல மாவட்டக் கூட்டங்
களையும் நடத்தி முடித்து விட்டனர்.அடுத்த கட்டமாக, 2013 ஜூலை 28 ஆம் நாள், திருப்பரங்குன்றம், சந்நிதி தெருவில் அமைந்து உள்ள, எம்.ஏ.வி.எம்.எம். திருமண மண்டபத்தில் கூடுவதாக அறிவித்து இருந்தனர்.‘மாற்று அரசியல்: இளந்தலை முறையின் கருத்துக் களம்’ என்ற முறையின் கருத்துக் களம்’
தலைப்பில் நிகழ்ச்சியை ஒருங்கு இணைத்து இருந்தனர்.



இந்தக் கூட்டத்துக்கான செலவை, கலந்து கொண்ட இளைஞர்களே பகிர்ந்து கொண்டு உள்ளனர் என்பது சிறப்பு. மகேந்திரன் எட்டப்பராசன், கேசவன் நாரா யணன், ந.பெ. நல்லு, ஆறுமுகம் ஆகிய தோழர்கள் முனைப்பாக முன்னின்று ஒருங்கு இணைப்புப் பணிகளை மேற்கொண்டு இருந்தனர். கழகத்தின் கொள் கை விளக்க அணிச் செயலாளர் க. அழகுசுந்தரம், இளைஞர் அணிச் செயலா ளர் கோவை ஈஸ்வரன், மாணவர் அணிச் செயலாளர் தி.மு. இராசேந் திரன்
ஆகியோர் ஒத்துழைப்பு நல்கி இருந்தனர்.

மண்டபத்தின் நுழைவாயில், வேலைப் பாடு மிக்க கல்தூண்களுடன் எழில் கூட்டியது. பழைய மண்டபமாக இருக்குமோ என்று கருதிக்கொண்டே உள்ளே நுழைந்தால், பிரமாண்டமான புதிய அரங்கம். தரைத்தளத்தில் உணவுக்கூடம்; மாடியில் அரங்கம்.காலையிலேயே வந்து சேர்ந்தவர்களுக்கு, காலை உணவுக் கான ஏற்பாடுகளையும் செய்து இருந்தார்கள்.

இதற்கு முந்தைய இணையதள சந்திப்புகளில் தலைவர் வைகோ அவர்கள் பங்கு ஏற்று இருந்தார்கள்.இம்முறை அவர் கலந்து கொள்ள வில்லை. எனவே, 300 பேர் வந்தால் வெற்றிதான் என எண்ணிக்கொண்டு இருந்தேன். ஆனால், அரங்கில் அமர இடம் இல்லாத அளவுக்கு இளைஞர்கள் திரண்டு வந்தது வியப் பாக இருந்தது.

கடந்த இரண்டு மாதங்களாகவே,இக்கூட்டம் தொடர் பான பதிவுகளை இணை யத்தில் பதிந்து வந்து உள்ளனர்.வரிசையாக வந்து கொண்டே இருந்தார்கள். எல்லாமே புதுமுகங்கள் மட்டும் அல்ல, 15 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட, துடிப்பான இளைஞர்கள் தாம். ஒருவரையொருவர் நேரில் சந்தித்தது இல்லை. ஆனால், நேரில் பார்க்கும்போது, அண்ணே நீங்கள் தான் வால்டர் வில்லியம் சா? நீங்கள் தான் ஆண்டனி வளனா? நீங்கள்தான் விக்ராந்தா? என்று கேட்டுத்
தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.

சங்க காலத்தில், கோப்பெருஞ்சோழன்,பிசிராந்தையார் நேரில் பார்க்காம லே யே நட்பு கொண்டு இருந்தனர்; இன்று, இணைய தளத்தின் உதவியோடு, முன் பே முக அறிமுகம் கிடைத்து விடுகிறது. நேரில் சந்திக்கும்போது, பல ஆண்டு கள் பழகிய நண்பர்களைச் சந்திப்பது போன்ற நெருக்கம் ஏற்பட்டு விடுகின்றது.

அரங்கத்தின் நுழைவாயிலில்,வருகையைப் பதிவு செய்து கொண்டு இருந்தார் கள். வழங்கப்பட்ட விண்ணப்பத்தில்,ஒவ்வொருவரும் தங்களைப்பற்றிய முழு விவரங்களை எழுதித் தந்தார்கள். வந்து இருந்த அனைவரையும், முகப்படம் எடுத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து இருந்தார்கள். மறுமலர்ச்சி வேங்கைகள் கழக முகவரி நூலைப் போல, இணையதள நண்பர்கள் குறித்த
விவரங்கள் அடங்கிய ஒரு நூலைத் தயாரிக்கின்ற பணியை மேற்கொள்ள
இருக்கின்றோம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டனர்.

கருத்து அரங்கம் தொடங்கியது. வந்து இருந்த அனைவரின் கைகளிலும் ஒலி பெருக்கி தரப்பட்டது. ஒவ்வொரு வரும், தங்களை அறிமுகம் செய்து கொண் டார்கள். மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக முன்னோடிகள், மேடையின் ஒரு பக்கத்தில் அமர்ந்து இருந்து, இளைஞர்களின் உரைகளைச் செவிமடுத் தனர். இயக்கத்தின் சார்பில், டாக்டர் சரவணன், டாக்டர் ரொஹையா, ஆவடி அந்திரிதாஸ், தமிழர் தேசிய இயக்கப் பொதுச்செயலாளர் பரந்தாமன்,இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈஸ்வரன், அரசியல் ஆய்வு மையச் செயலாளர் மு.செந்திலதிபன், ஆட்சி மன்றக் குழுச் செயலாளர் அ.கணேசமூர்த்தி எம்.பி. ஆகியோர் உரையாற்றினர்.

தொடக்க உரை ஆற்றிய மகேந்திரன் எட்டப்பராசன், கூட்டத்தின் நோக்கத்தை
எடுத்து உரைத்தார். அவரைத் தொடர்ந்து ஜெயபிரகாஷ், கவிஞர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் பெருமாள், கன்னியாகுமரி சுரேஷ், பெருமாள்சாமி, ராஜ்மோகன், பாலாஜி, ஆண்டனி வளன்,பாண்டியராஜன், டாக்டர் ரகுராமன் ஆகியோர் ஒவ் வொருவராக தங்கள் கருத்துகளை எடுத்து உரைத்தனர்.திருப்பரங்குன்றம்நகர செயலாளர் கமுருகேசன் நன்றி கூறினார்.நண்பகல் உணவு இடைவேளைக்கு முன்பு, மருத்துவர் ரொகையா நிறைவு உரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வீர.தமிழ்செல்வன், மதுரை மாநகர் மாவட்டச்செயலாளர் புதூர் மு.பூமிநாதன், சிவகங்கை மாவாட் டச் செயலாளர் புலவர் சே.செவந்தியப்பன், விருதுநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.சண்முகசுந்தரம்,மதுரை புறநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் த.முனியாண்டி, அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் சிப்பிப்பாறை அ.இர விச்சந்திரன், மாநில தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாஸ்கரசேதுபதி, இளை ஞர் அணித் துணைச்செயலாளர்கள் கராத்தே பழனிசாமி,வேல்முருகன், மாண வர் அணித் துணைச் செயலாளர் பொடா கணேசன், மணவை தமிழ்மாணிக்கம்
மற்றும் திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து ஒரு சிறிய வினாடி-வினா நிகழ்ச்சி. காலையில் நிகழ்த்தப் பட்ட உரைகளில் இருந்து சில கேள்விகளைக் கேட்டார் தி.மு.இராசேந்திரன். ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிப்பதற்கு, சுமார் 50 பேர் கைகளை உயர்த்தி யதைப் பார்த்தபோது, எந்த அளவுக்கு உரைகளைக் கூர்ந்து கவனித்து இருக் கின்றார்கள் என்பது புலனாகியது.

அதைத்தொடர்ந்து,தமிழக அரசியல் குறித்து,பத்து கேள்விகளை நான் தொடுத் தேன் .எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது.இன்றைய இளைஞர்களின் அரசியல் புரிதலை எடுத்துக் காட்டியது. சரியான விடை அளித்த அனைவருக் கும், தலைவர் வைகோ அவர்களின் நூல்களைப் பரிசாக வழங்க, அழகுசுந்தரம் ஏற்பாடு செய்து இருந்தார். நிகழ்ச்சி முழுமையும் அவர் தொகுத்து வழங்கினார்.

உணவு ஏற்பாடுகள் மிக அருமை. நல்ல சுவையான, நான்கு வகையான எளிய
சைவ உணவு. 2.30 மணிக்கு, பிற்பகல் அமர்வு தொடங்கியது.தொடர்ந்து கருத் துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. ஒரு மாதத்துக்கு முன்பு,தலைவர் வைகோ
அவர்களிடம் ரூபாய் ஒரு இலட்சம் நன்கொடை அளித்து, கழகத்தில் தன்னை
இணைத்துக் கொண்ட மதுரை மருத்துவர் சரவணன், நான் ஏன் ம.தி.மு.க.வில்
சேர்ந்தேன் என்பதற்கான காரணங்களை எடுத்து உரைத்தார்.

பிற்பகல் நான்கு மணிக்கு மேல், கழகத்தின் அரசியல் ஆய்வு மையச் செயலா ளர் செந்திலதிபன், திராவிட இயக்கத்தின் கொள்கைகள், சாதனை களை விரி வாக எடுத்து உரைத்தார். கழக நாடாளுமன்ற உறுப்பினர் ஈரோடு அ. கணேச மூர்த்தி அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.

சரியாக 6.00 மணிக்கு, தலைவர் வைகோ அவர்கள், அலைபேசி வழியாக, அரங் கில் இருந்தவர்கள் இடையே உரையாற்றினார்.அலை பேசிக்கு முன்பு ஒலி பெருக்கியை வைக்காமல், நேரடியாகவே இணைப்புக்கொடுத்து இருந்ததால், தலைவருடைய உரை எவ்வித இடையூறும் இன்றி, நேரில் கேட்பது போலவே இருந்தது. நேரடியாக மேடையில் பேசுவது போலவே உணர்ச்சிப்பெருக்கோடு உரை ஆற்றினார்.கழகம் கடந்து வந்த பாதையை எடுத்துக்கூறி, அடுத்து ஆற்ற வேண்டிய பணிகளைப் பட்டியல் இட்டார். வருகை தந்து இருந்த இளைஞர் களுக்கு, தலைவரின் உரை புத்துணர்ச்சியை அளித்தது.

நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கு, திருப்பரங்குன்றம் நகரச்செயலா ளர் முருகேசன், தலைமைக் கழக வழக்கறிஞர் ரவி, பொதுக்குழு உறுப்பினர்
பால்பாண்டி, நகர அவைத் தலைவர் ஜோதி, பொருளாளர் பாண்டி, துணைச்
செயலாளர்கள் வெங்கடேசன், அழகர், இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா,
மாணவர் அணி அமைப்பாளர் பாலா, மாநில இளைஞர் அணி துணை அமைப் பாளர் வேல்முருகன், தொண்டர்அணி கண்ணன் ஆகியோர் ஒத்துழைப்பு நல்கி இருந்தனர்.

சென்னையில் இருந்து 25 தோழர்கள் இரண்டு மினி வேன்களை ஏற்பாடுசெய்து
இருந்தனர். தாயகத்தில் இருந்து புறப்பட்ட அந்திரிதாஸ், கருணாகரன், செல்வா, பொம்பூர் பாண்டியன், ராஜ்மோகன், விக்ராந்த், ஜெகன், ராஜ சோழன், ராமு, கவிஞர் இரவிச்சந்திரன், வைகோ விஜய், மோகன்குமார், லோகேஷ்,
சேதுபதி, தீபன் பழனிசாமி, மகேந்திரன், பிரபாகரன், ஆனந்த், சிட்லபாக்கம், சிவ குமார், வேங்கடசாமி சீனிவாசன், பகவதி குமார், தேவதாஸ், கண்ணன் சாத் தூரப்பன் ஆகியோரோடு சேர்ந்து நானும் பயணித்தேன்.

இப்பயணம் குறித்து தம்பி விக்ராந்த்,இணையதளத்தில் இவ்வாறு பதிவு செய் து உள்ளார்: சென்னையில் இருந்து இரண்டு வேன்களில் 24 பேர், திருப்பரங் குன்றம் சந்திப்பில் கலந்து கொண்டோம். பயணம் முடிந்து விடைபெற்றுச் செல்கையில், வேன் ஓட்டுநர் கூறியது; புறப்படுவதற்கு முன்பு,எனது இருக் கைக்குப் பின்னால் ஒரு அட்டைப் பெட்டியைக் கொண்டு வந்து வைத்தார்கள்.
எல்லோரும் இளைஞர்களாக இருக்கின்றார்களே, வழியில் தண்ணியடிச்சு
வண்டியை அசிங்கப்படுத்தி விடுவார்களோ? என்று எண்ணிக் கொண்டு இருந் தோம். பின்னால்தான் தெரிந்தது, அந்த அட்டைப் பெட்டி, வைகோ, ம.தி.மு.க. புத்தகங்கள் நிரம்பிய பெட்டி என்பது.

இதுவே, எனக்குப் புதுமையாக இருந்தது.திருப்பதி கோவிலுக்கு ஆட்களை  ஏற் றிக் கொண்டு போய்த் திரும்பி வந்தது போல இருந்தது என்றாராம். இந்தத் தக வலை, தமது முகநூலில் பதிந்து இருக்கின்றார் விக்ராந்த். உயிர் நண்பன்.அண் மையில் இவர், வேளச்சேரி பகுதிச் செயலாளர் செல்வ பாண்டியன் மகள் திரு மணத்தின்போதும், இராசா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற பாட்டுக் கொரு புலவனும், பாவேந்தரும் என்ற தலைப்பில் தலைவர் வைகோ அவர் கள் உரை ஆற்றிய கூட்டத்திலும் என் அருகில் அமர்ந்து இருந்தார்.

ஆனால், முழு நேரமும் அலைபேசியில் எதையோ எழுதிக் கொண்டே இருந் தார். இவர் ஏன் கூட்டத்துக்கு வருகிறார்? என்று எண்ணினேன். ஆனால், அவர் கூட்ட நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நொடியும் இணையத்தில் பதிவு செய்து கொண்டு இருக்கின்றார் என்பதைப் பிறகுதான் உணர்ந்தேன்.

திருப்பரங்குன்றம் கூட்டம் தொடர்பாக முகநூலில் வேறு சில பதிவுகளும்
உள்ளன. - ம.தி.மு.க. இருபது வயது இளைஞன். வாலிப முறுக்கோடு களத்தில் நிற்பான் என்கிறார் பா. மோகன்.

தன்னெழுச்சியாக இளைஞர்கள்,மாணவர்கள் என 500 பேர் ஒன்றிணைந்து, மாற்று அரசியல் குறித்துக் களமாட மறுமலர்ச்சி தி.மு.க.வில் மட்டுமே சாத் தியம்.திருப்பரங்குன்றத்தில் நடந்த நிகழ்ச்சி,அறிஞர் அண்ணா காலத்துத் தி.மு.க.வை நினைவுபடுத்தியது. அறிஞர் அண்ணா மறைந்து விடவில்லை; வைகோ வடிவில்,கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை,இன்றைய இளைஞர் களுக்குக் கற்றுத்தந்து கொண்டு இருக்கின்றார் என்கிறார் வால்டர் வில்லி யம்ஸ்.

என்னுடைய நண்பர்களோடு அரசியல் பேசினால், அவர்கள் சமூக அக்கறை ஏதும் இன்றிப் பேசுவது எனக்கு வருத்தத்தைத் தரும். இவர்களுக்கு இல்லாத சமூக அக்கறை எனக்கு இருக்கின்றது என எண்ணிக் கொள்வேன்.

ஆனால், திருப்பரங் குன்றத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட
இணையதள நண்பர்களோடு பேசிய போதும், மேடைகளில் உரை ஆற்றியோர்
வழங்கிய கருத்துகளைக் கேட்ட போதும், என் மனவருத்தம் நீங்கியது. எனக் கான தளம் இதுதான். ம.தி.மு.க. தான் உண்மையான பொது உடைமை  இயக் கம்; வைகோதான் எங்கள் சே குவேரா, பிரபாகரன், நேதாஜி; தமிழகத்தில் மாற் றம் என்பது ம.தி.மு.க.வால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்தேன் என் கிறார் கணேசன் மாணிக்கம்.

இதுபோல, இன்னும் எராளமான பதிவுகள் உள்ளன. அவற்றை யெல்லாம் முறையாக ஒருவர் தொகுத்துத் தந்தால், அடுத்தடுத்த சங்கொலி இதழ்களில்
வெளியிட ஏதுவாக இருக்கும்.

நன்றிகள் 

கட்டுரையாளர் :- 
அருணகிரி

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment