Wednesday, July 17, 2013

திருவாசகம் சிம்ஃபொனி விழா-வைகோ-பகுதி 4

ஆம். இந்தத் திருவாசகம் எப்படி வந்தது?

தமிழில், சைவ இலக்கியத்தில் பன்னிரு திரு முறைகள் உண்டு. பன்னிரு திரு முறைகளுள் முதல் ஏழு திருமுறைகள் திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்த ரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் தந்தவை. எட்டாவது திருமுறை மாணிக்கவாச கரின் திருவாசகம் - முதல் பகுதி திருவாசகம்; இரண்டாம் பகுதி திருக்கோவை யார்! ஒன்பதாவது திருமுறை ஒன்பது அடியார்கள் தந்த திருமுறைகள்.திரு மாளிகைத் தேவர், கருவூர்த் தேவர், சேந்தனார், சேதுராயர், கண்டரா தித்தர், பூந்துருத்திக் காடநம்பி,புருடோத்தம நம்பி,திருவாழிய அமுதனார், வேணாட்டு அடிகள் என்று ஒன்பது அடியார்கள் தீட்டியதுதான் ஒன்பதாம் திருமுறை. பத் தாம் திருமுறை திருமூலர் தந்த திருமந்திரம். 11-ஆம் திருமுறை காரைக்கால் அம்மையார், நக்கீர தேவ நாயனார், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார், கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி இவர்கள் தந்தவை. 12-ஆம் திருமுறை சேக்கிழார் தந்த ‘பெரியபுராணம்’. இந்தப் பன்னிரண்டு திருமுறைகளின் அடிப்படையும் ‘நம சிவாய’ என்ற ஐந்து எழுத்துதான். இந்த ‘நமசிவாய’ என்ற ஐந்து எழுத்தை வைத்துத்தான் சிவபுராணத்தைத் தொடங்குகிறார் மாணிக்கவாசகர். இவரது திருவாசகத் தைப் பற்றி வடலூர் வள்ளலார் அருட்பெருஞ்சோதி தனிப் பெருங் கருணை இராமலிங்க அடிகளார் கூறும் போது,



‘வான் கலந்த மாணிக்கவாசக நின்வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ்சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவைகலந்து
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே’ - எனப் பாடியதோடு,

‘வாட்டமிலா மாணிக்கவாசகரின் வாசகத்தைக்
கேட்டபோது, அங்கிருந்த கீழ்ப்பறவைச்சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெஞ்ஞான
நாட்டமுறும் என்னில் இங்கு நானடைதல் வியப்பு அன்றே’ -என்றும் பாடினார்.

ஆகவேதான், வடலூர் வள்ளலாரின் உள்ளத்தில் மாணிக்கவாசகர் திருவாச கம் இடம் பெற்றதைப்போல, இலண்டன் நகரத்தில் இருந்து வந்த ஜி.யு.போப் உள்ளத்தில் இடம் பெற்றது. 1837-இல் தொடங்கி 63 ஆண்டுகள் தமிழ் படித்தார். இலண்டனில் ஆக்°போர்டு பல்கலைக்கழகத்தில் பாலியால் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவர் ஆனார். அவர் திருவாசகத்தில் உருகிப் போனார். அந்தக் கல்லூரியின் தலைவர் பெஞ்சமின் ஜோவர்ட் என்பவரோடு ஒரு நிலா வெளிச்சத்தில் நடந்து போகிறபோது, தமிழில் இருக்கின்ற திருவாசகத்தைப் போன்றதொரு நூலை உலகில் இதுவரை தான் படித்தது இல்லை என்று அவர் சொன்னபோது, அதனை மொழிபெயர்க்கலாமே என்று அந்தப் பல்கலைக் கழகத்தின் தலைவர் கூறினார்.

‘எனக்கு முதுமை வந்துவிட்டது. அதை மொழி பெயர்க்கும் ஆற்றல் இல்லை’ என்று சொன்னபோது, ' To have a fine work in progress is the way to live long, you will live till you finish it ’ ஒரு நல்ல செயலுக்காகப் பெரிய பணியில் முன்னேறிச் செல்வது நீண்ட காலத்துக்கு வாழ வழி வகுக்கும். இதை முடிக்கும் வரை நீ உயிரோடு இருப்பாய் என்று சொன்னார். 1900 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் நாள் அவரு டைய மொழி பெயர்ப்பு வெளியாயிற்று. அந்தத் திருவாசகத்துக்குப் பலர் உரை தீட்டி இருக்கின்றார்கள். காலத்தின் அருமை கருதி நான் விரிவாகச் செல்ல விரும்பவில்லை.

அந்தத் திருவாசகம் 51 தலைப்புகளைக் கொண்டது. 656 அல்லது 658 பாடல்கள் என்று சொல்வார்கள். இந்த 51 தலைப்புகளில் பத்துப் பத்துப்பாட்டாக 19 பத்து கள் இருக்கின்றன.

ஓர் அதிகாரத்துக்குக் குறள்கள் பத்து, 
மோசசின் கட்டளைகள் பத்து, 
சங்க இலக்கியங்களில், பத்துப்பாட்டு என்பது

முல்லைப்பாட்டு, 
குறிஞ்சிப்பாட்டு, 
திருமுருகாற்றுப்படை, 
பொருநர் ஆற்றுப்படை, 
பெரும்பாணாற்றுப்படை, 
சிறுபாணாற்றுப்படை, 
பட்டினப்பாலை, 
நெடுநல்வாடை, 
மதுரைக்காஞ்சி, 
மலைபடுகடாம் 

என்று பத்து நூல்கள் உள்ளன. அதைப்போலத்தான் இந்தத் திருவாசகத்தில் 51 தலைப்புகளில் 19 பத்துகள் இருக்கின்றன.

அச்சப்பத்து
அடைக்கலப்பத்து
அருள்பத்து
அதிசயபத்து
அற்புதப் பத்து
அன்னைப் பத்து
ஆசைப் பத்து
உயிருண்ணிப் பத்து
கண்ட பத்து
குயில் பத்து
குலாப் பத்து
குழைத்த பத்து
செத்திலாப் பத்து
சென்னிப் பத்து
பிடித்த பத்து
பிரார்த்தனை பத்து
புணர்ச்சிப் பத்து
யாத்திரைப் பத்து
வாழாப் பத்து.

இந்தப் பத்தொன்பது பத்துகளில் நமது இளையராஜா மூன்று பத்துகளுக்கு இசை அமைத்து இருக்கிறார். ஒன்று யாத்திரைப் பத்து. அடுத்த பத்து என்ன தெரியுமா? (வைகோ திரும்பிப் பார்க்கிறார். இளையராஜா குயில் பத்து என் கிறார். வைகோ இல்லை பிடித்த பத்து என்று கூறுகிறார்.) நீங்கள் திருவாசகத் தில் உருகி ஐக்கியமாகி விட்டீர்கள். அதனால் அப்படிச் சொன்னார்கள். நான் வெளியில் இருந்து பார்ப்பவன். நீங்கள் இசையமைத்த பாடல் ‘பிடித்த பத்து’. அடுத்த பத்து “அச்சப்பத்து” அவர் தேர்ந்தெடுத்தது இந்த மூன்று ‘பத்தி’ லிருந் தும் ஒவ்வொரு பாடலுக்கு இசை அமைத்துள்ளார். இவை யன்றி அவர் சிவ புராணத்தில் இருந்து பாடல் எடுக்கிறார். ‘நமசிவாய வாழ்க’ என்னும் சொற் றொடர்தான் திருவாசகத்தின் தொடக்கம்

ஏன் இந்தத் திருவாசகம் இயற்றப்பட்டது? இது பலருக்கும் தெரிந்த கதைதான். பாண்டிய நாட்டு அரசவையில் தென்னவன் பிரமராயன் என்கிற அமைச்சர் இருந்தார். வாதவூரில் பிறந்தவர். அவர்தான் வாதவூர் அடிகள் மாணிக்க வாச கர் அவர் குதிரை வாங்குவதற்குச் சென்றபோது அரசுப் பணத்தை எல் லாம், அந்தணர் வடிவில் இருந்த சிவனடியார் உடன் சேர்ந்து, சிவனுடைய திருப் பணிகளுக்குச் செலவழித்து விட்ட காரணத்தினால், மன்னன் குதிரையோடு ஏன் வரத் தாமதம் என்று கோபித்து செய்தி அனுப்பியபோது, வாதவூரர் மனம் கலங்கிய நேரத்தில் இறைவனின் அருள்வாக்குக் கேட்டு, ‘குதிரை வரும் என்று நீ ஒலை அனுப்பு. ஓலையை அனுப்பிவிட்டு நீ முன்னால் செல். பின் னால் குதிரைகள் வரும் என்று சொல்’ என்ற சொற்களைக் கேட்டார். மாணிக் கவாசகர் என்ற பெயர் அப்பொழுது இல்லை. அவர் மன்னனிடத்தில் வந்து குதிரைகள் வந்து கொண்டு இருக்கின்றன என்று சொல்கிறார். குதிரைச் சேவகன் வருகிறான் - சிவன் வருகிறான் குதிரைச் சேவகனாக நரிகளைக் குதிரைகள் ஆக்கி வருகிறான். குதிரைகள் இலாயத்தில் கட்டப்படுகின்றன.

தொடரும் ....

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

No comments:

Post a Comment