Wednesday, November 6, 2013

தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்!

தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்! விருதுநகர் மாநாட்டில் குமரி விஜயகுமார்

பேரறிஞர் அண்ணா அவர்களின் 105 ஆவது பிறந்தநாளையொட்டி, செப்டம்பர் 15 அன்று விருதுநகரில் நடைபெற்ற #மதிமுக மாநாட்டில்,“ஈழத்தில் இனப்படு கொலை” என்ற கண்காட்சியைத் திறந்து வைத்து மகளிர் அணிச் செயலாளர் குமரி விஜயகுமார் ஆற்றிய உரை...

பேரறிஞர் அண்ணாவின் 105 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடை பெற்றுக் கொண்டிருக்கிற மாநாட்டிற்கு தலைமை வகிக்கும் இமயம் ஜெபராஜ் அவர்களே, உலகெங்கும் வாழும் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம் வைகோ
அவர்களே, மேடையில் வீற்றிருக்கும் கழக முன்னோடிகளே, வருகை தந்தி ருக்கும் சகோதர சகோதரிகளே,உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக் கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“ஈழத்தில் இனப்படுகொலை” என்ற கண்காட்சியைத் திறந்து வைக்க வாய்ப்பு
தந்த தலைவர் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்து கொள்கின்றேன்.
ஐம்பது ஆண்டுகாலமாக ஈழத்தில் இனக்கொலை நடந்து கொண்டுதான் இருக் கிறது. ஆங்கிலேயர்கள் 1948 இல் இலங்கைக்கு விடுதலை அளித்தபோது, சிங் களர் கைகளில் அரசு அதிகாரம் கொடுக்கப்பட்டது. அந்த கால கட்டத்தில் இருந்து நம்முடைய பூர்வ குடிமக்களான தமிழர்கள் மீது வன்முறைகள் ஏவப் பட்டன. இனக் கலவரங்கள் நடத்தப்பட்டன. 1956 ஜீன் மாதத்தில் தனி சிங்கள சட்டம் கொண்டுவந்து இலங்கையை மொழி அடிப்படையில் சட்டப்பூர்வமாக
பிளவுபடுத்தியபோது, இதை எதிர்த்து தந்தை செல்வா அவர்கள் தலைமையில்
கொழும்புவை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டனர். ஆயிரக்கணக்கான
தமிழர்கள் பாராளுமன்றத்திற்கு எதிரே நின்று அறவழியிலேயே முழக்கமிட்டு,
அன்றைக்கே தனி ஈழம் வேண்டும் என்று குரல் கொடுத்தனர். அப்பொழுது
அவர்கள் காவல்துறையினரை ஏவி ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தனர்.

1957 ஜூலை மாதத்தில் அதிபர் பண்டாரநாயக்கா - தந்தை செல்வா உடன்பாடு மூலம் தமிழர்களுக்கு சில உரிமைகள் கொடுக்க வேண்டும் என்று நினைத் தார்கள். அதை எதிர்த்த சிங்களர்கள் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மீது வன் கொடுமையை ஏவிவிட்டார்கள்.


1974 ஜனவரியில் உலகத்தமிழர் ஆராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடந்த போது, அங்கு உள்ள சிங்களக் காவல்துறை கலவரத்தில் ஈடுபட்டனர். பத்து தமிழர்கள் உயிர் இழந்தனர்.நுற்றுக்கணக்கானோர் காயமுற்றனர்.

1977 ஜூலை 21 இல் நடைபெற்ற இலங்கை பொதுத்தேர்தலில் தனி ஈழக்கோ ரிக்கையை முன்வைத்து தமிழர் விடுதலைக்கூட்டணி தேர்தலில் போட்டி யிட் டது. அவர்கள் 18 இடங்களில் வெற்றி பெற்றார்கள்.அதிர்ச்சி அடைந்த சிங்கள
இனவெறியர்கள் 300 தமிழர்களை கொன்று குவித்தனர்.

1981 இல் புகழ்பெற்ற யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டது. நம்முடைய வர லாற்றையும், கலாசாரத்தையும் தெரிவிக்கின்ற புத்தகங்கள் நெருப்புக்கு இரை யாக்கப்பட்டன. அன்று முதல் நம்முடைய தமிழ் மக்கள் தினம்தோறும் கொல் லப்பட்டனர்.

1983 ஜூலை மாதத்தில் நம்முடைய தமிழ் ஈழ விடுதலைப்புலி ஆண்டனி சிங் கள இனவெறியர்களுடன் போரிட்டார். அப்பொழுது ஆண்டனி அவர்கள் தன் சகாக்களிடம் என்னை சுட்டுவிடுங்கள். என் உயிரை தந்துவிடுகிறேன் என் றார். போரில் உயிரும் நீத்தார். அப்பொழுது தமிழினத் தேசியத் தலைவர் பிர பாகரன் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார். ஆண்டனியை கொன்றவர்களை பழி வாங்க வேண்டும் என்று சிங்களர்கள் மீது தாக்குதல் நடத்தி 3000 சிங்களர் களை விடுதலைப் புலிகள் கொன்று குவித்தார்கள்.

சிங்களவர்கள் தமிழ் பெண்கள் மீது வன்கொடுமை களில் ஈடுபட்டு,அவர்களை கொன்று குவித்தனர். இப்படி இனக்கலவரங்கள் நடக்கும்போதுதான் நம்மு டைய தலைவர் வைகோ அவர்கள் பாராளுமன்றத்திலே ஈழத்திலே இனக்கொ லை நடந்து கொண்டு இருக்கிறது என்று கர்ஜித்தார்.

1985 இல் வல்வெட்டித்துறையில் 75 தமிழர்களை ஒரு நூலகத்திலே அடைத்து வைத்து அவர்கள் மீது இராணுவம் வெடிகுண்டு வீசி படுகொலை செய்தது. மே 15 ஆம் தேதியன்று குமுதினி என்ற படகில் தாய்மார்கள் உட்பட்ட 48 தமிழர்கள்
இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

இலங்கை அரசு அங்கு வாழும் நம் தமிழர்களை கொன்றது போதாதென்று, இந் திய அமைதிப்படையுடனும் இணைந்து கொண்டு தமிழர்களை கொன்று குவித் தது.

1995 டிசம்பரில் சிங்கள இராணுவம் 40,000பேர் யாழ்ப்பாணத்தைச் சுற்றி வளைத் தார்கள். தமிழர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினார்கள். 5 இலட்சம் தமிழர் கள் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து சென்றனர்.

2002 நவம்பர் மாதம் இலங்கையும்-நார்வேயும் ஒரு ஒப்பந்தத்தை செய்து,சமா தான உடன்படிக்கையில் ஈடு பட்டார்கள். அப்பொழுது 2005 இல் பதவிக்கு வந்த ராஜபக்சே அதை யெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு இராணுவத் தாக்குதலை ஏவி விட்டார்.

2006 இல் தொடங்கி 2009 மே 18,19 இல் முள்ளிவாய்க்கால் வரை 2 இலட்சம் தமி ழர்கள் ராஜபக்சே இராணுவத்தால் கொன்று குவிக்கப் பட்டனர்.பெரியோர்கள், குழந்தைகள் என நம் சொந்தங்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த கூட் டம்தான் இந்த ராஜபக்சே கூட்டம். ராஜபக்சே கூட்டத்திற்கு துணை புரிந்தது சோனியா தலைமையிலான இந்திய அரசு.ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்
பட்டதற்கு முழுக்க முழுக்க இந்திய அரசுதான் காரணம்.

அதுமட்டுமல்லாமல் இலங்கை இராணுவத்திற்கு இந்திய இராணுவம் பயிற்சி, ஆயுதம், ராடார் மூலம் தகவல் என அனைத்து உதவிகளையும் புரிந்தது. இரா ணுவத் தாக்குதல் மூலம் பிஞ்சு குழந்தைகளை கொன்று குவித்தார்கள். கர்ப் பிணிப் பெண்களின் வயிற்றை கிழித்து சிசுவைக் கொன்றனர். மருத்துவமனை கள் மட்டுமல்ல பள்ளிக்கூடங்கள் மீதும் இராணுவத்தாக்குதல் நடத்தப்பட்டன. பள்ளிக்கூடங்கள் மேலே வானூர்தி செல்லும் போதெல்லாம் அனைத்து குழந் தைகளும் பாதுகாப்பு தேடி பதுங்குக் குழிகளுக்கு சென்று பதுங்குவதை நாம் பார்க்கின்றோம்.

அங்கே மருத்துவத்திற்குத் தேவையான மருந்துகளை கொண்டுசெல்வதற்கு
இலங்கை அரசு அனுமதிக்கவில்லை.குழந்தைக்கு பால் பவுடர் வாங்குவதற்கு
வரிசையில் நின்றவர்கள் மீது குண்டுகள் போடப்பட்டன. குழந்தைகளும் தாய் மார்களும் இதில் பலியானார்கள்.இப்படி பல கொடுமைகளை இலங்கை இரா ணுவம் செய்துள்ளது. தினம்தோறும் மருத்துவமனைகளில் பல்லாயிரக்கணக் கான பிணங்கள் குவிக்கப்பட்டன.

சேனல் 4 காட்சி மூலம் ஈழத்தில் என்ன நடக்கிறது என்று காண்பித்தார்கள். இசைப்பிரியா என்ற நம் தங்கை இலங்கை இராணுவம் மூலம் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். ஒன்பது தமிழர்களைச்சுட்டுக் கொன்றனர். தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை சிறுவன் என்றும் பாராமல் சுட்டுக் கொன்றனர்.இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தூக்குத் தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.

அதுமட்டுமல்ல வருகின்ற நாடாளு மன்றத் தேர்தலில் நம்முடைய தலைவர்
அவர்கள் நாடாளுமன்றத்திற்கு சென்றால்தான், தமிழினத் தேசிய தலைவர் பிரபாகரனின் இலட்சியமான தமிழ் ஈழம் மலரும். முன்னேறிச் செல்வோம்! அதிகாரத்தைக் கைப்பற்றுவோம்! நன்றி.

குமரிவிஜயகுமார் இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment