Sunday, November 10, 2013

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என நான் சொல்லவே இல்லை-வைகோ

மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளோடும் கூட்டணி சேரப் போவதில்லை என ராமநாதபுரத்தில் சனிக்கிழமை (09.11.13 ) நடந்த #மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் #வைகோ தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் புதிய மாவட்ட செயலராக நியமிக்கப்பட்ட ராஜாவை அறி முகம் செய்து வைத்து கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

மதிமுக எப்போதும் கொள்கையில் உறுதியாக இருக்கிற இயக்கம். வரப்போ கும் மக்களவைத் தேர்தலில் திமுக,அதிமுகவுடன் கூட்டணி வைக்கப் போவ தில்லை. எங்கள் இயக்கத்தின் கொள்கைகள், லட்சியங்கள் உள்ளவர்களோடு தான் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். இரு பெரிய கட்சிகளிடமும் பணம் இருப்பதால் அவர்கள் தான் வெற்றி பெறுவர் என்ற எண்ணத்தை வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மதிமுக உடைத்துக் காட்டும்.

கொளத்தூர்.மணியை கைது செய்து அவர் மீது பொய் வழக்குப் போட்டு அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்திருக்கிறது அதிமுக அரசு. இதே போல கடந்த தேர்தலில் மதிமுகவை நம்ப வைத்து துரோகம் செய்தது அதி முக. கடந்த 2008இல் இலங்கை தமிழர்கள் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட போது கேலி செய்த அதே கருணாநிதி தான், இன்று இசைப்பிரியா படுகொலை கண் டிக்கத்தக்கது என்று பேசுகிறார்.இது போன்ற பல்வேறு காரணங்களால் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளிடமும் கூட்டணி வைக்கப் போவதில்லை என முடிவு செய்திருக்கிறோம்.

இந்தியாவில் 3 மாநிலங்களை பாழாக்கிய ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு திங்கள்கிழமை (நவ. 11) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகி றது. அந்த வழக்கில் வெற்றி பெறுவதற்காக தொடர்ந்து 17 வருடங்களாக போராடி வருகிறேன். ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடமோ அல்லது ஈழத் தமிழர்களின் வாழ்வுக்காக போராடுவதால் அத்தமிழ் மக்கள் தேர்தல் செலவுக் காக நன்கொடையாக தருவதாக சொன்னது உள்பட எதையும் நான் வாங்க வில்லை. நேர்மையான முறையில் பணமே இல்லாமல் தேர்தல் என்ற போர்க் களத்தில் மதிமுக சில தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என நான் சொல்லவே இல்லை. காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பில் இருந்தே இலங்கையை நீக்க வேண்டும் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இந்த மாநாட்டினை
ஏற்பாடு செய்ததே இந்திய அரசு தான். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் அக்கூட்டமைப்பே தகுதியற்றதாக ஆகி விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அம்மாநாட்டில் 53 நாடுகளுமே கலந்து கொள்ளா மல்

இருந்தால் அது தமிழனுக்கு கிடைத்த வெற்றி. ஈழத்தமிழர் இனப்படுகொலைச் சம்பவங்களின் கூட்டுக் குற்றவாளி இந்தியாவாக இருக்கிறது.

காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இம்மாதம் 12 ஆம் தேதி கடையடைப்பு செய்யு மாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கை அரசின் செயல்களை கண்டித்து 19பேர் தீக்குளித்து இறந்திருக் கிறார்கள் என்ற உணர்வோடும், இந்திய அரசு செய்து வரும் துரோகத்தை வெளிப்படுத்தவும் ஒரே ஒரு நாள் கடையடைப்பு செய்யுங்கள். சுதந்திர தமிழ் ஈழம் விரைவில் பிறக்கும் என்பது மட்டும் உறுதி என்றும் வைகோ பேசினார்.

கூட்டத்தில் இளைஞரணி துணைப் பொதுச் செயலாளர் கராத்தே.பழனிச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் என்.பிரகாசம்,மாவட்ட அவைத்தலைவர் சாதிக்அலி,பரமக்குடி நகர் செயலாளர் குணா ஆகியோர் உள்பட கட்சி நிர்வாகி கள்,இணையதள நண்பர்கள் ,தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.






படங்கள் உதவி :-சரவணன் ராமன் 

2 comments:

  1. அன்புள்ள இஸ்லாமிய கிருத்துவா ஓடுக்கப்பட்ட தலித் சமுக மக்களே ... வைகோ மதவாத கட்சியின் அடிமையாக மாறிவிட்ட காரணத்தால் அந்த கட்சியை விட்டு வந்து விடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. பொது சிவில் சட்ட மசோதாவை ஆதரித்த கட்சிகளில் இருந்து சிறுபான்மை மக்களை இதே போல கூப்பிடுங்கள்

      Delete