Monday, November 11, 2013

கோவை மெட்ரோ ரயில் ,தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும் -மதிமுக இளைஞர் அணி

மத்திய அரசால் கோவைக்கு அறிவிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக தொடங்க தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும் -#மதிமுக இளைஞர் அணி கோரிக்கை 

கோவை மாநகர் மாவட்ட மதிமுக இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட் டம் நேற்று நடந்தது. மாவட்ட இளைஞர் அணி அமைப் பாளர் அருள் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் ரத்தினசாமி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் செந்தில்குமார், கிருஷ்ண மூர்த்தி முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பா ளர் ஆனந்தகுமார் வரவேற்றார்.

இதில் மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் பேசுகையில், ‘மதிமுக வில் இளைஞர்களைசேர்க்கும் பணியில் அமைப்பாளர்கள், துணை அமைப்பா ளர்கள் தீவிரமாக செயல்பட வேண்டும். மற்ற கட்சிகளில் பதவி இருந்தால் தான் தொண்டர்கள் இருப்பார் கள். ஆனால் மதிமுகவில் அப்படி இல்லை. அமைப்பாளர்கள், தொண்டர்களை தீவிரமாக இளைஞர்களை சேர்த்தால் வரும் 2016ல் தமிழகத்தில் மதிமுக ஆட்சியை கைப்பற்றும்’ என்றார்.

மாநகர் மாவட்ட செயலளர் ஆர்.ஆர். மோகன்குமார், புறநகர் மாவட்ட செய லாளர் செந்தில்குமார் ஆகியோரும் பேசினர். மாநில நிர்வாகிகள் ஆடிட்டர் அர்ஜுனராஜ், சேதுபதி, தியாகராஜன், மு. கிருஷ்ணசாமி, கவுரி சங்கர் சுந்தரம் , மாவட்ட நிர்வாகிகள் வக்கீல் சூரி.நந்த கோபால், கணபதி செல்வராஜ், சற்கு ணம், தூயமணி, துர்கா காளிமுத்து, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தியாகு, தங்கவேல், கு.விஜயகுமார், பகுதி செயலாளர்கள் வெள்ளிங்கிரி, முருகேசன், லூயிஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


கூட்டத்தில், 

கோவை மாநகர் மாவட்டத்தில் இளைஞரணியை வலுப்படுத்துவது, டிசம்பர் 31ம் தேதிக்குள் 5 ஆயிரம் இளைஞர்களை சேர்ப்பது. 

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிப்ப தோடு, காமன் வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்கவும் வலியுறுத் த வேண்டுமென்று வரும் 12ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும் 
முழுஅடைப்புக்கு வணிகர்கள், வியாபாரிகள், திரையரங்கு உரிமையாளர்கள், ஓட்டல், பேக்கரி, பேருந்து, லாரி, கார், ஆட்டோ உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து அமை ப்பினரும் ஆதரவளித்து முழுஅடைப்பை வெற்றிபெற செய் ய வேண்டும் என கேட்டு கொள்வது.

மத்திய அரசால் கோவைக்கு அறிவிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக தொடங்க தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும் என வலியுறுத்துவது. 

கோவையில் கொள்ளை சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வீடு, தொழில் நிறுவனங்களில் நடைபெறும் கொள்ளை சம்பவங்களால் பொது மக்கள் மிகவும் அச்சத்தோடு உள்ளனர். மாநகர காவல் துறை, மாவட்ட காவல் துறை இணைந்து இரவுநேர ரோந்து பணியை தீவிரப்படுத்தி கொள்ளை சம்ப வங்களை தடுத்து, பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என காவல் துறையை கேட்டு கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment