செம்மொழி தமிழாய்வு பணியாளர்கள் உண்ணாவிரதம்!
தலைவர் #வைகோ கோரிக்கை வெற்றி!
செம்மொழி தமிழாய்வு மைய பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கடந்த 21.10.2013 முதல் எட்டு நாட்களாக உண்ணாநிலை அறப்போராட் டம் நடத்தி வந்தனர்.அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவாக தலை வர் வைகோ அவர்கள் 25.10.2013 அன்று, மத்திய செம்மொழி தமிழாய்வு மையத் தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.
(செம்மொழி தமிழாய்வு மையத்துக்கு மூடுவிழாவா? வைகோ அறிக்கை )
அதன் பயனாக செம்மொழி தமிழாய்வு மைய இயக்குநர் வி.கோ.பூமா, பதிவா ளர் மு.முத்துவேலு ஆகியோர் முன்னிலையில் முத்தரப்புப் பேச்சு வார்த்தை (28.10.2013) திங்கள் காலை 11.30க்கு தொடங்கி 2.30 முடிவுற்றது.இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட பணியாளர்களின் கோரிக்கைகளைஏற்று விரைவில் நடைமுறைப் படுத்துவதற்கு உத்தரவாதம் வழங்கி கையெழுத்திட்ட கடிதத்தை வழங்கினர். அதன்பின் பணியாளர்களின் உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டது.
பணியாளர்களிடம் பெறப்பட்ட கோரிக்கை களை இயக்குநருடன் கலந்து பேசி
எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:
1. நிரந்தர இயக்குநர்பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. பணியமர்த்தம் செய்தல் நடைபெறும்.
2. பணியாளர்களின் - நிறுவனப்பணி மூப்பின் அடிப்படையில் பணியமர்த்தம்
செய்வது என்று 11.11.2013 ஆம் நாள் கூடும் ஆட்சி மன்றக் கூட்டத்தில் பரிந்து ரைப்பது. நிறுவன விதிமுறை களின்படி பைலா கல்வித் தகுதியின் அடிப்ப டையில் பதவிப் பெயர்களை மாற்றி தினக்கூலியில் உள்ள பணியாளர் களை தொகுப்பூதியதார் களாக மாற்றுவதற்கு பரிந்துரைகள் ஆட்சிக்குழுவில் வைக் கப்படும்.
3. இனிவரும் காலங்களில் நிதி நிலையினைக் கூடுதலாகச் செலவிடுவதற்குச் செயல் திட்டங்கள் நடைபெறும் ஆட்சிக் கூட்டத்தில் முன் வைக்கப்படும்.
4. கடந்த 04.06.2012 ஆம் நாள் கூடிய நிர்வாகக்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டு வழங்கிவந்த 30 சதவித ஊதிய உயர்வினை அகவிலைப் படி நிறுத்தப் பட்ட நாள் முதல் முன் தேதியிட்டு வழங்குதலுக்கு ஆட்சிக் குழுவிடம் பரிந் துரை செய்யப்படும்.
5. 2013-14 ஆம் கல்வியாண்டின் முதல் ஆறுமாத ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் அடுத்த ஒப்பந்தம் 6 மாத காலமாகப் பணி நீட்டிப்பு ஆணை வழங்கப் படும்.
6. கருத்தரங்கு, பயிலரங்கு, குறுங்கால ஆய்வுத்திட்டம். முனைவர் பட்ட மேலாய்வு மற்றும் முனைவர் பட்ட ஆய்வு உதவித்தொகை ஆகியவற்றின்
எண்ணிக்கையினையும் நிதிச் செலவினங்களையும் அதிகரிப்பது. நிதி நல்கை
வழங்குவது குறித்து கருத்தில் கொள்ளப்படும்.
7. இந்நிறுவனத்தின் பதிவின்படி புலங்களாக இயங்குவதற்கு நடவடிக்கை
எடுக்க கல்விக்குழுவில் கலந்து ஆலோசிக்கப்படும்.
8. நிறுவனக் கட்டுமானப் பணிகளுக்கு,முதல்கட்டமாக நிறுவனக் கட்டுமானப்
பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
9. பணியாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட குறிப்பாணைகளுக்கு விடையளித் தால் மறுபரிசீலனை செய்யப்படும்.
10. பேறுகால விடுப்பில் சென்ற பணியாளர் திருமதி பி.கல்பனா அவர்களை மீண்டும் பணியில் சேர்ப்பது ஆர்பிட்ரேஷன் முடிவுக்கு உட்பட்டது.உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த பேச்சுவார்த்தையில் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை
சத்யா, நாம் தமிழர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான், தமிழ் தேச பொதுவுடைமை இயக்கத்தலைவர் தோழர் பெ.மணியரசன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இயக்குநர் களஞ்சியம், அதியமான், வேலுமணி,வழக்கறிஞர் அங்கயர்கன்னி ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி யில் தென் சென்னை மதிமுக மாவட்டச் செயலாளர் வேளச்சேரி பி.மணிமா றன், காஞ்சி மதிமுக மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் சோமு, மதிமுக தேர் தல் பணிச் செயலாளர் கழகக்குமார், மதிமுக பகுதிச்செயலாளர்கள் செல்வ பாண்டியன், ரெட்சன் அம்பிகாபதி, சைதை சுப்பிரமணி, விருகை கன்னியப்பன், மார்க்கெட் சேகர், ஆர்காடு ஜானகிராமன், பந்தல் தேவராஜ், பீடா ரவி மற்றும் மோகன்ராஜ், பி.டி.சேகர், அன்புவேலன், எஸ்.டபிள்யூ.மணிவண்ணன், தரமணி ஜி.பி.ரவி, செயல் மூர்த்தி, எஸ்.வீரமுத்து,எஸ்.கே.ராஜா, எஸ்.மணிகண்டன்

ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment