Monday, November 18, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 30

நாள்:-09.12.2008

தமிழக அரசியல் தலைவர்களை, ‘கோமாளிகள்’ என்ற இலங்கைத் தளபதி யைக் கண்டியுங்கள்!

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இலங்கை இராணுவத்தின் தலைமைத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன் சே கா, மிகுந்த ஆணவத்தோடும், திமிரோடும் தெரிவித்து இருக்கின்ற கருத்துகள், இலங்கை அரசின் அதிகாரபூர்வ இதழான ‘சண்டே அப்சர்வர்’, 2008 டிசம்பர் ஏழாம் நாளிட்ட இதழில் வெளியாகி இருப்பதை, மிகுந்த வேதனையோடு தங் களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

‘‘தமிழ் நாட்டு அரசியல் கோமாளிகள் சொல்லுகின்ற கருத்துகளை, காங்கிரஸ்
தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செவிமடுக்காது; என வே, போர்நிறுத்தம் செய் யுமாறு இலங்கை அரசை இந்திய அரசு ஒருபோதும் கேட்டுக்கொள்ளாது’ என்று அவர் கொக்கரித்து உள்ளார்.

மேலும், ‘இலங்கையில் போர்நிறுத்தம் செய் வதில், இந்திய அரசுக்கு உடன் பாடே கிடையாது’ என்றும் அவர் கூறி உள்ளார்.

இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற் று வருகின்ற சண்டையில், இலங்கை விமானப்படை கண் மண் தெரியாமல் நடத்தி வருகின்ற தாக்குதலால், காட்டுமிராண்டித்தனமாக வீசுகின்ற குண்டு களால், அப்பாவித் தமிழ்  மக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இது தொடர் பாக நான் ஏற்கனவே தொடர்ந்து தங்களுக்கு எழுதி உள்ள கடிதங்களில், தகுந்த ஆவணங்களுடன் எனது குற்றச்சாட்டுகளை உறுதி செய்து இருக்கிறேன்.

ஆனால், ‘தமிழ் நாட்டில் உள்ள கறைபடிந்த அரசியல்வாதிகள்தாம் இத்தகைய
குற்றச்சாட்டுகளைக் கூறிவருகிறார்கள்; அவர்கள் விடுதலைப் புலிகளால்
விலைக்கு வாங்கப்பட்டவர்கள்; விடுதலைப்புலிகள் அழிந்தால் அவர்களுக்கு
வருமானம் போய் விடும் என்பதற்காக இப்படிக் கூறுகிறார்கள்’ என்று, இலங் கை இராணுவத்தின் தலைமைத் தளபதி இழிவுபடுத்தி உள்ளார்.

2008 நவம்பர் 12 ஆம் நாள், தமிழ் நாடு சட்டமன்றத்தில், ‘இலங்கையில் போர் நிறுத்தம் செய் வதற்குத் தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு உடனே மேற்கொள்ள வேண்டும்’ என்று கோரி, அனைத்துக் கட்சியினராலும் ஒருமன தாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

இந்தத் தீர்மானம், தமிழ் நாட்டில் வாழுகின்ற ஏழுகோடித் தமிடிந மக்களின் ஒட் டுமொத்தக் கருத்து ஆகும். பாசிச வெறி பிடித்த ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு, ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்து வருவதைக் கண் டு, தமிழ் நாட்டில் உள்ள ஏழுகோடித் தமிழர்களும் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழ் நாட்டு மக்களின் குரலை ஒலிக்கின்ற வகையில் நிறைவேற்றப்பட்ட
தமிழக சட்டமன்றத் தீர்மானத்தின் மை உலர்வதற்கு உள்ளாக, இலங்கை
அதிபர் மகிந்த ராஜபக்சே, இந்தியத் தலைநகர் புது தில்லிக்கு வந்து, ‘நாங்கள்
ஒருபோதும் போர்நிறுத்தம் செய்ய மாட்டோம்; போரைத் தொடர்ந்து நடத்து வோம்’ என்று ஆணவத்தோடு கொக்கரித்து உள்ளார்.

அவரது இந்தக் கருத்து, இந்திய அரசு போர்நிறுத்தம் செய் யுமாறு அவரிடம்
கேட்கவில்லை என்பதை, உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவாக எடுத் துக் காட்டி உள்ளது.

மாறாக, இந்திய அரசு, தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் இனப் படு கொலைத் தாக்குதல்களை மேலும் தீவிரமாக நடத்துவதற்காக, இலங்கை விமானப்படைக்கு ரேடார்களை வழங்கி உள்ளது; ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து, இந்திய இராணுவ நிபுணர்களையும் உதவிக்கு அனுப்பி உள்ளது.

2008 அக்டோபர் 2 ஆம் நாள் அன்று தாங்கள் எனக்கு எழுதிய கடிதத்தில், ‘இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக நாங்கள் இத்தகைய
பாதுகாப்பு உதவிகளைச் செய் து இருக்கிறோம்’ என்பதை ஒப்புக்கொண்டு
இருக்கிறீர்கள்.

பண்டித ஜவஹர்லால் நேரு, இந்திரா அம்மையார் ஆகியோர் வகுத்த அயல்
உறவுக் கொள்கையைக் காற்றில் பறக்கவிட்டு, இலங்கை அரசின் இனப்படு கொலைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்த நீங்கள் உதவி இருக்கிறீர்கள்.

இந்தப் பின்னணியில்தான், இலங்கை இராணுவத்தின் தலைமைத்தளபதி,
தமிழ் நாட்டுத் தலைவர்களைக் கொச்சைப்படுத்தியும், இழிவுபடுத்தியும்
துணிந்து கருத்துகளைக் கூறி உள்ளார்.

இந்தியாவின் அரசியல் வரலாற்றில், இதுவரையிலும் வேறு எந்த நாட்டு இரா ணுவத் தளபதியும், இந்திய அரசியல் தலைவர்களைப் பற்றி இப்படி இழிவான கருத்துகளைக் கூறியது இல்லை. மேலும், மக்கள் ஆட்சி நடைபெறுகிற எந்த ஒரு நாட்டிலும், இராணுவத் தளபதிகள் பிற அயல்நாடுகளின் தலைவர்களைப் பற்றிக் குறைகூறி விமர்சித்துக் கருத்துகளைச் சொல்வது இல்லை.

சரத் பொன்சேகாவின் கருத்து, இந்தியாவையும், இந்திய மக்ளையுமே இழிவு படுத்துவது ஆகும்.

எனவே, அவரது கருத்தை இந்தியா கண்டிப்பதுடன், இதுகுறித்து இலங்கை
அரசை எச்சரிக்க வேண்டும்; சரத் பொன்சேகா நிபந்தனை அற்ற மன்னிப்புக்
கோர வேண்டும்; அவரது கருத்து குறித்து இலங்கை அதிபர் விளக்கம் அளிக்க
வேண்டும் என்று இந்தியா கோர வேண்டும்.

இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அரசு ஏற்காமல் ஒதுக்கித் தள்ளி னால், இந்தியாவில் உள்ள இலங்கைத் துhதரை, நாட்டை விட்டு வெளியேற்ற
வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,

தங்கள் அன்புள்ள,

வைகோ


வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 29

No comments:

Post a Comment