Saturday, November 23, 2013

புரட்சிக்கான தீப்பொறியை அடைகாக்கும்

புரட்சிக்கான தீப்பொறியை அடைகாக்கும்

தஞ்சை விளாரில் எழுந்து நிற்கும்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்!

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்புவிழா நிகழ்ச்சி 9.11.2013 அன்று நடைபெற்றது. #மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர் களின் உரை 

அடடா தமிழா எடடா படை நீ
அடிமை விலங்கை உடைத்தெறி
இடடா ஆணை கொடடா செந்நீழ
இனத்தைக் காப்போம் நாள் குறி
நடடா களத்தே எடடா கைவாள் நடடா
உன் பகைவன் தலைபறி
தொடடா போரை விடடா கணைகள்
சுடடா எழட்டும் தீப்பொறி
சுடடா எழட்டும் தீப்பொறி

விடுதலைக்கான புரட்சி தீ பொறியை அடைகாக்கும் முள்ளிவாய்க்கால் நினை வு முற்றம். இது தமிழர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும், ஏற்றத்திற்குமான ஒரு முற்றம்.

கடந்த நூற்றாண்டின் வரலாற்றில் ஒரு சம்பவம். ஜெர்மானிய நாட்டில் நாஜி களின் தலைவன் இட்லர் இலட்சக்கணக்கான யூதர்களை கொன்று ஒழித்து அவர்களின் உடைமைகளை பிடிங்கிக் கொண்டு துரத்தினான்.யூதர்கள் வித விதமாக கொல்லப்பட்ட நிகழ்வுகளை பெருந்தச்சன் வீரசந்தானம்,மல்லை முருகன் போன்ற ஒரு ஓவியக் கலைஞர் தன் தூரிகையால் அதற்கு மறுவடி வம் தந்து உயிர்ப்பிக்கச் செய்து ஜெர்மன் நகர வீதிகளில் அதை காட்சிப் படுத் தினான். நகர மாந்தர்கள் திரளாகச் சென்று பார்த்தனர்.

ஒரு நாள் அரசப் பிரதிநிதிகளுடன் ஜெர்மானிய அதிபர் இட்லர் கண்காட்சியை பார்வையிடச் சென்றார்.ஒவ்வொன்றாகப் பார்த்துவிட்டு வரும் போது இறுதி யாக அரசு அதிகாரிகள் அந்த ஓவியக் கலைஞனை அதிபர் இட்லரிடம் அறிமு கப்படுத்தி வைத்த போது இட்லர் அவருக்கு கைகொடுத்து விட்டு இது உன் கை வண்ணமா என்று கேட்ட போது, அந்த இன விடுதலை ஓவியர் கிடைத்த சந் தர்ப்பத்தைப் பயன்படுத்தி சொன்னார். இவை அனைத்தும் உங்கள் கைவண் ணம்.

அதை என் தூரிகையால் உயிர்ப்பு செய்திருக்கிறேன் என்று.அன்பானவர்களே சர்வாதிகாரி இட்லர் கோரமான முடிவைத் தழுவினான்.கொல்லப்பட்ட இலட் சக்கணக்கான யூதர்களின் சார்பில் நாடற்றவர்களாக நாடோடிகளாக துரத்தப் பட்ட யூதர்கள் ஒன்று திரண்டு தங்களுக்கான நாட்டை இஸ்ரேலாகக் கட்டி எழுப்பினார்கள்.

சிங்கள அதிபர் ராஜபக்சேவும் அவனுக்குத் துணை நின்ற இந்தியா,இங்கிலாந் து, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் நினைத்திருக்கலாம், யூதர் களைப் போன்று ஈழத்தமிழர்கள் இலட்சக் கணக்கானவர்களை கொன்று ஒழித்து தட யம் இல்லாமல் முள்ளிவாய்க் காலில் புதைத்துவிட்டோம் என்று.ஆனால் இதோ தஞ்சை விளாரில் விழவில்லை உயிர் உள்ள ரத்தக் சாட்சியாக எழுந்து நிற்கிறது என்றால் நம்புங்கள் தோழர்களே நாளை தமிழ் ஈழம் மலரும்.

சிங்கள வெறியன் ராஜபக்சேவின் நாட்கள் எண்ணப்படுகிறது. இன்னும் எத்த னை நாட்களுக்கு இந்தியா பாதுகாப்பு கொடுக்க முடியும்.இந்தியாவை ஆளும் மத்திய காங்கிரஸ் அரசின் நாட்களே எண்ணப்பட்டு கொண்டு இருக்கும் போது இன்று இல்லாவிட்டால் நாளை கணக்குத் தீர்ப்போம் ஒரு போதும் இன அழிப் பிற்கு துணை போனவர்கள் தப்ப முடியாது.

ஏசு பிறப்பிற்குப் முன் கிரேக்கத்தின் நகரநாடான °பார்ட்டாவை ஆக்கிரமிக்க
பாரசீகப் பெரும்படை மன்னர் செர்சஸ் தலைமையில் வந்த போது பெரும்
படையை தகர்க்க ஸ்பார்ட்டாவின் அரசர் லியோனிடாஸ் தலைமையில் 300 பேர் மட்டுமே களத்திற்குச் சென்றார்கள்.

மலையும் கடலும் சங்கமிக்கும் கடல் கணவாய் பகுதியான தெர்மாப்பிளே
கணவாயில் போரிட்டார்கள். வீரர்கள் எப்போதும் எதிரிகளால் வீழ்த்தப்படுவ
தில்லை மாறாக துரோகத்தால் வீழ்த்தப் படுகிறார்கள். அதைப் போன்றே ஒரு
துரோகத்தால் ஸ்பார்ட்டா வீரர்கள் வீழ்த்தப்பட்டார்கள். லியோனிடாஸ் தலை மையிலான 300 பேர் கட்டிய தெர்மாப்பிளே வீரத்தை உலக அளவில் உச்சரிக் காத உதடுகளே இல்லை என்கின்ற அளவிற்கு ஸ்பார்ட்டாவின் தெர்மாப்பிளே கணவாய் யுத்தம் இன்று வரை பேசப்பட்டுக் கொண்டு வருகிறது.அவர்களின் வீரமரணத்திற்குப் பின் தெர்மாப்பிளே நினைவு கல்வெட்டு ஒன்று செதுக்கப் பட்டுள்ளது.


ஓ.. பயணிகளே அன்னை ஸ்பார்ட்டா விடம் சொல்லுங்கள் பாரசீகப் பெரும்
படையை வெற்றி கொண்டிருந்தால் கேடயங்களையும் ஈட்டிகளையும் உயர்த் திப் பிடித்து வீரமுழக்கமிட்டு வருவோம், தோல்வியுற்றால் எங்களின் காயம் பட்ட உடல்களின் மீது அந்த கேடயங்களும் ஈட்டிகளும் இருக்கும் என்ற எங் கள் வாக்கை அன்னை ஸ்பார்டாவை காக்கும் போர்க்களத்தில் நிரூபித்து விட் டு இன்று மரணித்த பின்பும் காவல் காத்துக் கொண்டு இருக்கிறோம் என்று ஸ்பார்டாவிடம் சொல்லுங்கள் என்பதை போன்று தான் தஞ்சை விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தை கடந்து செல்லும் பயணிகளே! ஈழத் தமிழர் களுக்கு! சொல்லுங்கள் மானமுள்ள தமிழர்கள் தாய் தமிழ்நாட்டில் தமிழீழத் தாயகத்தை உருவாக்க சலனங்களுக்கும் சபலங்களுக்கும் ஆட்படா மல் களத்தில் நிற்கின்றோம். நம்புங்கள் நாளை தமிழீழம் பிறக்கும் என்பதை எங்கள் ஈழ உறவுகளுக்குச் சொல்லுங்கள்.

ஏன் இந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தை தகர்க்க நினைக்கிறார்கள்.இது வெ றும் கல் சிற்பம் தானே என்று நினைத்தவர்கள் கல் மனதும் கரைந்து விடும்
காவியமாக முள்ளிவாய்க்கால் உருவெடுத்திருக்கிறது. எனவே இந்த இனப் படுகொலைக்கு காரணமானவர்கள் இரத்த சாட்சியை அழிக்க நினைக்கிறார் கள்.

அய்யா பழநெடுமாறனிடம் சட்டப் போராட்டம் நடத்தி மூக்கறுப்பட்டு மூளி யாக முகாரிராகம் பாடுகிறார்கள் காவல்துறையினர். இதற்கு ஒரே பிராயச் சித்தம் இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் நாள் தோறும் வாத்தியம் முழங்க மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த
வேண்டும். இனி வரும் காலங்களில் அதைப் போன்ற அரசு மரியாதைகள்
செலுத்தப்பட வேண்டும் அது தான் எங்களின் எதிர்பார்ப்பு.

நேற்றைய தினம் இங்கே உரை நிகழ்த்திய எங்கள் தலைவர் வைகோ அவர்கள் அய்யா நெடுமாறன் அவர் களுக்கு சொல்லியிருக்கிறார், முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்க வருபவர்களின் இடுப்பு ஒடிக்கப்படும் என்று கூறியுள்ளார். அதையும் மீறி வந்தால் மரணத்தை கண்டு பயப்படாத எங்கள் தோழர்களோடு முள்ளிவாய்க் கால் முற்றத்தை காக்க வருவோம் என்று தலைவர் வைகோ அறிவித்துள்ளார்.அய்யா நெடுமாறன் அவர்களே நாங்கள் முள்ளிவாய்க்கால் முற்றத்தை காக்கும் ஏவுகணைகளாக செயல்படுவோம் முள்ளிவாய்க்கால் முற்றத்தை காக்க வீரமரணம் அடைய நாங்கள் தயார் என்றால், எங்களின் இன எதிரியும் அதற்கு தயாராக வரவேண்டும்.

இனப்படுகொலை செய்துள்ள இலங்கையில் பொதுநல மாநாடா (காமன் வெல்த்) அதில் இந்திய பிரதமர் பங்கேற்க போவதில்லை என்ற தகவல் வந்தி ருக்கிறது. திருமணத்திற்கு நாள் பார்த்து குறித்துவிட்டு திருமணத்திற்கு முன் னால் சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணம் நின்று விடும் என்று நினைக்கின்ற மடமைத் தனத்தை போன்று இந்தியா பொதுநல மாநாட்டிற் கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, பிரதமர் தான் பங்கேற்க போ வதில்லை என்று அறிவித்து இருக்கிறார். இவர் செல்லாவிட்டாலும் திட்டமிட் டபடி பொதுநல மாநாடு நடைபெறும்.

இந்தியாவின் வெளிவிவகாரத் துறையின் அமைச்சர் சல்மான்குர்ஷித்,பிரதமர்
பங்கேற்கா விட்டாலும் நான் பங்கேற்பேன் என்று அகந்தையோடு சொல்லியி ருக்கிறார். இவர் இந்திய நாட்டின் வெளி விவகாரத்துறைஅமைச்சரா? அல்லது தமிழர்களை காட்டிக் கொடுக்கும் சிங்களவரின் கைக்கூலியா?

மறுமலர்ச்சி திமுக.வின் எங்கள் தலைவர் வைகோ அவர்களின் நிலைப்பாடு
இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்
என்பதுதான்.

தமிழர்கள் நாங்கள் எப்பொழுதும் இந்தியனாக இருந்ததில்லை. இந்தியக் குடிம கனாக கடவுச்சீட்டு உள்ளிட்ட சிலவற்றால் நாங்கள் இந்திய பிரஜை களாக இருக்கின்றோம். இந்தியா தொடர்ந்து தமிழர்களை வஞ்சிக்குமேயானால் அந்த அடையாளத்தையும் இழக்கத் தயாராவோம்.

இலங்கையில் நடக்கும் பொதுநல மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை கண்டித் து வணிகர் சங்க தலைவர் அண்ணன் வெள்ளையன் அவர்கள் கடையடைப்பு அறிவித்திருக்கிறார்.அதை மாபெரும் வெற்றியாக்க களமாடுவோம் வாருங் கள்.

புரட்சித்தீயை அடைகாக்கும் முள்ளி வாய்க்கால் முற்றத்தில் சபதம் ஏற்போம்!
தமிழீழம் மலர களமாடுவோம்.

இவ்வாறு துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் துணைப் பொதுச் செயலாளர் துரை. பாலகிருஷ்ணன்,தஞ்சை மாவட்டச் செயலாளர் உதயகுமார், நகர செயலாளர் ரவிச்சந்திரன், தேர்தல் பணித் துணைச் செயலாளர் விடுதலைவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment