Thursday, November 14, 2013

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் தலைவர் வைகோ மின்னல் வேகச் சுற்றுப்பயணம்

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் தலைவர் #வைகோ மின்னல் வேகச் சுற்றுப்பயணம் என்றும் இல்லா எழுச்சி... எங்கும் மக்கள் பெருவெள்ளம் மகிழ்ச்சி!

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரக்கூடிய காலம் நெருங்கிக் கொண்டு
இருக்கிறது. யார் யாரோடு கூட்டணி;இவர் அவரோடு சேருவாரா? அவர் என்ன
முடிவெடுப்பாரோ! என்று அரசியல் கூட்டணியை ஆளுக்கு ஒரு விதமாக அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிற காலகட்டத்தில், தமிழகத்திலேயே, ஏன்
இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு தலைவர்தான் தம் கட்சிச் சின்னத் திற்கு வாக்குக் கேட்டு பிரச்சாரப் பயணத்தை 2013 செப்டம்பர் 30 அன்று தூத்துக் குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் தொடங்கினார். அவர்தான் எதற்கும்,
எதிரிக்கும் எப்போதும் அஞ்சாத நம் தலைவர் வைகோ.

தூத்துக்குடி, ஈரோடு மாவட்டப் பிரச்சாரச் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து,
ஆரூயிர் தலைவர் வைகோ அவர்களை மக்கள் பிரதிநிதியாகக் கொண்டிருந்த
வரலாற்றுப் பெருமைக்குரிய விருதுநகர் தொகுதியில், அக்டோபர் 23 மாலை 4
மணிக்கு அருப்புக்கோட்டை ஒன்றியம் செட்டிகுறிச்சி கிராமத்தில் பிரச்சாரப்
பயணத்தைத் தொடங்கினார்.

விவசாய வேலைகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருந்தபோதும், ஊரே திரண் டு இருந்து பட்டாசு வெடித்து மேள தாளம் முழங்க வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து வாழ்வாங்கி, பெரியநாயகிபுரம், இராமநாயக்கன்பட்டி கடந்து சிதம் பராபுரம் கிராமத்து ஊர் பொது மடத்தில் பொது மக்களும், ஊராட்சித் தலைவ ரும் அன்பொழுக வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து சின்ன செட்டி குறிச்சி, இராமலிங்காபுரம்,போடம்பட்டி, வதுவார்பட்டி, சின்ன தும்மக்குண்டு, பெரிய தும்மக்குண்டு,ஆண்டிப்பட்டி என பயணப்பட்ட கிராமங்கள் அனைத்தி லும் பொது மக்களும் பள்ளிக் குழந்தைகளும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

தங்கள் குடும்பத்துப் பெரியவர்களிடம் குழந்தைகள் காட்டும் நேசத்தையும்,
பாசத்தையும் எல்லா ஊர்களிலும் எல்லா சமூக மக்களின் குழந்தைகளும் நம்
தலைவர் வைகோ அவர்களிடம் காட்டினர். வேறெந்த தலைவருக்கும் வாய்க் கப் பெறாத பெரும் பேராகும்.

காசிலிங்கபுரத்தில் பல ஆண்டுகளாக நமது இயக்கத்திற்கு வாக்களித்து வரு கின்றனர் மக்கள். ஒன்றியச் செயலாளர் சீனிவாசனுக்கு, பம்பரம் சின்னத்தில் வாக்களித்து ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக வெற்றி பெற வைத்ததை தனது பேச்சில் தலைவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.தொடர்ந்து சாலை யோர சிற்றூரான பந்தல்குடியில் இதுவரை கண்டிராத பொதுக்கூட்டம். இரு நூறுக்கும் மேற்பட்ட தாய்மார்கள் கூட்டத்தில் அமர்ந்து தலைவர் வைகோ வின் உரை கேட்டது புதியதொரு மாற்றத்திற்கான அடையாளம்தானே என நம்மை வியக்க வைத்தது. கழகப் பொதுக்குழு உறுப்பினர் பந்தல்குடி மாரியப் பன் பொதுக்கூட்டத்தை எழுச்சி மிகு ஏற்பாட்டில் நடத்திக் காட்டினார்.

தலைமைக் கழக அறிவிப்புகள் எதுவானாலும் அதை ஆணையாகவே ஏற்றுச் செயல்புரியும் விருதுநகர் மாவட்டச் செயலாளர் அண்ணாச்சி ஆர்.எம்.சண்மு கசுந்தரத்தின் சீரிய வழிகாட்டுதலில் ஒன்றியச் செயலாளரும், முன்னாள் ஒன் றியத் துணைப் பெருந்தலைவருமான சீனிவாசன் சுற்றுப்பயணத்தை ஒழுங்கு
செய்திருந்தார்.

மாநாடுகளில், அரங்குகளில், நாடாளு மன்ற வாதங்களில் எழுச்சி நடையில்
உரை முழக்கம் செய்கின்ற நம் தலைவர் வைகோ அவர்கள், சின்னஞ்சிறு கிரா மங் களில் மக்கள் மொழியில் திண்ணையில் உட்கார்ந்து ஊர் நாட்டாண்மை
பேசுவதைப்போல மைக்கில் பேசுவது எத்தகைய தாக்கத்தை உருவாக்குகிறது
என்பதை, கேட்கும் மக்களின் தலை அசைவை வைத்தே காண முடியும். இது
நம் தலைவருக்கே வாய்க்கப் பெற்ற அரிய கலையாகும்.

அந்த மக்களிடம் ஊரின் ஒற்றுமை, சமூக ஒற்றுமை, குழந்தைகளைப் படிக்க
வைக்க வேண்டியதன் அவசியம்,பெற்றோரை பேணிப் பாதுகாப்பது, தனது கணவன்மார்களின் மது போதை பழக்கத்தால் பாதிக்கப்படும் பெண்களின்
துயரநிலை இவற்றை மிகத் துல்லியமாக வலியுறுத்திப் பேசும்போது, வெறும்
ஓட்டு அரசியல்வாதிகளுக்கு மத்தியில் வருங்கால தலைமுறையை செப்ப னிடும் சீர்திருத்தவாதியாகவே நம் தலைவரின் உரை அமைந்திருந்தது.

இரண்டாம் நாள் (24.10.2013) வீரம் செறிந்த யுத்தத்தை வெள்ளை ஏகாதி பத்தியத் திற்கு எதிராக நிகழ்த்திக் காட்டிய மாமன்னர் மருதுபாண்டியர் 500க்கும் மேற் பட்ட வீரத் தமிழர்களுடன் தூக்கிலிடப்பட்ட தியாகத் திருநாள் என்பதால், அவர் கள் தூக்கிலிடப்பட்ட திருப்பத்தூர் மணிமண்டபத்தில் சின்ன மருது, பெரிய மருது சிலைகளுக்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தி, திருப்பத்தூர் பேருந்து நிலையத்திற்கு எதிரே நிறுவப்பட்ட நினைவுத் தூணுக்கு மலர் அஞ் சலி செலுத்தினார். சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் புலவர்
செவந்தியப்பன் அவர்கள் தலைமையில்,இலட்சியத் தோழன் தணிக்கைக்குழு
உறுப்பினர் வழக்கறிஞர் கார்கண்ணன் மற்றும் நூற்றுக்கணக்கான சிவகங்கை
மாவட்டக் கழக முன்னணியினர் திரண்டு இருந்தனர்.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிங்கப்பூர் பாண்டியராசன், மருது பாண்டி யர் உருவம் பதித்த பதாகை களை நேர்த்தியாக ஆங்காங்கே அமைத்து அதில் நம் தலைவர் வீர வணக்கம் செலுத்த வரும் செய்தியை மக்களுக்கு அறிவிப்புச் செய்திருந்தார்.

மதுரை மாநகரில் இருந்து புறப்பட்ட தலைவருடன், மாநகர் மாவட்டக் கழகச்
செயலாளர் அண்ணன் புதூர் மு.பூமிநாதன்,அரசியல் ஆலோசனைக் குழுஉறுப் பினர் அய்யா எம்.டி.சின்ன செல்லம், கொள்கை விளக்க அணிச் செயலாளர் வழக்கறிஞர் க.அழகுசுந்தரம்,தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாஸ்கரசேது பதி, வழி நெடுகிலும் சுவரொட்டிகள் மூலம் விளம்பரம் செய்திருந்த மாநில மருத்துவர் அணித்துணைச்செயலாளர் சகோதரர் டாக்டர் பி.சரவணன் மற்றும் கழக முன்னணியினர் உடன் வந்தனர்.

பிற்பகல் சாத்தூர் கிழக்கு ஒன்றியம் நத்தத்துப்பட்டியில் பிரச்சாரம் தொடங்கி யது. ஒரு கிலோ மீட்டர் முன்பாகவே 50க்கும் மேற்பட்ட அவ்வூர் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து தலைவரை அழைத்துச் சென்றனர்.ஊரில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, தாய்மார்களின் குலவையோடு கூடிய ஆரத்தி வரவேற்பை ஏற்றுக்கொண்டு தலைவர் பேசினார்.

இவ்வூரைச் சேர்ந்தவரும், மூன்றாவது முறையாகத் தொடர்ந்து ஊராட்சித்
தலைவராகப் பதவி வகித்து வருபவரும் இச் சுற்றுப்பயணத்தை முந்தைய
நாள்வரை ஆர்வமுடன் ஏற்பாடு செய்தவருமான சாத்தூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் முருகபூபதி,எதிர்பாராத உடல்நலக் குறைவு காரணமாக மதுரை மகாத்மா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையிலும், தாம் ஊரில் இல்லாததால் பொதுச்செயலாளர் சுற்றுப்பயணம் எக்காரணம் கொண்டும் தடைபடக்கூடாது. நான் வரவில்லை எனினும் தமது ஊர் நத்தத்துப் பட்டிக்கும்,கிழக்கு ஒன்றியத்துக்கும் தலைவர் வைகோ அவர்கள் அறிவிக்கப் பட்டபடி,வரவேண்டும் என மாவட்டக் கழகச் செயலாளரிடம் சொல்லியிருந் தார் என்பதை அறிந்தபோது, தலைவர் வைகோவின் சுற்றுப் பயணத்தை தடை யின்றி நடத்திட ஒரு ஒன்றியச் செயலாளர் எத்தகைய உறுதிப்பாட்டைக்
கொண்டிருக்கிறார் என உணர முடிந்தது.

தொடர்ந்து நத்தத்துப்பட்டி மறவர் காலனி, இருக்கன்குடி, நெ.மேட்டுப் பட்டி, க.மேட்டுப்பட்டி, நாகலாபுரம்,மாயூர்நாதபுரம் அருந்ததியர் காலனி, கோசு குண்டு, முத்தார்பட்டி, இராமசாமிபுரம், கண்மாய்ப்பட்டி, கோப்பையா நாயக் கன்பட்டி, பாப்பாக்குடி, குண்டலக் குத்தூர், கணபதியாபுரம், ஏ.சொக்கலிங்க
புரம் என அனைத்துக் கிராமங்களிலும் ஊரே திண்டு கொடுத்த வரவேற்பை
ஏற்று உரையாற்றிவிட்டு, சிறுகுளம் கிராமத்திற்கு இரவு 10.30 மணிக்கு வந்த போது பிரம்மாண்ட ஏற்பாட்டோடு மேடை அமைக்கப்பட்டு, இரண்டு கிலோ
மீட்டர் தூரத்திற்கு குழல் விளக்குகளும், பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன.
ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் ஆயிரக்கணக்கில் கூடி வாழ்த்தொலி எழுப்பி வரவேற்றனர்.

ஊர் பொதுமக்கள் அமைத்திருந்த ஒரு பதாகையில், மனிதமே! வருக! வருக!!
என தலைவரை விளித்து புதுமையாக அழைத்திருந்தது தமக்கு மகிழ்ச்சி அளிப் பதாகக் குறிப்பிட்டுப் பேசினார்.இக்கூட்டத்தில் 52 ஆண்டுகள் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாவட்ட விவசாய சங்க அமைப்பில் பணி யாற்றிய பெரியவர் மேட்டுப்பட்டி எல்லப்பராஜ் அன்று முதல் தம்மை மறும லர்ச்சி தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.அவருக்குப்பொன்னாடை போர்த் திய நம் தலைவர், அவரை சிறிது நேரம் பேசவும் கேட்டுக்கொண்டார்.தமது பேச்சில், 52 ஆண்டு உழைப்பு வீணாகிவிட்டதையும், ஒரு நல்ல தலைவருக்கு தொண்டனாகப் பணியாற்ற விரும்பியே மறுமலர்ச்சி தி.மு.க.வில் இணைந்த தாகவும் கண்ணீர் மல்கக் குறிப்பிட்டார். அனைவரும் உணவு அருந்த முன் னாள் இராணுவ வீரர் கோவர்த்தனன் தனது பண்ணை வீட்டில் சிறப்பாக ஏற் பாடு செய்திருந்தார்.

மூன்றாம் நாள் மாலை 5 மணிக்கு அம்மாபட்டியில் சுற்றுப்பயணம் தொடங்கி யது. முற்றிலும் தேவேந்திர குல மக்கள் வாழும் இச் சிற்றூரில் எப்போதும் இத்தகைய வரவேற்பை நாம் கண்டதில்லை என்கிற அளவிற்கு ஊரே ஒன்று திரண்டு வரவேற்பு அளித்தது.பத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் கட்சி வேட்டி அணிந்து இயக்கக் கடமையாற்றி வருகின்றனர்.

தொடர்ந்து எம்.துரைச்சாமிபுரம்,இடையன்குளம், மேட்டுப்பட்டி, காக்கி வாடன் பட்டி (இரண்டு இடங்கள்) கான்சாபுரம், ரெங்கசமுத்திரப்பட்டி,மம்சாபுரம், நதிக் குடி, ஆத்தூர் கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.நதிக்குடியில் நேதாஜி, தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு,மக்களே உங்கள் ஊர் அக்கரகாரத்தில் தான் புகழ்பெற்ற எழுத்தாளர் “தீபம்”பார்த்தசாரதி பிறந்தார் என் பதை நினைவு ஊட்டினார். தொடர்ந்து, பி.திருவேங்கட புரத்து தேவேந்திர குல மக்களும் இளைஞர்களும் திரண்டு வரவேற்புக்கொடுத்தனர்.தலைவரை மேள தாளத் தோடு ஊர்வலமாக அழைத்துச்சென்றனர்.அங்கு இமானுவேல் சேகரன்
சிலைக்கு தலைவர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து வரவேற்புக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார்கள்.

தொடர்ந்து மேலப்பாளையம், கொங்கன் குளம், புலிப்பாறைப்பட்டி, கிளியம் பட்டி,மாதாங்கோவில்பட்டி, கல்லமநாயக்கன்பட்டி, பாறைப்பட்டி, குண்டா யிருப்பு,முத்துசாமிபுரம், ஆலங்குளம் என பல்வேறு சமூக மக்கள் குறிப்பாக ஆதி திராவிடர் சமூக மக்கள், கம்பளத்தார் சமூக மக்கள் வாழும் கிராமங்களில் ஊரே திரண்டு வரவேற்க அங்கெல்லாம் தலைவர் வைகோ அவர்கள் பிரச்சா ரம் செய்துவிட்டு, ஆலங்குளம் சிமெண்ட் ஆலை சந்திப்பில் மாவட்டக் கழகச்
செயலாளர் ஆர்.எம்.சண்முகசுந்தரம் தலைமையில், நடந்த கூட்டத்தில் உரை யாற்றினார்.

அ.தி.மு.க.-தி.மு.க. என இரு கட்சிக் கூட்டணியில் இருந்தபோதெல்லாம் இதே இடத்தில் நடந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் கலந்து கொண்டு உள்ளார். அந்தக் கூட்டங்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது, எழுச்சியும் உணர்ச் சி யும் கலந்திருந்த ஆலங்குளம் முக்குரோடு பொதுக்கூட்டம். இதே கருத்து தான் இக்கூட்டத்தில் பங்கேற்ற நமது தோழர்களின் கருத்தும்.நான்காம் நாள் சுற்றுப்பயணத்தை 26.10.2013 பிற்பகல் 5 மணிக்கு கலிங்கப்பட்டிக்கு அருகே உள்ள மேலாண்மறை நாட்டில் துவக்கினார்.என்னிடம் உரிமையோடு வருவ தைப்போல் வேறு எந்த அரசியல்வாதியிடம் நீங்கள் செல்ல முடியும்?நான் இந் த ஊர்? இந்த வேலையாக வந்தேன் என்றால், வாங்க!வாங்க! என வரவேற்று அமர வைத்து என்னால் முடிந்த மட்டும் அந்தக் கோரிக்கைக்காக முயற்சித் து
அனுப்புகிறவன் அல்லவா நான்! 

என்னை அணுகிய எவரிடத்திலும் என்ன சாதி? என்ன கட்சி? என்று நான் கேட் டதுண்டா? அப்படி கேட்பது அவமானம் என்று நினைக்கக்கூடியவன் அல்லவா நான்! யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள் என்று எவரிடத்திலும் நான் கேட்டதில் லையே! வந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மனிதர்கள்.அவர்களுக்கு உதவுவது நமது கடமை.அதற்காகத்தான் இந்த பொதுவாழ்வு என்ற அந்த அடிப் படையில் உதவுகிற இயல்பையும் நேசத்தையும் இந்த வைகோவைப் போல நீங்கள் வேறு எவரிடத்தில் எதிர்பார்க்க முடியும்? என்று தலைவர் வைகோ அவர்கள் கேட்பது கிராம மக்களின் உள்ளத்தில் அப்படியே ஊடுருவி விடு கிறது. நமக்காக பாடுபட்ட; நமது நலனில் கவனம் செலுத்திய நமது தொகுதிக் கு அகில இந்தியப் புகழைப் பெற்றுத்தந்த தலைவருக்கு கடந்தமுறை வாக்க ளிக்க தவறிவிட்டோமோ? என்ற ஆதங்கம் மக்களின் முகங்களில் பிரதிபலிப் பதை உணர முடிகிறது.

அப்பையநாயக்கன்பட்டி (இரண்டு இடம்), வலையப்பட்டி, கண்மாய்ப்பட்டி,
சுண்டங்குளம், ஆ.லட்சுமியாபுரம்,ஆர்.மீனாட்சிபுரம் முடித்து, இராமுத்தேவன் பட்டிக்கு இரவு 7.30 மணிக்கு வந்தார் தலைவர் வைகோ.


முத்தமிழ்வித்தகர் டாக்டர் காளிமுத்து அவர்கள் பிறந்த ஊர் இந்த ஊர். என்
நண்பன் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட இந்த ஊரில் என் நண்பனின் நினைவு களைப் பகிர்ந்துகொள்கிறேன் என்று குறிப்பிட்டார்கள். டாக்டர் கா.காளிமுத்து இறந்த தினத்தன்று சொட்டுத் தண்ணீரும் பருகாமல், இறுதி அடக்கம் வரை தாமும், கழகக் கண்மணிகளும் பசித்திருந்து பங்கேற்றோம் என்பதையும், நண் பர் சார்ந்த கட்சியினர் இறுதி அடக்கம் செய்யப்படும் நேரத்திற்கு கடமைக்காக
வந்து சென்றதை இராமுத்தேவன்பட்டி மக்கள் மறுந்துவிட வேண்டாம் என
உணர்ச்சி பொங்கக் குறிப்பிட்டார்கள்.தொடர்ந்து கீழாண்மறைநாடு முடித்து,
அம்மையார்பட்டி வந்தார். அங்கு பல்வேறு சிறுபான்மை சமூகத்தினர் தலை வரின் உதவியோடு கட்டப்பட்ட கோவிலுக்குள் அழைத்துச் சென்று நன்றி தெரிவித்தனர். அம்மையார்பட்டி கம்பளத்தார் சமூக மக்கள் வாழும் பகுதி யிலும் கொடியேற்றி வைத்துவிட்டு, சக்கம்மாள்புரம் முடித்து,குகன்பாறை, மேலச்சத்திரம்,நடுச்சத்திரம் முடித்து, சங்கரபாண்டியபுரம் வந்தார். நினைவில்
வாழும் “சங்கரபாண்டியபுரம் முதலாளி” என அப்பகுதி மக்களால் போற்றப் படும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச நாயக்கர் அவர்களின் உயர்ந்த பண்புகளை நினைவு கூர்ந்தார். அவரது திருப்பெயரை என்றென்றும் நினைவில் கொள்ளுங்கள் என இளைய சமுதாயத்தைக் கேட்டுக்கொண்டார்.
தள்ளாத வயதிலும் வேலூர் சிறைக்கு வந்து தம்மை சந்தித்ததை நினைவு
கூர்ந்தார்.

தொடர்ந்து துலுக்கன்குறிச்சியில் பேசி,வெம்பக்கோட்டைக்கு இரவு 10 மணிக் கு வந்தபோது, ஊர் பெரியவர்கள் பெருந்திரளாகக் கூடி நின்று வரவேற்றனர். தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, உரையாற்றி அந்த ஊருக்கு விதி களைத் தளர்த்தி அரசு மேல்நிலைப்பள்ளி அமைத்திட அரசாணை பெற்றுத் தந்ததை தம் பேச்சில் குறிப்பிட்டார்.

தலைவர் வைகோவின் சுற்றுப் பயணத்தில் மக்கள் கூட்டம் திரளுவதைத் தெரிந்து கொள்ளவும்,என்ன பேசுகிறார், கூட்டணி குறித்து ஏதாவது ஜாடை மாடையாகவாவது சொல்கிறாரா? இந்தத் தொகுதியில் அவர் நிற்கிறாரா? அல் லது வேறு யாரையும் நிறுத்தப் போகிறாரா? என்று எந்த ஊரிலாவது அவர் பேசும் போது செய்தி கசியாதா? என காதுகளைத் தீட்டிக் கொண்டும், வீடியோ கேமராக்களைச் சுமந்துகொண்டும் பல சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் ஆவ லோடு வந்துகொண்டே இருந்தனர்.பாவம் அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சி யிருக்கும். 

தமது பேச்சில் அதிமுக-திமுக இரண்டும் மக்கள் விரோதச் சக்திகள் என சம மாகச் சாடினார். தமிழினத் துரோகம் இழைத்த காங்கிரசை தோலுரித்தார். அக் டோபர் 16 வீரபாண்டிய கட்டபொம்மன் புகழாஞ்சலி கூட்டத்திற்கு பல்லாயிரக் கணக்கில் புறப்பட்ட மக்களை ஊர் ஊராகத் தடுத்திட போலீசுக்கு உத்தரவிட்ட
தமிழக அரசை எச்சரித்தார். இயக்கத்தின் அடித்தளம் கற்கோட்டையாக விளங் குவதோடு எதிர்பாராத திசைகளில் இருந்தெல்லாம் மக்கள் நம்மை வரவேற்க முன்வருகிற அளவிற்கு நம் மீதான நம்பகத்தன்மை வளர்ந்திருக்கிறது என்ப தையே நான்கு நாள் பிரச்சாரப் பயணம் நமக்கு உணர்த்தியது.

தேர்தல் ஆணையரின் அறிவிப்புகளை தேர்தல் ஆணைய நடவடிக்கைகளை யும் அங்குலம் அங்குலமாகத் தோலுரித்துக் காட்டினார். விவசாயிகளின் வாழ்வு அடியோடு சீர்குலைந்து கிடப்பதை ஆதாரங்களுடன் பட்டியலிட்டார்.

விருதுநகர் மாவட்டத்தில் பதினான்குக்கும் மேற்பட்ட முறை கிராமப்புற சுற் றுப்பயணங்களை நம் தலைவர் வைகோ மேற்கொண்டுள்ளார் என்ற போதி லும், எல்லா சமூக மக்களும்,குழந்தைகளும் இன்முகம் காட்டி எப்போதும் இல்லாத எழுச்சியோடு நம் தலைவர் வைகோ அவர்களை உள்ளத்தின் அடித் தளத்தில் இருந்து வாழ்த்தொலி எழுப்பி வரவேற்றுச் சிறப்பித்த மிகப்பெரிய வெற்றிப் பயணமாக விருதுநகர் மாவட்டத் தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணம்
அமைந்தது. மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.சண்முகசுந்தரம் அவர்கள் வழிகாட் டுதலில், அருப்புக்கோட்டை ஒன்றியச் சுற்றுப்பயணத்தை ஒன்றியச் செயலா ளர் சீனிவாசன் அமைத்திருந்தார்.

அருப்புக்கோட்டை நகரச் செயலாளரும் நகர்மன்ற உறுப்பினருமான மணி வண்ணன், காரியாபட்டி ஒன்றியச் செயலாளர் கேசியர் இராமசாமி,பொதுக் குழு உறுப்பினர் பந்தல்குடி மாரியப்பன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நாகராசன், ஒன்றியக் கழக,கிளைக்கழக நிர்வாகிகளும், சாத்தூர் கிழக்கு ஒன் றிய சுற்றுப் பயணத்தை,சாத்தூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் பாலகிருஷ் ணன், சாத்தூர் நகர செயலாளர் தங்கவேல், ஒன்றிய துணைச் செயளலார் சிறு குளம் சுப்புராஜ், ஒன்றிய அவைத் தலைவர் முத்தையா, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் வேல்முருகன் உள்ளிட்ட ஒன்றிய கிளைக்கழக நிர்வாகி களும்,வெம்பக்கோட்டை மேற்கு-கிழக்கு ஒன்றிய பிரச்சாரப் பயணத்தை மேற்கு ஒன்றியச் செயலாளர் இரவிசங்கர்,கிழக்கு ஒன்றியச் செயலாளர் சிங்
கம் என்ற வீராசாமி, முன்னாள் ஒன்றியச் செயலாளர் முனியசாமி, ஜெயக் குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாரிமுருகன், மாவட்ட
தொண்டர் அணி துணை அமைப்பாளர் குருவையா, மாவட்ட விவசாய அணி
துணை அமைப்பாளர் அ.கார்த்திகேய பிரபு, மாணவர் அணி துரைப்பாண்டி,
ஒன்றிய துணைச் செயலாளர் முனியாண்டி உள்ளிட்ட ஒன்றிய,கிளைக்கழகச் செயலாளர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

பிரச்சாரப் பயணத்தில் மாவட்டக் கழகச் செயலாளர் ஆர்.எம்.சண்முகசுந்தரம்,
அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் சிப்பிப்பாறை இரவிச்சந்திரன், முன் னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.வரதராஜன், ஆர்.ஞானதாஸ், மாநில
மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், விருதுநகர் மாவட்ட நிர் வாகிகள் அவைத் தலைவர் -வெ.நாராயணசாமி, பொருளாளர்-விநாயக மூர்த்தி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் குமரேசன், சூலக்கரை இலட்சும ணன், செயற்குழு உறுப்பினர்-கம்மாபட்டி இரவிச்சந்திரன், தீர்மானக்குழு உறுப் பினர்-தாமோதரக் கண்ணன், சட்டத்துறைத் துணைச் செயலாளர் வேல்முரு கன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் சேகர், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அ.அ.மதிய ழகன்,திருத்தங்கல் நகர செயலாளர் சேதுராமன், சிவகாசி நகர செயலாளர்
வே.பாண்டியன், இராசை நகர செயலாளர் வி.எஸ்.இராஜா, சிவகாசி வடக்கு ஒன்றியச் செயலாளர் செல்வராஜ், மத்திய ஒன்றியச் செயலாளர் சுந்தரராசன், மாநில தேர்தல் பணித் துணைச் செயலாளர்கள் கேசவநாராயணன், சுதா பால சுப்பிரமணியன், திருவில்லிபுத்தூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் தொம்பக் குளம் நேரு, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆரோக்கியராஜ்,ஞானகுரு, திருவேங் கடம் பேரூராட்சித் தலைவர் சீனிவாசன், மாவட்டப் பொறியாளர் அணி சிவசுப் பிரமணியன்,குருவிகுளம் ஒன்றியச் செயலாளர் சுந்தரராசன், முன்னாள் ஒன் றியப் பெருந்தலைவர் க.பாலசுப்பிரமணியன், கரிசல்குளம் ஊராட்சிமன்றத் தலைவர் போலப்பன், மாநிலப் பேச்சாளர்கள் வாகை முத்தழகன், எரிமலை வரதன்,கருப்பசாமி பாண்டியன், மாநில தொண்டர் அணித் துணைச் செயலா ளர் முத்தையா, முனியராஜ், தூத்துக்குடி மாவட்டத் தொண்டர் அமைப்பாளர்
பால்ராஜ், தேனி மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் கமலக் கண்ணன், முதல் நாள் பொதுக்கூட்ட நிகழ்வில், டாக்டர் சரவணன், நிறைவு நாள் பிரச் சாரப் பயணத்தில் மாநில தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாஸ்கர சேதுபதி, சேலம் அசோகன், தர்மபுரி ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட கழக முன்னணியினர் 25 க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்து கலந்துகொண்டனர்.

கட்டுரையாளர் :- தி.மு .இராசேந்திரன்

No comments:

Post a Comment