Sunday, November 17, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 34

நாடாளுமன்றத்தில் தலைவர் வைகோ அவர்கள் 1978 ஆவது ஆண்டிலிருந்து
2002 ஆம் ஆண்டு வரையில் ஆற்றிய பணிகளையும், தமிழ்நாட்டிற்காக எழுப் பிய உரிமைக் குரல்களையும் ஆவணப்படுத்தும் இந்தக்கட்டுரைத் தொடர் நிறைவு கட்டத்தை எட்டி இருக்கின்ற பொழுது, தலைவர் வைகோவின் மிகமிக முக்கியமான நாடாளுமன்றக்கோரிக்கை குறித்து பதிவு செய்வது இன்றியமை யாததாகும்.

ஆம்! சேதுக்கால்வாய்த் திட்டம் பற்றிதான் குறிப்பிடுகிறோம்.தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் சேதுக்கால்வாய்த் திட்டம், பேசப்பட்டது மறுமலர்ச்சி தி.மு .க. உருவானதற்கு பின்பு தான் அதிகம்.

தமிழ்நாடு முழுவதும் சேதுக்கால்வாய்த் திட்டம் என்றால் என்ன? அது எவ் வா று தமிழகத்திற்கு வளம் சேர்க்கும் என்று 1994 ஏப்ரல் 16 எழுச்சிப் பேரணியில்
வரலாற்றுச் சிறப்புமிக்க பிரமாண்ட பொதுக்கூட்டம் மெரினா கடற்கரையில்
நடந்தபோது, தலைவர் வைகோ எடுத்துக்காட்டினார். நான்கே ஆண்டுகளில் அதே கடற்கரையில் 1998 செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, மறுமலர்ச்சிப் பேரணி பொதுக்கூட்டத்தில் இந்தியாவின் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பேயி அவர்களை சேதுக்கால்வாய்த் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற் றும் என்று பிரகடனம் வெளியிடச் செய்தார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் செயல் திட்டங்களில் ஒன்றாக
சிறப்பிடம் பெற்றிருந்த சேதுக்கால்வாய்த் திட்டத்திற்காக 1981 ஆம் ஆண்டி லேயே முதன் முதலாக நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்த வரலாறு
வைகோவுக்கு உண்டு. எனவேதான் இத்திட்டத்தை நிறைவேற்ற இடையறாது குரல் கொடுத்து வந்தார்.முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தலைவர் வைகோ சேதுக்கால்வாய்த் திட்டத்திற்காக டெல்லி தர்பார் மண்டபத்தில் முழங்கிய போது,வெள்ளித் திரை நட்சத்திரமாக உலாவந்த இன்றைய ஜெயலலிதாவுக்கு
அவை பற்றி தெரியவோ, புரியவோ வாய்ப்பு இல்லை. அதனால்தான் இராமர் பாலம், தேசியச் சின்னம் என்றெல்லாம் இன்று பேசுகிறார்.


நாடாளுமன்றத்தில் பலமுறை சேதுக் கால்வாய்த் திட்டத்திற்காக தலைவர்
வைகோ பேசி இருந்தாலும், முதல் முதலில் இத்திட்டத்திற்காக அவர் 1981
ஆம் ஆண்டில் மாநிலங்களவையில் கோரிக்கை எழுப்பியதை நாம் அறிய
வேண்டும்.

1981 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் நாள், மாநிலங்களவையில் நிதி ஒதுக்கீட்டு
மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று மாநிலங்களவை தி.மு.க.கொறடா
வைகோ அவர்கள் ஆற்றிய உரை:-

தமிழ் நாட்டின் கனவுத் திட்டம்


“தமிழ் நாட்டின் நெடுங்காலக் கோரிக்கையும் தமிழர்களின் வெகுகால ஆசைக் கனவுமாக இருந்துவருகிற சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைக் குறித்து விரிவான விளக்கத்தை மத்திய அரசாங்கத்தின் உடனடி கவனத்திற்கு இந்த விவாதத்தின் மூலம் தருவது எனது தலையாய கடமை ஆகும்.

இந்து மகாசமுத்திரத்தில் உருவாகி வரும் வல்லரசுகளின் ஆதிக்கப்போட்டி குறித்து நாம் ஆழ்ந்த கவனமும் கவலையும் கொள்ளக்கூடிய காலகட்டத்தில்
இருக்கிறோம்.

இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள நமது துறைமுகங்களை வலி மைப் படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தினை அனைவரும் உணர்ந்துள் ளோம். கிழக்குக் கடற்கரைத் துறை முகங்களில் பல்வேறு விதமான காரணங் களால் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாகத் திகழ்வதற்குரிய வாய்ப்புகளை தூத்துக்குடி துறைமுகம் பெற்றுள்ளது.

ஆதாரங்களைக் கொண்டு வலியுறுத்துகிறேன்


இங்கு பழைய துறைமுகமும்,புதிய துறைமுகமும் இணைக்கப்பட்டதில் இருந் து கப்பல் போக்குவரத்தில் பிரமிக்கத்தக்க வளர்ச்சியை தூத்துக்குடி துறை முகம் பெற்று வருகிறது. கிழக்காசிய நாடுகளிலேயே மிகவும் முக்கியமான
துறைமுகமாக இதனை உருவாக்க வேண்டு வதற்கு ஆற்ற வேண்டிய முதல்
வேலை சேதுக் கால்வாய்த் திட்டத்தை செயல் படுத்துவதே ஆகும் என்பதை
பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வலியுறுத்துகிறேன்.

துரதிருஷ்ட வசமாக கடந்த ஆண்டில் சேதுக் கால்வாய்த் திட்டத்தைச் செயல் படுத்து வதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என மத்திய அரசு அறிவித்தது. நல்ல வேளையாக மீண்டும் மறுபரிசீலனை செய்ய இருப்பதாக மத்திய அரசு மறுபடியும் ஒரு செய்தியை வெளியிட்டது ஓரளவு ஆறுதல் தருகிறது என்றா லும், பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் இருந்தே இந்தத் திட்டம் எவ்வளவு முக்கி யத் தேவை என்பதை பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ள பின்னணியை மத் திய அரசு சீர்தூக்கிப் பார்த்து சாதகமான முடிவெடுத்து திட்டத்தை செயல்படுத் த முன் வருகிற நாள்தான் தமிழ்நாட்டுக்கு மகிழ்ச்சி வழங்கும் நாளாக அமை யும்.” 

ஆய்வு அறிக்கை


தூத்துக்குடி துறைமுகத் திட்டத்தின் தலைமை நிர்வாகியாகவும் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிற கோயில்பிள்ளை, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் குறித்து மிக விரிவான விளக்கம் செறிந்த ஓர் ஆய்வு அறிக்கையினை மத்திய அரசாங்கத்திற்குச் சமர்ப்பித்து இருக்கிறார். அந்த அறிக்கையில் இத்திட்டத்திற்காக மேற் கொள் ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளைப் பற்றிய விபரங்களைத் தந்திருக்கிறார்.

வெள்ளையர் துரைத்தனத்தின் போது இத்திட்டம் குறித்து எத்தனை ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டன என்பதை அறிந்தால் இம்மன்றத்திலுள்ள நீங்கள் அனை வரும் ஆச்சரியத்துக்கு உள்ளாவீர்கள் 1860 ஆம் ஆண்டிற்கும் 1922 ஆம் ஆண் டிற்கும் இடையில் ஒன்பது ஆய்வுகள் நடத்தப் பட்டுள்ளன.
மன்னார் வளை குடாவையும், பால்கன் கடலையும் இணைக்க ராமேஸ்வரம் மார்க்கமாக கப் பல் கால்வாய் அமைக்கத் திட்டமிட்டனர்.

1860 ஆம் ஆண்டில் கமாண்டர் டெய்லர் தந்த அறிக்கை; 1861 ஆம் ஆண்டில்
டவுன்காட் தந்த அறிக்கை; 1862 ஆம் ஆண்டில் பிரிட்டீஷ் பாராளுமன்றக் குழு
தந்த அறிக்கை; 1862 ஆம் ஆண்டிலேயே வில்லியம் டென்னிசன் தந்த அறிக் கை,1871 ஆம் ஆண்டில் ஸ்டாட்டர்ட் தந்த அறிக்கை; 1872 ஆம் ஆண்டில் ராபர்ட்சன் தந்த அறிக்கை; 1884 ஆம் ஆண்டில் ஜான்கோட் தந்த அறிக்கை;
1903 ஆம் ஆண்டில் தென் இந்திய இரயில்வே பொறியாளர் தந்த அறிக்கை;
1922 ஆம் ஆண்டில் ராபர்ட் பிரிஸ்டோ தந்த அறிக்கை;

பிரிட்டீஷ் ஆட்சியின் போதே இப்படி ஒன்பது ஆய்வு அறிக்கைகள் தரப்பட்டி ருக் கின்றன. அதன்பின் இந்தியா விடுதலை பெற்றதற்குப் பிறகு இரண்டு ஆய்வு அறிக்கைகள் தரப்பட்டு இருக்கின்றன.

இத்திட்டத்தின் ஒருங்கிணைந்த இரு கூறுகள்

1955 ஆம் ஆண்டில் சேது சமுத்திரத் திட்டம் கமிட்டியை சர்.ஏ.இராமசாமி முத லியார் தலைமையில் இந்திய அரசு அமைத்தது. அந்தக்குழு சாங்கோ பாங்க மான ஆய்வு நடத்தி 1956 ஆம் ஆண்டில் தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப் பித்தது.

அந்த அறிக்கையில் மிகவும் வலியுறுத்தப்பட்ட அம்சம் என்ன வென்றால், “தூத்துக்குடி துறைமுகத் திட்டமும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டமும் ஒன்றுக்கொன்று இணைந்தவை என்றும், இரண்டுமே ஒரே திட்டத்தின் ஒருங் கிணைந்த இரு கூறுகளாகக் கருதப்பட்டு இரண்டையும் ஒருசேர, ஒரே சமயத் தில் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலேயே முடிக்க வேண்டும என்பதா கும்.

இராமசாமி முதலியார் கமிட்டியின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு 1963 செப்டம்பர் 12 ஆம் நாள் மத்திய அமைச்சரவை ஒரு முக்கியமான முடிவை
எடுத்தது. 1963 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே தூத்துக்குடி துறைமுகத் திட் டத் தினை செயல்படுத்தவும், அதற்குத் தேவையான மேல் ஆய்வுகளை நடத் திக் கொள்ளவும் மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்ட காரணத்தால், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தையும் மேலும் ஆய்வு நடத்தி நிறைவேற்ற முடிவு செய்து 4ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் முன்கூட்டி எடுத்துக்கொள்ள வேண்டிய வேலைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.அம்முடிவின் அடிப்படை யில் மத்திய அரசாங்கத்தின் கப்பல் போக்குவரத்து அமைச்சரின் செயலாள ராக அப்போதிருந்த டாக்டர் நாகேந்திரசிங் தலைமையில் ஓர் உயர்மட்டக்குழு 1964 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.சேதுக்கால்வாய் திட்டம் குறித்த முன் னைய அறிக்கைகள் அனைத்தையும் ஆய்வு செய்து மிக விரிவான நுணுக்க விவரங்கள் அனைத்தும் அடங்கிய மதிப்பீட்டையும் தயார் செய்து 1968 ஆம் ஆண்டில் அந்தக் குழு அரசுக்குத் தந்தது.

கிடப்பில் போடப்பட்டன!

மிகுந்த வேதனை கவிந்த உள்ளத்தோடு உரைக்கிறேன்.இத்தனை ஆய்வு அறிக்கைகளும், மதிப்பீடுகளும் கிடப்பில் போடப்பட்டன. 1980 ஆம் ஆண்டு வரை எந்த முன்னேற்றமும் ஏற்பட வழியில்லை. 1980 இல் தமிழ்நாட்டுக்கு
பெருத்த ஏமாற்றத்தைத் தரும் வகையில் “சேது சமுத்திரக் கால்வாய்த் திட் டம்- பொருளாதார ரீதியில் லாபகரமானதாக இல்லை - எனவே நிறைவேற் றும் சாத்தியமில்லை” என்று மத்திய அரசு அறிவித்தது.

1968 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கான செலவு 37.46 கோடி ரூபாயாகும் என
மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போது (1981) 110 கோடி ரூபாய்
செலவாகும் என மதிப்பிட்டுள்ளனர்.மூன்று மடங்கு அதிகமாகி உள்ளது உண் மைதான். ஆனால், 110 கோடி ரூபாய் முதலீட்டையும் வட்டியுடன் அசலையும் சேர்த்து 28 ஆண்டு காலத்தில் இத்திட்டம் அரசுக்கு வருமானமாக ஈட்டித் தந்து விடும் என்று கோயில்பிள்ளை அறிக்கை கணக்கிட்டு சுட்டிக்காட்டியிருப் பதைத் தான் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால்,கிழக்குக் கடலில் செல்லும கப்பல்கள்
இலங்கைத் தீவை சுற்றிச் செல்லவேண்டிய நிலையும், வீண் செலவும், தவிர்க் கப்பட்டு நாட்டின் மொத்தப் பொருளாதாரத்தையும் வளப்படுத்த ஏதுவாகும் என்பதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.” எனவே மத்திய அரசு தொலை நோக்குக் கண்ணோட்டத்துடன் இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை நுட்பமாக பரிசீலனை செய்து அனுமதி தர வேண்டும் என மீண்டும் அழுத்தமாக வலியு றுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

பாரதியின் கனவு

இந்த சேதுக்கால்வாய்த் திட்டத்தை வேறொரு வடிவத்தில் கனவு கண்டு பாடி ய கவிஞன்தான் மாபெரும் தேசிய விடுதலைக் கவி சுப்பிரமணிய பாரதியார்
ஆவார். தமிழ்நாட்டில் பிறந்து இந்திய விடுதலை வேள்விக் கனலைத் தன்
கவிதைகளால் வார்த்த கீர்த்திமிக்க கவிஞன் பாரதி ஆவார். அக்கவிஞரின்
நூற்றாண்டு விழாவை அடுத்த ஆண்டு கொண்டாட இருக்கிறோம். அக் கவிஞ னின் நினைவைப் போற்றுகிற வகையில் “சேது சமுத்திரத் திட்டத்தை நிறை வேற்றி இராமேஸ்வரத்தில் சிறிய துறைமுகம் நிறுவி அதற்கு பாரதியின்
பெயரைச் சூட்ட” மத்திய அரசு முன்வர வேண்டும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் பாரதியின் பெருமை குறித்துக் கூற விரும்புகிறேன்.

பாரதிக்கு சிறப்பு செய்க!

கங்கை நதி தீரத்தோடு, காவிரிச் சமவெளி வணிகத் தொடர்புகள் வளர்ப்பது குறித்து கவிதை பாடினார் பாரதி. சோவியத் ரஷ்யாவின் மாபெரும் அக்டோபர் புரட்சியின் மேன்மையை கீர்த்தனையாக்கினான்; ஐரோப்பிய தேசங்களின் கலாச்சார இயக்கங்கள் இத்தாலியின் எழுச்சி-பெல்ஜியத்தின் முழக்கம் எல் லாம் அவனது கவிதைகள் ஆயின.

அவனது கவிதைகள் அடிமை இந்தியாவின் விடுதலை ஆவேசத்தை உணர்ச்சி பூர்வமாக வெளியிட்டன.அவனது பாடல்களில் ஒன்றை அவன் வடித்த தமிழ் மொழியிலேயே இங்கு மேற்கோள்காட்ட விரும்புகிறேன்.

“இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பட்டாலும்;
பதந்திரு இரண்டும் மாறி
பழி மிகுந்து இழிவுற்றாலும்;
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தென்னை வருத்திட்டாலும்
சுதந்திர தேவி நின்னைத்
தொழுதிடல் மறக்கிலேனே!”

அதன் அர்த்தம் இதுதான் - ‘சிறைக் கொடுமைகள் என்னைச் சூழட்டும் -சொத்து சுகம் இழந்து பழி வந்து சேரட்டும் -அல்லல்கள் கோடி என்னைத் தாக்கட்டும் - நான் கவலைப்படேன்;சுதந்திர தேவியைத் தொழுது வணங்குவதை மறக்க மாட்டேன்’ என்ற அக்கவிஞனின் நினைவைக் கெளரவிக்கும் வகையில் மேற்கு வங்க மக்கள் கல்கத்தாவில் பாரதி சிலை நிறுவ இருக்கிறார்கள்.

பல்வேறு மொழிகளில் பாண்டியத்தியம் பெற்ற பாரதிக்கு மரியாதை செய்யும்
வகையில் டில்லியில் பாரதி பெயரால் ஓர் பல்கலைக் கழகம் துவக்க வேண் டும்.பாரதியின் உருவம் பொறித்த சிறப்புத் தபால் தலையை அவனது நூற் றாண்டு விழாவையொட்டி மத்திய அரசு வெளியிட்டு அக்கவிஞனின் சுதந்திர
வேட்கையைப் போற்றிடவும் தமிழர்களை மகிழ்விக்கவும் மத்திய அரசு முன் வர வேண்டும்.”

சேதுக்கால்வாய்த் திட்டத்திற்கான முதல் குரலை மாநிலங்களவையில் ஒலித்த தலைவர் வைகோ-

சிங்களத் தீவினுக்கோர் பாலம்
அமைப்போம்!
சேதுவை மீதிருத்தி வீதி
சமைப்போம்!

என்று பாடிய மகா கவி பாரதியாருக்கும் சிறப்பு செய்ய வேண்டும் என்று
வலியுறுத்தினார்.

சேது சமுத்திரத் திட்டம் வைகோவின் நெஞ்சில் என்றும் நிழலாடிய காரணத் தால் தான் பல சமயங்களில் திரும்பத் திரும்ப இத்திட்டம் நிறைவேற வேண்டி யதன் அவசியத்தை நாடாளு மன்றத்தில் வலியுறுத்திக் கொண்டே இருந்தார்.

மீண்டும் 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 இல் மாநிலங்களவையில் நிதி ஒதுக்கீடு
மசோதா மீதான விவாதத்திலும் சேதுசமுத்திரத் திட்டம் குறித்து தலைவர்
வைகோ எடுத்து உரைத்தார். அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

“இந்திய நாடு தனது தீபகற்பத்தைச் சுற்றி தனது ஆதிபத்தியத்திற்கு உட்பட்ட
கடலிலேயே தனது கப்பல்களைச் செலுத்துவதற்கு ஏற்ற கடல் பாதை தற் போது கிடையாது. மேலைக் கடற்கரையிலிருந்து கீழைக் கடற்கரை செல்ல வேண்டுமெனினும் அல்லது கிழக்கிலிருந்து மேற்கே செல்ல வேண்டுமெனி னும் இலங்கையைச் சுற்றித்தான் செல்ல வேண்டும்.

இராமசாமி முதலியார் குழு

நமது கடல் பிராந்தியத்திற்குள்ளேயே கலங்கள் செல்லுவதற்கான கடற்படை யின் அவசியத்தை உணர்ந்த இந்திய அரசாங்கம் 1954 டிசம்பரில் சர்.ஏ.இராம சாமி முதலியார் தலைமையில் சேது சமுத்திரத் திட்டக் குழுவை அமைத்தது. ஆர்.ஏ.கோபால சாமி அய்யங்கார் இந்தக் குழுவின் செயலாளராகப் பணியாற் றினார்.இராமசாமி முதலியார் குழு இந்தத்திட்டத்திற்கான சாத்தியக்கூறுகளை
திட்டம் நிறைவேற்றப்பட்டால் விளையும் பொருளாதார நலன்களை மிக
நுணுக்கமாக ஆய்வு நடத்தியது.இந்தத் திட்டனத்தினால் எவ்வளவு தூரம் கடல்
பயணம் மிச்சமாகும் என்று இராமசாமி முதலியார் குழு தெரிவித்ததை அப்படி யே மேற்கோள் காட்டுகிறேன்.

பயணமும் பயனும்

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு இலங்கையைச் சுற்றிக்கொண்டு கடல்
மார்க்கமாக கப்பல் பயணம் செய்யும் தூரம் 750 மைல்கள் ஆகும். ஆனால்
சேது சமுத்திரக் கால்வாய் வெட்டப்பட்டால், தூத்துக்குடிக்கும்-சென்னைக்கும் இடையே உள்ள கப்பல் பயணத்தின் தூரம் 314 மைல்களாகும்.எனவே 436மைல் கள் அல்லது 58 சதவிகிதப் பயணம் மிச்சமாகிறது.அதேபோல, கொச்சியிலிருந் து தூத்துக்குடி வழியாக சேது சமுத்திரக் கால்வாயில் சென்னைக்கு கப்பல்
பயணம் செய்வதில் 44 சதவிகித தூரம் மிச்சமாகிறது. அதேபோல் தூத்துக்குடி யிலிருந்து கல்கத்தா செல்லுவதற்கு 26 சதவிகித தூரம் மிச்சமாகிறது. பம்பா யிலிருந்து கல்கத்தா செல்லுவதற்கு தூத்துக்குடி வழியாக பயண தூரத்தைக் கணக்கிட்டால் 16 சதவிகிதம் மிச்சமாகிறது. பயண நேரத்தில் எவ்வளவு மிச்சப் படுத்தலாம் என்பதையும் குழு அறிக்கை விவரம் தருகிறது.”

பற்றாக்குறைக்குப் பரிகாரம்

“இந்தத் திட்டத்தின் அவசியத்திற்கான காரணங்கள் முன்னிலும் அதிகமாக
வலுவடைந்துள்ளன. 1982 ஆம் ஆண்டின் பொருளாதாரச் சூழல் 1955 ஆம் ஆண் டிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. எரிபொருள் பற்றாக்குறை, எண்ணெய் பற்றாக்குறை, இந்தியாவின் பொருளாதாரத்தை ஆட்டிப்படைக்கிற பிரச்சினை களாகும்.

எண்ணெய் இறக்குமதிக்கு மட்டுமே நமது அந்நியச் செலாவணி பெருமளவில்
விரயமாகிறது. நமது கப்பல்கள் கடலில் பயணம் செல்லும் தூரம் சேது சமுத் திரக் கால்வாயின் மூலம் குறையுமானால் எவ்வளவு எரிபொருள் மீதமாகும்;
எவ்வளவு எண்ணெய் செலவு குறையும் என்பதை இந்திய அரசு எண்ணிப்பார்க் க வேண்டும். ஏறத்தாழ ஆண்டுக்கு 72 ஆயிரம் டன் எண்ணெய் இந்திய அரசுக்கு
மிச்சமாகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி துறைமுகத் திட்டம் நிறைவேற்றப்பட்டு எதிர்பார்த்ததை விட மிக வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தூத்துக்குடியிலே அனல்மின் திட்டதிற்குத் தேவையான 18இலட்சம் டன் நிலக் கரி கல்கத்தாவில் இருந்து கப்பல் மூலம் வரவேண்டி உள்ளது.தூத்துக்குடியில் பெரிய அளிவிலான அனல்மின்திட்டத்தை அரசு தொடங்கும் போது மேலும 15 இலட்சம் டன் நிலக்கரி தேவைப்படலாம்.இவ்வளவு நிலக்கரியும் கப்பல் மூலம் இலங்கையைச் சுற்றிக்கொண்டுதான் தூத்துக்குடிக்கு வந்து சேரவேண் டும்.சேதுக்கால்வாய்த் திட்டம் எவ்வளவு அவசியம் என்பதை இனி யாவரும்
மறுக்க முடியாது.”

இந்தியாவின் இராணுவ இலாபம்

மேலே கூறிய பொருளாதாரக்காரணங்கள் மட்டுமின்றி இராணுவ ரீதியாகவும் இத்திட்டம் அவசியமாகும்.இந்து மகா சமுத்திரத்தில் வல்லரசுகளின் ஆதிக் கப்போட்டி வளர்ந்து வருகிறது.இலங்கை திரிகோணமலையில் அமெரிக்கக் கடற்படைத் தளம் சில வசதிகளைப் பெற இருக்கிறது.இத்தகைய சூழ்நிலை யில் நமது கடல் ஆதிக்கத்திற்கு உள்ளேயே கப்பல்கள் செல்வது எவ்வளவு பாதுகாப்பானது என்பதை இராணுவக்கண்ணோட்டத்தோடு பார்த்தால் புரியும்.
சேதுக்கால்வாய்த் திட்டம் அமைந்தால் வங்காள வளைகுடாவில் உள்ள பிற நாட்டுத் துறைமுகங்கள் அனைத்தும் தூத்துக்குடி துறைமுகத்தோடு நேரடி யாக இணைக்கப்பட்டுவிடும்.

தென்கிழக்கு ஆசியாவில் தூத்துக்குடிதுறைமுகம் சிங்கப்பூர் துறைமுகத்திற்கு
நிகரானதோர் முக்கியத்துவம் பெறும்.எனவே இனியும் தாமதம் செய்யாமல்
மத்திய அரசாங்கம் நிபுணர் குழுவின் அறிக்கையை உடனே பெற்று ஏற்கனவே
சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் சாதகமான முடிவெடுத்து
சேதுசமுத்திரத் திட்டத்தைச் செயல் படுத்துவதற்கான அங்கீகாரத்தை மத்திய
அரசு வழங்கி தமிழர்களின் நெடுநாள் கனவை நனவாக்க வற்புறுத்துகிறேன்.”

1998 இல் வாஜ்பாய் தலைமையிலான அரசு டில்லியில் அமைந்தபோது, 06.07. 1998 இல் சேதுக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி வைகோ மக்களவையில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு:

“சேதுக்கால்வாய் அமைக்கப்பட வேண்டுமென்கின்ற கோரிக்கை கடந்த 135 ஆண்டுகளுக்கும் மேலாக எழுப்பப்பட்டு வருகின்றது. மத்திய, மாநில அரசு களால் நியமிக்கப்பட்ட பல்வேறு குழுக்களும் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று பரிந்துரைத்தன. 1968 ஆம் ஆண்டில் 37.34 கோடி ரூபாய் மதிப் பீட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கக்கூடிய இத்திட்டத்தின் மதிப்பீடு 1984 ஆம்
ஆண்டில் 282 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்தது. இன்று மேலும அதிகமாக
இருக்கக்கூடும்.”

“தற்போது தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி
ஹால்தியா துறைமுகத்திலிருந்து மிகச் சிரமமான சுற்று வழியில் கொண்டு
செல்லப்படுகிறது. சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப் படுமா னால், இந்தியக் கப்பல் போக்குவரத்துக் கழகம் மட்டுமே ஆண்டு ஒன்றிற்கு ரூ.20 கோடி சேமிக்க இயலும்.இதன் மூலம் தமிழ்நாடு மின்வாரியம் மின் உற் பத்திக்கான செலவைக் குறைக்க முடியும். தூத்துக்குடி துறைமுகம் சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் மையமாக இருப்பதால் அமெரிக்காவிலிருந்து இந்தியாவின் கிழக்குக் கடற்கரைத் துறைமுகங் களுக்குத் தூத்துக்குடி வழி யாக சரக்குப் பெட்டகங்களை அனுப்பி வரும் கப்பல் போக்குவரத்து நிறுவனங் களும் சேதுக்கால்வாயைப் பயன்படுத்திக் கொள்ளும். இதன் மூலம் ஏராள மான அந்நியச் செலாவணி சேமிக்க முடியும்.

எனவே, ‘சேதுசமுத்திரக் கால்வாய்த்’திட்டத்தை இந்திய அரசு உடனே நிறை வேற்றித் தரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.”

வைகோ கோரிக்கையை ஏற்ற வாஜ்பாய்

1998 செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மறுமலர்ச்சிப் பேரணி
சென்னையில் நடைபெற்றபோது, அதில் இந்தியப் பிரதமர் வாஜ்பாய், காஷ்மீர்
முதல்வர் டாக்டர் பரூக் அப்துல்லா, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல்,
உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ்
பெர்னான்டஸ் ஆகிய தலைவர்கள் பங்கேற்றனர்.

திராவிட இயக்க அரசியல் சரித்திரத்தில் நமதுமேடையில் இந்தியாவின் தலை மை அமைச்சரும், மத்திய அமைச்சர்களும், மாநில முதல்வர்களும் பங்கேற் றுச் சிறப்பித்து, அறிஞர் அண்ணாவின் புகழை பேசச்செய்த வரலாற்றை தலை வர் வைகோ படைத்துக் காட்டினார். எல்லா வாய்ப்புகளும் இருந்தும் கலைஞர் கருணாநிதி செய்யத் தவறினார். ஆனால், தலைவர் வைகோ சாதனைகளைப் படைத்து புதிய சரித்திரம் எழுதினார். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பேரணி யில் பேசிய தலைவர் வைகோ, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறை வேற்ற வேண்டும் என்று வாஜ்பாய் அவர்களிடம் கோரிக்கை வைத்தார்.

பிரதமர் வாஜ்பாய் அவர்கள் உரையாற்றும் போது,“நம்முடைய வைகோ அவர் கள் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டுமென்று கோரிக் கை வைத்தார்கள். அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் நீண் டகாலமாக நானும் அக்கறை கொண்டிருக்கிறேன். ஆனால்,தொடர்ந்து பதவி யில் இருந்த காங்கிரஸ் அரசுகள் அந்தத் திட்டத்தைச்செயல்படுத்த முன்வராத காரணத்தால் இப்போது அந்தத் திட்டத்தின் செலவு மிக அதிகமாக உயர்ந்திருக் கின்றது.சிறப்பான இந்த வேளையில், அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழாவில் -இந்த மாபெரும் மக்கள் கடலுக்கு முன்னால் நான் அறிவிக் கிறேன் ‘சேது சமுத்திரத் திட்டத்தை’ இந்த அரசு நிறைவேற்றும்.

இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கு உங்களுடைய நல்ல ஒத்துழைப்பும் மிகவும் அவசியமாகும். சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல் படுத்துவதற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுகின்ற வகையில் மத்திய அரசு வெளியிடுகின்ற கடன் பத்திரங்களில் நீங்கள் பெருமளவில் முதலீடு செய்து இத்திட்டம் வெற்றி அடையச் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.”

இந்தியப் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை
அறிவிக்க காரணமான தலைவர் வைகோவை வரலாறு என்றென்றும் நினை வு கூர்ந்துகொண்டே இருக்கும்.

இதன் பின்னர் 1999 மார்ச் 16 இல்,மத்திய வரவு-செலவு திட்ட விவாதத்தில் பேசி ய வைகோ, சேதுக்கால்வாய்த் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வைகோவின் வேண்டுகோளை ஏற்ற மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா,
சேதுக்கால்வாய்த் திட்டம் பிரதமர் உறுதி கூறியவாறு நிறைவேற்ற நிதி ஒதுக் கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.

2002 மார்ச்சு 19 ஆம் நாள் மக்களவையில் நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய தலைவர் வைகோ, “நீங்கள் எதிர்காலப் பொரு ளாதாரச் செழுமைக்கு அடிப்படைக் கட்டுமான வசதிகளை வலிமைப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் ஒரு பெரிய திட் டத்தை நிறைவேற்றி யாக வேண்டும். அதுதான் சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டம்” என்று நிதியமைச்சர் யஷ்வந்த் சின்காவிடம் கோரிக்கை வைத்தார்.
மேலும், “சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில் மொத்தத் தமிழ்நாடு மட்டும்
அக்கறை கொண்டிருக்கவில்லை.ஐரோப்பியர் கூட இத்திட்டம் பற்றி ஆய்வு
நடத்தி உள்ளனர். சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அது சூயஸ், பனாமாக் கால்வாய்களைவிட மிக முக்கியமானதாக அமையும். உலகம் நெடுகிலுமிருந்து வரும் கலன்களெல்லாம் இந்தக் கால்வாய் மூலம் செல்லும். அவை கொழும்பிற்குப் போக வேண்டியதில்லை. சேது சமுத்திரக்
கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப் பட்டால் பயணத் தொலைவு கிழக்குக் கரைத் துறைமுகங்களுக்கும் மேற்குக் கரைத் துறைமுகங்களுக்கும் இடையே
குறையும். எரிபொருள் செலவு குறையும்.பாதுகாப்பு நோக்கிப் பார்த்தால் நமது
கலங்கள் நமது கால்வாய் மூலமே சென்று வரவும் முடியும்.

நான் இத்திட்டம் தொடர்பாக பிரதமர் வாஜ்பாய் அவர்களை அண்மையில் சந் தித்து உடனடியாக இத்திட்டத்தை நிறைவேற்றுமாறு கோரிக்கை வைத்த போது எனக்குக் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது. சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றும் வாக்குறுதிக்கு அரசு கடமைப்பட்டிருக்கிறது என்று என்னிடம் உறுதி கூறினார்” என்று பேசிய தலைவர் வைகோ, சேதுக்கால் வாய்த் திட்டத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று வற்புறுத்தினார்.

குறைந்தபட்ச செயல் திட்டத்தில்...

2004 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுற்று ஐக் கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்துள்ளது. 18.5.2004 இல் கூட்டணி கட்சிகளின் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது.

இக்கூட்டணியில் இடம் பெற்று, 4 எம்.பிக்களை மக்களவையில் பெற்றிருந்த மறுமலர்ச்சி தி.மு.க. மத் திய அமைச்சரவையில் சேராது என்று திட்டவட்ட மாக தலைவர் வைகோ அறிவித்துவிட்டு டெல்லி சென்றார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குறைந்தபட்ச செயல்திட்டம் குறித்து
விவாதிக்கப்பட்ட போது, கழகத்தின் சார்பில் 17 கோரிக்கைகள் அடங்கிய திட் டங்களை பிரதமர் பொறுப்பு ஏற்க இருந்த டாக்டர் மன்மோகன்சிங் அவர்க ளி டம் தலைவர் வைகோ அளித்தார். அதில், “இந்தியப் பொருளாதார வளர்ச்சி - தென் தமிழ்நாட்டின் வணிக வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பிரிட்டீஷ் அரசு
உருவாக்கிய சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற நடவடிக் கை எடுக்க வேண்டும்” என்று ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. மீண்டும் 22 ஆம் தேதி கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிரணாப் முகர்ஜி,
கூட்டம் முடிந்து புறப்படும் தருவாயில் தலைவர் வைகோவின் அருகில் வந்து
‘உங்களின் பிரதான கோரிக்கைகளான சேது சமுத்திரத் திட்டமும், நதிநீர்
இணைப்புத் திட்டமும் குறைந்த பட்ச செயல் திட்டத்தில் சேர்க்கப்பட்டு விட் டது’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துவிட்டுச் சென்றார்.

பிரதமர் மன்மோகன்சிங் வைகோவுக்கு பாராட்டு

2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் நாள், சென்னை ராஜா அண்ணாமலை புரத் தில், மேயர் இராமநாதன் மையத்தில், வேலூர் சிறையிலிருந்த தலைவர் வைகோ எழுதிக்குவித்த கடிதங்களின் தொகுப்பான ‘சிறையில் விரிந்த மடல் கள்’ நூல் ‘From The Portals of a Prision’ ஆங்கில நூல் வெளியீட்டு விழாவிற்கு பிரத மர் மன்மோகன்சிங் வருகை தந்து நூலினை வெளியிட்டுச் சிறப்பித்தார். அப் போது உரையாற்றிய பிரதமர், “வைகோவின் கனவுத் திட்டமான சேதுசமுத் திரத் திட்டம் இந்தப் பகுதியின் போக்குவரத்து அமைப்பிலே மிகப்பெரிய மாற் றத்தை ஏற்படுத்த இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு முன்பு 2005 ஜூலை 2 ஆம் நாள் சேதுசமுத்திரக்
கால்வாய்த் திட்டம் தொடக்கவிழா மதுரையில் நடைபெற்றது. இதில் பிரதமர்
மன்மோகன்சிங் பங்கேற்றார்.

மதுரையில் விழா முடிந்து புறப்பட்ட பிரதமரை தலைவர் வைகோ வழி அனுப் பிடச் சென்றபோது, பிரதமர் மன்மோகன்சிங் வைகோவிடம், “Vaiko it is a good day. Your dream has come true” என்று வாழ்த்துக்கூறிவிட்டுச் சென்றார்.

சேதுக்கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு 30 ஆண்டுகளாக இடைய றாது குரல் கொடுத்து வந்திருக்கும் தலைவர் வைகோ அவர்கள் வரலாற்றின்
பக்கங்களில் ‘சேதுசமுத்திரத் திட்டத்தின் நாயகனாக’ இடம்பெற்றுவிட்டதை
எவராலும் அழிக்க முடியாது.

தொடரும்.....

நன்றிகள் 

கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன்

வெளியீடு :- சங்கொலி

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 33

No comments:

Post a Comment