Monday, November 4, 2013

பொன்னியின் செல்வன் வைகோ திறனாய்வு -பாகம் 2

பொன்னியின் செல்வன் #வைகோ திறனாய்வு

துணிவும், நம்பிக்கையும்

நம் அய்யா வாண்டையார் அவர்களின் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. அதில், கண்ணன் தூது சென்றபோது விசுவரூபம் காட்டியபோதும், அரவக் கொடியோன் துரியோதனன் அஞ்சவில்லை என்று கூறினார். அப்போது 11 அக்ரோணி சேனைகள் இருந்தன, பீக்ஷ்மர் - கர்ணன் - தரோணர் - கிருபர் - அஸ் வத்தாமன் - பூரிஸ்ரவஸ் - பகத தத்தன் - படைகள் இருந்தன, இத்தனையும் இருந்தது. நெஞ்சில் துணிவும் நம்பிக்கையும் இருந்தது. ஆகவே, போர் முனை யிலே சந்திப்பதைப்பற்றிக் கலங்காமல் எதிர்கொள்வதாகச் சொன்னான். 11 அக்ரோணி சேனைகளும் மகாரதர்களும் பக்கத்தில் இருக்கிற போது, வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில், துரியோதனன் போருக்கு எழுந்தான்.

அர்ஜூனன் பக்கத்தில் கண்ணன் இருக்கிறான் என்ற தன்னம்பிக்கையோடு, அவனுடைய வீரத்தில் நம்பிக்கை கொண்டு பாண்டவர்கள் களத்திற்கு வந்த னர். ஆனால், பீக்ஷ்மர் , துரோணர், கர்ணன் ஆகியோர் வீழ்ந்ததற்குப்பிறகு, கடைசிகட்டத்தில் சல்லியன் சேனாதிபதியாகி அவனும் வீழ்ந்ததற்குப் பிறகு, மகாரதர்கள் எல்லாம் அழிக்கப்பட்டதற்குப்பிறகு, படைபரிவாரம் சேனைகள் அழிந்ததற்குப்பிறகு அனைத்தையும் யுத்த களத்தில் இழந்து, கெளரவர் படை கள் தோற்றனர். அவர்களின் தோல்விக்குக் காரணம், வீரத்தின் வெற்றியா? சூழ்ச்சியா? என்ற விளக்கங்களுக்கு உள்ளே செல்ல நான் விரும்பவில்லை.

ஒவ்வொரு மகாரதர்களும் கண்ணனின் சூழ்ச்சியால்தான் வீழ்த்தப்பட்டார்கள். ஒவ்வொரு சேனாதிபதியும் கண்ணனின் சூழ்ச்சியால்தான் வீழ்த்தப்பட்டார் கள். அனைத்தையும் இழந்து படுகாயமுற்று நீர்நிலைக்கு உள்ளே சென்று, துரி யோதனன் மோன நிலையில் தவம் இருக்கத் தொடங்கியபோது, அவன் மீண் டும் உரம் பெற்று வந்துவிடக்கூடாது என்று, கண்ணன் பாண்டவர்களை அவன் இருக்கும் இடத்துக்கு அழைத்துக்கொண்டு போகிறான். நீர்நிலைக்கு உள்ளே இருந்து, அவனை வெளியே வா என்று அழைக்கிறார்கள். ‘நான் களைத்துப் போய் இருக்கிறேன்’ என்கிறான் துரியோதனன்.

இழிவாகப் பேசுகிறார்கள். உங்களில் யார் ஒருவனோடும் சண்டை செய்யத் தயார் என்கிறான் துரியோதனன். பீமன், துரியோதனனோடு போருக்குச் செல் கிறான். கதாயுத யுத்தம் நடக்கிறது. களைத்துக் கயாம்பட்ட நிலையிலும், கதாயுத யுத்தத்தில் துரியோதனன் கை ஓங்குகிறது. இவருவரும் சமகாலத் தில் பாலராமனிடத்தில் கதாயுதப் பயிற்சி பெற்றவர்கள். நாபிக்குக் கீழே கதாயுதத்தால் அடிக்கக்கூடாது, இடுப்புக்குக் கீழே அடிக்கக்கூடாது என்பது போர்முறை.

சிரசில் அடிவாங்குகிறபோது பீமன் தடுமாறுகிறான். தலையில் அடிவாங்கு கிற போது துரியோதனனுக்குத் தடுமாற்றம் இல்லை. இந்தத் தடுமாற்றத்தின் போதுதான், கண்ணன் தெடையைத் தட்டிக் காண்பித்து, ‘தொடையில் அடித்து எலும்பை முறி’ என்பதுபோல சூசகமாகச் சொன்னதைப் புரிந்துகொண்டு,பீமன் தொடைமீது தாக்கினான். தொடை எலும்பு முறிந்து கீழே விழுந்து புரண்டான் துரியோதணன். கலப்பையோடு வந்த பலராமன் கோபித்தான். அதற்குப் பின் னர் உயிர்போகும் தறுவாயில், துரியோதணன் தலைமீது ஏறி பீமன் குதித்தான். மிகக் கோரமான காட்சி. தலைமீது கூத்து ஆடுகிறான் பீமன். அப்போது,மரணத் தின் வாசலில் நின்றுகொண்டு துரியோதணன் சொன்னான். அவனிடத்தில் பல தவறுகள் உண்டு, தவறுகள் செய்து இருக்கிறான். அதெல்லாம் போகட்டும்.

ஆனால், மரணத்தை அவன் சுத்த வீரனாகத் தழுவினான் என்பதற்கு அவன் சொன்ன வார்த்தைகள்தான் சான்று. கண்ணனைத்தான் அவன் ஏசினான். கண் ணனைத்தான் அவன் கடுமையாக நி்ந்தித்தான். ‘பீமா! நீ என் தலையில் ஏறி மிதிக்கிறாய். நான் வருத்தப்படவில்லை. இன்னும் சற்றுநேரத்தில் காக்கை களும் கழுகுகளும் கொத்தப்போகின்ற இந்தத் தலை மீது உன் பாதம்பட்டுத் துள்ளி ஆடுவதைப்பற்றி நான் கவலைப்படவில்லை’ என்கிறான். இங்கே அய்யா வாண்டையார் அவர்கள், துரியோதணனின் வீரத்தைப் பற்றிச் சொன் னவுடனே, அதைத்தான் நான் எண்ணிப்பார்த்தேன். அத்தகைய வீரம் அவனுக் கு இருந்தது.

வீர நாராயணம் ஏரி


கல்கி ஆசிரியர், மான உணர்வு கொண்ட , தலைசிறந்த வீரனைக் கதாநாயக னாகக் கொண்டு வருகிறார். பொன்னியின் செல்வன் தொடக்க அத்தியாயம், முதல் பாகம். ‘புது வெள்ளம்.’ காவிரி பொங்கிப் பெருகி வருகிற சோழர் பூமி அல்லவா? அதனால்தானே, ‘பொன்னியின் செல்வன்’ என்று இதற்குப் பெயர் சூட்டினார். ராஜராஜனின் பெயர்தானே அருள்மொழிவர்மன்! அவனைத்தானே, ‘பொன்னியின் செல்வன்’ என்று வைத்தார். ஆனால், பொன்னியின் செல்வ னின் ஐந்து பாகங்களையும் முழுமையாக ஆக்கிரமித்தவன் வல்லவராயன் வந்தியத்தேவன் தான்.

இயற்கை எழில் கொஞ்சிக் கிடக்கிற சோழ நாடுக்கு உள்ளே, கல்கி ஆசிரியர் நம்மை அழைத்து வருகிறார். வீர நாராயணம் ஏரியை விவரிக்கின்றார் கல்கி. ஒன்றைரக் காதம் தென்வடலாகவும், அரைக்காதம் கிழமேலாகவும் இருக்க கூடியது இந்த வீர நாராயணம் ஏரி. இதுதான் பின்னர் ‘வீராணம் ஏரி’ என்று ஆயிற்று.

தொடரும் ....

பொன்னியின் செல்வன் வைகோ திறனாய்வு -பாகம் 1

No comments:

Post a Comment