சங்கொலி தலையங்கம்
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதைக் கூட மக் கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், கடந்த மூன்று மாதங்களாக
வெங்காயத்தின் விலை ஆகாயத்தை நோக்கி பறந்துகொண்டேயிருப்பதுதான்
கவலைப்படச் செய்திருக்கிறது. இந்திய மக்களின் உணவு வகைகளில் மிகவும்
இன்றியமையாத பொருள் ‘வெங்காயம்’.நாடு முழுவதும் இதிலே ‘மட்டும்’ஒரு மைப்பாடு இருக்கிறது.
வெங்காயத்தின் விலை உயர்வுக்குக் காரணமாக மத்திய அரசு கூறுவது, வெங் காயம் உற்பத்தி குறைவு என்பதுதான்.வெங்காய உற்பத்தியில்முன்னணி மாநி லங்களான மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் மற்றும்
தமிழ்நாடு ஆகியவற்றிலிருந்து நாட்டின் தேவையான அளவுக்குஉற்பத்தி செய் யப்படவில்லை; என்று அரசு கூறுவதைப் பார்த்தால் மேலோட்டமாக சரியான
காரணம் போன்று தெரியும். ஆனால், உண்மை நிலையோ வேறு.
வெங்காயம் உற்பத்தி 7 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது. ஆனால், விலை யேற்றமோ 800 சதவீதம். பொருள் தேவைப்பாட்டிற்கும், அளிப்பிற்கும் இடை யில் உள்ள வித்தியாசத்திற்கு ஏற்ப, பொருட்களின் விலையில் ஏற்றம் அல் லது இறக்கம் ஏற்படும். ஆனால், வெங்காயத்திற்கு மட்டும் விதிவிலக்கு எப் படி ஏற்பட்டது?
கடந்த 2011-12 ஆம் நிதி ஆண்டில் 1.75 கோடி டன் வெங்காயம் உற்பத்தி செய்யப் பட்டது. இது 2012-13 ஆம் நிதி ஆண்டில் 6.85 சதவீதம் சரிவடைந்தது. 1.63 கோடி டன்னாக குறைந்தது. அதே நேரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெங்காயத் தின் விலை 200 சதவீதம் முதல் 800 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. ராக்கெட் வேகத்தில் வெங்காயத்தின் விலை உயர்ந்ததற்கு வெங்காய வர்த்தகர்களின் கூட்டுச்சதிதான் காரணம்.
வெங்காயச் சந்தையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தையான மகாராஷ் டிரா மாநிலம் லஸ்சன் காவ் சந்தையில் செப்டம்பரில் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ 55 ஆக இருந்தது. அக்டோபர் கடைசி வாரத்தில் ரூ 100 ஐ தாண் டிவிட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்த பெருமழையினால் கடந்த மாதம் சந்தைக்கு
வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் விலை ஏறத் தொடங்கியது. ஆந்திரா,
கர்நாடக மாநிலங்களிலிருந்து வெங்காய அறுவடை குறித்த காலத்தை தாண் டியதால், விலை உயர்ந்தது.
ஆனால், ஜூலை மாதத்திலிருந்தே வெங்காய உற்பத்தி மற்றும் சந்தைக்கு வரும் வெங்காய வரத்து பற்றிய நிலவரம் தெரிந்து கொண்டதால், வெங்காய வியாபாரிகள் கிடைக்கின்ற வெங்காயத்தை விவசாயிகளிடமிருந்து கொள் முதல் செய்து பதுக்கத் தொடங்கிவிட்டனர்.
ஆனால், மத்திய, மாநில அரசுகளின் அலட்சியம் காரணமாக வெங்காய வர்த் தர்களின் (வெங்காயக் கூட்டணியால் (டீniடிn ஊயசவநட) விலை விர் என்று ஏறத் தொடங்கியது. இது முழுக்க முழுக்க மத்திய அரசின் செயலற்ற தன்மை யால் ஏற்பட்ட விலை உயர்வு; செயற்கையான விலை ஏற்றத்தைத் தடுத்து நிறுத்தி, சந்தையைக் கட்டுக்குள் கொண்டுவர தவறிய மத்திய அரசு, தற்போது மக்களின் கோபம் எங்கே டிசம்பர் மாதம் நடைபெற இருக்கின்ற டெல்லி, ராஜ ஸ்தான், மத்தியப்பிரதேசம் போன்ற 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்த லில் எதிரொலிக்குமோ என்று பயந்து அவசர அறிவிப்புகளை வெளியிட்டுள் ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்து, விலை உயர் வை கட்டுப்படுத்தத் திட்டம் தயாராம். ஆனாலும், இன்னும் இரண்டு வாரங்கள்
கழித்துதான் வெங்காயம் விலை படிப்படியாக குறைவதற்கு வாய்ப்பு இருக்கிற தாம்.
மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 2010, டிசம்பர், 2011 ஜனவரி மாதங்க ளில் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ 100 அளவுக்கு அதிகரித்தது; அப் போதும் மகாராஷ்டிராவில் லஸ்சன் காவ், சந்தையில் விலை ரூ 40 ஆகத் தான் இருந்தது.ஆனால், சில்லரை விற்பனையில் நாடு முழுவதும் விலை ரூ 100 ஐ தாண்டியது.அப்போது இந்தியப் போட்டி ஆணையம் (Competition Commission of India) வெங்காய விலை உயர்வு குறித்து விசாரணை நடத்தியது. பெங்களூரு வில் உள்ள விவசாய வளர்ச்சி மற்றும் ஊரக மாற்று மையம் (Agricultural Develop
ment and Rural Transformation Center - ADRTC) மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது அந்த ஆய்வின் மூலம், வெங்காயத்தின் விலை உயர்வுக்குக் கார ணம் ‘வியாபாரிகளின் கூட்டணி’ (Traders Cartel) என்பதும், விவசாயிகளிடம் சொற்ப விலைக்கு வாங்கி வெங்காயம் பதுக்கப்பட்டு, கள்ளச் சந்தையின் மூலம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதும் தெரியவந்தது. தற்போது மத்திய அரசு விழிப்போடு இருந்திருந்தால் வெங்காய வியாபாரிகளின் கூட்ட ணியை உடைத்து,மக்கள் மீது சுமை ஏறவிடாமல் காப்பாற்றி இருக்க முடியும். ஆனால், 2010-2011 ஆம் ஆண்டுகளில் வெங்காயம் விலை உயர்விலிருந்து மத் திய அரசு பாடம் கற்றுக் கொண்டதாகவே தெரியவில்லை.
நிலைமை மோசமான கட்டத்திற்கு வந்துவிட்ட பிறகு மத்திய அரசு தற்போது
பாகிஸ்தான், சீனா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து வெங்காயத்தை
இறக்குமதி செய்வதற்குத் தீர்மானித்துள்ளது. வெங்காயம் உற்பத்தியில் முத லிடம் வகிக்கும் மகாராஷ்டிரா மாநில முதல்வர் பிரதிவிராஜ் சவானிடம், மத் திய உணவுத்துறை அமைச்சர் கே.வி.தாமஸ் தொடர்பு கொண்டு, லஸ்சன் காவ், வெங்காய சந்தை நிலவரத்தைக் கண்காணிக்குமாறு கோரி உள்ளார். மேலும் பதுக்கல்காரர்களிடம் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி னார்.
அக்டோபர் 23 ஆம் தேதி உணவுத்துறை அமைச்சர் கே.வி.தாமஸ், மத்திய வே ளாண்துறை அமைச்சர் சரத்பவாரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்பவார்,வெங்காயம் விலையேற் றத்தைக் குறைத்தே தீருவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.இதற்கான அதி ரடி நடவடிக்கைகள் துவங்க உத்தரவிடப்பட்டுள்ளன. அதன்படி வெளிநாடுகளி லிருந்து ஏராளமான அளவில் இறக்குமதி செய்ய அரசாங்கம் தயார் ஆகிவிட் டது. வெளிநாடுகளில் ஒரு குவிண்டால் வெங்காயத்தின் விலை ஐநூறு ரூபாய்தான் விற்கிறது. இந்தியாவில் 900 ரூபாய் வரை இருப்பதால் இறக்குமதி
செய்வதில் தவறு ஏதும் இருந்துவிட முடியாது. இன்னும் இரண்டு, மூன்று
வாரங்களுக்கு விலை உயர்வு இதே நிலையில்தான் இருக்கும்” என்று கூறி
உள்ளார்.
மேலும் வெங்காயம் விலை ஏற்றத்திற்கு காரணம் கூறிய சரத்பவார், “மகா ராஷ்டிராவில் நாசிக்கில் பெய்த அடைமழைதான். வெங்காயப்பயிர்கள் மழை யால் அழுகிவிட்டன. இரண்டு வாரத்தில், புதிய பயிர்கள் சாகுபடிக்கு வந்துவி டும். அப்போது நிலைமை மாறிவிடும்” என்றார்.
ஆனால், மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா,
“வெங்காய விலை ஏற்றத்திற்கு முழுக்க முழுக்க பதுக்கல்காரர்களே காரணம்.
வெங்காயத்தை பெருமளவில் பதுக்கி வைத்துவிட்டு, வெளிச்சந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளனர். இவர்கள் மீது கடும் நட வடிக்கையை மாநில அரசுகள் எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். மத்திய
அமைச்சர்கள் கூறும் முரண்பாடுகளான காரணங்களால் மக்களுக்கு எரிச்சல் தான் ஏற்படுகிறது.
வெங்காயம் உற்பத்தி குறைந்து வருவது குறித்து மத்திய, மாநில அரசுகள் கவ லைப்பட்டதாகவே தெரியவில்லை. தேவை அறிந்து வேளாண்மை பயிர் உற் பத்தியை அதிகரிக்க அரசுதான் விவசாயிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங் கிட வேண்டும்.வெங்காயம் உற்பத்தியை பொருத்தவரையில் ஒரு பருவத்தில் நல்ல விலைக்கு விற்கும் விவசாயிகள் மற்றொரு பருவத்தில் ‘அடிமாட்டு’ விலைக்கு விற்கும் நிலைக்குத் தள்ளப்படுவதால் நட்டமடைகின்றனர். கட்டு படியான விலையை விவசாயிகளுக்கு உறுதிப்படுத்தினால் விவசாயிகள் நம் பிக்கையுடன் வெங்காய உற்பத்தியில் ஈடுபடுவர். வெங்காயத்தை விட மஞ்ச ளுக்கு நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் வெங்காய உற்பத்தியைக் கைவிடுகின்ற நிலையும் இருக்கின்றது.
சந்தையில் வெங்காயம் ஏற்றுமதி, இணையதள வர்த்தகம் மூலம் நடக்கின் றது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் வெங்காயம் விளைந்து, அறுவடை செய் யப்பட்டு சந்தைக்கு வரும் முன்னரே, வர்த்தக சூதாடிகள் விவசாயிகளிடம் முன்பணம் கொடுத்து கொள்முதல் செய்துவிடுகிறார்கள். இதனால் விளை நி லத்திலிருந்து நேரடியாக ஏற்றுமதிக்கு போகிற நிலைமைதான் இருக்கின்றது.
இந்தியாவில் விவசாயத்தைப் பற்றிய கவலை அரசுக்கு இல்லை. பாரம்பரிய மான விவசாயத் தொழிலிருந்து விவசாயிகள் வெளியேறுகிறார்களே என்று கவலைப்பட வேண்டிய,இந்த விவசாய நாட்டின் பிரதமர் மன்மோகன்சிங் விவ சாயிகள் தாராளமாக விவசாயத்தை விட்டு வெளியேறுங்கள் என்று கூறுகி றார் என்றால் இதைவிட வேளாண்மைத் தொழில் அழிந்து போவதற்கு வேறு காரணம் எதையும் தேட வேண்டாம்.
உலகமயமாக்கல் தீவிரமாக நடைமுறைப் படுத்தப் பட்ட இருபது ஆண்டு காலத்தில், விவசாயம் சிறிது சிறிதாக இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலி ருந்து, பெரும் நிறுவனங்களின் சந்தைப் பொருளாதாரத்திற்குள் சென்றுவிட் டது. இந்திய விவசாயிகள் எதை பயிரிட வேண்டும் என்று ஆலோசனை சொல் லக்கூடிய இடத்திற்கு பன்னாட்டு நிறுவனங்கள் வந்துவிட்டன. விவசாயிக ளுக்கு தேவையான விதைகள், இடு பொருட்கள் வழங்குவது, கடன் அளிப்பது,
விளைபொருட்களை கொள்முதல் செய்வது போன்றவற்றில் பன்னாட்டு நிறு வனங்கள் துல்லியமாக விவசாயிகளை வளைத்து வருகின்றன.
இந்திய அரசு வெறும் பார்வையாளராகவே இருக்கின்றது. இதைத்தான் உலக
வங்கியும்,பன்னாட்டு வர்த்தக அமைப்பும் (WTO) விரும்புகின்றன.இந்தியாவின்
மிகப்பெரும் ஜனத்திரள் சந்தை, பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடா க மாற்றப்பட்டு வருகிறது. பற்றாக்குறை ஏற்பட்டால் இறக்குமதி செய்யுங்கள்
என்பதும், விவசாயத்திற்கு நிதி ஒதுக்கீடு தராதே, மானியங்கள் கொடுக்காதே
என்பதுமே உலக வர்த்தக அமைப்பின் தாரக மந்திரம்.
மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் தவறான பொருளாதாரக் கொள்கை களால் வெங்காயம் மட்டுமல்ல, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கா மலே விவசாய விளைப்பொருட்கள் அனைத்துமே விலைகள் அதிகரிக்கும் ஆபத்து நாட்டை வளைத்துக் கொண்டு இருக்கின்றது. வெங்காயம் விலை உயர்வில் அரசியலும் இருக்கின்றது. நாட்டின் பொருளாதாரமும் பிணைந் திருக்கிறது.
No comments:
Post a Comment