Thursday, November 14, 2013

பொன்னியின் செல்வன் வைகோ திறனாய்வு -பாகம் 7

பொன்னியின் செல்வன் #வைகோ திறனாய்வு

வாள் பறந்தது-நட்பு பிறந்தது

வந்தியத்தேவன் சொல்கிறான். அருள்மொழிவர்மனை எப்படிச் சந்திக்கிறான் தெரியுமா? இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் மல்யுத்தம் செய் கிறார்கள். அருள்மொழித்தேவனும் - வந்தியத்தேவனும் மல்யுத்தம் செய்கி றார்கள். இரண்டு பேரும் சமநிலையில் யுத்தம் புரிகிறார்கள். அருள்மொழித் தேவர் போர்க் கலையில் வல்லவர். வந்தியத்தேவனும் அசகாய சூரன்தான். இருந்தாலும் கொஞ்சம் அசந்து விட்டான். இரண்டு பேரும் வாள் யுத்தம் செய் கிறார்கள். அதில்கூட அருள்மொழிவர்மர் எப்படி வெற்றி பெறுகிறார் என்று கல்கி கூறுகிறார் என்றால், ‘வந்தியத்தேவன் கவனம் சிதறியது, வாள் பறந் தது’ என்று எழுதுகிறார்.

இலங்கையில் இருந்து திரும்பி வருகிறபோது, கடலில் கப்பல் மூழ்குகிறது. அந்தக் கப்பலில் வந்தியத்தேவன் இருக்கிறான். முரட்டு அராபியர்கள் அவ னைக் கைது செய்து கொண்டுபோய் விட்டார்கள். அங்கே பாண்டிய நாட்டு ஆபத்து உதவிகள் இருக்கிறார்கள். வந்தியத்தேவன் உயிருக்கு ஆபத்து. அவனை மரத்தில் கட்டி வைத்து இருக்கிறார்கள். கப்பல் தீப்பிடித்து எரிகிறது.


தன் கண்ணுக்கு எதிரே கப்பல் எரிந்துகொண்ட இருப்பதைப் பார்க்கிறார் அருள் மொழிவர்மர். என் நண்பன் அதில் இருக்கிறான், வல்லவராயன் வந்தியத்தே வன் அந்தக் கப்பலில் இருக்கிறான். அது நெருப்பு பிடித்து எரிகிறது, அதனால் இறந்து விடுவான் வாணர்குல வீரன் வந்தியத்தேவன் என்பதானல், சுழல் காற் றும் சூறைக்காற்றும் அடிக்க, பனை மர உயரத்திற்கு அலைகள் பொங்கி எழ, உயிருக்கு ஆபத்தான நிலையில் எவர் தடுத்தும் கேளாமல் கடலில் குதிக் கிறார் அருள்மொழிவர்மர்.

இன்னொரு கப்பல் மூழ்குகிறபோது, அந்தக் கப்பலுக்குள் சென்று, வந்தியத் தேவனைக் காக்க என் உயிரைத் தருவேன் என்கிறார். யார்? சோழர் குலத்தின் இளவரசன், நாடாள பிறந்தவர். அவர் அந்தக் கடலில் குதிக்க வேண்டிய அவசி யமே கிடையாது. உயிரோடு திரும்பிவர முடியாது என்று தெரிந்து, அந்தக் கட லில் குதித்து அவனைக் காப்பதற்காகக் குதிக்கிறார். இளவரசர் இறந்து விட் டார் என சோழ நாடு முழுவதம் செய்தி பரவுகிறது. கொந்தளிக்கிறது சோழ நாடு.அதற்குப்பிறகு இளவரசரும் உயிர் பிழைத்து, வந்தியத்தேவனும் காப்பாற் றப்பட்டு, படகில் ஏறி நாகப்பட்டணம் வந்து, சூளாமணி விகாரத்திலே வந்து தங்குகிறார்கள். இதெல்லாம் கதை.

ஆழ்வார்க்கு அடியான் நம்பி

இந்த வரலாற்று நவீனத்தில் நம் நெஞ்சில் பதிகிற முக்கியமான பாத்திரங்க ளில் ஒருவன்தான் ஆழ்வர்க்கடியான் நம்பி எனும் திருமலையப்பன். முதல் மந்திரி அன்பில் அநிருத்தப் பிரம்மராயரின் பிரதான ஒற்றன் இவன். புகை நுழைய முடியாத இடத்தில்கூட நுழைந்துவிடும் அதிசாமர்த்தியசாலி - தீவரி வைணவ பக்தன் . சிவனடியார்களுக்கும், இவனுக்கும் நடக்கும் வாதங்கிளில் ஆழ்வார்க்கடியான் பேச்சைப் படிக்கும் போதே விலாநோகச் சிரிப்பு வரும். பாண்டிய நாட்டு சதிகாரர்கள், இவனைக் கொல்வதே முதல்வேலை எனக் கருதுகிறார்கள். கதையின் திருப்பங்களுக்கு இவனும் காரணமானவன்.

சதி வென்றதா?

இந்தக்கட்டத்தில், ஆதித்த கரிகாலனைக் கொல்ல வேண்டும் என்ற முடிவு
எடுத்து விட்டார்கள் பாண்டிய நாட்டு ஆபத்து உதவிகள். கடம்பூர் சம்புவராயர் மாளிகைக்கு அவரை வரவழைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார்கள். திருப்புறம்பியம் பள்ளிப்படைக் கோவிலில் வைத்து தான் சபதம் எடுக்கிறார் கள். வீரபாண்டியனின் ஐந்து வயது மகனைக் கொண்டுவந்து நாற்காலியில் உட்காரவைத்து, அவனுக்கு கிரீடம் சூட்டுகிறார்கள். மீன் சின்னம் பொறிக்கப் பட்ட தகதகக்கின்ற வாளை எடுத்து, இந்த வாளால் ஆதித்த கரிகாலனைக் கொல்ல வேண்டும் என்று, ஐந்து வயதுக் குழந்தையிடம் வாளைக் கொடுத்து, இந்த வாளை நீ யாரிடம் கொடுக்கிறாயோ, அவர்கள் இந்த சபதத்தை நிறை வேற்றட்டும் என்று சொல்லும்போது, அந்தப் பிள்ளை நந்தினியிடம் அந்த வாளைக் கொடுக்கிறது. அவள் பெற்றுக் கொள்கிறாள்.

கரிகாலன் கதையை முடிப்பது என்கிறபோது அவர்கள் ஒரு கணக்குப் போட்டு வெள்ளிக்கிழமை நாளைத் தேர்ந்து எடுக்கிறார்கள். ஒரே நேரத்தில் ஆதித்தகரி காலனையும் -அருள்மொழிவர்மனையும்-சுந்தரச்சோழரையும் கொல்ல வேண் டும். மொத்தத்தில் சோழர் குலத்தையே கருவறுக்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார்கள். இந்தத் திட்டம் நிறை வேறுவதற்கு ஆதித்த கரிகாலனை கடம் பூர் சம்புவராயர் மாளிகைக்கு அழைத்து வருகின்ற பொறுப்பை அவர் மகன் கந்தமாறனிடம் நந்தினி ஒப்படைக்கிறாள்.

மனம் எரிமலையாக இருக்கிற ஆதித்த கரிகாலன் கடம்பூருக்கு வருகிறார். அவன் பாட்டன் திருக்கோவிலூர் மலையமான் வீராதிவீரர். அவர் தன் பேரனி டம், “தக்கோலப்போரில் போர் புரிந்த இராஜதித்தயரைப்போன்ற வீரன் நீ; வட திசை சென்று, நாடுகளை எல்லாம் வெல்ல வேண்டும் என்று கனவு காண் கிறேன்” என்று பேரப் பிள்ளையிடம் சொல்லுகிறார். அவன் பிறந்த நாள் விழா வில் எவ்வளவு ஆசையோடு தூக்கிக் கொஞ்சியதையெல்லாம் வர்ணிக்கிறார்.

கடம்பூர் மாளிகைக்கு கரிகாலன் வருகிறார். இந்த நவீனத்திலேயே மிக உணர்ச்சி மயமான கட்டம் இதுதான். கரிகாலனைக் கொலை செய்யும் நோக் கத்தோடு, பாண்டியன் ஆபத்து உதவிகள், அந்த மாளிகைக்கு உள்ளே வேட்டை மண்டபத்தில் ஒளிந்து இருக்கிறார்கள். சுந்தரச்சோழர் சக்கரவர்தியைக் கொல் வதற்கு பழுவேட்டரையர் மாளிகையில் இருக்கக்கூடிய பொக்கிஷ அறைக்குப் போகிற சுரங்கப்பாதை நந்தினிக்குத் தெரியும். அந்தப் பாதையில் சதிக்கூட்டத் தலைவன் ரவிதாசன், இன்னொரு சதிகாரனான சோமன் சாம்பவனுக்கு அந்த வழியைக் காண்பித்து, சக்கரவர்த்தி நோய்வாய்ப்பட்டு படுத்து இருக்கிறாரே, அதற்குச் சரியாக மேல்மாடத்தில் இருந்து வேல் எறிந்தால் இறந்து விடுவார்’ என்று சொல்லி ஏற்பாடு செய்கிறான்.

இந்த நேரத்தில் இளவரசன் அருள்மொழிவர்மர் நாகப்பட்டணத்தில் இருக்கி றார் அல்லவா, அவர் அங்கிருந்து யானை மீது ஏறி வருகிறார். இருக்கிற யானைப் பாகனை அனுப்பிவிட்டு, சதிகாரனாக இருக்கக்கூடிய ஆபத்து உதவி களில் ஒருவனான ரேவதாசன் எனும் கிரமவித்தனை அனுப்புகிறார்கள். அவன் பாகனாக வந்து, யானையில் வருகிறபோதே அருள்மொழிவர்மரைக் குத்திக் கொன்றுவிட வேண்டும் என்பது திட்டம். இந்த மூன்றும் ஒரே நேரத் தில் நடக்க வேண்டும், வெள்ளிக்கிழமை இரவு.

இந்தத் திட்டம் எப்படி நடக்கிறது?

இளவரசர் அருள்மொழிவர்மர் யானை மீது யாரும் கண்டுகொள்ள முடியாத படி தலைப்பாகை கட்டிக்கொண்டு, வெளியில் யார் என்று தெரியாத வண்ணம் வருகிறார். இந்தச் சதிகாரனும் வருகிறான். கூர்ந்த அறிவு பெற்ற யானை, சதி காரன் நம்முடைய பாகன் இல்லையே என்று அவனைத் தும்பிக்கையால் தூக்கி அடித்து வீசுகிறது.

அருள்மொழிவர்மர் புரிந்து கொண்டார். அவர் யானைக்கு உத்தரவிடும் ஆற் றல் பெற்றவர். அவர் காதோடு காதாக ஒரு உத்தரவு இடுகிறார். யானை மதம் பிடித்ததைப்போல ஓடுகிறது, சதி தோற்றது. அருள்மொழிவர்மர் தப்பித்தார்.

இங்கே அரண்மணைக்கு உள்ளே சதிகாரன் வருகிறான். சுந்தரச்சோழர் இளம் பிராயத்தில் இலங்கைக்குப்போய் இருந்த நேரத்தில், மனம்பறிகொடுத்த ஊமை ராணி என்று அழைக்கப்படுகிற மந்தாகினி இறந்து விட்டார் என்று எண் ணி மனம் உடைந்த நேரத்தில்,அந்த ஊமைராணி மந்தாகினியே காப்பாற்ற வருகிறார். அந்த நிலவறைக்கு உள்ளே வந்து வேல் வீசுகிறபோது குறுக்கே பாய்ந்து வேலைத்தாங்கிக்கொண்டு மந்தாகினி மடிகிறார்,சக்கரவர்த்தி பிழைக் கிறார். இப்படி இரண்டு திட்டங்களும் தோற்றது.

மூன்றாவது, கரிகாலனை வீழ்த்துவது. ஆதித்த கரிகாலனைக் கொல்ல வேண் டும் என்று நினைக்கிறபோது, வந்தியத்தேவனைப் பக்கத்தில் இருக்கவிடக் கூடாது என்று முடிவு எடுக்கிறார்கள். கடம்பூர் சம்புவராயர் மாளிகைக்குக் கரி காலன் வந்து விட்டார். அப்போது பழுவேட்டரையரை அங்கிருந்து வெளியே அனுப்பிவிட வேண்டும் என்று, ‘நீங்கள் மதுராந்தகத் தேவரை அழைத்து வாருங்கள்’ என்று அனுப்பி விடுகிறார்கள்.

ஆதித்த கரிகாலன் படுகொலை

கரிகாலனும் நந்தினியும் சந்திக்கிறார்கள். இப்பொழுது முக்கியமான ரகசியத் தைக் கரிகாலனிடம், நந்தினியிடமும் கூறுகிறான் வந்தியத்தேவன், இவர்கள் சொல்லி அனுப்பியதை. அது என்னவென்றால், நந்தினி வேறு யாருமில்லை. சுந்தரச்சோழரின் மகள்தான் நந்தினியாம், உனக்குத் தங்கை முறைதான் என்று சொல்கிறபோது இது அவள் மனதை அலைக்கழிக்கிறது. வேட்டை மண்டபத் திற்கு உள்ளே ஒளிந்துகொண்டு இருக்கிற சதிகாரர்கள் வருகிறார்கள். நந்தினி யின் அறைக்கு உள்ளே கரிகாலன் வருகிறார்.

தொடரும் .....

பொன்னியின் செல்வன் வைகோ திறனாய்வு -பாகம் 6

No comments:

Post a Comment