ஆலை அதிபர்களுக்கு ஆதரவாக கரும்பு விவசாயிகளின் உரிமைகளைப் பறிப்பதா?
கரும்பு விலையை நிர்ணயம் செய்ய மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்திற்கு கண்டனம் தெரிவித்து, நாடாளுமன்றத்தில் ஈரோடு தொகுதி #மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி 10.12.2009அன்று ஆற்றிய உரை:
கரும்பு விவசாயிகளின் உரிமையைப் பறிக்கிறவகையில் 22.10.2009 அன்று
இந்திய அரசு வெளியிட்ட அவசரச் சட்டத்தை சட்டவடிவமாக்க இந்தச் சட்ட
வரைவு கொண்டுவரப்பட்டுள்ளது.
22.10.2009 அன்று வெளியிடப்பட்ட அவசரச் சட்டத்தில்,மாநில அரசுகளுக்கு இந் தக் கூடுதல் விலை (SAP) அறிவிக்கும் அதிகாரம் பறிக்கப்பட்டு இருந்தது. இந் தச் சட்ட வரைவில் மீண்டும் கூடுதல் விலை அறிவிக்க மாநில அரசுகளுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளமைக்கு கரும்பு விவசாயிகளின் சார்பில் இந்திய அர சுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கரும்பு கட்டுப்பாடு சட்டம் ஆணை 1966இன் பிரிவு 5ஏ அட்டவணை 2 ஆகிய வை அவசரச் சட்டத்திலும், இந்தச் சட்ட வரைவிலும் நீக்கப்பட்டுள்ளது.இந்தப் பிரிவு நீக்கப்படுவதன் மூலம்,கடந்த பல ஆண்டுகளாக கரும்பு விவசாயிக ளுக்குக் கிடைத்து வந்த சர்க்கரை ஆலையின் இலாபத்தில் பங்கு பெறும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை ஆலைகள் அக்டோபர் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை சர்க் கரை மற்றும் சர்க்கரை பாகு, கரும்புச் சக்கை ஆகியவற்றின் விற்பனை மூலம் பெற்ற விலையில் சர்க்கரை உற்பத்தி செலவு மற்றும் நியாயமான (SMPயை அடிப்படை யாகக் கொண்டு) லாபம் இவற்றைக் கழித்தபின் கிடைக்கும் கரும்பு
ஆலையின் லாபத்தில் 50 சதவீதம் கரும்பு விவசாயிக்கு வழங்கப்பட வேண் டும் என்ற சட்டபூர்வமான உரிமையை இந்த அவசரச்சட்டமும் சட்டவரைவும் பறிக்கிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட உள்ளது.
மாநில அரசுகள் கரும்புக்கு கூடுதல் விலையினை(SAP) அறிவிக்காத பட்சத் திலும், கரும்பு விவசாயிகள் கரும்பு கட்டுப்பாட்டு ஆணை 1966 இல் உள்ள பிரிவு 5ஏ மற்றும் அட்டவணை 2இன் மூலம் சட்ட ரீதியாகக் கூடுதல் விலை பெற உரிமையும் வழியும் உள்ளது.
தமிழ் நாட்டில் 1998 - 1999 முதல், 2004 - 2005 வரை மாநில அரசு கூடுதல் விலை
(SAP)) அறிவிக்கவில்லை. இருந்தாலும் 5 ஏ பிரிவின் மூலம் உயர்ந்த பட்சக்
கூடுதல் விலையை விவசாயிகள் பெற்றார்கள்.
1998 - 1999 இல் ரூ128.10
1999 - 2000 இல் ரூ 159.05
2000 - 2001 இல் ரூ 196.84
2001 - 2002 இல் ரூ 25.90
2003 - 2004இல் ரூ 286.65 எனவும்
தமிழக விவசாயிகள் கூடுதல் கரும்புவிலை பெற முடிந்தது.தமிழ்நாட்டில் ஒரு சர்க்கரை ஆலை 2003 அக்டோபர் பருவத்தில் ஆலைக்கு அனுப்பிய கரும் புக்கு கூடுதல் விலை தர மறுத்தது. அதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கின்(று. W. P.No 5665-2007) தீர்ப்புப்படி, கூடுதல் விலையினை 15 சதவீத வட்டியுடன் கரும்பு விவசாயிகள் பெறமுடிந்தது. என வே, பிரிவு 5 ஏ மற்றும் அட்டவணை இரண்டு நீக்கப்படுவதன் மூலம் இந்தச் சட்டப் பாதுகாப்பை விவசாயிகள் இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இந்தச்சட்டவரைவு கொண்டு வரப்படாவிட்
டால், அரசுக்கு சுமார் 14 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு 5ஏ நீக்கப்படுவதன் மூலம், கடந்த 5 ஆண்டுகளாக ஆலைகளால் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய, நிலு வையில் உள்ள கூடுதல் விலை மொத்தம் சுமார் 74ஆயிரம் கோடி ரூபாயை கரும்பு விவசாயிகள் இழக்க வேண்டி வரும் என்பதை அரசு மறந்து விடக் கூடாது. அரசின் கூற்றுப்படி கரும்பு கட்டுப்பாட்டு ஆணை 1966 பிரிவு 5 ஏ -
டால், அரசுக்கு சுமார் 14 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு 5ஏ நீக்கப்படுவதன் மூலம், கடந்த 5 ஆண்டுகளாக ஆலைகளால் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய, நிலு வையில் உள்ள கூடுதல் விலை மொத்தம் சுமார் 74ஆயிரம் கோடி ரூபாயை கரும்பு விவசாயிகள் இழக்க வேண்டி வரும் என்பதை அரசு மறந்து விடக் கூடாது. அரசின் கூற்றுப்படி கரும்பு கட்டுப்பாட்டு ஆணை 1966 பிரிவு 5 ஏ -
மூலம் விவசாயிகளுக்கு நியாயமான கட்டுபடியாகக் கூடிய விலை Fair and
Remunarative Price(F.R.P )மூலம் மேலும் அதிக விலை கிடைக்கும் என்று சொல்லப் படுகிறது.
கட்டுபடி யாகக் கூடிய விலை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. நியாய மான கட்டு படியாகக்கூடிய விலை என்பதில் “நியாயமான”என்பதை யார் எப் படி நிர்ணயம் செய்வார்கள் என்பதில்தான் அச்சம் ஏற்படுகிறது. கரும்பு கட்டுப் பாட்டு ஆணை (Sugar care Control Order) 1966 பிரிவு 5 ஏ மற்றும் அட்டவணை 2இன் முலம் விவசாயிகளுக்குக் கிடைத்த சட்டப்பாதுகாப்பு இந்தச் சட்டத்தில் இல்லை.
சாதாரணமாகவே விவசாய விலை நிர்ணய ஆணையம் ( Agricultural Price Commis sion) ஏபிசி மற்றும் தேசிய விவசாயக் குழுமம், திட்டக் குழுவின் விவசாயப் பிரிவு போன்ற அமைப்புகள் செய்யும் பரிந்துரை விலையையே கூட அரசு ஏற்று அறிவிப்பதில்லை.
அரசின் இதுபோன்ற தவறான கொள்கை முடிவுகளின் காரணமாக, விவசாயத் தில் ஏற்பட்ட நட்டத்தை எதிர்கொள்ள முடியாமல், ஆயிரக்கணக்கான விவசா யிகள் தற்கொலை செய்து கொண்டதை இந்த அவை அறியும்.அதைச் சரிக் கட் டி சமாதானம் செய்கிற வகையில் 65ஆயிரம் கோடி ரூபாய் விவசாயி களுக்கு கடன் தள்ளுபடி செய்தது அரசு. 65 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்து விட் டு கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகளிலிருந்து சட்டப்படி கிடைக்க வேண்டிய நிலுவையில் உள்ள சுமார் 74ஆயிரம் கோடி ரூபாயை பறிப்பது கரும்பு விவசாயிகளுக்கு இந்த அரசு இழைக்கும் பெரும் கொடுமையாகும்.
காலப்போக்கில் கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் போ னால் கரும்பு உற்பத்தி குறைந்து பொது விநியோகத்திற்கான சர்க்கரை விலை
உயரும். இந்த அபாயத்தையும் அரசு மறந்து விடக் கூடாது.
இந்தச் சட்டவரைவு ஆலை அதிபர் களுக்கு வரப்பிரசாதமாகவும் விவசாயி
களுக்கு பேரிடியாகவும் அமைந்துள்ளது. கரும்பு விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட உள்ள ஆபத்தை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தெரி வித்து உள்ளனர். விவசாயிகளுக்கு இந்தச் சட்ட வரைவு பாதகமானது என்ற
உண்மையினை பல்வேறு அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உணர்ந்திருந்தாலும் அரசு கொண்டுவரும் சட்ட வரைவு என்பதால் ஆளும் கட்சி, கூட்டணிக் கட்சி என்ற கட்டுப்பாட்டுக்குள் அடைபட்டு தங்கள் கருத் தைச் சொல்ல முடியாமல் இருக்கிறார்கள். இதன் மூலம் ஒட்டு மொத்தக் கரும்பு விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக, தென் இந்திய விவ சாயிகள்- அதிலும் குறிப்பாக,தமிழ்நாடு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படு வார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, அரசு இந்த சட்டவரைவைத் திரும்பப்
பெறவேண்டும். அல்லது, Sugar cane Control Order 1966இல் உள்ள 5ஏ பிரிவையும் 2வது அட்டவணையையும் இந்தச் சட்ட வரைவில் சேர்த்து நிறைவேற்ற வேண்டும்.
கரும்பு விவசாயிகளின் சட்டப்படியான உரிமையைப் பறிக்கும் இந்தச் சட்ட
வரைவை அப்படியே நிறைவேற்று வதற்கு தமிழ்நாடு கரும்புவிவசாயிகள்
சார்பாகவும், நான் சார்ந்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பாகவும், கடும் கண்டனத்தையும் பெரும் எதிர்ப்பையும் பதிவு செய்கிறேன்.
இந்தச் சட்ட வரைவின் அடிப்படையில் இந்திய அரசு அறிவித்துள்ள கரும்பு
விலை கட்டுபடியாகக்கூடிய விலை அல்ல. மேலும் தமிழ்நாடு அரசு இந்த
ஆண்டு அறிவித்திருக்கும் கரும்பு விலை இந்திய நாட்டிலேயே மிகக் குறை வானது ஆகும். எனவே 8.5 சதவீதம் கரும்பு பிழிதிறன் உள்ள கரும்பிற்கு டன்
ஒன்றுக்கு ரூ 2500 என அறிவிக்க வேண்டுகிறேன். திருத்தப்பட்ட இந்தப் புதிய சட்ட வரைவில் கரும்பு ஏற்றிச் செல்லும் லாரி வாடகையைக் குறிப்பிடும்
போது, கரும்பு சேகரிக்கும் இடம் என்று இருப்பது தமிழக கரும்பு விவசாயி களுக்கு பயன்தராது. அதை மாற்றி, கரும்பு வெட்டுமிடம்(Ex-filed) என்று திருத் தம் செய்து Ex-Filed விலை கிடைக்க திருத்தம் கொண்டு வர வேண்டும்.
அ.கணேசமூர்த்தி எம்.பி இவ்வாறு உரையாற்றினார்
No comments:
Post a Comment