காவிரி நீர் பெற்றுத்தர வலியுறுத்தி,மத்திய, மாநில, அரசுகளைக் கண்டித்து டிசம்பர் 3-ம் தேதி ஆர்ப்பாட்டம்! காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு!!
தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் பொதுக் குழுக் கூட்டம் நடை பெற்றது. குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நிறுவனருமான மணியரசன் , ம.தி.மு.க. துணை பொதுச் செயலர் துரை பால கிருஷணன், தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் சங்கங்க ளின் கூட்டமைப்புத் தலைவர் சேரன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மணிமொழியான், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் தனபாலன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில துணை பொதுச் செயலர் தமிழ் நேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காவிரி நீர் பெற வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து டிசம்பர் 3-ம் தேதி தஞ்சாவூர், நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெறும் என்று காவிரி உரிமை மீட்புக் குழுவினர் தெரிவித்த னர். கூட்டத்தில் , எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நிறுவனருமான மணியரசன் செய்தி யாளர்களை சந்தித்தார்.
அப்போது, மேட்டூர் அணையில் தண்ணீர் குறைந்து கொண்டே வருகிறது. இத னால், டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்துள்ள பயிர்கள் வாடும் நிலை குறித்தும், கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் இன்னும் சென்றடையாத நிலை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. காவிரி கண்காணிப்புக்குழுக் கூடி தமிழகத்துக்கு மீதி 26 டி.எம்.சி. தண்ணீரை உடனே திறந்து விட வேண்டும் எனக் கூறியுள்ளது. ஆனால், கர்நாடக அரசு மழை காலத்தில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது எனக் கூறி தண்ணீர் தர மறுத்து விட்டது என்று தெரிவித்தார்.
மேலும் கிருஷ;ணராஜ சாகர், ஹேமாவதி அணைகளில் அதிக அளவு தண்ணீர் உள்ளது. அதைத் திறந்து விட மத்திய அரசு முன் வரவில்லை. இது தொடர்பாக தமிழக முதல்வரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து எந்தத் திட்டமும் வகுக்கவில்லை. அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி 26 டி.எம்.சி. தண்ணீரை பெறவும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் தமிழகம் முழுவதும் பேரணி நடத்த வேண்டும் என்று தெரிவித்த அவர் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து டிசம்பர் 3-ம் தேதி தஞ்சாவூர், நாகை, திருவாரூர்,
கடலூர் மாவட்ட தலைமையிடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித் தார்.
No comments:
Post a Comment