தூத்துக்குடி- திருநெல்வேலி சாலையில் புதுக்கோட்டையில் உள்ள சுங்கச் சாவடி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், பணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என #மதிமுக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மதிமுக மாவட்டச் செயலர் எஸ். ஜோயல் மாவட்ட ஆட்சிய ருக்கு அனுப்பியுள்ள கோரிக்க மனு விவரம்:
தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை அரு கே தட்டப்பாறை விலக்கு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி யில் விதிமுறைகளை மீறி வாகனங்களுக்கு பணம் வசூல் செய்யப்பட்டு வந்த து தொடர்பாக மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப் பட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் ஆஜராகி பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளனர். அதில், வாகைக்குளம் விமான நிலையம் அருகே உரிய இடத்தில் சுங்கச் சாவ டி வரி வசூல் மையம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. சில மாதங்கள் பணம் வசூல் செய்வது நிறுத்தப்பட்டி ருந்த நிலையில், தற்போது வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள நிலையிலும், தீர்ப்பு வெளி வரா த நிலையிலும் வாகனங்களுக்கு வரி வசூல் செய்யப்பட்டு வருவது சட்ட விரோத செயலாகும். எனவே, புதுக்கோட்டை சுங்கச்சாவடி வரி வசூல் மையத் தில் வாகனங்களுக்கு வரி வசூல் செய்வதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண் டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment