Sunday, November 3, 2013

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குச்சாவடி குழுக்கள் அமைக்கும் பணி!

#மதிமுக பொதுச் செயலாளர் #வைகோ அவர்களின் வேண்டுகோளுக்கு 
இணங்க,விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டாம் கட்ட புதிய வாக் கா ளர் சேர்த்தல் மற்றும் வாக்குச் சாவடி மையங்களில் குழுக்களை அமைக் கும் பணியினை மேற்கொள்வதற்காக 17.10.2013 அன்று சென்னையிலி ருந்து திருமங்கலம் சென்றோம்.

திருமங்கலத்தில்,தேர்தல் பணித் துணைச்செயலாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார் தலைமையிலான குழுவினரைச் சந்தித்து, மாவட்டக் கழகச் செயலாளர் வீர. தமிழ்செல்வன் அவர்களின் ஆலோசனையின் பேரில், திருமங்கலம் சட்டமன் றத் தொகுதி களப்பணியை முடுக்கிவிட்டோம்.

அங்கிருந்து திருப்பரங்குன்றம் சென்று, கொள்கை விளக்க அணிச் செயலாளர்
க.அழகுசுந்தரம் அவர்களின் மேற்பார்வையில், தேர்தல் பணித் துணைச் செய லாளர் மு.கார்த்திகேயன் தலைமையிலான குழுக்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தோம். தொகுதிக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து,இரண்டு நாட்கள் நடைபெற இருக்கும் தேர்தல் களப்பணிகள் குறித் தும் அறிவுறுத்தினோம்.
அதன்பின் சிவகாசி அலுவலத்திற்குச் சென்றோம். கேசவ நாராயணன் மற்றும்
சுதா பால சுப்பிரமணியன் இருவரையும் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிப்பணி களை மேற்கொள்ள அனுப்பி வைத்துவிட்டு, நானும், சிவகாசி இராபர்ட் சம்பத் தும், விருதுநகர் மற்றும் அருப்புக் கோட்டை சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளிடம்,சுவரொட்டி களை வழங்கி, புதிய வாக்காளர் சேர்க்கும் படிவ எண்-6 வழங்கினோம்.

விருதுநகரில் இருந்து ராஜபாளையம் சென்று நிர்வாகிகளைச் சந்தித்து, களப் பணியினைக் கேட்டறிந்தோம்.அங்கு இருந்து புறப்பட்டு சிவகாசி அலுவலகம் சென்று இரவு தங்கினோம். 

மறுநாள் காலை, சிவகாசியில் இருந்து விருதுநகர் சென்று, விருதுநகர் நகர
நிர்வாகிகளைச் சந்தித்துவிட்டு, மீண்டும் மதியம் சிவகாசி அலுவலகத்தில் நடைபெற்ற சிவகாசி, திருத்தங்கல் நகர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத் தில் கலந்து கொண்டு வாக்காளர் சேர்ப்பு ஆலோசனைகளை வழங்கி உரை யாற்றினோம். பின்பு சிவகாசி மத்திய ஒன்றியச் செயலாளர் ஏ.பங்காருசாமி அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் விசாரித்தோம். பின்பு வாக்குசாவடி மையங்களில் விரைந்து குழுக்களை அமைத்துத் தருமாறு கேட் டுக் கொண்டோம்.

அங்கிருந்து புறப்பட்டு, திருமங்கலம் சென்று மாவட்டச் செயலாளர் வீர.தமிழ் செல்வன், தேர்தல் பணித் துணைச் செயலாளர் எஸ்.ஆர். செந்தில்குமார் ஆகி யோரிடம் வாக்குச் சாவடி குழுக்களின் பட்டியலை பெற்றுக் கொண்டோம்.

அங்கிருந்து புறப்பட்டு திருப்பரங் குன்றம் சென்று, தேர்தல் பணித் துணைச் செயலாளர் மு.கார்த்திக்கைச் சந்தித்து அவரிடம் இருந்தும் வாக்குச் சாவடி குழுக்களின் பட்டியலைப் பெற்றுக்கொண்டு, சிவகாசி அலுவலகம் வந்தோம். தேர்தல் பணித் துணைச் செயலாளர்கள் ஏ.கேசவ நாராயணன், இல.சுதா பால சுப்பிர மணியன் ஆகியோரிடம், விருதுநகர் தொகுதியில் 27.10.2013 அன்று வரை முகாமிட்டு விடுபட்ட ஒன்றிய-நகர நிர்வாகிகள் குழுக்களின் படிவங் களைப் பெற கேட்டுக்கொண்டோம்.

சட்டமன்றத் தொகுதிவாரியாக கலந்து கொண்டவர்கள் விவரம்:


திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி


தேர்தல் பணித் துணைச் செயலாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார், திருச்சி மாநகர்
மாவட்டத் துணைச் செயலாளர் வெல்ல மண்டி சோமு, பொன்மலைப்பட்டி
கணேசன், ஜி.பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் செல்லபாண்டியன், மாநில
விவசாய அணி துணைச் செயலாளர் ஜெ.சக்திவேல், திருமங்கலம் கிழக்கு
ஒன்றியச் செயலாளர் பூமிராசன் மற்றும் மகாலிங்கம்.


திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி


தேர்தல் பணித் துணைச் செயலாளர் மு.கார்த்திகேயன், மாவட்டத் துணைச்
செயலாளர் சி.ஜெயச்சந்திரன்,திருப்பரங்குன்றம் நகர செயலாளர் க.முருகே
சன், திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஒச்சாத்தேவன், பொதுக் குழு உறுப்பினர் பால்பாண்டி,மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ராஜா, கிழக்கு ஒன்றியச் செயலாளர் கதிரேசன்.

நானும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் வீர.தமிழ்செல் வன், கொள்கை விளக்க அணிச் செயலாளர் க.அழகுசுந்தரம் ஆகியோரும் இரண்டு தொகுதி களுக்கும் சென்று அங்கு நடைபெறும் பணிகளைப் பார்வை யிட்டு, கழகத் தோழர்களை ஊக்கப்படுத்தினோம்.


சாத்தூர் சட்டமன்றத் தொகுதி


மாவட்டக் கழகச் செயலாளர் ஆர்.எம்.சண்முகசுந்தரம் தலைமையில், தேர்தல் பணித் துணைச் செயலாளர்கள் ஏ.கேசவநாராயணன், இல.சுதா பாலசுப்பிரம ணியன், சாத்தூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் முருகபூபதி, மேற்கு ஒன்றியச் செயலாளர் பாலகிருஷ்ணன், நகர செயலாளர் தங்கவேலு, வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியச் செயலாளர் சிங்கம்,மேற்கு ஒன்றியச் செயலாளர் ரவிசங்கர்,
ராஜபாளையம் மேற்கு ஒன்றியச்செயலாளர் வழக்கறிஞர் லட்சுமி நாராய ணன், திருவில்லிபுத்தூர் ஒன்றியச் செயலாளர் கே.வி.ஆர்.நேரு ஆகியோர் புதிய வாக்காளர் சேர்த்தல் மற்றும் வாக்குச் சாவடி குழுக்கள் அமைக்கும் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.


விருதுநகர்,அருப்புக்கோட்டை, சிவகாசி சட்டமன்றத் தொகுதிகள்


தேர்தல் பணிச் செயலாளர் கே.கழககுமார் தலைமையில், தேர்தல் பணித் துணைச் செயலாளர்கள் ஏ.கேசவநாராயணன், இல. சுதா பால சுப்பிரமணியன் மற்றும் ஆர்.எஸ்.இராபர்ட் சம்பத், மாவட்டத் துணைச் செயலாளர் சூலக்கரை இலட்சுமணன்,ஒன்றியச் செயலாளர்கள் வி.வி.சீனிவாசன், சி.ஜெகவீர பாண்டி யன் மற்றும் சங்கொலி சந்திரன், அருப்புக் கோட்டை நகர செயலாளர் எஸ்.மணிவண்ணன், ஒன்றியச் செயலாளர் எஸ்.சீனிவாசன், சாத்தூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் எம்.ஏ.பாலகிருஷ்ணன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.முருகபூபதி, நகர செயலாளர் பி.தங்கவேல், திருவில்லி புத்தூர் ஒன்றியச் செயலாளர் கே.வி.ஆர்.நேரு, வெம்பக் கோட்டை ஒன்றியம் பி.தாமோதரக்கண் ணன் ஆகியோர் நிர்வாகிகளைச்சந்தித்து புதிய வாக்காளர் சேர்ப்புக்கான விண் ணப்ப படிவங்களை வழங்கி, வாக்குச்சாவடிக் குழுக்களை அமைத்து புதிய வாக்காளர் சேர்ப்புப் பணிகளை மேற்கொண்டோம்.

அன்று மதியம் சிவகாசி அலுவலகத்தில் சிவகாசி நகரம், திருத்தங்கல் நகர
கழகங்களின் ஆலோசனைக் கூட்டத்தில், எங்களோடு சிவகாசி நகர செயலா ளர் வே.பாண்டியன்,திருத்தங்கல் நகர செயலாளர் எம்.ஆர்.சேதுராமன், மாவட் டத் துணைச் செயலாளர் கு.குமரேசன், மாநில சட்டத்துறைத் துணைச் செய லாளர் ஏ.வேல்முருகன், பொதுக்குழு உறப்பினர் ஆரோக்கியராஜ், மாவட்ட
இளைஞர்அணி அமைப்பாளர் ராஜேஷ்,மாவட்டப் பொறியாளர் அணி துணைச் செயலாளர் பி.சிவசுப்பிர மணியன்,மாவட்ட இளைஞர் அணி துணை அமைப் பாளர் ரவிஜி, மாரி முருகன் மற்றும் வார்டு செயலாளர்கள்,நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய வாக்காளர் சேர்ப்புப் படிவங்களை அளித்து, புதிய வாக்காளர் சேர்ப்புப் பணிகளை மேற்கொண்டார்கள்.

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகள் 1512 க்கும் குழுக்களை அமைக்கவும், அமைக்கப்பட்ட குழுக்களை நேரடியாகச்
சந்தித்து, களப்பணி ஆற்றவும் ஊக்கப்படுத்தினோம்.

கே.கழககுமார் மதிமுக தேர்தல் பணிச் செயலாளர்

No comments:

Post a Comment