தமிழ் இன அழிப்பில்,சிங்கள இனவெறி அரசுக்கு துணைபோன இந்தியா!
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, நாடாளு மன்றத்தில் #மதிமுக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி(ஈரோடு தொகுதி) 4.3.2010 அன்று ஆற்றிய உரை:
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் இந்தத் தீர்மானத்தின் மீது பேசும் வாப்பளித்ததற்கு நன்றி. இந்தத் தீர்மானத்தின் மீது உரையாறிய மாண்பு
மிகு அத்வானி அவர்கள் குறிப்பிட்டது போல இது ஒரு சம்பிரதாயமாக கடைப் பிடிக்கப்படும் நடவடிக்கையாக இருப்பினும், குடியரசுத் தலைவரி உரைக்கு எனது நறியைத் தெரிவித்துக் கொள்கிற அதேநேரத்தில்,அதில் உள்ள குறை களையும் சுட்டிக்காட்டும் வாய்ப்பாகக் கிடைத்திருக்கும் குறுகியகாலத்தைப் பயன்படுத் திக் கொள்ள விரும்புகிறேன்.
இணைப்பைப்பற்றிய எந்தக் குறிப்பும் இந்த உரையில் இல்லை.
அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் நதிகளில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகளையும் உதாசீனப் படுத்திவிட்டுதண்ணீர் தர மறுக்கும், இந் திய ஒருமைப் பாட்டுக்கே சவாலாக உள்ள மாநிலங்களுக்கிடையே இருக்கும் நதிநீர் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை.அவற்றுக்கு தீர்வுகாணும் வகையில் தற்போதைய தேவையான நதிகள் தேசிய மயமாக்கப்பட வேண்டும என்ற குறிப்பும் இந்த உரையில் இல்லாதது வருத்தம் அளிக்கும் ஒன்றாகும்.
விவசாய விளைபொருட்களின் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது,விலை வாசி உயர்வுக்கு ஒரு காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. உயர்ந்திருக்கிற உற் பத்திச் செலவைக்கணக்கிட்டால் அரசு அறிவித்திருக்கும் கொள்முதல் விலை விவசாயிகளுக்குக் கட்டுப் படியாகக் கூடிய ஒன்றல்ல. அரசு அறிவித்து இருக் கும் கொள் முதல் விலை, விவசாயிகளைச் சென்றடைவதில்லை.
உதாரணமாக, தமிழ்நாட்டில் தேங்காய் கொப்பரைக்கு அரசு அறிவித்திருக்கும் விலை விவசாயிகளைச்சென்றடைவதில்லை.காரணம் நேஃபட்(NFED)போன்ற
அரசு கொள் முதல் முகவர்கள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யாமல் வியாபாரிகளிடமே கொள் முதல் செய்கிறார்கள். விவசாயிகள் நேரடியாகக் கொண்டுவரும் தேங்காய் கொப்பரைகளில் ஈரப்பதம் அதிகம், நிறம் சரியில் லை எனக்காரணம் காட்டிவிட்டு, அதே கொப்பரைகள் வியாபாரிகள் மூலமாக வரும் போது முகவர்களால் கொள் முதல் செய்யப்படுகிறது.
அண்டை மாநிலமான கேரளத்தில், தேங்காயை அப்படியே கொள்முதல் செய் வது போல,தமிழ்நாட்டில் தேங்காய் கொள்முதல் செய்யப்படுவதில்லை. பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சுகுமார் அவர்களின் கேள்விக்கு, அரசு தந்த பதிலில்,தேங்காய் கொள்முதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தேங்காய் கொள்முதலை உடனடியாக நடை முறைப்
படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
நடைபெற்ற நாடாளுமன்ற இரு அவையின் கூட்டுக்கூட்டத்தில், மேதகு குடிய ரசுத் தலைவர் இந்தி மொழியில் ஆற்றிய உரை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்படவில்லை என்பது என்போன்ற இந்தி தெரியாத நாடாளுமன்ற உறுப் பினர்கள் பலருக்கு அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
நாடு சுதந்திரம் பெறும்வரை பல சமஸ்தானங்களாகத் தான் நாம் இருந்தோம். பல்வேறு மொழி, இன, கலாச்சாரங்களைக் கொண்ட நாம், வேறுமையில் ஒற் றுமை எனும் முழக்கத்தோடு, ஒரே நாடாக இணைந்தோம்.கூட்டாட்சித் தத்து வத்தை ஏற்றோம்.

பூடான் மன்னர், மாலத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்கள் மற்றும் பிரதமர்களின் இந்திய வருகை அண்டை நாடுகளுடனான மரபுவழி உறவையும் நட்பையும் மனநிறைவு கொள்ளுமாறு எற்படுத்தி உள்ளது என்பது மகிழ்ச்சிக்கு உரியதே.
இந்த நாட்டு மக்களுடனான மரபுவழி உறவைவிட,இலங்கைத் தமிழர்களின் உறவு என்பது இந்தியாவின் தென் கோடியில் வாழும் தமிழர்களான எங்களுக் கு தொப்புள் கொடி உறவாகும்.
சிங்களவெறி இனவாதத்தால் ஒடுக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களின் உரிமை கள் பறிக்கப்பட்ட போதெல்லாம் நாங்கள் கண்டனக்குரல் கொடுத்து வந்துள் ளோம்.ஒட்டு மொத்தத் தமிழர்களையும் அழிக்க இனவாத சிங்கள அரசு எடுத்த நடவடிக்கை களை தடுத்து நிறுத்திட குரல் கொடுத்தோம்.
தமிழ் இன அழிப்பைத் தடுக்கத் தவறியது மட்டுமல்லாமல்,ஈழத்தமிழர்களை அழித்தொழிக்க அனைத்து உதவிகளையும் இந்திய அரசாங்கம் செய்த போதும்
கண்டித்துக் குரல் கொடுத்தோம்.பயங்கரவாதத்துக்கு எதிராக எடுக்கும் நட வடிக்கை எனக்கூறி, தமிழின அழிப்புக்கும் துணை போனீர்கள்.தற்போது இன அழிப்புப் போரில் தப்பிப்பிழைத்துள்ள தமிழர் களுக்கும் இலங்கை அரசு எந்த உரிமையும் வழங்காமல் அவர்களையும் அழித் தொழித்து, இலங்கையில் தமிழ் இனம் இருந்தற்தகான அடையாளமே இல்லாமல் செய்ய தற்போது முயல்கிறது.
மனிதஉரிமை மீறள்களுக்காகவும் போர்குற்றங்கள் புரிந்தமையாலும் அமெ ரிக்கா,பிரிட்டன் போன்ற நாடுகள் அனைத்துலக நிதி ஆணையத்தின் கடனு தவி இலங்கை அரசுக்கு தரக்கூடாது என்று எடுத்த முயற்சியை யும் இந்தியா முறியடித்தது.
சென்ற நிதிநிலை அறிக்கையில், தமிழர்களின் புனர்வாழ்வுக்கென இந்தியா அளித்த நிதியினைக்கூட முறையாக செலவிடாமல்,இன ஒழிப்பில் ஈடுபட்டது
இலங்கை அரசு.அந்நாட்டுக்கு கொடுத்த நிதிமுறையாக செலவிடப்பட்டதா என இந்தியா கண்காணிக்கக்கூட இல்லை.
நாடாளுமன்ற அனைத்துக் கட்சி உறுப்பினர்களைக்கொண்ட குழுவை அனுப்ப விடுத்த கோரிக்கையையும் நிராகரித்தீர்கள். தரப்படும் நிதிமுறையாக செலவி டப்படுகிறதா என அறியாமல் மீண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய அரசு உதவி செய்வதுகூடாது என வலியுறுத்துகிறேன்.மொத்தத்தில் குடியரசுத்
தலைவரின் உரை அனைத்து வகையிலும் ஏமாற்றத்தைத் தருவதாக உள்ளது.
அ.கணேசமூர்த்தி எம்.பி.,இவாறுஉரையாறினார்.
No comments:
Post a Comment