Tuesday, November 19, 2013

ஈரோடு மாவட்ட மறுமலர்ச்சி பயணம் -2ம் கட்டம் - பாகம் 2

ஈரோடு மாவட்டம், கொடுமுடியில், "மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சி பய ணம்' இரண்டாம் கட்ட நிகழ்ச்சியில், நேற்று (18.11.13), #மதிமுக பொதுச்செய லாளர் #வைகோ பங்கேற்றார். ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி தலைமை வகித்தார். மழைக்கு இடையே வைகோ பேசியதாவது:

நாடு முழுவதுமாக கரும்பு விவசாயிகள் நலன் கருதி, கரும்பு டன்னுக்கு, 3,500 ரூபாய், வயல் விலையாக நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளின் கரும் புக்கான பணத்தை, 15 நாளில் ஆலைகள் வழங்க வேண்டும்.

உள்நாட்டு கரும்பு விவசாயிகள் நலன் கருதி, வெளிநாடுகளின் இருந்து கச்சா சர்க்கரை இறக்குமதிக்கு அரசு தடை விதிக்க வேண்டும். இறக்குமதி வரியை, 100 சதவீதம் உயர்த்த வேண்டும்.

சென்னையில், 9ம் தேதி கரும்பு விவசாயிகள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஆத ரவு தெரிவித்து பங்கேற்போம். 12ம் தேதி, பல்வேறு மாநில கரும்பு விவசாயி கள் டெல்லியில் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில், எம்.பி., கணேசமூர்த்தி கலந்து கொள்வார்.

தமிழகத்தில் கடந்த காலத்தில் மஞ்சள் விவசாயிகளுக்காக, எம்.பி., கணேச மூர்த்தி, டெல்லி வரை சென்று, பிரதமரிடம் எடுத்துரைத்தார். தற்போது கரும்பு விவசாயிகள் நலன் கருதி, 12ம் தேதி டெல்லி செல்கிறார். நாங்கள் மக்களோடு இயங்கி வருகிறோம்.

தமிழகத்தில் மதுக்கடைகளை, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகி யோர் ஆட்சி காலத்தில் திறந்ததால், இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என வே, இளைஞர்கள் நலனை கருதி, வருங்காலத்தில் பூர்ண மதுவிலக்கு ஏற் படுத்திட, ம.தி.மு.க., போராடும்.

இலங்கை தமிழர்கள் இப்போது படும் அவதிக்கும் அழிவுக்கும் காரணமே மத்தி யில் ஆளும் காங்கிரஸ் தான். இப்படி முக்கிய குற்றவாளியாக காங்கிரஸ் பிரதமர் மன்மோகன்சிங் இருக்கும்போது அவர் எப்படி இலங்கைக்கு செல்ல முடியும்?

இலங்கையில் போரை நடத்தியதே இந்தியாதான். இப்படி இருக்கும்போது அவர் இலங்கைக்கு போய் எப்படி தமிழர்களிடம் குறைகளை கேட்பார்? அவர் இலங்கை செல்வதை தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் தடுத்து விட்டன என்று கூறுகிறார்கள். 



இலங்கை போருக்கு காரணமாகவும், தமிழர்களின் அழிவுக்கு காரணமாகவும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் என்று இருக்கும்போது பிரதமர் மன்மோகன்சிங் இலங்கைக்கு சென்று என்ன பயன்தான் கிடைக்கப் போகிறது?

இங்கிலாந்து பிரதமர் கேமரூன் இலங்கையில் மனித உரிமைகள் குறித்து சுதந் திரமான உரிய விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணையை மார்ச் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். இல்லையென்றால் பன்னாட்டு விசாரணை நடத்த இங்கிலாந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறி உள்ளார். ம.தி.மு.க.வும் ஆரம்பத்தில் இருந்தே இதை தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறது.

இங்கிலாந்து பிரதமர் கேமரூன் இலங்கையில் பாதிக் கப்பட்ட தமிழர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு உள்ளார். இது நல்ல விஷயம். அவரு டன் இந்திய பிரதமரை ஒப்பிட்டு பார்க்க கூடாது. கேமரூனுடன் மன்மோகன் சிங்கை ஒப்பிட்டு பார்க்கவும் முடியாது.

வரும் பாராளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் மீண்டும் கணேசமூர்த்தி தான் போட்டியிடுவார். அவரை வெற்றிபெற செய்யுங்கள்.

இவ்வாறு வைகோ பேசினார்.

No comments:

Post a Comment