ஓயாத அலையாய் #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ இயக்கத்தை இயக்கி வருகிறார் என்று மாநில இளைஞர் அணிச்செயலாளர் வே.ஈஸ்வரன் “மாறும் தமிழகம்” என்ற தலைப்பில் விருதுநகர் மாநாட்டில் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
மழை சொன்னது நான் பலமானவன் என்னோடு மோதாதே, அலை சொன்னது
நான் பலவீனமானவன்தான், ஆனால் மோதிக்கொண்டே இருப்பேன். ஆயிரம்
ஆண்டுகள் கழிந்தது. மழை அங்கே இல்லை. அலை அங்கே இருந்தது.ஓயாத அலையாய் இந்த இயக்கத்தை இயக்கி வருகின்ற கழகத்தின் பொதுச் செய லாளர் வைகோ அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம்.
அண்ணாவிற்கு பின்னால் இந்த தமிழ்நாட்டினுடைய அரசியல் களம் எப்படி இருக்கிறது. இந்த தமிழ்நாடு எப்படி இருக்கிறது என்பதனை நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். இந்த அரசியல் என்ன மாற்றத்தைச் சந்தித்துக் கொண்டிருக் கிறது. இந்த நாடு எப்படி கீழே போய்கொண்டு இருக்கிறது நீங்கள் புரிந்து கொள் ள வேண்டும். 1952 இல் இந்தியாவினுடைய தனி நபர் வருமானத்தை விட, சீனாவினுடைய தனிநபர் வருமானம் குறைவு. ஆனால் இன்றைக்கு சீனா பல மடங்கு இந்தியாவைவிட முன்னேறிவிட்டது.
1952 இல் ஒலிம்பிக் போட்டியில் சீனா வாங்கிய பதக்கம் பூஜ்ஜியம். 2012 இல்
இலண்டன் ஒலிம்பிக்கில் சீனா வாங்கிய மொத்த பதக்கங்கள் 88. இந்தியா 58
ஆவது நாடாக இருக்கிறது. சீனா 2 ஆவது நாடாக இருக்கிறது. ஏன் சின்ன நாடு கள் எத்தியோப்பியாவை விட,கென்யாவைவிட கீழே போய்கொண்டு இருக்கி றதே. இந்தியா மட்டுமல்ல,இந்தியாவில் தமிழ்நாடும் இதே நிலையில் தான் போய்க்கொண்டு இருக்கிறது. என்ன காரணம்?
இந்த நாட்டினுடைய வளர்ச்சி கீழே போனதற்கு இந்த அரசியல் சூழ்நிலை கார ணம். இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய அரசியல் எப்படி இருக்கிறது. ஓட்டுக் குப் பணம். இந்த கட்சி எப்படி கொள்ளை அடித்தாலும் சரி, இந்த நாட்டையே
அழித்தாலும் சரி, இந்தக் கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்ற வாக்கு வங்கி அரசியல்,இந்த உலகமே அழிந்தாலும் சரி நான் ஓட்டுச்சாவடிக்கு போக வே மாட்டேன் என்று இருக்கிற கூட்டம், சினிமா மோகத்தில் ஓட்டளிக்கின்ற கூட்டம், இப்படி தமிழ்நாட்டி னுடைய அரசியல் நிலைமை முற்றிலுமே மாறிப் போயிருக்கிறது. இதை மாற்ற முடியுமா? இதை வென்றெடுக்க முடியுமா? எல் லாருக்குமே ஒரு கேள்வி எழலாம். நிச்சயம் முடியும். நம்முடைய தலைவர் வைகோ அவர்களால் முடியும்.
ஸ்பெயின் நாட்டு வீரன் காட்டஸ் தனது 21 வயதில் கியூபாவிலிருந்து மெக்சி
கோவிற்கு போகின்றான். அந்த மெக்சிகோவை பிடிக்க வேண்டும்.இதை ஸ்பெ யினின் ஆளுகைக்குக் கீழே கொண்டு வர வேண்டும் என்று திட்டம் போடு கிறான். ஒரு 508 வீரர்களை அழைத்துக் கொண்டு 11 கப்பல்களிலே மெக்சிகோ விற்கு செல்கின்றான். அங்கே கரை இறங்கியதும் அந்த 508 பேர்களிடையே
நான் இந்த நாட்டின் மீது போர் புரியப்போகிறேன் என்று காட்டஸ் சொன்ன போது,அங்கே உள்ளுக்குள்ளே சிறு குழப்பம்,அதிலே சிறு குழு, இந்த காட் டஸ் நம்பி நாம் போனால் நாம் அழிந்துபோவோம். இலட்சக்கணக்கான படை வீரர்களை கொண்டிருக்கின்ற அந்த மெக்சிகோவை நம்மால் வெல்ல முடியு மா? என்று யோசித்துப் பார்த்து இரவோடு இரவாக கியூபாவிற்கு தப்பித்து போய்விடலாம் என்று திட்டமிடுகிறார்கள். அந்தத் திட்டத்தை ஒரு நம்பிக்கை யானவர் வந்து காட்டஸிடம் சொல்கிறார் இதோ தப்பித்துப் போவதற்கு திட் டம் போடுகிறார்கள் என்று. இதைப் புரிந்துகொண்ட காட்டஸ், அந்த குழுவிலே
இருக்கின்ற இரண்டு பேரைத் தூக்கிலே போடுகிறார். இரண்டு பேரையும் தூக் கிலே போட்டுவிட்டு, அந்த 11 கப்பல்களையும் கடலிலே மூழ்கடிக்கின்றார்.
இப்போது வீரர்களுக்கு வேறு வழியில்லை. அங்கே காட்டஸ் சொல்கிறார், நீங் கள் இனி தப்பிப் போக முடியாது. நம்முடைய ஒரே பிரச்சனை ஒன்று ஜெயித் தாக வேண்டும்,இல்லையென்றால் செத்தாக வேண்டும் என்று சொல்கின்றார் காட்டஸ். எல்லா வீரர்களும் வாள் தூக்குகிறார்கள்.உயிரைத் துச்சமென மதித் துப் போராடுகிறார்கள். மூன்றாண்டுகள் கழித்து மெக்சிகோவை காட்டஸின் படை கைப்பற்றுகிறது. இந்த உலகத்தில் 508 பேரை வைத்துக் கொண்டு 3 ஆண் டுகளில் மெக்சிகோவை காட்டஸ் கைப்பற்ற முடிகிறது என்றால், நமக்கும்
மூன்று ஆண்டுகள்தான் இருக்கிறது.இலட்சக்கணக்கான தமிழர்கள் நீங்கள்
இருக்கும்போது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏன் உருவாக்க முடியாது?
முடியும் நம்மால்.
வே.ஈஸ்வரன் இவ்வாறு உரை ஆற்றினார்.
No comments:
Post a Comment