ஆளும் கட்சியின் தவறுகளை தட்டிகேட்டும் மக்களையும் கட்சிகளுக்கும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் ஆளும் தரப்பு ..
கோவை மாநகராட்சியின் நூறு வார்டுகளில்,தினமும் சேகரிக்கப்படும் 800 டன் குப்பைக் கழிவுகள், போத்தனூர் - செட்டிபாளையம் ரோட்டிலுள்ள, மாநகராட்சி கழிவுநீர்ப் பண்ணையில் கொட்டப்படுகிறது. இதனால், போத்தனூர், கோண வாய்க்கால்பாளையம்,மகாலிங்கபுரம்,வெள்ளலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக, குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். குப்பை கழிவு களை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, ம.தி.மு.க.வும் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும், எவ்வித பயனுமில்லை. அதே நேரத்தில், தற் போதைய ஆளும் கட் சியினர்,முன்பு எதிர்கட்சியாக இருந்தபோது, இப்பிரச் னையில், தீவிரம் காட்டி னர். தற்போது, பதவிகளுக்கு வந்தபின், கண்டுகொள் வதில்லை.பிற கட்சிகளும் மவுனமாகிவிட்டனர்.
இதனால், இப்பகுதியைச் சேர்ந்தவர்கள், குறிச்சி - வெள்ளலூர் மாசு தடுப்பு கூட் டுக்குழுவை ஏற்படுத்தினர். இவர்கள், தற்போது கோர்ட் மூலமாக,பிரச்னைக்கு தீர்வு காண முயன்று வருகின்றனர்.
மேலும் வெள்ளலூர் குப்பை கிடங்கு எதிர்ப்பு குழு ஒன்று துவங்கப்பட்டுள்ளது. இவ்வமைப்புடன் இணைந்து, ம.தி.மு.க.,மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ் வரன், சென்னையிலுள்ள பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பல போராட்டங்களில் நடத்தியும் .இதனால் மாநகர மேயர்,கமிஷனர் உள்ளிட் டோருக்கு, நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க, தற்போது ஆளும்கட்சி யினர், மக்களுக்கு மறைமுகமாக நெருக்கடி தர துவங்கியுள்ளனர்.
இதன்முதற்கட்டமாக, இக்குழுவிலுள்ள முக்கிய உறுப்பினர்களின் வீடுகள் முன்பே , குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால், அருகேயுள்ள வீடுகளில் வசிப்போரும் பாதிக்கப்படுகின்றனர். இரண்டாவதாக,எதிர்ப்பு இயக்கத்தை சார்ந்தவர்களின் வீட்டுகளில் குடிநீர் வினியோகத்திலும் தடைகளை ஏற்படுத்தி வருகிறது ஆளும் தரப்பு ....
No comments:
Post a Comment