திராவிடர் கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை மறைவு #வைகோ இரங்கல்
திராவிடர் கழகப் பொருளாளரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் துணைத் தலைவரும், பெரியார் மணியம்மை அறிவியல்-தொழில்நுட்ப அறக் கட்டளை நிறுவன உறுப்பினருமான வழக்கறிஞர் கோ. சாமிதுரை அவர்கள், இன்று காலை சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மறை வுற்றார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் ஆறாத் துயரமும் கொண்டேன்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகில் உள்ள முடியனூர் என்ற குக்கி ராமத்தில் பிறந்த சாமிதுரை அவர்கள், தமிழகம் முழுவதும் அறியும் வகையில் திராவிடர் கழகப் பணியின் மூலம் உயர்ந்தார். படிக்கட்டும் தமிழ் பேசும் பச்சை யப்பன் கல்லூரியிலும், சென்னை சட்டக் கல்லூரியிலும் மாணவராகக் கல்வி கற்ற காலம் முதலே திராவிடர் கழகப் பணியில் அவர் முனைந்து செயல் பட்டார்.

தென்னாற்காடு மாவட்டப் பொருளாளர், திராவிடர் கழக அமைப்புச் செயலா ளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர் என தமது தொண்டால் படிப்ப டியாக உயர்ந்த கோ. சாமிதுரை அவர்கள் கருத்தாழமிக்க எழுத்தாளரும் ஆவார். ‘சாது’ என்ற புனைப் பெயரில் அவர் ‘விடுதலை’யிலும், ‘உண்மை’ யிலும் எழுதிய எழுத்துக்கள் கருத்தாழம் கொண்டவை ஆகும்.‘அம்பேத்கர் பேசு கிறார்’ என்ற அரிய நூலையும் இவர் உருவாக்கித் தந்துள்ளார்.
அண்மையில் இவரது துணைவியார் சரோஜா அம்மையாரின் மரணம் நேர்ந்து அந்தத் துயரம் வாட்டிய நிலையிலும், தனது பணிகளில் வழக்கம் போல தொய் வற ஈடுபட்டார்.
தமிழக அரசின் பெரியார் விருது பெற்ற பெருமைக்குரிய கோ. சாமிதுரை அவர் களது மறைவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வீரவணக்கம் செலுத்துகிறது.
அவரது பிரிவால் துயருற்று இருக்கும் திராவிடர் கழகத் தோழர்களுக்கும், அவ ரது அன்புச் செல்வங்களான குமார், பாஸ்கர், சாந்தி, விஜயா, செல்வி ஆகியோ ருக்கும் ஆறுதலையும், இரங்கலையும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச்செயலாளர்
09.11.2013 மறுமலர்ச்சி தி.மு.க.
No comments:
Post a Comment