கரூர் மாவட்டம்
கரூரில் நவ.12-ல் #மதிமுக சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாவட்டச் செயலர் பரணி கே. மணி விடுத்துள்ள அறிக்கை:
இலங்கை அதிபர் ராஜபக்சேவை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கக் கோரி யும், இந்தியா சார்பில் ஒருவர்கூட காமன்வெல்த் மாநாட்டுக்குச் செல் லக்கூடாது என வலியுறுத்தியும் வணிகர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்திற்கு மதிமுக ஆதரவைத் தெரிவிக்கிறது.
மேலும் மதிமுக சார்பில் அன்று (நவ.12) ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. எனவே மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இதில் பங்கேற்க வேண்டும்.
மதுரை மாவட்டம்
இது குறித்து, மதிமுக மதுரை மாநகர் மாவட்டச் செயலர் புதூர் மு. பூமிநாதன் ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்தது ராஜபட்ச அரசு. எனவே, காமன் வெல்த் அமைப்பிலிருந்து அந்த நாட்டை நீக்கவேண்டும்.
இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தப்படக் கூடாது என்பதை வலியு றுத்தி, மதுரையில் மதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் வரும் 12 ஆம் தேதி காலை 6 மணிக்கு, மதுரை ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப் படும் வைகை எக்ஸ்பிரஸ மறித்து, போராட்டம் நடத்தப்படும்.
இப்போராட்டத்துக்காக, பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கட்டபொம் மன் சிலையிலிருந்து ஊர்வலம் புறப்பட உள்ளது. எனவே, மதிமுக நிர்வாகி கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகு திக் கழகச் செயலர்கள் உள்ளிட்ட அனைத்து அணி நிர்வாகிகளும், மாவட்டப் பிரதிநிதிகள், வட்டச் செயலர்கள் என அனைவரும் கலந்து கொள்ளவேண்டும்.
மேலும், மதிமுக பொதுச் செயலர் வைகோ விடுத்துள்ள அறிவிப்பில் குறிப் பிட்டபடி, வரும் 12 ஆம் தேதி வணிகர்கள் முழுக் கடையடைப்பு செய்து ஆதரவு தரவேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம்
குமரி மாவட்ட ம.தி.மு.க. தலைமையில் பல்வேறு கட்சிகள் மற்றும் தமிழ் உணர்வு அமைப்புகளின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ம.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத் துக்கு ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தில்லைச்செல்வம் தலைமை தாங்கி பேசினார். காமராஜர் நற்பணிமன்ற மாநில தலைவர் வக்கீல் ராதாகிருஷ் ணன், தமிழக வாழ்வுரிமை கட்சி சுரேஷ், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் குமரி மாவட்ட தலைவர் கருங்கல் ஜார்ஜ், திராவிடர் விடுதலை கழகம் வக்கீல் சதா, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் பகலவன், நேசமணி பேரவை டார்வின் ரமேஷ், நாம் தமிழர் கட்சி நாகராஜன், த.மு.மு.க. சுலைமான், ம.ம.க. அன்வர்சாதிக், எஸ்.டி.பி.ஐ. சாகுல்அமீது ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளையன் தலை மையில் இயங்கும் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் வருகிற 12–ந் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும் கடையடைப்பு போராட்டத்துக்கு முழு ஆத ரவு தெரிவிப்பது. திராவிடர் விடுதலை மற்றும் 21 தமிழ் உணர்வு அமைப்புகள் சார்பில் நடைபெறும் ரெயில் மறியல் போராட்டத்துக்கும் ஆதரவு அளிப்பது. தமிழர் நலன் கருதி இந்த போராட்டத்தை வெற்றிபெறச் செய்யுமாறு பொது மக்களை கேட்டுக்கொள்வது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ம.தி.மு.க. நிர்வாகிகள் வக்கீல் வெற்றிவேல், சாகுல்ஹமீது, கோட்டார் கோபால், ஆஸ்டின், சிங், பள்ளியாடி குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டம்
காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும். இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பதை கண்டித்து, நாளை ம.தி.மு.க., சார்பில் கடையடைப்பு போராட்டம் நடக்கிறது.பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க., பொருளாளர் ஜெயசீலன் அறிக்கை:
காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும், இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பதை கண்டித்து, நாளை ம.தி.மு.க., சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டம் வெற்றிப்பெற, வணிகர்கள் கடையடைப்பு செய்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் தமிழ் இன உணவாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
திருப்பூர் மாவட்டம்
இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என வலியுறுத்தி அனைத்து கட்சியினரும் பங்கேற்கும் வகையில் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது பற்றி அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நேற்று திருப்பூர் ம.தி.மு.க நகர அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ம.தி.மு.க மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் ஈழத் தமிழர்களைக் கொடூரமாக படுகொலை செய்த இலங்கை அரசை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கவேண்டும், இலங்கைக்கு ஆயுதங்களையும், பணத்தையும்,அள்ளிக்கொடுத்து ஈழத்தமிழர் இன படுகொலைக்கு உடந்தையாக செயல்பட்ட மத்திய அரசை கண்டித்தும், இலங்கையில் வருகின்ற 15ம் தேதி நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என வலியுறுத்தியும், 12ம் தேதி செவ்வாய் அன்று தமிழகம் முழுவதும் நடக்க உள்ள முழு அடைப்பு போரா ட்டம், ரயில் மறியல் போராட்டத்தில் அனைத்து கட்சியினரும் முழு அளவில் கலந்து கொள்ளவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ம.தி.மு.க சார்பில் நகர செயலாளர் பாலன் ,வேலம்பாளையம் நகர செயலாளர் நாகராஜன் ,பெரியார் தி.க. சார்பில் அங்ககுமார்,ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை பவுத்தன்,அழகு, சுப்பிமணியன்,மனித நேய மக்கள் கட்சி முஜிபுர் ரகுமான், தமிழ் நாடு முஸ்லீம் முண்னேற்றக் கழகம் சையது இப்ராகிம்,தலித் விடுதலை கட்சி ரங்கசாமி,விடுதலை சிறுத்தைகள் கட்சி துரைவளவன்,ஆதித்தமிழர் பேரவை மாநகர பொறுப்பாளர் சபரி,எஸ் ..டி.பி.ஐ மாவட்ட பொது செயலாளர் முஜிபுர் ரஹுமான்,நாம் தமிழ் கட்சி மேகன், அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு சார்பில் பாலாஜி,ஆகியோர் கலந்துகொண்டனர்.
கோவை மாவட்டம்
காமன்வெல்த் மாநாட்டில் மத்திய அரசைக் கலந்து கொள்ள விடாமல் தடுக்கத் தவறிய தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், தமிழகத்துக்குள் வர விடாமல் தடுத்துப் போராட்டம் நடத்தப்படும் என்று 12 தமிழ் அமைப்புகள் ஒன்று கூடி தீர்மானம் கொண்டு வந்துள்ளன. நவம்பர் 12ம் தேதி நடைபெற வுள்ள மாநிலம் தழுவிய கடையடைப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இதில் 12 தமிழ் அமைப்பு களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின்னர் கு.ராமகிருஷ் ணன் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார். இக்கூட்டம் மதிமுக மாவட் டச் செயலாளர் மோகன் குமார் தலைமையில் நடந்தது. அவர் பின்னர் செய்தி யாளர்களிடம் பேசுகையில், நவம்பர் 12ம் தேதியன்று கடையடைப்புப் போராட் டத்தை வெற்றிகரமாக நடத்த வர்த்தர்களிடன் ஆதரவைக் கோருவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 12ம் தேதி அனைத்து முக்கிய ரயில் நிலை யங் களிலும் ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்படும். இதில் 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச் சர்கள் யாரையும் நுழைய விடாமல் தடுத்துப் போராட்டமும் நடத்தப்படும் என்றார். இக்கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண் டனர்.
No comments:
Post a Comment