Tuesday, November 26, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 4

அறிவிப்பு நிலையிலேயே உள்ள ஈரோடு - செங்கோட்டை புதிய இரயிலை இயக்கிடுக!

இரயில்வே கூடுதல் நிதிநிலை அறிக்கையின்போது நாடாளுமன்றத்தில் #மதிமுக அ.கணேசமூர்த்தி கோரிக்கை

நாடாளுமன்றத்தில் இரயில்வே கூடுதல் நிதி நிலை அறிக்கை 10.12.2009 அன்று
தாக்கல் செய்யப்பட்டபோது நடந்த விவாதத்தில் ஈரோடு தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஆற்றிய உரை:

இரயில்வே கூடுதல் நிதி நிலை அறிக்கையில் பேச வாய்ப்பு அளித்தமைக்கு எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்ற இரயில்வே நிதிநிலை அறிக்கைக்கு முந்திய இரயில்வே நிதிநிலை அறிக்கையில், ஈரோட்டிலிருந்து செங்கோட்டை வரை புதிய இரயில் வண்டி இயக்கப் போவதாக அறிவிக்கப் பட்ட அறிவிப்பு இன்னும் நடைமுறைப் படுத் தப்படாமல் வெறும் அறிவிப்பாகவே உள்ளது.பொதுமக்களுக்கு பெரிதும் பயன் படும் இந்த இரயில் வண்டியினை விரைவில் இயக்குவதற்கு ஆவன செய்ய அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஈரோடு முதல் பழநி வரை புதிய இரயில்பாதை அமைக்கும் பணியினை விரை வுபடுத்திட உரிய நிதி ஒதுக்கீடு செய்து புதிய இரயில்பாதை அமைக்கும் பணி யினை விரைந்து தொடங்கிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

எனது தொகுதிக்கு உட்பட்ட கொடுமுடி காவேரி ஆற்றங்கரையில் சிவன், விஷ்ணு,பிரம்மா ஆகிய மூம்மர்த்திகளின் ஆலயங்களும் ஒருசேர ஒரே வளா கத்துக்குள் அமைந்துள்ளது. இது பக்தர்களுக்கு புனிதத் தலமாகும். சென்ற இரயில்வே நிதிநிலை அறிக்கை விவாதத்தில் பேசுகிறபொழுது இதுபோன்ற திருத்தலங்களில் பல்நோக்கு வணிக வளாகம் Multi Functional Complexes அமைக் கப்படும் என அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படை யில் கொடுமுடி இரயில் நிலையத்திலும் பல்நோக்கு வணிக வளாகம் (M.F.C.S.) அமைத்திடக் கோரினேன்.மீண்டும் அக்கோரிக்கையினை வலியுறுத்து கிறேன். உரிய நடவடிக்கை எடுத்திடுமாறு அமைச்சரைக் கேட்டுக் கொள் கிறேன்.

பக்தர்களின் புனிதத் தலமாக விளங்கும் கொடுமுடிக்கு நாட்டின் பல பகுதி களில் இருந்தும் பக்தர்கள் ஆண்டு முழுவதும் வருகிறார்கள். கொடுமுடி இரயில் நிலையத்தில் ஒரு சில இரயில்கள் நிறுத்தப்படுகிறது. பெரும்பாலான இரயில்கள் கொடுமுடியில் நிற்காததால் கொடுமுடி வரும் பக்தர்கள், ஈரோடு அல்லது கரூர் வரை இரயில் மூலம் வந்து, அங்கிருந்து பேருந்தில் வரும் நிலை உள்ளது.

எனவே, பக்தர்களின் நலன் கருதி கொடுமுடியில் அனைத்து இரயில்களும் நின்று செல்ல ஆவன செய்ய வேண்டுகிறேன். தென்னக இரயில்வே உயர் அதிகாரிகள் அங்கு முன் பதிவு குறைவாக உள்ளது எனக் கூறுகிறார்கள். வண் டிகள் நின்று சென்றால்தான் பயணிகள் முன்பதிவு செய்ய முடியும். இதனைக் கருத்தில்கொண்டு இரயில் வண்டிகள் கொடுமுடி இரயில் நிலையத்தில் நின் று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

வண்டி எண். 2083/2084 கோவை - மயிலாடுதுறை ஜனசதாப்தி விரைவு வண்டி யில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. பயணிகளுக்கு இடம் கிடைப்பது இல்லை. அதனால் பயணம் செய்ய முடிவதில்லை. எனவே, இந்த இரயில் வண்டியில் கூடுதலாக இன்னும் சில பெட்டிகள் இணைக்கப்பட்டால் அனைவ ரும் பயணிக்க முடியும். இல்லையெனில் கோவையில் இருந்து இந்த வண்டி புறப்படும் அதே நேரத்தில் மயிலாடுதுறையில் இருந்து இன்னொரு வண்டி கோவைக்கு புறப்படும் வகையில் எதிர் எதிர் வண்டிகளாக இரண்டு வண்டிகள் இயக்கப்பட்டால் பயணிகளின் நெரிசலையும் முன்பதிவு கிடைக்காமல் ஏற் படும் ஏமாற்றத்தையும் தவிர்க்கலாம்.

இரயில் வண்டி எண். 6344/6345 அமிர்தா விரைவு வண்டி தற்போது திருவனந்த புரத்தில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்படுகிறது. அதனை ஈரோடு வரை
நீட்டிப்பு செய்து இயக்க வேண்டுகிறேன்.

சென்ற நிதிநிலை அறிக்கையை அறிவித்துப் பேசும்போது அமைச்சர் அவர்கள் தான் முன்னுரிமை தந்து மேம்படுத்த உள்ள பணிகளில் இரயில்வேயில் தர மான உணவு வழங்கலும் ஒன்று என அறிவித்தார்கள். அதன் அடிப்படையில் சில மாற்றங்களையும் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். . I.R.C.T.C.யிலிருந்து குத் தகைக்கு தனியாரால் ஏலத்தில்எடுத்து நடத்தப்பட்ட இரயில்களில் உணவு வழங்கும் முறை மாற்றப்பட்டு தற்போது . I.R.C.T.C..யே நடத்த ஆரம்பித்துள் ளது.

இதுவரை அந்தந்த இரயில் வண்டிகளில் இயங்கி வந்த . Pantry Car லியே மதிய உணவு போன்றவற்றைத் தயாரித்து பயணிகளுக்கு வழங்கி வந்தனர். ஆனால், தற்போது அந்த முறை அனுமதிக்கப்படுவதில்லை. அந்தந்த இரயில் நிலையத் தில் உள்ள சமையல் கூடத்தில் (Base Kitchen)  இருந்து எடுப்பு சாப்பாடு  (Pick up food) தான் பய ணிகளுக்கு பரிமாறப்படுகிறது.

சாப்பாட்டு நேரத்திற்கு எடுப்பு சாப்பாடு எடுக்கும் இரயில் நிலையத்திற்கு வண்
டி சென்றடைந்தால் ஒழிய தரமான சாப்பாடு பயணிகளுக்குக் கிடைப்பதில் லை. எடுப்பு சாப்பாடு தரமானதாகவும், ருசியானதாகவும் இல்லை. தனியார் நடத்தியபோது அதன் உரிமையாளரிடத்தில் இக்குறைகளைச் சொல்ல முடிந் தது. அவர்கள் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள உரிய நடவடிக்கை எடுத்து
ருசியான உணவு வழங்கினர். தற்போது அதற்கு வழி இல்லை. Pick Up உணவு
மூலம் ஒரே சீரான சுவையான உணவு கிடைப்பதில்லை

தனியார் விற்பனையில் அதிக கவனம் செலுத்தியது போல I.R.C.T.C கவனம்
செலுத்தவில்லை. எனவே, இரயில்வேக்கு கிடைத்து வந்த வருமானம் குறைந் துள்ளது.வண்டி எண். 2625/2626 போன்ற வண்டிகளில் பாதிக்கு மேல் விற்பனை
குறைந்துள்ளது. அதேபோல Pantry Car பற்றாக்குறையைக் போக்கவும் அமைச் சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனது தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு சாஸ்திரி நகர் - சென்னிமலை சாலைக்கு இடையில் உள்ள இரயில் பாதையில் தினமும் 110 இரயில் வண்டிகளுக்கு மேலாகச் செல்கின்றன.சென்னி மலை சாலையையும் சாஸ்திரி நகரையும் இணைக்கும் தார் சாலையில் அமைந்துள்ள கேட் எண். எல்.சி. 124, இருபத்து நான்கு மணிநேரத்தில் 12 மணி நேரத்திற்கு மேல் மூடியே உள்ளது. அந்த இடத் தில் தரை மட்டத்தில் இருந்து சுமார் 30 அடிக்குக் கீழாக இரயில் பாதை செல் கிறது. சுலபமாக பாலம் அமைத்திட முடியும். அப்படிஅமையும் பாலத்தினால் சுமார் 30 ஆயிரம் மக்கள் பயன் அடைவர். நெரிசல் மிகுந்த ஈரோடு நகருக்கு அது ஒரு புறவழிப் பாதையாகவும் அமையும். எனவே, இந்த பாலத்தினைக் கட்ட உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

ஈரோட்டிலிருந்து பின்னலாடை நகரான திருப்பூருக்கும், நூற்பாலை நகரான
கோவைக்கும் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித் துள்ளது,சென்ற நிதிநிலை அறிக்கையில் அறிவித்த இசாத் (izzat) திட்டத்தின் மூலம் பயன்பட்டுள்ள 2500 பயணிகளுக்கு மேல் தினந்தோறும் இந்த நகரங் களுக்குச் செல்கிறார்கள். அது மட்டுமல்லாமல், தினந்தோறும் 5000க்கு மேற் பட்ட பயணிகள் திருப்பூர், கோவைக்குச் செல்கின்றனர். எனவே, பயணிகளின் நெரிசலைக் குறைக்க ஈரோட்டிலிருந்து கோவைக்கு ஒரு மின்சார இரயில் (EMU) போக்குவரத்தை இயக்கிட வேண்டும்.

ஈரோட்டிலும் மற்றும் சில நகரங்களிலும் உள்ள இரயில்வே பள்ளிகளில் ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டம் அமுலில் உள்ளது. அதை மாற்றி ஸ்டேட் போர்டு அல்லது சிபிசி பாடத் திட்டத்தை அமலாக்க வேண்டுகிறேன்.

ஈரோடு இரயில் நிலையத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகளின்
எண்ணிக்கையை கவனத்தில் கொண்டு நடைமேடைகளை அமைத்திட இர யில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி. இவ்வாறு உரையாற்றினார்.

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 3

No comments:

Post a Comment