கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் வணிக வளாகங்கள் கட்டப்படுவதைக் கண்டித்து வாகனப் பிரசாரத்தில் ஈடுபட்ட #மதிமுக - வினரை போலீஸார் நேற்று (06.10.13) கைது செய்தனர்.
கோவை, குறிச்சி நகர மதிமுக சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் வே.ஈஸ்வரன் தலைமையில் ஈச்சனாரியில் புதன்கிழமை நடைபெற்ற வாகனப் பிரசாரத்தை மாவட்டச் செயலாளர் குகன்மில் செந்தில் தொடங்கி வைத்தார்.
இதில், கோவை மாநகராட்சி சார்பில் அரசு பள்ளி வளாகம் மற்றும் அதன் மைதானங்களில் வணிக வளாகங்கள் கட்டி வணிக ரீதியாகப் பயன்படுத்து வது என மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து வணிக வளாகங்கள் அமைத்து வருகிறது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, வணிக ரீதியாகப் பயன்படுத்துவது மாணவர்களின் கல்வி யைப் பாதிக்கும். பள்ளிக்குச் சொந்தமான நிலங்களில் மாணவர்களின் பயன் பாட்டிற்காக வகுப்பறைகள், நூலகங்கள், விளையாட்டு போன்ற பயன்பாட் டிற் கே பயன்படுத்த வேண்டும்.
பள்ளிகளின் தரத்தை உயர்த்தி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவேண் டும். அதைத் தவிர்த்து வணிக வளாகங்கள் கட்டினால் எதிர்காலத்தில் பள்ளி யை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே பள்ளி வளாகங்களில் வணிக வளாகம் கட்டும் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, வாகனப் பிரசாரம் நடைபெற்றது.
வாகனப் பிரசாரம் மேற்கொண்ட மதிமுக வினரை போலீஸார் கைது செய் தனர். இப்பிரசாரத்தில் மாநகர மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், குறிச்சி நகரச் செயலாளர் ப.செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment