கோவில்பட்டியில் ரயில்வே கேட்டை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உதவி கலெக்டர் அலுவலகத்தை , #மதிமுக வினர் முற்றுகையிட்டனர்.
30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் எதிர்பார்ப்பாக இருந்த கோவில்பட்டி ரயில்வே மேம்பாலம் , வைகோ சிவகாசி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த பொது பெற்று தந்தார் .கோவில்பட்டி லட்சுமி மில் ரயில்வே கேட்டில் கடந்த 2009–ம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. இதையடுத்து அந்த ரயில்வே கேட்டை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.இதனால் இனாம் மணி யாச்சி பஞ்சாயத்து, இந்திரா நகர், அத்தைகொண்டான், சீனிவாச நகர் உள்ளிட் ட பகுதி மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது. என வே ரயில்வே கேட்டை மூடுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 2–2–2009 அன்று சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ரயில்வே கேட் டுக்கு பதிலாக அப்பகுதியில் ரூ.80 லட்சம் செலவில், வாகனங்கள் செல்லும் வகையில் சுரங்க வழிப்பாதை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதை யடுத்து தற்போது வரை ரயில்வே கேட் மூடப்படாமல் பொதுமக்களின் பயன் பாட்டுக்கு திறந்து விடப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர், இனாம் மணியாச்சி பஞ்சாயத்து தலைவர் செல்வராஜிடம், லட்சுமி மில் ரயில்வே கேட்டை பொதுமக்கள் கடந்து செல்லும் வகையில் அங்கு சுரங்க வழி நடைப் பாதை அமைக்க பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றி தருமாறு கேட்டதாக தெரிகிறது. இதற்கு பஞ்சாயத்து தலைவர் செல்வராஜ் மறுப்பு தெரிவித்தார்.
நேற்று காலையில் பஞ்சாயத்து தலைவர் செல்வராஜ் தலைமையில் அப்பகுதி யினர் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சிவகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் தெய்வேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முத்துகாந்தாரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமசுப்பு, குடியிருப்போர் சங்க தலைவர் ஜனகராஜ், வார்டு உறுப்பினர் வீரப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
லட்சுமி மில் ரயில்வே கேட்டில் வாகனங்கள் கடந்து செல்லும் வகையில் சுரங்க வழிப்பாதை அமைத்து தந்த பின்னரே ரயில்வே கேட்டை மூட வேண் டும். சுரங்க வழி நடைப்பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி மனு வழங்கினர். உதவி கலெக்டர் டாக்டர் விஜய கார்த்தி கேயன், அலுவலக பணிக்காக வெளியே சென்றதால், தலைமை எழுத்தர் ராமர் மனுவை பெற்று கொண்டார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment