Thursday, November 21, 2013

வெற்றிக் கனியைப் பறிப்பதற்கு களத்தில் பம்பரமாய்ச் சுழலுவோம்!

வெற்றிக் கனியைப் பறிப்பதற்கு தேர்தல் களத்தில் பம்பரமாய்ச் சுழலுவோம் என்று விருதுநகர் #மதிமுக் மாநாட்டில் கொள்கை விளக்க அணித் துணைச் செயலாளர் ஈட்டிமுனை இளமாறன் உரை ஆற்றினார். அவரது உரை வரு மாறு:

வெற்றிக்கு கட்டியம் கூறும் விருதுநகர் மாநாட்டில் தலைமைப்பொறுப்பேற்று
இருக்கின்ற தகுதிவாய்ந்த தலைவர்,எட்டுத் திக்கிலேயும் இயக்கத்தின் செய்தி களை கொண்டு சேர்க்கின்ற இமயம் தொலைக்காட்சியின் நிறுவனர் மாநாட் டினுடைய தலைவர் அண்ணன் ஜெபராஜ் அவர்களே, கற்றவர் சபையில் நிறை குடமாய், கன்னித் தமிழ்நாட்டின் வரைபடமாய் நற்றமிழர் நாட்டின் நன்னம்பிக் கை முனையாய், திராவிடர் சமுதாயத்தின் மிச்சமாகவும், எச்சமாகவும்,நாளை ய தமிழ் சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், எங்கள் இதயக் கோவி லில் எந்நாளும் குடியிருக்கிற எங்கள் கழகத்தினுடைய பொதுச் செயலாளர், இந்திய நாடாளுமன்றம் மீண்டும் புதிய மாற்றத்தை காணப் போகிற அரசியல் அத்தியாயத்தை மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்ற வகையில் களப்பணி ஆற்ற இருக்கின்ற கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணாச்சி அவர்களே, வெள்ளம்
போல் தமிழர் கூட்டம் அவர் வீரம்கொள் கூட்டமென மாற்றாரும் போற்றத் தக்க வகையில் நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிற
கழகத்தினுடைய தோழர்களே, உங்கள் அத்துனைபேருக்கும் பணிவு கலந்த
வணக்கத்தை முன்வைக்கின்றேன்.

“சொல்லி மாளாத டெல்லி ஊழல்” என்று ஒரு அற்புதமான தலைப்பை எனக்கு
வழங்கியமைக்காக நான் மாநாட்டுக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக்கொள் கிறேன். தினசரி ஒரு ஊழல்,தினசரி ஒரு லஞ்சம், பார்க்கின்ற இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருப்பது கிந்திய உபகண்டத்தில் இந்த ஊழலும், லஞ்ச மும் தான் என்று சொல்லுகின்ற அளவுக்கு இந்தியாவினுடைய அடிப்படையையே பொடிப்பொடியாக தகர்க்கின்ற அளவுக்கு இந்த லஞ்சமும் லாவண்யமும் இன் றைக்கு தலைவிரித்து ஆடுகின்றது.


இது ஏதோ இன்றைக்கோ,நேற்றைக்கோ நடைபெறுகிற செயல் என்று எண்ணி
விடாதீர்கள். கடந்த 20 ஆண்டு காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் ஏற் பட்டிருக்கிற லஞ்சத்தின் மதிப்பு ரூ 1,80,00,000 கோடியைத் தாண்டுகிறது என்று பொருளாதாரத் துறையினர் சொல்லுகிறார்கள்.

பண்டித ஜவஹர்லால் நேரு பிரதமராக முடிசூட்டிக் கொண்டிருந்த அந்த கால கட்டத்திலேயே முந்திரா ஊழல்; நேருவினுடைய காலத்திற்கு பின்னாலே
இந்திரா காந்தி காலத்தை எடுத்துக் கொண்டால் நகர்வாலா ஊழல்; இந்திரா
காந்தி காலத்துக்கு பின்னாலே நரசிம்மராவ் காலத்தை எடுத்துக் கொண்டால் அர்ஷத்மேத்தா ஊழல்;அதற்கு பின்னாலே ராஜிவ்காந்தி ஆட்சி  நடைபெறு கின்றதைப் பார்த்தால் போபர்ஸ் ஊழல் இந்திய துணைக் கண்டத்தை காங் கிரஸ் ஏகாதிபத்தியம் தொடர்ந்து ஆண்டு கொண்டிருந்த இந்த காலகட்டத்தில் தான் ஊழல் சிம்மாசனம் இட்டு அமர்ந்து, அவர்களுக்கு பக்க பலமாய் ஆட்சி செய்து வந்து இருக்கிறது.

எனவே, லஞ்சமும் ஊழலும் இன்றைக்கு நேற்றைக்கு ஏற்பட்டது அல்ல, நிலக் கரி சுரங்க ஊழலில் அரசினுடைய இழப்பீட்டுத் தொகை ரூ 1 கோடியே 80 இலட் சம். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் 1 கோடியே 76 இலட்சம் கோடி ரூபாய்.இதிலே ஒரு வேடிக்கை என்ன என்று கேட்டால் இந்தியாவிலேயே இது வரை நடைபெற்ற ஊழல்களையெல்லாம் வெட்கப்பட வைத்தது இந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். இதை யார் சொல்வது. உச்சநீதிமன்றத்தினுடைய நீதிபதி சொல்கிறார். இந்தி யாவிலேயே எல்லா ஊழல்களையும் வெட்கப்பட வைக்கின்ற அளவுக்கு 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் நடைபெற்றிருக்கிறது.

சத்யம் கம்யூட்டர் ஊழல் 25 ஆயிரம் கோடி ரூபாய்,ஒரு தனிமனிதனாக இருந்த இராமலிங்க இராஜூ அவர் நடத்திய நிறுவனத்தில் செய்த ஊழல். ஒரு தனி மனிதராக இருந்த கால கட்டத்திலேயும் அவருக்குப் பணப் புழக்கம் என்பது பொதுமக்களுடைய பணப்புழக்கமாக இருந்ததால் இந்தியாவினுடைய பொரு ளாதாரத்தையே அது ஆட்டிப் படைத்தது. அதைப்போல எல்.ஐ.சி. வங்கி. ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கிற மாணவன், கல்லூரியிலே படிக்கிற மாணவன், தொழில்துறையில் படிக்கிற மாணவன், ஒரு மருத்துவக் கல்லூரியிலே படிக் கிற மாணவன் தனக்குக் கடன் வேண்டுமென்று வங்கியின் வாசலிலே போய் நின்றால்,எல்.ஐ.சி.யிடம் போய் கேட்டால் ஆயிரம் பத்திரங்கள் கொண்டுவா என்று கேட்பார்கள். ஆயிரம் ஆதாரங்களைக் கேட்பார்கள். இது இருந்தால் உங் களுக்கு கொடுக்க முடியும் என்று சொல்லுவார்கள்.

ஆனால் போலியான நிறுவனங்களுக்கு கோடி கோடியாக இந்த எல்.ஐ.சி.யும்
வங்கியும் வாரிக் கொடுத்த தொகை 1இலட்சம் கோடி என்று சிபிஐ இன்றைக்கு
விசாரித்து சொல்லியிருக்கிறது என்று சொன்னால், ஊழல் எப்படி கொடிகட்டிப்
பறக்கிறது பாருங்கள். அதைப்போல உரம் மற்றும் சர்க்கரை இறக்குமதியிலே
25 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல். பிரான்ஸ் நாட்டிலே இருந்து ஆறு நீர்மூழ்கி
கப்பலை வாங்கிய வகையில் 10ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்.இதைத்தவிர்த்து கார்கில் யுத்தத்திலே இறந்த இந்திய இராணுவ வீரர்களை அடக்கம் செய்வதற்
காகவும் வாங்கப்பட்ட சவப்பெட்டியிலும் ஊழல், ஆதர்ஸ் கட்டிட ஊழல். போ பர்ஸ் ஊழல், போலி ஆயுத ஊழல். எல்லா வகையிலும் இந்த நாடு ஊழ லால் நிரம்பி இருக்கிறது.

இன்றைக்கு இருக்கக்கூடிய இளைஞர் களின் மனதை ஆட்டிப் படைத்திருப்பது
ஊழல் சாம்ராஜ்ஜியம்தான்.ஒரு பல்கலைக் கழகத்திலே பட்டம் முடித்துவிட்டு வேலைக்காக பதிந்து வைத்து இருந்தான் ஒரு இளைஞன். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து என்றைக்காவது கார்டு வரும் வரும் என்று காத்திருந் தான். ஒரு நாளும் வரவில்லை. கடைசியாக என்ன செய்வது என்று யோசித்து பார்த்து நண்பர்கள்,பெரியோர்களிடம் எல்லாம் கலந்து பேசி கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தான். 50 ஆயிரம் கொடுத்ததற்கு பின்னாலே வேலை கிடைத்தது அந்த இளைஞனுக்கு. எந்த இலாகாவில் தெரியுமா? இலஞ்ச ஒழிப்பு இலாகா வில்.இலஞ்ச ஒழிப்பு இலாகாவிலேயே 50 ஆயிரம் கொடுத்து வேலை வாங்கக்
கூடிய அளவிற்கு இந்த நாட்டிலே இலஞ்சம் என்பது பெருகிப் போய் கிடக் கிறது. ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.

A for Adhars, B for Bofars  என்று சொல்லக் கூடிய அளவுக்கு எல்லா திசையிலேயும் இன்றைக்கு இலஞ்சம் கொடிகட்டிப் பறக்கிறது. தோழர்களே, ஒரு போட்டி அர சாங்கம் நடத்தக்கூடிய அளவுக்கு 21 இலட்சம் கோடி ரூபாய். சுவிட்ஸர் லாந்து வங்கியிலே போய் பதுக்கப்பட்டு இருக்கிறது.இந்தியாவிலே ரூபாயின் மதிப்பு சரிந்து விட்டது. எப்படியும் சரிகட்டிக் கொள்ளலாம் என்று பிரபலமான பொரு ளாதார நிபுணர் சிதம்பரம் அவர்களும், நம்முடைய மன்மோகன்சிங் அவர்க ளும் கலந்து கலந்து பேசுகிறார்கள்.

அந்தப் பணத்தை எடுப்பதற்கு, அதை தடுத்து நிறுத்துவதற்கு, திரும்பக் கொண் டு வருவதற்கு, இந்த அரசாங்கத்தால் முடிகிறதா? இதைக் கேள்வி கேட்பதற்கு நாடாளுமன்றத்திலே நாதியிருக்கிறதா? தோழர்களே! உங்கள் கவனத்திற்கு
சொல்கிறேன். ஒரு வரலாற்று சம்பவத்தைக் கோடிட்டு காட்டுகிறேன். ஒரு மனிதர் ஒரு சபையிலே இருந்தால் தெரியும். இல்லாவிட்டாலும் தெரியும்.எம் தலைவன் வைகோ அந்த இடத்திலே இல்லாத வெற்றிடம் இன்றைக்கு தனி யாகத் தெரிகிறது நாடாளுமன்றத்தில். அன்றைக்கு இதேபோலத்தான் ராஜிவ் காந்தி, இந்திய பெரும் பணக்காரர்கள் கோடிக்கணக்கான ரூபாயை சுவிட்ஸர் லாந்து வங்கியிலே போட்டு வைத்திருக்கிறார்கள்.அதை எப்படியாவது திருப் பி எடுப்பதற்கு முயற்சி செய்வேன் என்று சொன்ன பொழுது, நம்முடைய தலை வர் அவர்கள் அப்பொழுதே நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்.

அன்றைக்கே ராஜிவ்காந்தி அவர்களை கேள்வி கேட்பதற்கு வைகோ என்ற ஒரு மனிதர் நாடாளுமன்றத்திலே இருந்தார்.இன்றைக்கு தலைவிரித்து ஆடு கிற ஊழலை தட்டிக் கேட்பதற்கு எந்த எம்.பி.இருக்கிறார் இந்த நாடாளுமன்றத் தில்? 

வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்பது பெளதீகம். ஆனால், வெற்றிடத் தை நிரப்புவதற்கு உலகத்திலே இரண்டு சக்தி. ஒன்று காற்று. மற்றொன்று தலை வர் வைகோ என்ற புயல்.இரண்டாவதுதான் வெற்றிடத்தை நிரப்ப முடியும். எனவே வெற்றிடமாக இருக்கக் கூடிய இந்திய நாடாளுமன்றத்தில் நம்மு டை ய முத்திரையை பதிவு செய்கின்ற வகையில் வெற்றிக் கனியை எட்டிப் பறிப்ப தற்கு சர்வ தியாகம் என்னென்ன உண்டோ அத்தனையும் இந்த தேர்தல் களத் திலே பயன்படுத்தி வெற்றியை பெற்றே தீருவோம்.

சாம, பேத, தான, தண்டம். வெற்றி ஒன்றே நமது இலக்கு. கண்களுக்கு முன் னால் வேறு எதுவும் தெரியவில்லை என்று அர்ஜூனன் சொன்னதைப் போல்
வெற்றி ஒன்றே நம் கண்களுக்கு தெரிய வேண்டும் என்று இந்த நேரத்திலே பதிவு செய்து நம்முடைய கழகத்தின் தோழர்களுக்கு சொல்கிறேன்.

நம்முடைய தோட்டத்தை 
மதிப்பிடுங்கள்!
உதிர்கின்ற இலைகளால் அல்ல
மலர்கின்ற பூக்களால்!

நமது நாட்களை மதிப்பிடுங்கள்!
கடந்துபோன பொழுதுகளால் அல்ல
பொன்னான மணித்துளிகளால்!

நம்முடைய இரவுகளைக்
கணக்கிடுங்கள்!
தடுமாறும் இருளால் அல்ல
நடமாடும் நட்சத்திரங்களால்!

நமது வாழ்வை மதிப்பிடுங்கள்!
உவர்ப்பான கண்ணீரால் அல்ல
பொங்கி வருகின்ற புன்னகையால்!

நம்மை நாமே மதிப்பிடுவோம்!
இழந்த களங்களால் அல்ல
களத்தில் விளையக்கூடிய
வெற்றிகளால்!

பம்பரம் சுழலும். வெற்றியை பெறும் என்பதைச் சொல்லி விடைபெறுகிறேன்.

இவ்வாறு ஈட்டிமுனை இளமாறன் உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment