Wednesday, November 27, 2013

ஈழத்தில் இங்கிலாந்து பிரதமரின் நம்பிக்கைப் பயணம்

சங்கொலி தலையங்கம் 

உலகத் தமிழர்களின் எதிர்ப்பை துச்சமாகக் கருதிய இந்திய அரசு, கொழும்பில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளது. இந்தியாவின் சார்பில்,வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் மாநாட்டில்
கலந்துகொண்டார்.

மாநாட்டிற்கு தாம் செல்ல முடியாதது குறித்து ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதிய பிரதமர் மன்மோகன்சிங்,காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு தனது வருத்தத்தைத் தெரிவித்து இருந்தார். மன்மோகன்சிங் பிரதமர் பதவி ஏற்ற ஒன்பதரை ஆண்டு காலத்தில் நடைபெற் ற ஐந்து மாநாடுகளில் இரண்டில் அவர் கலந்துகொள்ளவில்லை.தமிழ்நாட்டில்
எழுந்த எதிர்ப்புதான் பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ளாததற்குக் காரணம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருப்பது அப்பட் டமான பொய் என்பது உலகத்திற்குத் தெரியும். இந்தியாவின் சார்பில், வெளியு றவு அமைச்சர் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ராஜபக்சே கூறி இருப் பதில் இருந்தே இந்தியாவும்-இலங்கையும் பேசி வைத்துக்கொண்ட நாடகம் தான் ‘காமன்வெல்த் உச்சி மாநாடு’ என்பது விளங்கும். 53 நாடுகளைக்கொண்ட காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாட்டில் 23 நாடுகளின் தலைவர்கள் மட்டுமே நவம்பர் 15 தொடங்கி, 17 வரை நடைபெற்ற கொழும்பு மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். மற்ற நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் மட்டுமே வந்திருந்தனர்.

கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், “இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொ லைகளை, மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும். இலங்கையில்
நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க மாட்டேன்” என்று அக்டோ பர் 8 ஆம் தேதி, அறிவித்து விட்டார். மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம் கூலம், இலங்கை நாட்டில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி, மாநாட்டிலும் கலந்துகொள்ளவில்லை. பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற் றா லும், “மனித உரிமை மீறல், போர்க்குற்றங்கள் குறித்து ராஜபக்சேவிடம் கேள் வி எழுப்புவேன்” என்று வெளிப்படையாகவே அறிவித்தார்.


“இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதன் மூலம் ராஜபக்சேவை சர்வதேச விசாரணை வளையத்தில் இருந்துத் தப்பிக்கச் செய்யும் என்று திட் டம் வகுத்துக் கொடுத்ததே இந்தியாதான்” என்று மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் குற்றம் சாட்டினார்.இலங்கையில் நடந்துள்ள நிகழ்ச்சிகள் அதனை உறுதிப்படுத்தி இருக்கின்றன.

தொடக்கத்திலிருந்தே காமன்வெல்த் மாநாட்டிற்கு வரும் சர்வதேச பத்திரிகை யாளர்களும், ஊடகவியலாளர்களும் போரினால், பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடு வதற்கும் உள்நாட்டில் அகதியான தமிழ் மக்களைச் சந்தித்துப் பேசவும் இலங்கை அரசு தடை விதித்தது.இலங்கை அரசிடம் உரிய கடவுச் சீட் டு பெற்றுக்கொண்டு வருகை தந்த ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்
லீரைனோன் மற்றும் நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் லோஹை இருவரும் இலங்கை வடக்குப் பகுதிக்குச் சென்று தமிழர்களைச் சந்திக்க முயற்சித்த போது, நவம்பர் 9ஆம் தேதி, இலங்கை பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப் பட்டனர். அவர்களை குடி உரிமை அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் கைது செய்து அடைத்து வைத்தனர். பின்னர், அந்நாடுகளின்
தூதரகங்களின் தலையீட்டால் அவர்கள் இலங்கையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.

மனித குலத்தை குலைநடுங்கச் செய்திடும் வகையில்,தமிழர்களை இலங்கை இராணுவம் கொன்றுகுவித்த கொடூரங்களையும், மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களின் இளைய மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதையும்,இலங்கை இராணுவத்திடம் பிடிபட்ட போராளிகள் மிருகத்தனமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டதையும்,இசைப்பிரியா நாசமாக்கப்பட்டு, சித்ரவதை செய்யப் பட்டு,கொல்லப்பட்டதையும் ஆவணப்படமாக எடுத்து, இங்கிலாந்து சேனல்-4 தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பச் செய்தவர் கெலம் மேக்ரே. அவரும் அவ ரது குழுவினரும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க நவம்பர் 12 ஆம் தேதி
கொழும்பு காட்டுநாயகா விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது, கெலம் மேக்ரேவை எதிர்த்து கண்டனப் போராட்டம் நடத்த ராஜபக்சே கும்பல் ஏற்பாடு செய்தது.அவர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முழக்கமிட்டனர். நவம்பர் 13 ஆம் தேதி, கெலம் மேக்ரே மற்றும் ஜோனத்தன் மில்லர் ஆகியோர் அடங்கிய சேனல்-4 ஊடகவியலாளர் குழு கொழும்புவிலிருந்து வவுனியாவுக்கு புகை வண்டிமூலம் புறப்பட்டனர். அவர்கள் சென்ற புகைவண்டி அனுராதபுரத்தில் நிறுத்தப்பட்டு, மேலும் பயணிக்க முடியாதவாறு தடுக்கப் பட்டனர்.

ராஜபக்சே கைக்கூலிகளும், காவல்படையும் கெலம் மேக்ரே வடக்கு மாகா ணப் பகுதிக்குச் செல்வதைத் தடுத்தனர்.ஜனநாயம் கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள் குறித்த ஐ.நா.வின் பிரகடனத்தை இலங்கை அரசு மீறுகிறது என்று
சேனல்-4 ஆவணப்பட இயக்குநர் கெலம் மேக்ரே, ராஜபக்சே அரசு மீது புகார் தெரிவித்தார். இங்கிலாந்து நாட்டின் ஊடகவியலாளர்கள் வடபகுதிக்குச் சென் றதைத் தடுத்து நிறுத்தியதை அறிந்ததுமே கொழும்பு வந்திருந்த இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் பிரிட்டன் செய்தியாளர்கள் சுதந்தி ரமாக கடமைசெய்ய ராஜபக்சே அரசு அனுமதிக்காததற்குக் கடும் கண்டனம்
தெரிவித்தார்.

கொழும்பு செல்லும் முன்பு இந்தியா வருகை தந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துவிட்டு, நவம்பர் 14 ஆம் தேதி செய்தியாளர்களிடம் இலங்கை செல்லும்போது தமிழர் பிரதேசத்திற்குச்செல் வேன் என்று கூறினார். அவர் கூறியவாறே நவம்பர் 15 ஆம் தேதி கொழும்பு வில் காமன்வெல்த் மாநாட்டு தொடக்க நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, பிற்பக லில் யாழ்ப்பாணம் விரைந்தார்.

பிரிட்டன் பிரதமர் கேமரூன் பலாலி விமான நிலையத்துக்கு அன்டனோவ் ரக விமானம் மூலம் வந்து இறங்கினார்.அங்கிருந்து கார் மூலம் யாழ்ப்பாணம் சென்ற கேமரூன் யாழ் பொது நூலகத்தைப் பார்வையிட்டார். வடக்கு மாகாண
முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரையும் சந்தித்துப் பேசினார். பிரிட்டன் பிரதமர் யாழ் நூலகத்திற்குச் சென்றபோது, போரில் காணாமல் போனவர்களின் குடும்பத் தினர் நூலக வாயில் முன்பு கூடியிருந்த தமிழ் மக்களின் அவலக்குரல், தாய் மார்களின் கண்ணீரைப் பார்த்த கேமரூன், இந்த வேதனையை என்னால் தாங் கிக் கொள்ள முடியவில்லை என்று அதிர்ச்சி தெரிவித்தார்.

முன்னதாக கேமரூன் வாகனத்தில் வந்தபோது, யாழ் நூலகம் அருகில் திரண் டிருந்த மக்கள் துரையப்பா மைதான வீதிகளில் அணிவகுத்து நின்றனர். இரா ணுவ கட்டுக் காவலை மீறி பிரிட்டன் பிரதமரின் கார் முன்னால் வந்து நின்ற தமிழ்ப் பெண்கள், போரின்போது காணாமல் போன தங்கள் உறவினர்கள் பற்றி இலங்கை அரசாங்கம் மெளனம் சாதிக்கிறது என்று கூறினார்கள். தங்கள் கை யிலிருந்த கோரிக்கை மனுக்களை பிரதமருடன் வருகை தந்த பத்திரிகை யா ளர்களிடம் வீசி எறிந்தனர்.இதையெல்லாம் கண்ட பிரிட்டன் பிரதமர் கேமரூன் மிகுந்த கவலையுடன் தமிழர்களின் துயரங்களை உணர்ந்தார்.

பின்னர் கஸ்தூரியார் வீதியில் உள்ள உதயன் நாளிதழ் அலுவலகத்திற்கு பிரத மர் கேமரூன் சென்றார். கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி, இலங்கை இராணுவம் உத யன் தமிழ் நாளிதழ் அச்சகத்தைத் தீ வைத்து எரித்தது. அங்கு சேதமுற்ற அச்சு இயந்திரங்களைப் பார்வையிட்டார். நடந்த சம்பவங்களை உதயன் இதழ் நிர் வாக இயக்குநர் சரவண பவன் , தலைமை ஆசிரியர் கானமயில்நாதன் ஆகி யோரிடம் விரிவாகக் கேட்டறிந்தார். அங்கு இருந்த ஊழியர்கள் மத்தியில் பேசி ய கேமரூன், “அடிப்படை சுதந்திரத்தை இழக்க ஒருபோதும் பிரிட்டிஷ் சம்மதிக் காது. நாங்கள் தனிநபர் சுதந்திரத்தின் பக்கம் நிற்கிறோம். இதோ எங்கள் தூதரக அதிகாரிகள் இங்கேதான் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொன்றையும் கவ னித்துக் கொண்டுதான் இருக் கிறார்கள். கவலைப்படாதீர்கள்” என்று ஆறுதல் கூறினார்.

பின்னர், சபாபதிப் பிள்ளை நலன்புரி மையத்துக்குச் சென்ற கேமரூன், முகா மில் அடைக்கப்பட்டிருந்த தமிழர்களின் நிலை கண்டு உணர்ந்தார். இராணுவம் தங்கள் நிலங்களை பறித்துக்கொண்டு அநாதைகளாக ஆக்கியக் கொடுமை
களை மக்கள் அவரிடம் எடுத்துக் கூறினர்.அதன்பின்னர் பலாலி சென்றடைந்து விமானம் மூலம் டேவிட் கேமரூன் கொழும்பு திரும்பினார்.

இலங்கைக்கு 1948 இல் விடுதலை வழங்கியபின்,பிரிட்டன் பிரதமர் ஒருவர் தமிழர் பகுதிக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ஈழத் தமிழர்கள் இருக்கிறார்கள்.ஏனெனில் ஈழத் தமிழர்களின் துயரங்களை, வேதனை களை, கண்ணீர் கதைகளை மிகுந்த பொறுமையுடனும், கனிவுடனும் கேட்டறிந்த முதல் வெளிநாட்டுத் தலைவர்
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் மட்டுமே.

கொழும்பில் அதிபர் ராஜபக்சேவை சந்தித்து ஈழத்தமிழர் களின் குமுறல்களை நேரடியாக எடுத்துரைத்த கேமரூன்,பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இலங்கையில், போர் முடிவின்போது நடந்த சம்பவங்கள் தொடர்பாக நம்பத் தகுந்த வெளிப்படையான,சுதந்திரமான உள்நாட்டு விசாரணை நடத்த வேண் டிய தேவை ஏற்பட்டுள்ளது என்பதை ராஜபக்சேவிடம் கூறினேன். அதை மார்ச்சு இறுதிக்குள் செய்ய வேண்டும்.அது நடைபெறா விட்டால், நாங்கள் எங்கள் நிலையைப் பயன்படுத்தி, இந்தப் பிரச்சினையை ஐ.நா. மனித உரிமை
ஆணையத்திடம் எடுத்துச் செல்வோம். சர்வதேச சுதந்திரமான விசாரணை நடத்துவது தொடர்பாக ஐ.நா.மனித உரிமை ஆணையருடன் இணைந்து செயல் படுவோம்.

போர் இல்லா பிரதேசத்தில் நடந்தவை (தமிழ் இனப்படு கொலை) குறித்து சுதந் திரமான விசாரணை தேவை.சர்வதேச விசாரணை நடத்துவதை நான் முழு மையாக ஆதரிக்கிறேன்.மனித உரிமை பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும், ஊடகங்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும்,தமிழ் மக்கள் உரிய மதிப்புட னும், கண்ணித்துடனும் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும். இவை எல்லா
வற்றுக்கும் இலங்கை சரியான பாதையில் பயணிக்க வேண்டும். சேனல்-4 காட்டிய நெஞ்சை உறைய வைக்கும் சம்பவங்கள் நடைபெற்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லை தீவு போன்ற இடங்களில் மறுகுடியேற்றம் நடைபெற் றது என்பதை ஏற்க முடியாது.

நான் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற சில ஊடகங்களின் பத்திரிகையாளர் களுடன் யாழ்ப்பாணம் சென்றதின் நோக்கnம், “உறைய வைக்கிற அளவுக்கு அங்கே நடந்த சில சம்பவங்களை வெளிச்சம் போட்டுக் காட்டு வதற்குத்தான். இலங்கையில் பத்திரிகை சுதந்திரம் வேண்டும். அதை இலங்கை அரசு செய் யும் என்று நம்புகிறேன். யாழ்ப்பாணம் சென்றது அங்குள்ள மக்களுக்கு குரல் கொடுக்கவே; உலகத்தின் குரலை தெரிவிக்கத்தான்.அது கேட்கப்பட வேண் டும்” என்று திட்டவட்டமாக டேவிட் கேமரூன் தெரிவித்தார்.

“யாழ்ப்பாணத்தில் உங்களிடம் குறைகளைக் கூறிய தமிழ்மக்கள் இலங்கை இராணுவத்தினரின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு ஆளாவார்களே?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இலங்கை அரசின் பதில் நடவடிக்கையை உல கம் கண்காணிக்கும். அதிகாரிகள் சர்வதேச கருத்தினை மதிப்பார்கள் என்று கருதுகிறேன். தமிழ் மக்களை அவர்களுக்கு உரிய கண்ணியத்துடனும், மதிப் புடனும் இலங்கை மக்கள் நடத்துவார்கள் என்று கருதுகிறேன்”என்று கேம ரூன் உறுதிபட கூறியுள்ளார்.

உலகின் சக்திமிக்க இங்கிலாந்து நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன், இலங் கை அரசுக்கு கெடு விதித்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ராஜபக்சே மட்டுமல்ல, இந்தியாவும்தான்.காமன்வெல்த் மாநாடு முடிந்தவுடன் ராஜபக்சே, “இலங்கைக்கு யாரும் ஆணை யிட முடியாது. நெருக்கடிகளுக்கு பணிந்துவிட மாட்டோம்”என்று கொக்கரித்து இருக்கிறார். காமன்வெல்த் உச்சி
மாநாட்டை கொழும்பில் நடத்தச் செய்து, அடுத்த இரு ஆண்டுகளுக்கு காமன் வெல்த் தலைமைப் பதவியில் ராஜபக்சேவை உட்கார வைத்துவிட்டால், சர்வ தேச அளவில் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக் குற்றங்கள் மறைக்கப்பட்டு, பிரச்சினைகள் நீர்த்துப்போய்விடும் என்று இந்திய அரசு திட்டமிட்டு காமன் வெல்த் செயலாளர் கமலேஷ் சர்மா மூலம் காய் நகர்த்தியது. ஆனால்,கிணறு வெட்ட பூதம் தோன்றியது போல, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், தமிழர் களை நேரில் சந்தித்து, அவர் களின் துயரங்களைச் சர்வதேச அளவில் கொண் டு செல்வோம் என்று பிரகடனம் செய்துவிட்டார்.

கங்கையிலிருந்து புனித நீர் கொண்டுபோய் இராஜபக்சே வின் இரத்தக்கறை களைக் கழுவி, பாவமன்னிப்பு அளித்துவிடலாம் என்று இந்தியா பகல் கனவு கண்டது.ஆனால், பிரிட்டன் பிரதமர் கேமரூன் இந்தியாவின் சதி வலையை அறுத்து எறிந்துவிட்டார். இனி தமிழர்களுக்கு நீதி கிடைப்பதை எந்த சக்தியும் தடுக்க முடியாது.

No comments:

Post a Comment