மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாழும் பெரியார், வரலாற்று
அண்ணா, எங்களின் வழிகாட்டி உலகத் தமிழர்களின் ஒப்பற்றத் தலைவர் #வைகோ அவர்களே,மேடையிலே வீற்றிருக்கின்ற கழகத்தின் முன்னோடி களே,கழகத்தின் கண்மணிகளாம் வைகோவின் வரிப்புலிகளே, உங்கள் அனை வருக்கும் என் பணிவான வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஈழ விடுதலைக்காக தீக்குளித்த தியாகிகளின் திரு உருவப் படங்களை திறந்து வைக்கின்ற அரிய வாய்ப்பினை வழங்கிய கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு மீண்டும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு, ஈழத்தில் நான்காம் ஈழப்போர் உச்சத்தில் இருந்தபொழுது குழந்தைகள், சிறுவர் கள், பெண்கள்,வயதானவர்கள், ஆதரவற்றவர்கள், நிராயுதபாணிகள் என்று எந்தவித பாகுபாடுமின்றி உலகத்திலே தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டு களை வீசி குற்றுயிரும் கொலைஉயிருமாக கொன்று குவிக்கப்பட்ட பொழுது,
தமிழகத்திலே தாய் தமிழகத்து மக்கள் அமைதியாக இருக்கின்றார்களே,ஆர்த் தெழ வில்லையே, அரசாங்கங்களும் கேளா காதினராக இருக்கின்றார் களே, உணர்ச்சி வேகத்தில் 2009 ஆம் ஆண்டு முத்துக்குமார் தனது மேனிக்கு தீயிட் டுக் கொண்டார்.அவரைத் தொடர்ந்து பள்ளப்பட்டி ரவி, சீர்காழி இரவிச்சந்திரன், சென்னை அமரேசன், சிவானந்தம், கடலூர் தமிழ்வேந்தன்,அரியலூர் இராஜ சேகரன், சிவகாசி கோகுலகிருஷ்ணன், மாரிமுத்து,பெரம்பலூர் எழில் வள வன்,புதுக்கோட்டை பாலசுந்தரம்,பண்ருட்டி சுப்பிரமணி, சுவிட்ஸர் லாந்து ஜெனிவாவில் முருகதாஸ்,மலேசியாவில் நஞ்சுண்டு இறந்த இராஜா முகமது, காஞ்சியிலே செங்கொடி, சேலத்தில் விஜயராஜ்,கடலூர் மணி போன்ற எண் ணற்ற தமிழ் உள்ளங்கள் தங்களது மேனியை தீக்கு இறையாக்கினர்.
எந்த நோக்கத்திற்காக, எந்த உணர்வோடு தங்கள் மேனியைத் தீக்கு இறையாக் கிக் கொண்டார்களோ,அதே உணர்வோடு, அதே ஈழ விடுதலைக்காக வன்னிக் காட்டிலே தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரனைச்சந்தித்த நாள் முதல், சாஞ்சி யிலே கொலைகாரன் இராஜபக்சேவை விரட்டி அடித்த நாள் வரை அன்றில்
இருந்து இன்று வரை கொள்கையிலே உறுதியாக ஈழவிடுதலைக்கு பாடுபட்டு வருகின்ற ஒரே தலைவர் நமது தலைவர் வைகோ அவர்கள் மட்டும்தான்.வன் னிக் காட்டுக்கு செல்வதற்கு முன்பாக பாராளுமன்றத்தில் 1983 ஆம் ஆண்டு
வெளிக்கடை சிறையில் குட்டிமணி,ஜெகன் போன்றோர் படுகொலை செய்யப் பட்டு, 56 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டு, எண்ணற்ற தமிழ் மக்கள் கொல்லப் பட்டபொழுது டெல்லியிலே மூன்று நாள் தொடர்ந்து உண்ணா விர தம் இருந்த ஒரே தலைவர் நமது தலைவர் வைகோ அவர்கள்தான்.
1983 இல் தொடர் உண்ணாவிரதத்திற்கு பிறகு பாராளுமன்றத்திலே அந்த பிரச் சனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுது, ஈழப் பிரச்சனைக்காக
பாராளுமன்றத்தில அவர் பணியாற்றிய அந்த பாராளு மன்ற நடவடிக்கை
காலங்களில் 13 முறை ஈழப்பிரச் சனைக்காக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண் டுவந்த ஒரே தலைவர் நமது தலைவர் வைகோ அவர்கள்தான்.கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒரே பிரச்சனைக்கு பாராளு மன்றத்திலே கொண்டு வருவது தனிச் சிறப்பு.அவ்வாறு 1983 ஆம் ஆண்டு இனப்படுகொலை நடந்த பொழுது, இனப் படுகொலையின் தீவிரத்தையும்,அங்கே மக்கள் படுகின்ற அவலத்தையும் சுட்டிகாட்டிப் பேசிய பொழுதுதான், அன்றைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்கள் What is happing in srilanka genoside அங்கே இனப்படுகொலை நடை பெறுகின்றது என்ற கருத்தைப் பதியவைத்தார்.
அதைத் தொடர்ந்து மற்றொரு கவன ஈர்ப்பு தீர்மானத்தைப் பற்றி பேசியபொழு து இலங்கையின் வடக்கிலும்,கிழக்கிலும் இருக்கக்கூடிய தமிழர்கள் அந்த மண்ணின் பூர்வீக குடிகள் என்ற கருத்தினையும் பதிவு செய்த பெருமை நமது தலைவர் வைகோ அவர்களுக்கு மட்டும்தான். அதே போன்று 1985 ஆம் ஆண்டு ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் உரையாற்றுகின்ற பொழுது இதே நிலை
தொடருமானால் தமிழ் ஈழப் போராளிகளை நாங்கள் வரவேற்று இங்கே ஆத ரவு தருவோம்,அவர்களுக்கு மலர் மாலை அணிவிப்போம்,அவர்கள் படைக்கு
ஆட்களைச் சேர்ப்போம்,அவர்களுக்கு பாசறை அமைத்துத் தருவோம் என்று வீர முழக்க மிட்ட தலைவர் நமது தலைவர் வைகோ மட்டும் தான். அதோடு மட்டுமல்லாது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் தனி ஈழம்தான் ஒரே தீர்வாக இருக்க முடியும் என்ற ஒரு உறுதி யான தீர்மானத்தை நிறைவேற்றிய பெருமையையும் நமது தலைவர் வைகோ மட்டும்தான்.
1988 ஆம் ஆண்டு இலண்டனில் ஈழத் தமிழர்களுக்கு மத்தியிலே உரை ஆற்றி னார். 2002 இல் நாடாளுமன்றத்தில் விடுதலைப்புலிகள் மீதான ஒரு விவாதம் வந்தபோது,அங்கே ஆணித்தரமாக விடுதலைப்லிகளை நேற்றும் ஆதரிக்கி றேன். இன்றும் ஆதரிக்கிறேன். நாளையும் ஆதரிப்பேன் என்று கூறி, அதே
கருத்தை திருமங்கலத்திலே பேசிய காரணத்தினால் தமிழக அரசு பொடா சட் டத்தில் அவரைக் கைது செய்து 19 மாதம் சிறையில் அடைத் தார்கள். சிறை யில் இருந்த கால கட்டத்தில் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு தார்மீக ஆதரவு தருவது குற்ற மாகாது என்ற உய ரிய தீர்ப்பைப் பெற்றுத் தந்தவர் நமது தலைவர் வைகோ அவர்கள்.
தமிழ்நாட்டிலே ஈழத்தமிழர்களைப் பற்றி, விடுதலைப்புலிகளைப் பற்றி பேசுவ தற்கு அஞ்சியிருந்த கால கட்டத்தில் அவர் பெற்ற தீர்ப்புதான் மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அந்த தடைகளை நீக்குவதற்கான துணிச்சலைக் கொடுப் பதற்காக அந்த தீர்ப்பு அமைந்தது என்பதை இங்கே நினைவூட்டக் கடமைப் பட்டு இருக்கிறேன். அதன் பிறகு 2010 இல் விடுதலைப் புலிகள் மீதான தடை யை நீட்டித்து உத்தரவிட்டபோது, நான் விடுதலைப் புலியின் ஆதரவாளன் என்று சொல்லி உயர்நீதிமன்றத்திலே அவர்களின் மீதான தடையை நீக்குவ தற்கான மனுவை தாக்கல் செய்த பெருமையும் தலைவர் வைகோ அவர்க ளுக்குத்தான் உண்டு.
2011 ஆம் ஆண்டு பெல்ஜியம் பிரஸல்ஸில் நடைபெற்ற மாநாட்டிலே தனித் தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு அதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று தொடர்ச்சியாக ஈழவிடுதலைக்கு இன்று வரை போராடி வருகின்ற ஒரே தலை வர் நமது தலைவர் வைகோ அவர்கள் மட்டும் தான்.
2012 ஆம் ஆண்டு கொலைகாரன் ராஜபக்சே சாஞ்சி வந்தபொழுது, வடபுலத் தி லே நமது மன்னர்கள் வடபுலத்தை வென்று அங்கே கொடியை நாட்டினார்கள் என்ற வரலாற்றை நாம் படித்ததுபோல, இங்கிருந்து கழகத் தோழர்களை 20 பேருந்துகளில் அழைத்துச் சென்று அங்கே பட்சி சோலையில் 3 நாட்கள் போராட்டம் நடத்தி ராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி காட்டிய பெருமையும் நமது தலைவருக்குத்தான் உண்டு.
சுற்றும் பம்பரம், சுழலும் சூறாவளி, ஏழைகளின் தோழன், பாட்டாளியின் தோழன், ஓய்வறியா உழைப்பாளி,எங்களின் சேகுவாரா, சீடர்களுக்கு மாவோ, தமிழர்களுக்கு வைகோ என்ற தகுதியோடு வலம் வருகின்ற தலைவர் வைகோ அவர்களே, உங்களின் தலைமையில் தமிழ் ஈழம் பிறக்கும். கொடு கோலன் ராஜபக்சே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவான்.
வழக்கறிஞர் கோ.நன்மாறன் இவ்வாறு உரை ஆற்றினார்.
2012 ஆம் ஆண்டு கொலைகாரன் ராஜபக்சே சாஞ்சி வந்தபொழுது, வடபுலத் தி லே நமது மன்னர்கள் வடபுலத்தை வென்று அங்கே கொடியை நாட்டினார்கள் என்ற வரலாற்றை நாம் படித்ததுபோல, இங்கிருந்து கழகத் தோழர்களை 20 பேருந்துகளில் அழைத்துச் சென்று அங்கே பட்சி சோலையில் 3 நாட்கள் போராட்டம் நடத்தி ராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி காட்டிய பெருமையும் நமது தலைவருக்குத்தான் உண்டு.
சுற்றும் பம்பரம், சுழலும் சூறாவளி, ஏழைகளின் தோழன், பாட்டாளியின் தோழன், ஓய்வறியா உழைப்பாளி,எங்களின் சேகுவாரா, சீடர்களுக்கு மாவோ, தமிழர்களுக்கு வைகோ என்ற தகுதியோடு வலம் வருகின்ற தலைவர் வைகோ அவர்களே, உங்களின் தலைமையில் தமிழ் ஈழம் பிறக்கும். கொடு கோலன் ராஜபக்சே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவான்.
வழக்கறிஞர் கோ.நன்மாறன் இவ்வாறு உரை ஆற்றினார்.
No comments:
Post a Comment