Saturday, November 16, 2013

மதிமுக வழக்கறிஞர் மாநாட்டு தீர்மானங்கள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர் மாநாடு இன்று (16.11. 2013 சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் சென்னை, எழும்பூர், வேனல்ஸ் சாலை, இம்ப்பீரியல் வளாகத்தில் உள்ள சிராஜ் மஹாலில் கழகச் சட்டத் துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி. தேவதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இம்மாநாட்டில் கழகப் பொதுச் செயலாளர் #வைகோ அவர்களும், மூத்த வழக்கறிஞர் திரு. கே.எஸ் . தினகரன் அவர்களும் இன்று மாலை சிறப்புரை ஆற்றவுள்ளார்கள். 

இந்த மாநாட்டின் காலை அமர்வில் பின்குறிப்பிட்டுள்ள தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
தீர்மானம் எண். 1


சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்குக!


உரிமையியல் வழக்குகளில் தமிழில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று தமி ழக அரசு 19.01.1982-இல் அரசாணை வெளியிட்டது. ஆனால், 05.01.1994 அன்று கீழமை நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழி யில் இருக்கலாம் என்று R.O.C. No. 3649/92 F  1 என்ற சுற்றறிக்கையை அப் போதைய சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகிய கே.ஏ. சுவாமி வெளியிட்டார். அந்தச் சுற்றறிக்கை காரணமாக கீழமை நீதிமன்றங்கள் தீர்ப்பு களைத் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ வழங்கி வருகின்றன. இந்நிலை மாற்றப்பட்டு அனைத்துத் தீர்ப்புகளும் தமிழில் மட்டும்தான் வழங்கப்பட உயர் நீதிமன்றமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

தமிழக அரசு 06.12.2006 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சென் னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்மொழி அலுவலக மொழியாக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. ஆனால், மத்திய அரசு அத்தீர்மானம் குறித்து எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், உத்திரபிரதேசத்தில் 28.10.1970 நாளிலிருந்தும், பின்னர் பீகார், மத்திய பிரதேசம் மற்றும் இராஜஸ் தானில் அம்மாநிலங்களின் மொழியாகிய இந்தி மொழி அந்த மாநிலங்களின் உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக உள்ளது.

தமிழ்மொழியை சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற தமிழக அரசின் தீர்மானத்தை அமல்படுத்தக் கோரி தமிழக வழக்கறிஞர் கள் பல கட்டப் போராட்டங்களைத் நடத்தி வந்துள்ளனர். தமிழ்மொழியை அலு வல் மொழியாக ஆக்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவலக மொழியாகவும், உயர் நீதிமன்றங்களில் தமிழில் வழக்கு தொடரவும், வாதா டவும் உரிய நடவடிக்கைகளை மாநில அரசும், உயர் நீதிமன்றமும் எடுத்து தமிழகத்தில் உயர் நீதிமன்றம் உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழை அலுவல் மொழியாக்கிட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். 2


உச்ச நீதிமன்ற அமர்வுகளை இந்தியாவின் பிற பாகங்களிலும் நிறுவிடுக!


இந்திய அரசியல் சட்டம் உறுப்பு (Article) 130-இன்படி இந்திய உச்ச நீதிமன்றம் டில்லியிலோ அல்லது இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் வேறு இடங்களிலோ இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வுகளை ஏற்ப டுத்திக் கொள்ளலாம் என்று உள்ளது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் உறுப்பு (Article) 214-இன்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் உயர் நீதிமன்றம் அமைய வேண்டும் என்று உள்ளது. ஆனால், மக்கள் தொகை, பரப்பளவு, வழக் கின் தேக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பம்பாய் உயர் நீதிமன்றம், பம்பாய், நாக்பூர், அவுங்கராபாத் ஆகிய இடங்களிலும், உத்திரப்பிரதேச உயர் நீதிமன்றம் அலகாபாத், லக்னோ ஆகிய இடங்களிலும், மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றம் ஜபல்பூர், இந்தூர், குவாலியர் ஆகிய இடங்களிலும், இராஜஸ் தான் உயர் நீதிமன்றம் ஜோத்பூர், ஜெய்ப்பூர் ஆகிய இடங்களிலும், கல்கத்தா உயர் நீதிமன்றம் கல்கத்தா, போர்ட் பிளேயரிலும், கர்நாடகா உயர் நீதிமன்றம் பெங்க ளூரு, தார்வாட், குல்பர்க்கா ஆகிய இடங்களிலும், தமிழ்நாட்டில் சென்னை உயர் நீதிமன்றம், சென்னை, மதுரை ஆகிய இடங்களிலும் அமர்வுகளைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை 115 கோடிகள் ஆகும். தற்போது இந்திய மக்கள் தொகை 122 கோடியாக உள்ளது. இப்பொழுது உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட முதல் நாடாக உள்ள சீனாவின் மக்கள் தொகை 2030-ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள மக்கள் தொகையை விட குறைந்து இந்தியாவே உலகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக அமையும் என்று புள்ளிவிவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் உச்ச நீதிமன்றத்தில் 31 நீதிபதி பணியிடங்களே உள்ளன. உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நிலுவை யில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வர சராசரியாக 10 முதல் 12 ஆண்டுகள் வரை ஆகிறது. மக்களின் விழிப்புணர்வு காரணமாக ஆண்டுதோறும் தொடரப் பட்ட வழக்குகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. ஆதலால், உச் ச நீதிமன்ற அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். டெல்லி, மும்பை, கோல் கட்டா, சென்னை ஆகிய இடங்களில் உச்ச நீதிமன்ற அமர்வுகள் நிரந்தரமாகச் செயல்பட இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண். 3


சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வுக்கு முதலேற்பு அதிகார வரம்பு (Ordinary Original Jurisdiction) வழங்கிடுக!


மதுரையில் உயர் நீதிமன்ற அமர்வு வேண்டும் என்ற தென்தமிழ்நாட்டு மக்க ளின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டு சென்னை உயர் நீதிமன்றம் (மதுரை நிரந்தர அமைப்பு ஆணை 2004 (The Madras High Court (Establishment of a Perman ent Branch at Madurai) Order 2004) என்ற ஆணை வெளியிடப்பட்டு 24.07.2004 முதல் மதுரையில் உயர் நீதிமன்ற அமர்வு தொடங்கியது. கன்னியாகுமரி, திருநெல் வேலி, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் வழக்கு மூலம் உள்ள உரிமையியல் மேல்முறையீடு, சீராய்வு மற்றும் இரண் டாம் மேல்முறையீடு வழக்குகளையும், குற்றவியல் மேல்முறையீடு, சீராய்வு மற்றும் குற்ற விசாரணை அதிகார வரம்பு (Criminal Jurisdiction) மற்றும் இந்திய அர சியல் சட்டப் பிரிவு 226-இன்கீழ் வரும் நீதிப் பேரணை அதிகாரவரம்பு (Work Jurisdiction) கொண்டதாக உள்ளது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உரிய மூல வழக்கை விசாரிக்கின்ற சாதாரண முதலேற்பு அதிகார வரம்பு (Ordinary Original Jurisdiction) மதுரை உயர் நீதிமன்ற அமர்வுக்கு வழங்கப்படவில் லை. தமிழகத்தில் சென்னை மாநகராட்சிக்குப் பின் மதுரைதான் மாநகராட்சி யாக 1971-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மதுரையின் பரப்பளவு 147.97 சதுர கி.மீ. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மதுரை மாநகராட்சி எல்லைக்குள் 15 இலட்சத்துக்கும் அதிகமானோர் வாழ்கிறார்கள். எனவே, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இருக்கின்ற அதிகார வரம்புகளான சாதாரண முதலேற்பு அதிகார வரம்பு, உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்ட தேர்தல் வழக்குகளை விசாரிக்கின்ற தேர்தல் தீர்ப்பாய அதிகாரம் ஆகியவற் றையும் மதுரை உயர் நீதிமன்றத்திற்கும் வழங்கப்பட வேண்டும். அதற்காக 1927-ஆம் வருடத்திய சென்னை உயர் நீதிமன்ற அதிகார வரம்பு சட்டம் (Madras High Court Jurisdictional Limits Act), 1927 - இல் உரிய திருத்தங்களைக் கொண்டுவந்து அமல்படுத்த வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். 4


சென்னை மாநகராட்சியில் சேர்க்கப்பட்ட புதிய பகுதிகளை சென்னை உயர் நீதிமன்ற நில அதிகார வரம்பில் கொண்டு வருக!


சென்னை உயர் நீதிமன்றம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1862-ஆம் ஆண் டில் தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. உரிமைப் பட்டயம் (Letters Patent) படி சென்னை உயர் நீதிமன்றத்தின் நில அதிகார வரம்பு (Territorial Jurisdiction) சென்னை நகர எல்லைக்குள் அடங்கும். பண அதிகார வரம்பு (Pecuniary Jurisdiction) சென்னை உயர் நீதிமன்றத்திற்கு முதலில் ரூபாய் ஒரு இலட்சத்திற்கு மேல் என்பது ரூபாய் பத்து இலட்சத்திற்கு மேல் என்றாகி தற்போது ரூபாய் 25 இலட் சத்திற்கு மேல் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.

ரூபாய் 25 இலட்சத்திற்கு மேல் மதிப்புள்ள வழக்குகள் சென்னை, உயர் நீதிமன் றத்தின் சாதாரண முதலேற்பு அதிகார வரம்புக்குள் மட்டுமே வரும்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ரூபாய் 25 இலட்சம் மதிப்புள்ள வழக்கிற்கு துண்டு முறை யில் (Slab System) நீதிமன்றக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு கட் டப் படுகின்றது. அதன் அடிப்படையில் ரூபாய் 25 இலட்சம் மதிப்புள்ள வழக்குக்கு ரூபாய் 28,525/- செலுத்தினால் போதுமானது.

சென்னை மாநகராட்சியின் நில அதிகார வரம்பில் சென்னையை ஒட்டி இருக் கும் தற்போதைய திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகள் இணைக்கப்பட்டு 155 வட்டங் களிலிருந்து 200 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. புதிதாகச் சேர்க்கப்பட்ட பகுதியிலிருந்து ரூபாய் 25 இலட்சம் மதிப்புள்ள வழக்கைத் தொடர வேண்டும் என்றால் செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதி மன்றத்திலோ அல்லது திரு வள்ளூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்திலோ தான் தற்போதைய நிலையில் தாக்கல் செய்ய வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றம் தவிர்த்து வேறு நீதிமன்றங்களில் முதலேற்பு வழக்கு தாக்கல் செய்தால் நீதிமன்றக் கட்டணமாக வழக்கின் மதிப்பில் ஏழரை (7-1/2) விழுக்காடு செலுத்த வேண்டும். தற்போது சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட புதிய பகுதிகளில் எழும் வழக்குகளின் மதிப்பு ரூபாய் 25 இலட்சம் என்றால் நீதிமன்றக் கட்டணமாக ரூபாய் 1,87,500/- செலுத்த வேண் டும். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் ரூபாய் 1,87,500/- என்பதும் பிற பகுதிகளில் அதுவே ரூபாய் 28,525/- என்பதும் நியாயமற்றது.

எனவே, புதிதாக சென்னை மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்டுள்ள திருவொற் றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளைச் சென்னை உயர் நீதிமன்றத்தின் நில அதிகார வரம்புக்குள் (Territorial Jurisdiction) கொண்டு வரப்பட வேண்டும். அதற்காக 1927 ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்ற (அதிகார வரம்பு வரையறை) சட்டத்தில் [Madras High Court (Jurisdictional Limits) Act,1927]  உரிய திருத்தத்தைத் தமிழ்நாடு அரசு வரவிருக் கும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண். 5


திருவொற்றியூர், அம்பத்தூர், ஆலந்தூர் நீதிமன்றங்களை அந்தந்த ஊர்களி லே யே செயல்பட அனுமதித்திடுக!


சென்னை மாநகராட்சியுடன் இணைந்துள்ள புதிய பகுதிகளில், திருவொற் றி யூர், அம்பத்தூர், ஆலந்தூர் ஆகிய இடங்களில் மாவட்ட உரிமை இயல் நீதிமன் றங்களும் (District Munsif Courts), குற்றவியல் நடுவர் நீதி மன்றங்களும் (Judicial Magistrate) இயங்கி வருகின்றன. இந்த நீதி மன்றங்களை அந்தந்த ஊர்களிலேயே செயல்பட அனுமதித்தும், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தைப் பெருநகர நடு வர் (Metropolitan Magistrate)   நீதிமன்றங் களாகவும் முதலேற்பு உரிமை இயல் நீதி மன்றங்களை ((District Munsif Courts) நகர உரிமையியல் நீதிமன்றங்களாகவும் (City Civil Courts) மாற்றி அறிவிக்க வேண்டும். சென்னையில் எழும்பூர், ஜார்ஜ் டவுன், சைதாப்பேட்டை பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் இருப்பது போல குற்றவி யல் வழக்குகளை திருவொற்றியூர், ஆலந்தூர், அம்பத்தூரில் அமையவுள்ள பெருநகர நடுவர் நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்யவும், விசாரிக்கப்படவும் வேண்டும். அதுபோலவே அதே இடங்களில் அமையவுள்ள நகர உரிமை யி யல் நீதிமன்றங்களிலேயே அந்தந்த உரிமையியல் நீதிமன்றங்களின் அதிகார வரம்புக்குள் வரும் உரிமையியல் முதலேற்பு வழக்குகளைத் தாக்கல் செய் யவும், விசாரணை செய்யவும் அனுமதிக்க வேண்டும்.

தீர்மானம் எண். 6


சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தை உடனடியாக கட்டுக!


சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் கடந்த 28.07.2007 அன்று நடைபெற்ற விழாவில் இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர் கே.ஜி.பாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்காக அடிக்கல் நாட்டினார். மேலும் இவ்விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அன்றைய சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, மாண்பு மிகு நீதிபதிகள் மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த அன்றைய மாநில சட்டத்துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்பதாக இருந்த அன்றை ய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி கடைசி நேரத்தில் மேடையின் பின் புலத்தில் (back drop) அன்றைய தமிழகமுதல்வர் கலைஞர் கருணாநிதி அவர் களின் பெயர் இடம் பெறாததால் விழாவுக்கு வரவில்லை என்று அதிகாரிகள் மற்றும் காவல்துறை வட்டாரங்களிலிருந்து தெரிய வந்தது.

மேற்படி விழா நடத்தி அடிக்கல் நாட்டப்பட்டு ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் ஒரு செங்கல் எடுத்து வைக்கும் முயற்சியைக் கூட தமிழக அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை. தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதால் எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் புதிய நீதிமன்றக் கட்டங்கள் கட்டுவதற்கு இன்றைய அ.இ.அ.தி.மு.க. அரசு உதாசீனப்படுத்துவதாகவே தெரிகிறது. தமிழக அரசு அரசியல் காரணங் களுக் காக எழும்பூர் நீதிமன்றக் கட்டடப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் புறக்கணிப்பதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதோடு,அடிக்கல் நாட்ட ப் பட்ட எழும்பூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கான நிதி யினை உடனடியாக ஒதுக்கீடு செய்து எழும்பூர் நீதிமன்ற வளாகத்தைக் கட்டு வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இம்மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். 7


தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்க!


பேரறிஞர் அண்ணா, தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி ஏற்றவுடன் சென் னை ராஜ்யம் என்பதை தமிழ்நாடு என்று மாற்றினார். தமிழ்நாட்டின் தலைநக ரான சென்னை, மெட்ராஸ் என்றே அறியப்பட்டு வந்தது. மெட்ராஸ் என்ற பெயரும் 1996-ஆம் ஆண்டு முதல் சென்னை என்று மாற்றப்பட்டது. ஆனால், தமிழகத்தில் செயல்பட்டு வரும் உயர் நீதிமன்றம் மட்டும் மெட்ராஸ்  உயர் நீதிமன்றம் என்றே அழைக்கப்பட்டு வருகின்றது. இந்த உயர் நீதிமன்றம் தனி உரிமை வாய்ந்த உயர் நீதிமன்றம் (Chartered High Court) என்று பெருமை பெற்றது; எனவே, மெட்ராஸ்  நீதிமன்றம் என்றே இருக்க வேண்டும் என்று கூறுவது அர்த்தமற்ற வாதமாகும்.

அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் அம்மாநில உயர் நீதிமன்றம் பெங் களூருவில் இருந்தாலும், அது கர்நாடக உயர் நீதிமன்றம் என்றும்; அதேபோன் று, ஹைதராபாத்தில் உள்ள உயர் நீதிமன்றம் ஆந்திர பிரதேஷ் உயர் நீதிமன் றம் என்றும்; கொச்சினில் உயர் நீதிமன்றம் செயல்பட்டபோதும் அது கேரள உயர் நீதிமன்றம் என்றும் அழைக்கப்படுகின்றன.

மாற்றங்கள் என்பதே மாறாதது. எனவே, மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்று இருப்பது ஆந்திரபிரதேச உயர் நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம், கேரள உயர் நீதிமன்றம் என்று தென்னக நீதிமன்றங்கள் அழைக்கப்படுவதுபோல் தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்றே அழைக்கப்பட வேண்டும் என்றும், அதற் கான உரிய சட்டதிருத்தங்களை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண் டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். 8


வழக்கறிஞர் நல நிதி!


வழக்கறிஞர் நல நிதியைத் தற்போதுள்ள ரூ. 5-1/4 இலட்சத்திலிருந்து தற்போ துள்ள பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு ரூ. 10 இலட்சமாக உயர்த்த வேண்டும் என்றும், அவ்வாறு ரூ. 10 இலட்சமாக உயர்த்தும்போது ஒவ்வொரு வழக்கிலும் தற்போது ஒட்டப்படும் வழக்கறிஞர் நலநிதி முத்தி ரையை ரூ. 30-இலிருந்து ரூ. 40-ஆக உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றும் வழக்கறிஞர் நல நிதியை ரூ. 10 இலட்சமாக உயர்த்தி உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் இம்மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். 9


நீதிபதியின் ஓய்வு பெறும் வயது உயர்த்திடுக!


உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65 ஆகவும், உயர் நீதிமன்ற நீதி பதி களின் ஓய்வு வயது 62 ஆகவும் தற்போது நடைமுறையில் உள்ளது. உச்ச நீதி மன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் இவ்வயதில் ஓய்வு பெறும்போது முதிர்ந்த சட்ட நுணுக்க அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

இதுவரையிலும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகித்த 39 பேர்களுள், 14 பேர்கள், அந்தப் பதவியில் ஓராண்டுகூடப் பணி ஆற்றமுடிய வில்லை. நான்கு பேர், ஒரு மாதம் மட்டுமே தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகித்து உள்ளனர்.

1966 - அமல்குமார் சர்கார் - 105 நாள்கள்
1967 - கோகா சுப்பாராவ் - 285 நாள்கள்
1967 - கைலாஷ்நாத் வாஞ்சு - 318 நாள்கள்
1970 - ஜெயந்திலால் கோட்டலால் ஷா - 35 நாள்கள்
1989 - ஈ.எஸ்  வெங்கட்ராமையா - 181 நாள்கள்
1989 - சவ்யசச்சி முகர்ஜி - 281 நாள்கள்
1991 - கமல்நாராயண் சிங் - 17 நாள்கள்
1992 - லலித்மோகன் சர்மா - 85 நாள்கள்
1997 - ஜெ.எஸ்  வர்மா - 298 நாள்கள்
1998 - மதன்மோகன் புஞ்சி - 264 நாள்கள்
2002 - புபிந்தர்நாத் கிர்பால் - 186 நாள்கள்
2002 - ஜி.பி. பட்நாயக் - 41 நாள்கள்
2004 - ராஜேந்திர பாபு - 30 நாள்கள்
2011 - அல்டாமஸ் கபீர் - 275 நாள்கள்

தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி சதாசிவம் அவர்கள் 19.07.2013-இல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். இவர் வருகின்ற 26.04.2014 அன்று 
ஓய்வு பெற வேண்டும். 9 மாதங்கள் மட்டுமே இவர் பணியாற்ற முடியும். அவ ருக்குப் பின்னர் இந்தப் பொறுப்புக்கு வரவிருக்கின்ற நீதிபதி லோதா அவர் களும், ஐந்து மாதங்கள்தாம் அப்பதவியில் இருக்க முடியும்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பொறுப்பில் இருப்பவர்கள், குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது அந்தப் பொறுப்பில் இருந்தால்தான், நீதித்துறையில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களைச் செய்திட இயலும். உச்சநீதிமன்ற நீதி பதி களின் ஓய்வு பெறும் வயது குறித்து, அரசியல் நிர்ணய சபையில் 24.05.1949 ல் கருத்துத் தெரிவித்த பண்டித நேரு அவர்கள், ‘அமெரிக்க உச்சநீதிமன்றத்தில், 30-40 ஆண்டுகளுக்கும் மேலாக, 92 வயது வரையிலும்கூட நீதிபதிகள் பணி ஆற்றுகிறார்கள். இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதைவிட, நீதித் துறையைப் பொறுத்தமட்டிலும் அனுபவம் வாய்ந்த திறமையாளர்களே தேவை என்பதால், வயதை ஒரு வரம்பாகக் கொள்ளக்கூடாது’ என்றார்.

அமெரிக்காவில் ஃபெடரல் நீதிபதிகளுக்கு ஓய்வு வயது இல்லை. ஆனால், அவர்களது பதவிக்காலம் வரையறுக்கப்படுகிறது. அமெரிக்காவில், மாநிலத் துக்கு மாநிலம் நீதிபதிகளின் ஓய்வு வயது வேறுபட்டாலும், அது 70 முதல் 75 ஆகவே உள்ளது. இங்கிலாந்தில், 75 ஆக உள்ளது.

இந்திய உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பணி குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி வெங்கடாசலய்யா குழு, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 68 ஆகவும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 65 ஆகவும் உயர்த்திட வேண்டும் என, கடந்த 2002 ஆம் ஆண்டு பரிந் துரை செய்தது.தற்பொழுது இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி பணியி டங்கள் 300-க்கு மேல் நிரப்பப்படாமல் உள்ளன. பொதுவாகவே, எந்தவொரு உயர் நீதிமன்றத்திலும் அந்த நீதிமன்றத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட நீதிபதி களின் எண்ணிக்கையில் நீதிபதிகள் இருப்பதில்லை. தமிழகத்தில் உள்ள சென்னை உயர் நீதிமன்றத்தில் நிர்ணயிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை தலைமை நீதிபதியைத் தவிர்த்து 52 ஆகும். ஆனால், தற்பொழுது 46 நீதிபதிகள் தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியில் இருக்கிறார்கள். இந்த நீதிபதி களின் பற்றாக்குறையைப் போக்கவும், அவர்கள் அனுபவத்தையும், சட்ட நுணுக்கத்தையும் மேலும் பயன்படுத்திக் கொள்ளும்படி உயர் நீதிமன்ற நீதிபதி களின் ஓய்வு வயது 65 ஆகவும், உச்ச நீதிமன்ற நீதிபதியின் ஓய்வு வயது 68 ஆகவும் உயர்த்த வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண். 10


உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் குறுக்கிடும் தேசிய நீதித்துறை நியமன ஆணையச் சட்டத்தைத் திரும்பப் பெறுக!


நீதிபதிகள் நியமனத்தில் உச்ச நீதிமன்றம் 1993-ஆம் ஆண்டு 9 நீதிபதிகள் அடங் கிய அமர்வில் நீதிபதிகள் நியமனம் குறித்து வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. இது நாள்வரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பின் அடிப்படையில் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இரண்டு மூத்த நீதிபதிகளின் ஆலோசனையோடு நீதிபதியாக நியமிக்கப்படுவதற்குத் தகுதி யானவர்களைப் பரிந்துரை செய்வார். இது தொடர்பாக பொது அறிவிப்போ அல்லது விளம்பரமோ வெளியிடப்படுவதில்லை.

நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரைக்கப்படும் வழக்கறிஞர்கள் 10 வருடம் வழக் கறிஞராக முறையாகப் பணியாற்றி இருக்க வேண்டும். தகுதியான வழக்கறி ஞருடைய திறமை, ஆளுமை, தகுதி மற்றும் உளவுத் துறையின் ஆய்வறிக்கை பெறப்பட்டு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழுமத்தால் பரிந்துரைக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படும். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத்தில் உள்ள மூத்த நான்கு நீதிபதிகள் குழுமத்துடன் கலந்து ஆலோசிப்பார். பரிந்துரைக்கப்பட்ட வழக்கறிஞர்களை ஏற்றுக் கொள் வதோ அல்லது நிராகரிப்பதோ உச்ச நீதிமன்றக் குழுமத்தின் முடிவாகும்.
அவர் களின் முடிவுக்குப் பிறகு தகுதி வாய்ந்த வழக்கறிஞர்களின் பட்டியல் ஜனாதிபதி அவர்களின் பார்வைக்கு மத்திய அரசின் வாயிலாக அனுப்பப்படும்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பல்வேறு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளை யும், உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகளையும் பரிசீலித்து அவர்களிலிருந்து உச்ச நீதிமன்றத்திற்குத் தேர்ந்தெடுப்பார்கள். உச்ச நீதிமன்றம் தன்னிச்சையாக 10 வருடம் அனுபவம் பெற்ற வழக்கறிஞர்களை நேரடியாக உச்ச நீதிமன்றத் திற் குத் தேர்ந்தெடுக்கும் சிறப்புரிமை அவர்களுக்கு உள்ளது. இதுவரை ஓய்வு பெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, நீதிபதி குல்தீப் சிங் இருவர் மட்டுமே வழக் கறிஞராக இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்பட்டனர். அதன்பிறகு அந்த நடைமுறை இதுவரை பின்பற்றப்படவில்லை. இதுநாள் வரை மூத்த நீதிபதிகள் குழுமம்தான் நீதிபதிகள் நியமனம் குறித்து முடிவு செய் தது. மத்திய அரசு நீதிபதியாக நியமிக்கப்படுகின்ற வழக்கறிஞர்களின் தகுதி பற்றி கேள்வி எழுப்பி திரும்பவும் பரிசீலிக்க நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கும்.

1993-ஆம் ஆண்டு 9 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்பாக நீதிபதிகள் நியமனத்தில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும், மத்திய அரசும் சமமான அதிகாரம் பெற்ற அமைப்புகளாக இருந்தன. இந்திய அரசியல் சட்டத் திலும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்து வழிகாட்டுதல் வழங்கக் கூடிய சட்டப் பிரிவுகள் எதுவும் இல்லை.

தற்போது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய நீதித்துறை நியமன ஆணையச் சட்ட முன்வடிவின் ((National Judicial Appointment Commission Bill) படி நீதிபதிகள் தேர்ந்தெடுக்கும் குழுவில் மத்திய சட்ட அமைச்சர் மற்றும் வேறு துறைகளைச் சார்ந்த திறமைவாய்ந்த இரண்டு வல்லுநர்கள், உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி மற்றும் இரண்டு மூத்த நீதிபதிகள் அங்கம் வகிப்பர். இரண்டு வல்லுநர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவிடம் வழங்கப்படும். மத்திய சட்டத்துறைச் செயலாளர் இந்த ஆணையத்தின் தலைவராக ((Convener) இருப்பார் என்றும் உள்ளது.

புதிய அணுகுமுறை அமலுக்கு வந்தால் நீதிபதிகள் நியமனத்தை ஆறு பேர் அடங்கிய குழு முடிவு செய்யும். தற்போது ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு முடிவு செய்யும். இந்த ஆணையம் செயல்பாட்டுக்கு வந்தால் மூன்று பேர் மட்டுமே நீதிபதிகள். மற்ற மூவரும் அரசியல்வாதி களாக இருப்பார்கள்.

தேசிய நீதித்துறை நியமன ஆணையம் அமைப்பதற்கு வழக்கறிஞர் சமுதாயம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதிகார வர்க்கமும் அரசியல் வாதிகளின் தலை யீடும் நீதிபதிகள் நியமனத்தில் ஆதிக்கம் செலுத்துகின்ற சூழ்நிலை உருவா கும். இது நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள் தலையிடுகின்ற நடவடிக் கை யாக அமையும்.

எனவே, நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய நீதித்துறை நியமன ஆணையச் சட்ட முன்வடிவை (National Judicial Appointment Commission Bill) வலியுறுத்தாது மத்திய அரசு அதைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், தற் போது நடைமுறையில் உள்ள முறையைப் பின்பற்றி உச்ச நீதிமன்ற, உயர் நீதி மன்ற நீதிபதிகளின் நியமனம் தொடர வேண்டும் என்றும் இம்மாநாடு வலியு றுத் துகின்றது.

தீர்மானம் எண். 11


இந்தியாவின் தேர்தல் முறையில் மாற்றம்!


இந்தியாவின் தேர்தல் முறையில் அதிக வாக்குகள் பெறும் வேட்பாளரே வெற் றி பெற்றவராக அறிவிக்கின்ற நிலை ஏற்பட்டு உள்ளது. 60 விழுக்காடுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் பிறருக்கு வாக்களிக்கும்போது 35 விழுக்காடுக்கும் குறைவாக வாக்கு பெற்ற ஒருவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கின்ற நிலை தான் தற்போது நிலவுகிறது. இது முழுமையான மக்களாட்சிக்கு உகந்ததல்ல. சிறுபான்மையினரும், அரசியலில் வேறுபட்ட கருத்து கொண்ட சிறிய கட்சி களும் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இடம் பெற்று அவர்களது நிலைப்பாட்டை எடுத்துரைக்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.

பேரறிஞர் அண்ணா அவர்கள் தேர்தலில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் தேவை என்ற கொள்கையை வலியுறுத்தி வந்தார். அண்ணாவின் கொள்கை நடைமுறைப்படுத்த இந்தியத் தேர்தல் முறையில் விகிதாச்சாரப் பிரதிநிதித் துவம் என்ற அடிப்படையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். 12


விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்குக!


ஈழத்தமிழர்களின் நியாயமான உணர்வுகளைப் பிரதிபலித்து அவர்களுக்கு அரசியலில் சமஉரிமையையும் சுதந்திரமான வாழ்வும் அமைய தனி ஈழம் ஒன்றே தீர்வு என்று தந்தை செல்வா தலைமையில் நடைபெற்ற வட்டுக்கோட் டை மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. அந்தச் சுதந்திரத் தமிழ் ஈழத்தை அடை வதற்காக விடுதலைப்புலிகள் போராடினார்கள். அவர்களது விடுதலை வேட் கையைப் பயங்கரவாதம் என்று சிங்கள அரசு கொச்சைப்படுத்தியது.

உலகில் எந்தவொரு இனமும் தன் உரிமையை நிலைநாட்டிக்கொள்ள அனும திக்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தைப் பின்பற்றி வந்த இந்திய அரசும் விடுதலைப்புலிகளின் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்றே கருதி விடுதலைப்புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பு என்று அறிவித்தும் தமிழ்நாட்டையும் சேர்த்து தமிழ் ஈழம் அமைக்க புலிகள் போராடுவதால் இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து எனப் பொய்க் காரணம் காட்டியும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடை செய்துள்ளது. 

சிங்களவரோடு சேர்ந்து வாழ இயலாத சூழ்நிலை ஏற்பட்ட பின்புதான் தனி ஈழக் கோரிக்கையும், அதற்கான போராட்டமும் விடுதலைப்புலிகளால் முன் னெடுத்துச் செல்லப்பட்டன. ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை இந்தி ய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகளின் மீதான தடை நியாயமற்றது. தமிழகத்தின் ஒரு அங்குல மண்ணைக் கூட தமிழ் ஈழத்தில் இணைக்க புலிகள் முயலவில்லை.

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தமிழகத்தில் கியூ பிராஞ்ச்சைப் பயன்படுத்தி விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள் என்று பொய் வழக்குகள் தொடர்வதையும், அதை அடிப்படையாக வைத்து தமிழக அரசு விடு தலைப்புலிகள் அமைப்பு மீதுள்ள தடையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பதற்குத் துணைபோவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என் றும், விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை இந்திய அரசு உடனடி யாக ரத்து செய்ய வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். 13


தனித் தமிழ் ஈழம் அமைய வேண்டும்!


கடந்த 50 ஆண்டுகாலமாக இலங்கையில் ஈழத் தமிழர்கள் எண்ணற்ற இன்னல் களைச் சந்தித்து வருகின்றனர். தமிழனுக்கென்று தனி நாடும் சிங்களவ னுக் கென்று தனி நாடும் இருந்த இலங்கையில் ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் ஒன் றாக்கப்பட்ட இலங்கையில் 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி சுதந்திரம் வழங்கப்பட்டது. தனித்தனி தேசமாக இருந்த இலங்கையை ஒட்டுமொத்தமாக ஒரே தேசமாக சிங்களவரிடம் ஒப்படைத்தார்கள். காலப்போக்கில் எல்லாம் சரியாகி விடும் என்று தமிழர்கள் எண்ணியிருந்தவேளையில் அவர்கள் இரண் டாந்தரக் குடிமக்களாக்கப்பட்டு சிங்களம் மட்டுமே ஆட்சிமொழியாக்கப்பட்டு அனைத்து நிலைகளிலும் சமஉரிமை இல்லாமல் செய்து, தமிழர்கள் மீது வன் முறை கட்டவிழ்த்து விடப்பட்டு, அப்பாவித் தமிழர்கள் மீது காட்டுமிராண்டித் தனமாகத் தாக்குதல் தொடுக்கப்பட்டு, ஆண்கள், பெண்கள், சின்னஞ்சிறார்கள், வயதானவர்கள் என்ற பாகுபாடின்றிப் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழர் கள் ஈழத் தந்தை செல்வா தலைமையில் காந்திய முறையில் தங்கள் உரிமைக ளுக்காகப் போராடினார்கள்., ஆனால், தமிழர்களை ஒடுக்கி, அவர்களின் கலாச் சாரத்தை அடியோடு அழிக்கத் திட்டமிட்டு சிங்கள அரசு பல அடக்குமுறை களைக் கையாண்டது. சிங்கள அரசு 1957, 1965-இல் போடப்பட்ட ஒப்பந்தங் களைக் குப்பைத் தொட்டியில் போட்டது. இதுகண்டு கொதித்தெழுந்த தமிழர் கள், 1976-ஆம் ஆண்டு மே 14 அன்று ஈழத் தந்தை செல்வா தலைமையில் வட் டுக் கோட்டையில் மாநாடு நடத்தி, அந்த மாநாட்டில் சுதந்திர இறையாண் மையுள்ள தமிழ் ஈழத் தேசத்தை உருவாக்குவது என்று தீர்மானித்தார்கள்.

1981-இல் தமிழர்களுடைய கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை அழிக்கும் நோக்கோடு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் தீக்கிரையாக்கப்பட்டது. வழி பாட்டுத் தலங்கள், கோவில்கள், தேவாலயங்கள் அழிக்கப்பட்டன. 1983-இல் வெளிக்கடைச் சிறையில் கைதியாக அடைக்கப்பட்ட குட்டிமணி, ஜெகன் உள்ளிட்ட 53 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இப்படிப்பட்ட கொடுமைகளைக் கண்டு கொதித்தெழுந்த ஈழத் தமிழ் இளைஞர் கள் ஆயுதப் போராட்டத்தைக் கையில் எடுத்தனர். இளைஞர்கள் தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமையில் வலுவான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை உருவாக்கினார்கள். ஆரம்பத்தில் கொரில்லாப் போர் முறையைக் கையாண்ட இளைஞர்கள் பின்னாளில் தங்களுக்கென்று தரைப்படை, கடல் படை ,வான்படை மற்றும் கரும்புலிகள் படை என்று உருவாக்கி 2001-இல் போர் நிறுத்தம் அறிவிக்கின்ற அளவுக்கு வீறுகொண்டு எழுந்தார்கள். தனி ஈழம் தான் ஒரே தீர்வு என்ற முடிவில் உறுதியாக இருந்தார்கள். எல்லா நிலை யிலும் வலுவாக இருந்த விடுதலைப்புலிகள் இயக்கம் போர் நிறுத்தம் அறி வித்ததோடு தனி ஆட்சிப் பரிபாலனம் செய்து வந்தார்கள்.

இந்தியா உள்ளிட்ட அந்நிய சக்திகளின் துரோகத்தின் காரணமாக நான்காம் ஈழப் போரில் தமிழர்கள் பன்முனைத் தாக்குதலுக்கு ஆளானார்கள். இந்தியா ஆயுதத்தையும் ராடாரையும் வழங்கியதுடன், வல்லரசுகள் வாரி வழங்கிய ஆயுதக் குவியல்களை வாங்கவும், பெரும் பணக் குவியலை வழங்கி தமிழர் களுக்கு எதிராகப் போர் நடத்தி சிறுவர்கள், பெண்கள், ஆடவர், வயதானவர் கள், அப்பாவிகள் என்ற எந்தவிதப் பாகுபாடும் இன்றி அனைவரும் படு கொலை செய்யப்பட்டார்கள்.

1995-ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் இலங் கைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தனித் தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பிரகடனம் செய்தார். தமிழர்களின் 50 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஒரு தொலைநோக்கோடு தீர்மானம் நிறைவேற்றிய பெருமை வைகோ அவர்களையே சாரும்.

தனி நாடு அமைத்து அரசோச்சி வந்த ஈழத் தமிழர்கள் தம் வீடு இழந்து, சுற்றம் இழந்து, நாடு இழந்து ஏதுமற்றவர்களாக - பஞ்சைப்பராரிகளாக நிற்கின்ற இந்த வேளையில் தனித் தமிழ் ஈழம்தான் நிரந்தரத் தீர்வாக அமையும் என்று இம் மாநாடு வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண். 14


தனித் தமிழ்ஈழம் அமைய உலக அளவில் பொது வாக்கெடுப்பு


நான்காம் ஈழப் போருக்குப் பிறகு அசாதாரண சூழ்நிலை இலங்கையில் உரு வாகி உள்ளது. எண்ணற்றோர் படுகொலை செய்யப்பட்டனர். வயது வரம்பு இல்லாமல் சிறுவர் முதல் பெரியோர் வரை பாகுபாடின்றிப் பெருந்துயரைச் சந்தித்தனர். நான்காம் தளம் என்ற விசாரணை அறையில் அடைத்துக் கொடு மைப்படுத்தப்பட்டனர். வெள்ளை வேன் விசாரணைக்கு ஆட்படுத்தப் பட்ட வர் களின் எண்ணிக்கை கணக்கில் சொல்ல முடியாது. அவ்வாறு சென்றவர்கள் மீண்டதில்லை. பாலியல் பலாத்காரத்திற்கு ஆண், பெண் இருபாலரும் ஆளா கினர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். கூட்டாகச் சித்ரவதைக்கு ஆளாகிக் கற் பழிக்கப்பட்டனர். தமிழ்மக்கள் உற்றார் உறவினரை இழந்தனர். வீடுகள் தரை மட்டமாக்கப்பட்டன. நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. பெண்களைக் கட்டாய உறவுக்கு ஆளாக்கி கலப்பினத்தை உருவாக்கி பெரிய கலாச்சாரச் சீரழிவை இலங்கை அரசு ஏற்படுத்தி வருகின்றது.

உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, இருக்க இடமின்றி இன்னலுக்கு ஆளாகியிருக்கும் ஈழத் தமிழர்கள் வாழ்வில் விடியல் ஏற்பட வேண்டும் என்ற பெரும் ஏக்கத்தோடு பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ்  மாநகரில் நடை பெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழ கத்தின் தலைவர் வைகோ அவர்கள் சர்வதேச சமுதாயத்தின் முன்பாக முதன் முதலாக ஒரு கருத்தை முன்வைத்தார். தனித் தமிழ் ஈழம்தான் இலங்கைப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு. அந்தத் தீர்வை எட்டிட பன்னாட்டுச் சமூகத்தின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற வரலாற் றுச் சிறப்புமிக்க கருத்தை வலியுறுத்தினார்.

அந்தப் பொது வாக்கெடுப்பில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பங்கேற்கின்ற வகை யில் அவரவர் வாழும் நாடுகளிலேயே வாக்களிக்க வழிவகை செய்ய வேண்டு மென்ற கருத்தை அனைத்து நாட்டுத் தலைவர்களும் ஒருமனதாக வரவேற்ற னர்.தலைவர் வைகோ அறிவித்த‘பொது வாக்கெடுப்பு’என்ற பிரஸ்ஸ ல்ஸ்  மாநாட்டுப் பிரகடனத்தை இந்த மாநாடு ஒருமனதாக வரவேற்பதுடன் அதை அமல்படுத்தவும் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண். 15


பொதுச் செயலாளருக்கு நன்றி!


தமிழகத்தில் வழக்கறிஞர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படும்போதும் வழக்கறி ஞர்கள் போராட்டம் நடத்தியபோதும் வழக்கறிஞர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து வழக்கறிஞர்கள் போராட்டத்துக்கு ஆதரவாகவே பொதுச் செயலாளர் வைகோ குரல் கொடுத்து வருகிறார்.

பல்வேறு சந்தர்ப்பங்களிலும் வழக்கறிஞர்களுக்குத் தன்னுடைய ஆதரவை என்றென்றும் வழங்கி வரும் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு இம்மாநாடு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், தமிழகத்தில் மறுமலர்ச்சி காண இயக்கம் கண்டு, முல்லைப் பெரியா றில் அணை கட்ட முயலும் கேரள அரசைக் கண்டித்தும், பாலாற்றில் தடுப்பு அணை கட்ட முயலும் ஆந்திர அரசைக் கண்டித்தும், காவிரியில் தமிழகத்தின் நீர் உரிமையை மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், தூத்துக்குடி நாசகார ஸ் டெர்லைட் நச்சு ஆலையை அகற்றக் கோரியும், விடுதலைப்புலிகள் மீதா ன தடையை நீக்கவும், பேரழிவை ஏற்படுத்தும் அணு உலைகளைத் தமிழக த் தில் விரிவாக்கம் செய்யவும் புதிதாக அமைக்கவும் முனைந்துள்ள மத்திய அர சின் முயற்சியை எதிர்த்தும் போராடி வரும் பொதுச் செயலாளருக்கு மறு மலர்ச்சி வழக்கறிஞர்கள் என்றென்றும் உறுதுணையாக இருப்போம் என்றும், நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களின் வெற்றிக்குப் பாடுபட்டு கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் கரத்தை வலுப்படுத்த வழக்கறிஞர்கள் உழைப்பது என்றும் இம்மாநாட்டின் வாயிலாக உறுதி எடுத்துக் கொள்கிறோம்.

‘தாயகம்’                                                        தலைமைக் கழகம்
சென்னை-8                                                  மறுமலர்ச்சி தி.மு.க.
16.11.2013

No comments:

Post a Comment