Sunday, November 10, 2013

தந்தைக்கூட வாக்கு கேட்காத இராமச்சந்திர ஆதித்தனார், வைகோ விற்காக மேடை அமைத்து வாக்கு சேகரித்தார்

தந்தைக்கூட வாக்கு கேட்காத இராமச்சந்திர ஆதித்தனார், #வைகோ விற்காக மேடை அமைத்து வாக்கு சேகரித்தார் 

கடந்த 16.10.2013 அன்று கயத்தாரில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 214 ஆவது நினைவேந்தல் விழாவில் வைகோ ஆற்றிய உரையில் இருந்து....

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களுடைய மூத்த மகன் இராமச்சந்திர
ஆதித்தனார் இன்று காலையில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு உடனே சென் னைக்கு விரைந்தேன். அவரது இல்லத்துக்குச் சென்றேன். நான் அந்தக் குடும் பத்தை மதிப்பவன். அவரது தந்தையை மதிப்பவன். அவரது சகோதரர், கல்வித் துறைக்கும், விளையாட்டுத்துறைக்கும் ஊக்கம் அளித்தார். கைப்பந்து ஆட்டத் தில் இந்தியாவின் புகழை உலக அரங்குக்குக் கொண்டு சென்று நிலை நிறுத்தி னாரே மறைந்த சிவந்தி ஆதித்தனார், அவர்களை நேசிப்பவன்.

இன்று காலையில், இராமச்சந்திர ஆதித்தன் அவர்களுடைய மகன் கண்ணன்
ஆதித்தனைச் சந்தித்துக் கட்டி அரவணைத்து ஆறுதல் கூறினேன். அப்போது அவர் சொன்னார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அப்பா உடல் நலம் குன்றி மூர்ச் சையாகி விட்டார்.அப்போது சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்தபோது,அவரைச் சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை. ஆனால், நீங்கள் வந்து இருக்கின்றீர் கள் என்று அறிந்தபோது, மாடியில் படுக்கை அறைக்கே அழைத்து வரச்சொன் னார். இரண்டு மணி நேரம் என் தந்தையோடு உரையாடிக் கொண்டு இருந்தீர் கள் என்றார். ஆமாம்.நன்றாக நினைவு இருக்கிறது என்றேன். ஒரு செய்தி யைச் சொல்லுகிறேன். இதுவரை எந்த மேடையிலும் சொன்னது இல்லை.

1999 இல், சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் நான் போட்டியிட்டபோது, ஐயா இராமச்சந்திர ஆதித்தனார் அவர்கள், சிவகாசி, விருதுநகர், சாத்தூர்,திருத் தங்கல் மற்றும் முக்கிய ஊர்களில், அவராகவே மேடை அமைக்கச் சொல்லி, பால பிரஜாபதி அடிகளாரையும் மற்றவர்களையும் அழைத்துக்கொண்டு வந்து, தமிழ்நாட்டின் உரிமைகளைக்காக்க வைகோவுக்கு பம்பரம் சின்னத்தில்வாக்கு அளியுங்கள் என்று கேட்டுக் கொண்டார். இதைச் சொன்னவுடன் கண்ணன் ஆதித்தன் திகைத்து, எங்கள் பாட்டனார் போட்டியிட்டபோதுகூட, என் தந்தை யார் மேடை ஏறி ஓட்டுக் கேட்டது இல்லையே?என்றார்.அப்படிப்பட்டவர் எனக் காக ஓட்டுக் கேட்டார். காரணம், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியை மீட்டுக் கொடுப்பதற்காக, பிரதமர் வாஜ்பாய்,நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா ஆகியோ ரிடம் பலமுறை சென்று, இராமச்சந்திர ஆதித்தனார் அவர்கள் முன்வைத்த ஒவ்வொரு கோரிக்கையையும் நான் நிறைவேற்றிக் கொடுத்தேன். அதற்கா கத்தான்,மேடையேறிப் பேசினார்.தியாகச்சுடர் காமராசருக்குக் கன்னியாகுமரி யில் மணிமண்டபம் கட்ட வைகோதான் அனுமதி வாங்கிக் கொடுத்தார்; அவ ரை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அது மட்டும் அல்ல, சுவரொட்டிகளும் அச்சிட்டு,சிவகாசி தொகுதி முழுவதும் ஒட்டு வதற்கு ஏற்பாடு செய்தார்.


ஈழத்தமிழர் படுகொலையை நாளும் நாட்டுக்கு உரைத்தவர்

2008 ஆம் ஆண்டு இறுதியில்,இலட்சக்கணக்கான தமிழ் மக்களைப்படுகொலை
செய்வதற்குக் காரணமான தாக்குதல் நடந்ததே, அப்போது நாள் தவறாமல் மாலை முரசு ஏட்டில் முதல் பக்கத்தில் எட்டுக்காலச்செய்திகளை படுகொலை கள் பற்றிய உண்மைச் செய்திகளைத் துணிந்து வெளியிட்டார். முத்துக்குமார் பற்ற வைத்த நெருப்பை மக்கள் மனங்களில் பரவச் செய்வதற்காகத் தனது ஏட்டைப் பயன்படுத்தினார். ஒவ்வொரு நாளும் தீக்குளித்த தியாகிகளின் வீரச் சரிதத்தை விரிவாக எழுதினார். அதற்காக அவரை மத்திய அரசு மிரட்டியது.பல துறைகளில் இருந்து அச்சுறுத்தல்கள். அன்றைய மாநில அரசும் மிரட்டியது. எதற்கும் அஞ்சவில்லை அவர். தமிழனின் துன்பத்தை நாட்டுக்குச் சொல் வேன்; அதனால் என்ன விளைவுகள் வந்தாலும் எதிர்கொள்வேன் என்றார். அத்தகைய பெருமகனுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு இங்கே வந்து இருக் கின்றேன்.
என்று வைகோ நினைவு கூர்ந்தார் ...

No comments:

Post a Comment