மாமல்லபுரம் மின்வாரிய அலுவலகத்தைத் தரம் உயர்த்துக; தொடர்ந்து அதே இடத்தில் இயங்கி ஆவன செய்திடுக! #வைகோ கோரிக்கை
உலகப் புகழ் பெற்ற பல்லவர்களின் துறைமுகப் பட்டினமாக திகழும் கலை நக ரான மாமல்லபுரத்தை, ஐ.நா. பொதுமன்றம் உலகப் பாரம்பரிய சின்னங்களில் தமிழகத்தின் இரண்டு நகரங்களில் முதன்மையானதாக அறிவித்து உள்ளது.
இங்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால் மத்திய மாநில அரசுகளுக்கு அன்னிய செலாவணியை ஈட் டித்தரும் நகரமாகத் திகழ்கிறது.
இந்நிலையில்தான், தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட் டில் இருந்த மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோவிலை மத்திய தொல்லி யல் துறை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவர, மத்திய அரசின் அறிவிப்பு ஆணையை 20.5.2012 அன்று பத்திரிகையில் விளம்பரப்படுத்தியதைக் கண்டித் து, முதன் முதலாக மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் 30.5.2012 அன்றும் 6.8.2012 அன்றும் 14.11.2012 அன்றும் நான் கண்டன அறிக்கைகள் வெளியிட்டு, மத்திய தொல்லியல் துறையின் மக்கள் விரோதப் போக்கை கைவிட வலியு றுத்தியதோடு 21.11.2012 அன்று எனது தலைமையில் மக்கள் பெருந்திரள் ஆர்ப் பாட் டத்தையும் நடத்தினேன்.ஏனைய இயக்கங்களும் அமைப்புகளும் போராட் டங்கள் நடத்தின. பின்பு ஒன்றாக இணைந்து, மாமல்லபுரம் மக்கள் வாழ்வுரி மை மீட்புக்குழுவை உருவாக்கி, பலகட்ட எழுச்சியான போராட்டங்களை நடத் தியதால், மத்திய தொல்லியல் துறை தலசயனப் பெருமாள் கோயிலை கைய கப்படுத்துவதைக் கைவிட்டுள்ளது.
ஆனால் அதற்கான அரசு ஆணையை இன்னும் வெளியிடாமல், தங்கள் தரப்பு கருத்தினை பத்திரிகை வாயிலாக வெளியிட்டு உள்ளது. இருப்பினும் மறும லர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டதில், தலசயனப் பெருமாள் கோயில் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், தமிழக இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.
இது கட்சி, சாதி, மதம் கடந்து போராடிய மாமல்லபுரம் மக்களுக்கும், போராடிய இயக்கங்களுக்கும் கிடைத்த முதல் வெற்றி. இருப்பினும் 2010 ஆம் ஆண்டு சட்டத்திருத்தம் மூலம் புதிய மின் இணைப்பு, புதிய வீடுகள் கட்ட உள்ள தடை கள் நீக்கப்படும் வரை தொடர்ந்து போராடும் மக்களுக்கு மறுமலர்ச்சி தி.மு. கழகம் என்றும் துணை நிற்கும்.
மாமல்லபுரம் மின் வாரிய இளநிலை பொறியாளர் அலுவலகத்தில், நட்சத்திர உணவு விடுதிகள் மற்றும் கடற்கரை தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள், மக்கள் குடியிருப்பு வீடுகள் என்று 8,400 மின் பயனீட்டாளர்கள் உள்ளனர். சில மணி நேர மின்வெட்டு இருக்கும் இக்காலத்தில் மாதம் 1,63,42,950 (ஒரு கோடி யே அறுபத்து மூன்று லட்சத்து நாற்பத்தி இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது) ரூபாய் வருவாய் மின்சார வாரியத்திற்கு வருகிறது. தோராயமாக ஆண்டுக்கு 18 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. எனவே, சர்வதேச சுற்று லா நகரத்தின் முக்கியத்துவம் கருதி, மாமல்லபுரம் மின்வாரிய இளநிலை பொறியாளர் அலுவலகத்தை, உதவி செயற் பொறியாளர் அலுவலகமாகத் தரம் உயர்த்திட வேண்டும்.
மேலும்,மின்சார வாரியத்திற்கு சொந்தமாகக்கட்டடம் இல்லாமல்,பல ஆண்டு காலமாக தனியார் கட்டடத்தில் வாடகைக்கு இருந்து, கட்டடத்தின் உரிமை யாளர் இடத்தை திரும்பக் கேட்டதின் பேரில், காலி செய்துவிட்டு வெளியே செல்ல வேண்டிய நிலையில், 1996-2001 ஆண்டுகளில் மாமல்லபுரம் பேரூராட் சி மன்றத் தலைவராக மல்லை சத்யா, (மதிமுக) இருந்த போது மின்வாரியத் தின் அவசியத்தை உணர்ந்து, மாமல்லபுரம் நகரத்திற்கு உள்ளேயே பேரூராட் சிக்கு சொந்தமான பழைய கட்டிடத்தை மின்வாரிய பயன்பாட்டிற்கு வாடகைக்கு வழங்கப் பட்டது.
அந்தக் கட்டடம் தற்போது மின்சார வாரியத்தின் போதுமான பராமரிப்பு இல் லாததால் சிதிலமடைந்து, பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லாத நிலையில், அதை சீரமைத்துத் தருமாறு பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு நேரிலும், கடிதம் மூலமாகவும் வேண்டுகோள்கள் விடப்பட்டன. சீரமைக்க இயலாதெ னில், புதிய கட்டடம் கட்டிக் கொடுத்து இருக்கலாம். அல்லது, மின்சார வாரிய மே கட்டடத்தைக் கட்டி, பேரூராட்சித் தரை வாடகை கொடுத்து இருக்கலாம்.
ஆனால், எதுவுமே நடைபெறவில்லை.
தற்போது, மாமல்லபுரத்தில் இயங்கி வரும் மின்வாரிய இளநிலை பொறியா ளர் அலுவலகத்தை, விரைவில் நகரத்தை விட்டு 5 கிலோ மீட்டர் தூரத்தில் பாண்டிச்சேரி செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலை கடும்பாடி ஊராட்சி எல்லைக்கு அருகில் உள்ள மின் பகிர்மான இடத்திற்கு மாற்ற திட்டமிட்டு உள்ளனர். இதனால் பெரிதும் பாதிக்கப்படப் போவது பொதுமக்களே.
எனவே, சுற்றுலா முக்கியத்துவம் கருதி, மின்வாரியத்தின் தரம் உயர்த்தி மாமல்லபுரம் நகரிலேயே தொடர்ந்து இயங்கிட, பேரூராட்சி நிர்வாகத்திற்கும், மின்சார வாரியத்திற்கும் தேவையான ஆலோசனைகளை வழங்கிடவும், புதிய மின் இணைப்பு பெறுவதற்கான தொல்லியல் துறையின் ஆட்சேபனையை விலக்கிக் கொள்ள உரிய நடவடிக்கை எடுத்திடவும் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச்செயலாளர்
05.11.2013 மறுமலர்ச்சி தி.மு.க.
No comments:
Post a Comment