Saturday, November 16, 2013

அணு உலைகள் நாட்டுக்கு வரமல்ல... சாபம்!

பேரறிஞர் அண்ணா அவர்களின் 105 ஆவது பிறந்தநாளையொட்டி, செப்டம்பர் 15 அன்று விருதுநகரில் நடைபெற்ற #மதிமுக மாநாட்டில், “அணு உலை பேர ழிவு” என்ற கண்காட்சியைத் திறந்து வைத்து அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் டாக்டர் ரொஹையா ஆற்றிய உரை...

தலைவர் அவர்களுக்கும், மேடையில் அமர்ந்திருக்கும் கழக முன்னோடிகளுக் கும், மாநாட்டில் கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் என் அன்பு காலை வணக்கம்.

அணு உலை விபத்தால் மனிதர் களுக்கும், இயற்கைக்கும் ஏற்பட்ட பாதிப்பு களை பேரழிவுகளை புகைப்படக்கண்காட்சியாக நாம் மாநாட்டில் வைத்தி ருக் கிறோம். அணு உலை விபத்தால் மனிதர்களுக்கு உடல் ரீதியாக மனரீதியாக ஏற்படும் பிரச்சினை களை உடனே பார்ப்பவர்கள் மருத்துவர்கள்தான். உடனி ருந்து பார்ப்பவர்களும் மருத்துவர்கள்தான்.ஒரு மருத்துவராக நீ பார்த்த உண் மைக் காட்சிகளை, ஒரு மருத்துவராக உண்மை செய்திகளை உலகத்திற்கு
சொல் என்று விருதுநகருக்கு என்னை அழைத்திருக்கிறார் நமது தலைவர்
வைகோ அவர்கள்.

நானும் பல உண்மை செய்திகளோடு உங்கள் முன்னால் நிற்கிறேன்.நண்பர் களே, அணு உலைகள் நம் நாட்டுக்கு வரமா? சாபமா? முடிவை நான் பிறகு சொல்கிறேன். உலகத்தில் இருக்கும் எல்லா அணு உலைகளும் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்பட்டு வருகின்றன. 1987 க்குப் பிறகு அமெரிக்காவும், ரஷ் யாவும் தங்கள் நாட்டில் எந்த புது அணு உலைகளையும் வைக்கவில்லை. 2020க்குள் ஜப்பானும்,ஜெர்மனியும் தன்னிடம் இருக்கும் அணு உலைகளை யெல்லாம் மூட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறது. ஏன் உலகத்தில் இருக்கும் அணு உலைகளெல்லாம் மூடப்பட்டு வருகின்றன.விபத்துகள் தான் நண்பர்களே.

உலகத்திலேயே மிகப்பெரிய அணு உலை விபத்து செர்னோபில் அணு உலை விபத்துதான். விபத்து நடந்து இருபத்தைந்து வருடங்கள் ஆகிவிட்டன. இது வரைக்கும் அணு உலையில் இருந்து வெளிவந்த கதிர் வீச்சால் நீயுகிளியர் ரேடியேசனால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 10 இலட்சம். அப்படி யென்றால் அதன் தாக்கம் எவ்வளவு தூரம் இருந்தது என்று ரஷ்ய அரசு
சொல்லியது. அணு உலை விபத்தில் இருந்து 1 இலட்சம் ஸ்கொயர் கி.மீ.க்கு
பாதிப்பு இருந்ததாக பதிவு செய்து இருக்கிறது.



விபத்திற்கு பிறகு அணு உலையை சுற்றியிருக்கும் பகுதிகளில் பிறக்கும் குழந் தைகள் எல்லாம் வித்தியாசமான குழந்தைகளாக,வித்தியாசமான முக அமைப் புடன்தான் பிறந்துகொண்டு இருக்கிறார்கள். குழந்தையும் தெய்வமும் ஒன்று தான் என்று சொல்கிற அந்தக் குழந்தைகளுக்கு பேய்க் குழந்தைகள் என்று பெயர் வைத்திருக்கிறது. இன்னும் சில குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்க லாம்? அதற்கு என்ன மருத்துவ உதவி செய்யலாம்? என்ன பெயர் வைத்து அழைக்கலாம் என்று மருத்துவ உலகம் தடுமாறிக்கொண்டு இருக்கிறது. அத்த னைப் படங்களையும் நாம் இங்கே கண்காட்சியில் வைத்து இருக்கிறோம்.

கண்காட்சியைப் பார்த்த பிறகு நிச்சயமாக உங்களுக்கு அணு உலையால் என் னென்ன ஆகும் என்று ஒரு அச்சம் ஏற்படும். கூடங்குளத்தில் பூகம்பமோ, சுனா மியோ வந்தால் நிச்சயமாக அணு உலையில் விபத்து வரும்.

கூடங்குளம் அணு உலையில் விபத்து வந்தால் பாதிப்பு இடிந்தகரைக்கு மட்டு மா? இல்லை நண்பர்களே, முன்பே நான் சொன்னேன் அல்லவா, 1 இலட்சம்
ஸ்கொயர் கி.மீ.க்கு பாதிப்பு இருக்கும் என்று. தமிழகத்தின் மொத்தப்பரப்பளவே 1 இலட்சத்து 30 ஆயிரம் ஸ்கொயர் கி.மீதான். அப்படி யென்றால் தமிழகத்திற்கு 80 சதவிகிதம் பாதிப்பு ஏற்படும். 6 கோடி மக்களுக்கு இதன் பாதிப்பு இருக்கும்.

நமது முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் “கூடங்குளம் அணு உலை
பாதுகாப்பானது. ரஷ்ய விஞ்ஞானம்,ரஷ்ய தொழில் நுட்பம், அதனால் பாது காப்பு” என்று சொல்கிறார்.அப்படியே வைத்துக் கொள்வோம்.இரண்டு மாதத் திற்கு முன்னால் மும்பையில் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று வெடித்து சிதறிவிட்டது. அந்தக் கப்பலில் இருந்த 20 அதிகாரிகள் அந்த இடத்திலேயே இறந்துபோனார்கள். இன்றைக்கு வரைக்கும் அவர்களின் உட லை கண்டுபிடிக்க முடியவில்லை. என்ன ஆயிற்று? ஏன் வெடித்தது அந்தக்
கப்பல்? நண்பர்களே, கவனமாகக் கேளுங்கள்.

அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் ரஷ்ய தொழில்நுட்பத்தோடு, ரஷ் ய விஞ்ஞானிகளால் உருவாக்கப் பட்டது. இருபத்தைந்து வருடத்திற்கு முன் னால் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங் கிய கப்பல். இன்று வெடித்து சிதறி விட்டது. எப்படி நம்புவது ரஷ்ய தொழில் நுட்பத்தை. இந்த விபத்து நடந்த மறுநாள் செய்தியாளர்கள் கேட்டார்கள். 120 கோடி மக்கள் இருக்கும் நம் தேசத்தின் பிரதமரிடம் கேட்டார்கள். இப்படி ஒரு விபத்து நடந்திருக்கிறது. ரஷ்ய தொழில்நுட்பம்,ரஷ்ய விஞ்ஞானிகளால் உரு வாக்கப் பட்ட நீர்மூழ்கி கப்பல் வெடித்துச் சிதறிவிட்டதே. இதற்கு என்ன கார ணம்? இதனால் கூடங்குளம் அணு உலைகள் மூடுவதற்கு வாய்ப்பு இருக்கிற தா என்று கேட்டார்கள்.

ஒன்பது வருடம் இந்தியாவிலேயே என்ன நடக்கிறது என்று தெரியாமல் வாயே திறக்காத பிரதமர் அன்று வாய் திறந்து பேசினார். முடியாது. கூடங் குளம் அணு உலையை மூட முடியாது என்று சொன்னார். 17 ஆயிரம் கோடி ரூபாய் நாங்கள் செலவு செய்துவிட்டோம். அணு உலையை மூட முடியாது என்று சொன்னார். யாருடைய பணம்.உங்களின் பணமா? உங்கள் காங்கிரஸ்
கட்சியின் பணமா? மக்களின் பணம்.அது எங்களின் பணம். நாங்கள் கஷ்டப்
பட்டு, சம்பாதித்து, கிடைக்கிற வருமானத்திற்காக பலவகை வரி மூலம் நாங் கள் கொடுத்த பணம்தானே அது.இதற்கு கூடங்குளம் அணு உலைதான் பரிசா?

எதிர்கால இந்தியா இளைஞர்களின் கையில் என்று சொன்னார்கள். அணுக்
கழிவில் இருந்து அணுகுண்டுகள் தயாரிப்பதற்கு அணு உலைகளை வைத்து விட்டு, பிறக்கின்ற குழந்தை களையெல்லாம் உடல் ஊனமுற்ற குழந்தை களாக, மரபணுக்களின் கோளாறுகளோடு பிறக்க வைத்துவிட்டு இந்தியாவை எப்படி வல்லரசு நாடாக்க முடியும்.

கழகத் தோழர்களே, நீங்கள் பொருத்தது போதும். வரப்போகிறது நாடாளுமன் றத் தேர்தல். வரப்போவது நாடாளுமன்றத் தேர்தல் இல்லை. நம் இந்தியாவை, நம் தேசத்தை காங்கிரஸ் பிடியில் இருந்து விடுவிக்கும் இரண்டாம் சுதந்திரப் போர்.போருக்குத் தயாராகுங்கள். தேர்தல் களத்தில் வேண்டுமானால் ம.தி. மு.க.தோற்றுப் போயிருக்கலாம், வெற்றி வாய்ப்பை இழந்திருக்கலாம் கடந்த
காலங்களில். ஆனால், போரில் நாம் தோற்கமாட்டோம். தலைவர் ஒரு சமூ கப் போராளி. போராளிகள் போரில் தோற்க மாட்டார்கள். எனவே தோழர்களே, அணு உலைகள் நம் தேசத்திற்கு வரமல்ல,

சாபமே என்று கூறி விடைபெறுகிறேன்.

நன்றி.

டாக்டர் ரொஹையா இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment