Wednesday, November 6, 2013

பொன்னியின் செல்வன் வைகோ திறனாய்வு -பாகம் 3

பொன்னியின் செல்வன் #வைகோ திறனாய்வு

தக்கோலப் போர்

இந்த வீர நாராயணம் ஏரி, கடல்போல் இருக்கிறது. இந்த ஏரியை அமைத்த பராந்தகச் சக்கரவர்த்தியின் வீர மைந்தன் இளவரசர் இராஜதித்தயர் என்று, முதல் அத்யாத்திலேயே இராஜதித்தயரின் தக்கோலப் போரைப் பற்றிச் சொல் கிறார்.

வீரநாராயணம் என்று இந்த ஏரிக்கு எப்படி பெயர் வந்தது. பராந்தகச் சோழனின் பல பெயர்களில் ஒன்றான வீரநாராயணன் என்ற பெயரை சூட்டுகிறார். ‘தக் கோலப் போர்’ சோழர்கள் வரலாற்றிலேயே மிகப் பிரசித்திப் பெற்ற யுத்தம். அப்போது சோழர் குலம் கொஞ்சம் புகழ் மங்கி இருந்த காலம். பல்லவ மன்ன னுக்குத் துணையாகச் செல்கிறபோது, அரக்கோணத்துக்கு அருகில் தக்கோ லம் என்ற இடத்தில், சோழப் படைகளுக்கும், இரட்டை மண்டலத்து படைக ளுக் கும் பயங்கர யுத்தம் நடந்தது. இரட்டை மண்டலத்துக் கன்னரதேவன் பெரும் படையுடன் மோதினான்.

கடல்போன்ற அவனது படையை எதிர்த்து, இராஜதித்தயர் செல்கிறார். வெற்றி மேல் வெற்றி பெறுகிறார். அவர் வாள் வீசுகிற இடங்களில், எதிரிகளின் தலை கள் பறக்கின்றன. வெற்றிக்கொடி நாட்டுகிறார். புலிக்கொடி முன்னாலே செல் கிறது.

அப்போது, எதிரிப் படைகளில் வந்த கங்கநாட்டு மன்னன் பூதுகன் வஞ்சகமாக வெள்ளைக்கொடி தாங்கி, யானை மீது வருகிறான். எதற்கு வருகிறான்? சண் டைக்கா? சமாதானத்திற்காகவா? என்று இராஜதித்தயர் திகைக்கிறார். யானை யை அருகில் விடுகிறார்கள் மெய்க்காவலர்கள். அவன் முதலில் கைகூப்பிப் கும்பிடுகிறான். சேக்கிழார் பெருமான் சொன்னார் அல்லவா?

‘மைபொதி விளக்கே அன்ன மனதினில் கருப்பு வைத்து
கைதனில் படைசரந்த புத்தகக் கவளி ஏந்தி புகுந்தனன் முத்தநாதன்’

என்று மெய்ப்பொருள் நாயனார் புராணத்தில், அதைப்போல அருகில் வந்து வணக்கம் செலுத்திவிட்டு, வில்லை வளைத்து விஷம் தோய்ந்த பாணத்தை தொடுக்கிறான்.

இராஜதித்தயர் மார்பை ஊடுருவுகிறது அம்பு. அந்த யானையின் மீதே இராஜ தித்தயர் விழுகிறார். இது தக்கோலத்தின் போர்க்களக் காட்சி.

அந்த இராஜதித்தயரின் உடன்பிறந்த சகோதரர்தான் அரிஞ்சய சோழர். அவரு டைய இன்னொரு சகோதரர்தான் கண்டராதித்தன். இன்னொரு தம்பிதான் அழ கில் மன்மதனைப் போன்றவர் என்று கல்கி வர்ணித்த சுந்தரச்சோழர்.

கண்டராதித்தன் சிவஞானச்செல்வர். அவர் முழுக்க முழுக்க சிவாலாய வழி பாட்டிலேயே இருக்கிறார். அரசாளும் ஆசை இல்லை. எனவேதான் கண்டார தித்தன் ஆட்சிப்பொறுப்பிலே இருக்கிறபோதே, அப்போது அரிஞ்சய சோழர் மன்னர் ஆனார். சுந்தரச்சோழர் இளவரசரைக் கொண்டுவந்து பட்டம் சூட்டு கிறார் மன்னர் கண்டராதித்தர். பராந்தகச் சக்கரவர்த்தி விருப்பப்படி அரிஞ்ச யருக்குப் பட்டம் சூட்டுகிறார். அவர்களுக்குப்பின் சுந்தரச்சோழரும், அவர் வழிப்பிள்ளைகளும்தான் பட்டத்துக்கு வரவேண்டும் என்று சொல்கிறார்.

ஆதித்த கரிகாலனின் ஓலை

சுந்தர சோழருடைய பிள்ளைகளில் மூத்தவன்தான் ஆதித்த கரிகாலன். இரண் டாவது பிள்ளை அருள்மொழிவர்மன். இந்தக் கதை ஆரம்பிக்கிறபோது, காஞ்சி யில் இருக்கிற ஆதித்த கரிகாலனிடம் இருந்து வந்தியத்தேவன் ஓலை கொண் டு வருகிறான். ‘பொன் மாளிகை கட்டி இருக்கிறேன்; தந்தை சுந்தரச்சோழர் காஞ்சிக்கு வரவேண்டும்’ என்று அழைப்பு விடுக்கிற கடிதத்தை, ஆதித்த கரிகா லனிடம் இருந்து வந்தியத்தேவன் சுந்தரச்சோழச் சக்கரவர்த்திக்குக் கொண்டு வருகிறான். இன்னொரு கடிதம் - கரிகாலன் தன் தமக்கை குந்தவைப் பிராட் டிக்கு தந்தது’ எந்தக் காரியத்தையும் வந்தியத்தேவனிடம் நம்பி ஒப்படைக் கலாம் நீ பயன்படுத்திக்கொள்” எனும் கடிதம்.

கடம்பூர் சதி

முதல் அத்தியாயமே, சதி ஆலோசனை நடக்கிற இடத்தைத்தான் விவரிக்கி றது. அந்த இரவிலே, கடம்பூர் சம்புவராயர் மாளிகையிலே சதி ஆலோசனை நடக்கிறது. சம்புவராயர் மகன் கந்தமாறனுக்கு வந்தியத்தேவன் நண்பன். ஒரு சேர வாள் வீசியவர்கள். ஆகவே அவன் வந்தான். அங்கே சதி ஆலோசனை நடக்கிறது. சோழ நாட்டின் குறுநில மன்னர்கள், சக்கரவர்த்திக்கு உடன் இருக் கிற மன்னர்கள், இருகூறாகப் பிரிகிறார்கள். பழுவேட்டரையர்கள், சம்புவராயர் கள், மழபாடியாரும் மற்றவர்களும் ஒன்று சேர்ந்து, கண்டராதித்தன் பிள்ளை மதுராந்தகத் தேவருக்கு முடிசூட்ட வேண்டும். அதுதான் பட்டத்து உரிமை. சுந் தரச் சோழரின் பிள்ளைகள் பட்டத்திற்கு வரக்கூடாது என்று அங்கே சதித்திட் டம் வகுக்கப்படுகிறது.

இதுதான் முதல் காட்சி.

இப்படி எடுத்த எடுப்பிலேயே முதலில் இந்த சதி ஆலோசனைக் காட்சியை மறைத்திருந்து பார்த்துவிட்டு, அங்கு இருந்து வந்தியத்தேவன் வருகிறான். வந்தியத்தேவன் மாவீரன். அகட விகட சாமர்த்தியம் அனைத்தும் கொண்ட வன். இந்த நவீனத்தைப் படிக்கிற போது எந்த அளவுக்கு அதில் நகைச்சுவை உணர்வைக் காட்டுகிறார் கல்கி என்று படித்தால்தான் தெரியும். எந்த இடத்தி லேயும் பேசுகிறபோது வந்தியத்தேவனின் பதில் அவ்வளவு அற்புதமாக இருக் கும்.

தொடரும் .....

பொன்னியின் செல்வன் வைகோ திறனாய்வு -பாகம் 2

No comments:

Post a Comment