Saturday, November 23, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 1

பட்ஜெட் இங்கே! ஈரோடு - செங்கோட்டை புதிய இரயில் எங்கே?

#மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி மக்களவையில் 07.07.
2009 அன்று இரயில்வே பட்ஜெட் குறித்த விவாதத்தில் பங்கேற்று ஆற்றிய உரை...

இரயில்வே பட்ஜெட் குறித்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்று வதற்கு வாய்ப்பளித்த அவைத் தலைவர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து,உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் வைகோ அவர்களின் தலைமையில் இயங்கு கின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக என்னுடைய உரையை நிகழ்த்துகிறேன்.

மத்திய அமைச்சர் 57 புதிய இரயில்களையும், ரூ. 2921 கோடி மதிப்பில் புதிய வழித்தடங்களை உருவாக்கவும், ரூ. 1750 கோடி மதிப்பில் அகலப்பாதை வழித் தடங் களாக மாற்றுவதற்கான திட்டத்தினையும், ஒரு நகரத்திலிருந்து அடுத்த நகரத்திற்குச் செல்லும் பாதையில் எங்கும் நின்று செல்லாத சிறப்பு இரயில் களை அறிமுகப்படுத்து வதற்கும், குறிப்பாக சென்னையிலிருந்து எங்கும் நில் லாமல் நேரடியாக டெல்லி செல்வதற்கு சிறப்பு இரயிலை இயக்கவும் திட்ட மிட்டு உள்ளதாக இரயில்வே நிதிநிலை அறிக்கை தெரிவிக்கிறது.

மத்திய அமைச்சர் உலக தரத்திற்கு ஒப்பிடத்தக்க வகையில் ஐம்பது இரயில்
நிலையங்களை மேம்படுத்தத் திட்டமிட்டு இருக்கின்ற வேளையில் அந்தப் பட்டியலிலே தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூர், ஈரோடு இரயில் நிலையங் களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பயணிகளுக்கான கட்டணத்தையும்,சரக்கு போக்குவரத்துக் கட்டணமும்
உயர்த்தப்பட வில்லை. மத்திய அமைச்சர் 57 புதிய இரயில்களை அறிமுகப் படுத்தி இருக்கின்றார். அதில் கோயம்புத்தூரிலிருந்து சோரனூர் செல்லுகின்ற தினசரி பாசஞ்சர் இரயிலும் ஒன்றாகும். அதை ஈரோடு வரைக்கும் நீட்டிக்க வேண்டும்.


சமூகநீதிப் பாதுகாவலர் ஈ.வெ. ராமசாமி பெரியார் பிறந்த மண் ஈரோடு ஆகும்.
தமிழ்நாட்டிலே ஜவுளி விற்பனை மையமாகவும், தொழில் வளத்திலும், விவ சாயத்திலும் வளர்ந்திருக்கின்ற மாவட்டமாகவும் ஈரோடு திகழ்கின்றது.

ஆன்மிகத் தலங்களில் இருக்கக் கூடிய 50 இரயில் நிலையங்களில் வணிக வளாகம் நிறுவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் ஈரோடு மாவட் டத்திலுள்ள கொடுமுடியில் தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வரு டம் முழுவதும் மக்கள் ஆன்மிகப்பயணம் மேற்கொள்கின்றனர். எனவே,கொடு முடியிலும் வணிக வளாகம் நிறுவிட உரிய அனுமதி வழங்க வேண்டும்.

காய்கறி மற்றும் பழங்களைச் சரக்கு வாகனங்களில் தரத்தோடு ஏற்றுவதற்கு
வசதியாக அவற்றைப் பாதுகாத்து வைக்கக் கூடிய குளிர்பதன வசதியோடு கூடிய சரக்கு மையத்தை ஈரோட்டில் உருவாக்கிட வேண்டும் என்கி ன்ற கோரிக்கையை இரயில்வே அமைச்சர் பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

மாத வருமானம் ரூ. 1,500/-க்கு மிகாமல் இருக்கக் கூடிய அமைப்பு சாரா தொழி லாளர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவக் கூடிய வகையில் 100 கி.மீ.தூரத்திற்கு உட்பட்ட பயணத்திற்கு ரூ.25/-இல் மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்க “இஸாட்” திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ளது.மத்திய அமைச்சர் மேற்கண்ட திட்டத்தில்
வருமான வரம்பை ரூ. 1,500/-லிருந்து ரூ.3,000/-க்கு உயர்த்திட வேண்டுமென்று
கேட்டுக் கொள்கிறேன்.

ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர்நகரங்களில் ஜவுளி உற்பத்தி முக்கிய
பங்கு வகிப்பதால் இந்தப் பகுதியில் பயணிகள், பயண நெருக்கடியையும் அதி கம் சந்திக்கிறார்கள். எனவே,திருப்பூர் வழியாக ஈரோடு, கோயம்புத்தூர் வழித் தடத்தில் மின்சார இரயிலை அறிமுகப்படுத்த வேண்டும்.பயணிகளுக்கு இந்த வசதி பயனுள்ளதாகவும், அத்தியாவசியத் தேவையாக வும் உள்ளது. இரயில் வேக்கு இந்தத் திட்டம் ஆதாயம் தரக்கூடியதாக அமையும்.

ஈரோடு இரயில் நிலையத்தில் முன்பதிவு செய்வதற்கு ஆறு மையங்கள் உள்ள
போதும் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாகப் பதிவு செய்வதற்கு மிகவும்
தாமதமாகிறது. இதனால், பயணிகளுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன.

ஈரோடு-பழனி இடையே புதிய இரயில் வழித்தடம் அமைக்க உத்தேசிக்கப்பட்டு
அது சம்பந்தமாக ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தை நிறை வேற்றுவதற்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுகிறேன்.

ஈரோடு-கரூர் மார்க்கத்தில் ஊஞ்சலூர் இரயில் நிலையம் உள்ளது. அந்த இர யில் நிலையத்தில் பாசஞ்சர் இரயில்கள் மட்டுமே நிற்கின்றன. அப்பகுதியி லுள்ள மக்கள் அந்த வழித்தடத்திலே பயணிக்கின்ற விரைவு இரயில்களையும்
ஒரு சில மணித் துளிகள் நிறுத்திச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

பயணிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப,வண்டி எண். 1063/1064 சென்னை-சேலம் இடையே பயணிக்கின்ற இரயிலை ஈரோடு வரை நீட்டிக்க வேண்டும்.

வண்டி எண். 573/574 சேலம்-பெங்களூர் இடையே பயணிக்கின்ற இரயிலை ஈரோடு வரை நீட்டிக்க வேண்டும். 

வண்டி எண். 885/886 ஈரோடு -ஜோலார்பேட்டை இடையே பயணிக்கின்ற இரயி லை சென்னை சென்ட்ரல் வரை நீட்டிக்க வேண்டும்.

வண்டி எண். 6344/6345 அமிர்தா எக்ஸ்பிரஸ் பாலக்காடு-திருவனந்தபுரம் வழி யாகப் பயணிக்கின்ற இரயிலை ஈரோடு வரை நீட்டிக்க வேண்டும்.

புதிதாக உருவாக்கப்பட்ட சேலம் கோட்டத்தில் அக்கோட்டத்திற்கான ஒரு
மருத்துவ மனையை ஈரோட்டில் அமைத்திட வேண்டும். அவ்வாறு அமைக் கின்ற மருத்துவமனை ஈரோடு இரயில் நிலையத்தில் ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கின்ற இரயில்வே மருத்துவமனையோடு சேர்த்து உருவாக்கிட வேண்டும்.

ஈரோடு-செங்கோட்டை மார்க்கமாக புதிய இரயிலை அறிமுகப் படுத்துவதற் கு கடந்த பட்ஜெட்டிலே அறிவித்தபோதும், இன்று வரை செயல் படுத்த வில் லை.அதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க வேண்டும்.

அ.கணேசமூர்த்தி எம்.பி. இவ்வாறு உரையாற்றினார்

No comments:

Post a Comment