Sunday, November 10, 2013

வஞ்சினம் உரைப்போம்!

சங்கொலி தலையங்கம் 

இங்கிலாந்து நாட்டின் லண்டன் சேனல்-4 தொலைக்காட்சி இன்னும் என்னென் ன காணொளி காட்சிப் படங்களை ஒளிபரப்பி தமிழர் இதயத்தில் எரியீட்டியை
பாய்ச்சுமோ என்று கண்ணீர் விடுகிறது தமிழ் இனம். சேனல்-4 தொலைக் காட் சி நவம்பர் 1 ஆம் நாள் ஒளிபரப்பிய காணொளி காட்சியைப் பார்த்தவர்கள் எல் லாம் கண்ணீர்க் கடலில் மூழ்கினார்கள். தமிழ்ச் சமுதாயத்திற்கு இத்தகைய துயரம் இனி நேரக்கூடாது. நாகரிகத்தின் தொட்டிலாகத் திகழ்ந்த தொன்மை மிக்க தமிழ்க்குலத்தின் தாரகை ‘ஷோபா’ எனும் இசைப்பிரியா, சிங்கள காடை யர்களால் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சித்ர வதை செய்யப்பட்டு, படுகொலையாகிக் கிடக்கும் காட்சிகள் தமிழர் நெஞ்சில்
மட்டுமல்ல, அதைப் பார்க்கும் மனித சமூகத்தைச் சேர்ந்த அனைவர் நெஞ்சி லும் எரிமலை வெடிக்கும்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வானொலி மற்றும் ஊடகப் பிரிவில் பணிபு ரிந்த இசைப்பிரியா, 27 வயது இளம்பெண். சிறந்த பாடகியான அவர், மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களின் பேரன்புக்கு பாத்திரமானவர். முள்ளிவாய்க் கால் இறுதிக்கட்டப் போரின்போது, இசைப்பிரியா சின்னாபின்னமாக்கப்பட்டு,
பிணமாகக் கிடக்கும் காட்சியைச் சேனல்-4 தொலைக்காட்சி முன்பு ஒளிபரப்பி யது.அப்போது சிங்கள அரசு, போரின்போது இசைப்பிரியா கொல்லப்பட்டுவிட் டார் என்று இதுவரை கூறி வந்தது.ஆனால்,ராஜபக்சே கும்பலின் கூற்று பொய் என்பதை சேனல்-4 தொலைக்காட்சி ஆதாரப்பூர்வமாக மெய்ப்பித்துள்ளது. 
வயல்வெளி போன்ற பரந்த நிலப்பரப்பு வழியாக தப்பிச்செல்ல முயன்ற இசைப்பிரியாவை இலங்கை இராணுவ கொலை வெறியர்கள் பிடித்து சித்ரவ தை செய்துள்ளனர். சொல்ல முடியாத கோலத்தில் ஈரமான தரையில் அமர
வைக்கப்பட்டு இருந்த அவரை நோக்கிச் செல்லும் இராணுவ வெறி நாய்கள், ஒரு வெள்ளைத் துணியை எடுத்து இசைப்பிரியாவின் உடலில் போர்த்தி அழைத்துச் செல்வது போன்று, பதற வைக்கும் கொடூர காட்சிகள் அதில் இடம் பெற்று உள்ளன.
அப்போது இராணுவத்தைச் சேர்ந்த ஒருவன் “இவர்தான் பிரபாகரன் மகள்” என் று கூறுவதும், இசைப்பிரியா அதை மறுக்கும் குரலும், அந்த காட்சியில் பதி வாகி இருக்கிறது. இராணுவ வெறி நாய்களால் கடித்துக் குதறப்பட்ட இசைப் பிரியா சிதைக்கப்பட்டு, பிணமாகக் கிடக்கிறார். சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட இசைப்பிரியா தொடர்பான காணொளிக் காட்சி, அந்நிறுவனம் வெளியிட்ட ஐந்தாவது ஆதார ஆவணம் ஆகும்.

2009 ஆம் ஆண்டு ஆகஸ்டு 25 ஆம் தேதி, சேனல்-4 முதன் முதலில் வெளி யிட் ட காணொளி காட்சியில் எட்டுத் தமிழ் இளைஞர்களின் கைகள் பின்னால் கட் டப்பட்டு,இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சியை வெளியிட்டது. அவர்களை நிர்வாணப்படுத்தி, கண்கள் கட்டப்பட்ட நிலையில், சிங்கள இரா ணுவ வெறியர்கள் பின்னாலிருந்து பூட்ஸ் காலால் எட்டி உதைத்து, பின்னந் தலையில் சுட்டுக் கொன்ற கொடூரமான காட்சியும், பல கைதிகள் கொல்லப் பட்டு, உடல்கள் சிதறிக்கிடக்கும் காட்சியும் இடம்பெற்று இருந்தன. இந்த காணொளி காட்சியையும் ராஜபக்சே அரசு போலியானது என்று மறுத்தது.ஈழத் தமிழர்கள் இலட்சக் கணக்கில் படுகொலை செய்யப்பட்டபோது, ராஜபக்சே வுக்கு அனைத்து உதவிகளையும் செய்து,காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்று, நடந்த கொடுமைகளை எல்லாம் பதவிப் பல்லக்கில் உட்கார்ந்துகொண்டு வேடிக்கை பார்த்த அப்போதைய முதல்வர் கருணாநிதி, சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிப் படங்களை ‘இது பழைய படங்கள் போல இருக்கின்றன’ என்று மனிதாபிமான உணர்ச்சி சிறிது மின்றி வர்ணித்ததை எப்படி தமிழினம் மறக்க முடியும்? மன்னிக்க முடியும்?
இப்போது இசைப்பிரியா கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகளைப் பார்த்து ‘ஒப்பாரி நடிப்பை’ அரங்கேற்றுகிறார்.

இசைப்பிரியா கொல்லப்பட்ட காலத்திலும், இலட்சக் கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட காலத்திலும் மத்திய அரசின் பங்காளியாக தமிழ்நாட் டில், டெல்லியின் கங்காணியாக ஆட்சிப் பீடத்தில் இருந்த கருணாநிதி, ‘கோ மா’வில் கிடந்தாரா? கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் நியாய மான கேள்விக்கணை இது. பதில் கூற முடியுமா?

2010 டிசம்பர் 2 இல் சேனல்-4 தொலைக்காட்சி இரண்டாவது காணொளி படத் தை வெளியிட்டது. அதில் படுகொலை செய்யப்பட்ட கைதிகளின் எண்ணற்ற
நிர்வாண உடல்கள் சிதறிக் கிடந்தன. அவற்றுள் ஒரு சிறுவனின் உடலும்,
பெண்ணின் உடலும் காணப்பட்டது. அந்த பெண் உடல், தொலைக்காட்சிகளில்
செய்தி வாசிப்பாளராக இருந்த இசைப்பிரியாவின் உடல் என்று அடையாளம்
காணப்பட்டது. இசைப்பிரியா சிங்கள இராணுவ பாதகர்களால் கற்பழிக்கப் பட் டு, கொல்லப்பட்டாள். பின்னர் நிர்வாண கோலத்தில் சகதியிலே உடலைத் தர தரவென்று இழுத்துச் சென்று, எப்படி பாலியல் கொடுமை செய்தோம் என்பதை யும் கேவலமான வார்த்தைகளால் சிங்கள ராணுவ வெறியர்கள் பேசிக்கொள்  ளும் காட்சிகளும் அதில் இடம் பெற்றிருந்தன. இந்த இரண்டாவது கா ணொ ளிக் காட்சியின் தொடர்ச்சியைத்தான் தற்போது சேனல்-4 வெளியிட்டுள் ளது.

2012 ஆம் ஆண்டு, மார்ச்சு 14 ஆம் நாள், சேனல்-4 தொலைக்காட்சியில், ‘இலங் கையின் கொலைக்களங்கள் தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்’ என்ற ஆவ ணப்படம் வெளியானது. இதில் முதல் ஆவணப்படம் (2010 மார்ச்சில் வெளியா னது) முன் வைத்த போர்க்குற்ற ஆதாரங்களின் தொடர்ச்சியாக மேலும் பல ஆதாரங்களை முன் வைத்தது.

2013 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் சேனல்-4 வெளியிட்ட காணொளி காட்சி கள் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாவீரர் திலகம் பிரபாகர னின் இளைய புதல்வர் 12 வயது பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலை
செய்யப்பட்டது தொடர்பான ஒளிப்படம் தான் அது. பால் மணம் மாறா அந்தப்
பாலகனை உளவியல் சித்ரவதைக்கு உட்படுத்தி, அரை நிர்வாணப்படுத்தி, அ வரது பிஞ்சு உடலில் ஐந்து தோட்டாக்களைச் செலுத்தி, அந்த உடல் தரையில்
கிடக்கும் காட்சிகள் இதயம் உள்ளோரை எல்லாம் உலுக்கியது.

சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிக்காட்சிப் படங்கள் அனைத் தும் உண்மையானவை என்பதை ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதியான கிறிஸ் டோபர் ஹெய்ன்ஸ் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தாக்கல் செய்த அறிக் கையில், தெளிவுபடுத்தி இருக்கின்றார்.சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணங்களை ஆய்வு செய்த தடவியல் நிபுணர் பேராசிரியர் டெரிக் பெளன் டர், கேணல் ரமேஷ் கொல்லப்பட்ட ஒளிக்காட்சி, ஒரு போராளி குழியினுள்
வைத்துக் கொல்லப்படும் காட்சி, இசைப்பிரியா உள்ளிட்ட பெண் போராளிகள்
கொல்லப்பட்ட காட்சி, பின்னந்தலையில் போராளிகள் சுட்டுக்கொல்லப்பட்ட
காட்சி, சிறுவன் பாலச்சந்திரன் அவரது ஐந்து பாதுகாவலர்களும் கொல்லப்பட் ட காட்சி,இவை அனைத்தும் ஒளிப்பதிவுகளில் ஒத்த தன்மையினை கொண் டி ருப்பதைப் பார்க்கும்போது, பிடிபட்ட அத்தனை தமிழர்களையும் திட்டமிட்டு, மேலிருந்து ஒருங்கிணைக்கப்பட்ட முறையில், கீழ் அணிகள் வரையிலும் இலங்கை அரசு திட்டமிட்டு படுகொலை செய்திருப்பது தெரிகிறது என்று கூறி இருக்கின்றார்.

இசைப்பிரியா தமது ‘அகல்’ என்ற நான்கு மாத பெண் குழந்தையை விமானக்
குண்டு வீச்சுக்கு பலி கொடுத்துவிட்டு ஓடியபோது, சிங்கள இராணுவம் பிடித் தது.சீரழித்து கொன்று போட்ட காட்சிகளைக் கண்டு நம் இரத்தம் கொதிக்கிறது.
ஈழத்தமிழர்களின் மண்டை ஓடுகளின் மீது போடப்பட்டுள்ள மேடையில்
காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நவம்பர் 15 இல் கொழும்புவில் நடைபெற
இருக்கின்றது. ராஜபக்சேவைக் காப்பாற்ற கூட்டுக் குற்றவாளியான இந்தியா தான் காமன்வெல்த் மாநாட்டை கொழும்புவில் நடத்த ஏற்பாடு செய்து இருக் கிறது என்று மறுமலர்ச்சி தலைவர் வைகோ குற்றஞ்சாட்டி இருக்கிறார்.இலங் கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளை இந்தியா வேடிக்கை பார்த்தது.
ராஜபக்சேவுக்கு உதவி புரிந்தது.

சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையின் போர்க்குற்றங்கள்
தொடர்பான ஆவணப்படங்களின் உண்மைத் தன்மைகளை அறிந்த போதும்,
இந்தியா, இக்கொடூரங்களில் ஈடுபட்ட ராஜபக்சே அரசைக் கண்டித்தது இல் லை.ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், ஜி.கே.வாசன் போன்ற மத்திய அமைச் சர்கள் தனிப்பட்ட முறையில் கண்டிக்கிறார்களே தவிர, இந்திய அரசின் சார் பில் இந்த நிமிடம் வரை ராஜபக்சே கூட்டத்தை கண்டனம் செய்து ஒரு வரி அறிக்கை கூட வரவில்லை. இதிலிருந்து தெரிவது என்ன? தமிழ்நாடே கொந்த ளித்து எழுந்தால் கூட காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு, தமிழ் மக்களின் உணர்ச்சிகளை மதிக்கத் தயாராக இல்லை.

பிரதமர் பொறுப்பில் இந்திராகாந்தி அம்மையார் இருந்தபோது, மாநிலங்கள வையில் தலைவர் வைகோ அன்று கேட்டார், தமிழர்களின் உயிர் பெரிதா? இலங்கையில் உறவு பெரிதா? என்று. 

இன்றும் அதே வினாவை எழுப்ப வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம்.
தமிழர்களின் உணர்வை விட, ராஜபக்சேவின் உறவு வேண்டும் என்று டெல்லி
கருதுமானால், டெல்லியின் உறவு எங்களுக்குத் தேவையா? என்று வருங் காலத் தமிழ் இளைஞர் கூட்டம் சிந்திக்கும் காலம் வந்துவிடும். நாடாளுமன் றத்தில் தலைவர் வைகோ அன்று கூறியது நடந்துவிடும் என்பதை எச்சரிக்க வேண்டியது நமது கடமை ஆகும்.

வியட்நாமில் அமெரிக்கப் படையின் குண்டுவீச்சில் 13 வயது சிறுமி, உடலில் பற்றி நெருப்போடு ஓடிய காட்சிகள் உலகத்தை உலுக்கியது. வியட்நாமில்
அவமானகரமான தோல்வியுடன் அமெரிக்கா வெளியேறியது. தமிழ் ஈழத்தில்
கொடுங்கோலன் ராஜபக்சே, சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில்
நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். தமிழின படுகொலைக்கு துணை போன காங்கிரஸ் கட்சியும், இனத்துரோகிகளும் வரலாற்றின் குப்பைத் தொட் டியில் தூக்கி எறியப்பட வேண்டும். அதற்கான வஞ்சினம் உரைப்போம்! ஈழத் திற்கான பொதுவாக்கெடுப்பு நடைபெற்று பூமிப்பந்தில் தமிழ் இனத்துக்கொரு தாயகம் மலர கடமை ஆற்றுவோம்.

No comments:

Post a Comment