Tuesday, November 5, 2013

வைகோவின் குற்றம் சாட்டுகிறேன் -பகுதி 29

நாள்:-11.09.2008

இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் கேடு செய்யும் இந்திய அரசு!

அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

இலங்கைத் தமிழர்கள் மீது மிருகத்தனமாகத் தாக்குதல் மேற்கொள்ளும் இலங் கை இராணுவத்தினருக்கு அக்கிரமமாக உதவி புரிந்து வரும் இந்திய இராணுவ அதிகாரிகள், தொழில்நுட்பப் பொறியாளர்கள் ஆகியோரது ஈடுபாட் டை, தாங் கொணாத் துயரத்தோடும், மனவேதனையோடும் நான் கண்டனம் செய்கி றேன். இராஜபக்சேயின் இனவாத அரசு, இலங்கைத் தமிழர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் தொடுத்து தமிடிந இனத்தையே அழித்து ஒழிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சி அமைத்தவுடன், இலங்கை அரசு டன் பாதுகாப்பு ஒப்பந்தம் போடுவதற்கு, கிட்டத்தட்ட இறுதி முடிவையே எடுத் தது. அந்தக் காலகட்டத்தில், மறுமலர்ச்சி தி.மு.கழகம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்று இருந்தது. இலங்கை அரசோடு பாதுகாப்பு ஒப்பந் தம் ஏற்படுத்திக் கொள்வது, மன்னிக்க முடியாத, பேராபத்தை விளைவிக்கும் என்பதைத் தங்களிடம் நேரடியாக விரிவாகவும்,விளக்கமாகவும் கோரிக்கை களை நான் வைத்தபோது, இலங்கை அரசோடு எந்தவித பாதுகாப்பு ஒப்பந்த மும் ஏற்படுத்திக் கொள்வது இல்லை என்று தாங்கள் முடிவு எடுத்தீர்கள்.

ஆனால், உயர்நிலையில் உள்ள அதிகாரிகள், குறிப்பாக தேசிய பாதுகாப்பு
ஆலோசகர், இலங்கை அரசோடு திட்டமிட்டு இரகசிய உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டு, இந்திய விமானப் படையின் ராடார்களையும், இராணுவத் தளவா டங்களையும் இலங்கை அரசுக்கு அளிக்க ஏற்பாடு செய்தார். அதை உங்கள் அரசு நிறைவேற்றியது. நான் தங்களை நேரில் சந்தித்து இலங்கை அரசுக்கு எந்தவித இராணுவ உதவியும் செய்ய வேண்டாமென மீண்டும் மீண்டும் வலி யுறுத்தியும், எனது வேண்டுகோள்கள் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசப்பட் டன என்பதை மிகுந்த வருத்தத்தோடு குறிப்பிட விரும்புகிறேன்.

அப்பாவித் தமிழர்கள் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தை
களும், உண்ண உணவும், மருத்துவ வசதியும் இன்றி சாவு என்ற படுகுழிக்குள்
தள்ளப்பட்டு உள்ளார்கள். ஈவு இரக்கமும், மனிதாபிமானமும் இந்திய அரசால்
குழி தோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டதா என்று தங்களைக் கேட்கிறேன்?

இது மகாத்மா காந்தி பிறந்த மண்ணா? இது பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த மண்ணா? இது திருமதி. இந்திராகாந்தி பிறந்த மண்ணா? இல்லை, இல்லை. 

ஈழத்தமிழர்களுக்காகத் தமிழகத்தில் திரட்டப்பட்ட உணவுப் பொருள்களையும், மருத்துகளையும்,பன்னாட்டுச்செஞ்சிலுவைச் சங்கத்தின் வழியாக அவர்களுக் குக் கொடுத்து, ஈழத்தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கும் முயற்சியை, இந்திய அரசாங்கம் கடுகு அளவும் மனிதாபிமானம் இன்றி,தொடர்ந்து மறுத்து வரு கிறது.

நான் தங்களுக்கு எழுதிய முந்தைய கடிதங்களில், இந்திய அரசாங்கம் அனைத் து இராணுவ உதவிகளையும், மிகக் குறைந்த வட்டிக்கான கடன் வசதியையும் இலங்கை அரசுக்கு அளித்து, ஈழத்தமிழர்களை அடியோடு அழிக்கும் இலங்கை அரசின் பாவகரமான நயவஞ்சகமான செயல்பாடுகளுக்குத் துணைபோகிறது என்று குற்றம் சாட்டி இருக்கிறேன்.

இப்பொழுது இந்திய அரசாங்கம் தமிழர்களுக்கு எதிரான மன்னிக்க முடியாத
துரோகத்தை வெளிப்படுத்தி கையும் களவுமாகப் பிடிபட்டு உள்ளது.

2008, செப்டம்பர் 8ஆம் தேதி நள்ளிரவுக்குப் பின் அதிகாலை வேளையில், விடு தலைப்புலிகள், வன்னிப்பகுதியில் ஜோ[ம் முகாம் அமைந்து உள்ள இடத்தில் இலங்கை இராணுவத் தலைமையகத்தின் மீது வான்படைத் தாக்குதலையும், தரைப்படைத் தாக்குதலையும் மேற்கொண்டார்கள். இந்தத் தாக்குதலில், விடு தலைப்புலிகளின் விமானப்படை விமானங்கள், இலங்கை விமானப்படையின் ராடார் சிஸ்டத்தை முற்றிலும் அழித்தன.இந்த ராடார் சிஸ்டத்தின் கட்டமைப் பு இந்திய அரசால் இலங்கைக்கு அளிக்கப்பட்டது ஆகும்.

விடுதலைப்புலிகளின் இந்தத் தாக்குதலில், இந்திய இராணுவப் பொறியாளர் களான ஏ.கே. தாகுர் மற்றும் சிந்தாமணி ரெளட் ஆகியோர் படுகாயமுற்றனர். மேலும், இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்கள் 265 பேர், இலங்கை இராணுவத் துக்கு உதவி செய்து வருவதாக, இந்தியத் தூதரகத்தின் பிரதிநிதி ஒருவர் தெரி விக்கிறார்.

ஈழத்தமிழர்களுக்கு எதிராக,கொடூரமான முறையில் திட்டமிட்டே,ஐக்கிய முற் போக்குக் கூட்டணியின் இந்திய அரசு, இலங்கை இனவாத அரசுக்கு அனைத்து இராணுவ உதவிகளையும் செய் து வருகிறது; இந்திய இராணுவ அதிகாரி களை, கூலிப்படைகளைப்போல இலங்கை அரசுக்கு ஆதரவாக ஈடுபடுத்து கிறது என்று குற்றம் சாட்டுகிறேன்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை மேற்கொள்ளும் மிருகத் தன மான தாக்குதல்களையும், இலங்கைக் கடற்படையின் செயல்பாடு களையும் கண்டு கொள்ளாமல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வேண்டுமென்றே கண்மூடி, பாராமுகமாக இருந்து வருகிறது என்று குற்றம் சாட்டுகிறேன்.

இலங்கைத் தீவில் ஏற்படும் ஒவ்வொரு உயிர் இழப்புக்கும், அங்கு தமிழர்கள்
சிந்தும் ஒவ்வொரு சொட்டு இரத்தத்துக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
அரசுதான் பொறுப்பு ஏற்கவேண்டும், பதில் சொல்ல வேண்டும்.

மேற்கூறப்பட்ட துரோகங்களால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தமிழர் கள் மனதில், வெறுப்பையும், வேதனையையும், அதிருப்தியையும் விதைக் கின்றது.அதன் விளைவு,இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் என்பதை மிகுந்த மனவேதனையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய அரசாங்கம், உடனடியாக இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களையும்
இராணுவ அதிகாரிகளையும் இலங்கையில் இருந்து திரும்ப அழைக்க வேண் டும் என்றும், இலங்கை அரசுக்கு நேர்முகமாகவோ,மறைமுகமாகவோ செய்து வரும் இராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் அன்புள்ள,

வைகோ

No comments:

Post a Comment