Saturday, November 9, 2013

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நிகழ்ச்சி

தஞ்சையில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவில் பழ.நெடுமாறன், #வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த 2009–ம் ஆண்டு இலங்கையில் நடந்த போரில் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதன் இறுதிகட்ட போரில் உயிரிழந்தவர் களின் நினைவாக தஞ்சையை அடுத்த விளார் கிராமம் பைபாஸ் ரோடு அருகே உலக தமிழர் பேரமைப்பு சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் 2½ ஏக்கர் பரப் பளவில் கட்டப்பட்டு உள்ளது.

அதன் திறப்பு விழா கடந்த 6–ந் தேதி நடந்தது. விழாவை முன்னிட்டு அதன் தொடர் நிகழ்ச்சிகள் நேற்று (08.11.13) மாலை நடந்தது. விழாவிற்கு புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் தலைமை தாங்கினார். திறப்பு நிகழ்ச்சிக்குழு தலைவர் அய்யனாபுரம் முருகேசன் வரவேற்றார். விழாவை காசிஆனந்தன் தொடங்கி வைத்தார்.
விழாவில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், வணி கர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன், வக்கீல் தஞ்சை அ.ராமமூர்த்தி,இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில துணை செயலாளர் சி.மகேந் திரன், தமிழ்த் தேச பொதுவுடமை கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன், டாக்டர் அ.தாயப்பன், சுப.உதயகுமார், இரா.இளவரசு உள்பட பலர் பேசினர். முடிவில் உலக தமிழர் பேரமைப்பு அறக்கட்டளை பொருளாளர் இளவழகன் நன்றி கூறினார்.

விழா தொடர்ந்து இன்றும், நாளையும் நடக்கிறது.

முள்ளிவாய்க்கால் முற்றத்தினை வரைந்த ஓவியர்,தச்சன் பொறியியலாளர் உள்ளிட்டவர்களுக்கு பட்டம் சூட்டப்பட்டு வைகோ அவர்களினால் மதிப்பளிக் கப்பட் டுள்ளதுடன் தீக்குளித்து உயிரிழந்த ஈகிகளின் குடும்பங்களுக்கு உதவி தொகையினை வழங்கி வைத்துள்ளார். முள்ளிவாய்க்கால் முற்றத்தின் ஓவி யத்தினை வரைந்த ஓவியர் சந்தாணம் அவர்களுக்கு ஓவியக்கனல் என்ற பட் டம் சூட்டி மதிப்பளிக்கப்பட்டுள்ளது முள்ளிவாய்க்கால் ஓவியத்தின் தச்சு வேலையினை புரிந்த தச்சன் முருகனுக்கு தமிழ்பெரும் தச்சன் என்ற பட்டம் சூட்டி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் முற்றத்தினை கட்டுவதற்கான பொறியில் பணியினை மேற்கொண்ட பொறியிலாளர் ஜேன் கெனடிக்கு செந்தமிழ் பொறியியலாளர் என்ற பட்டம்சூட்டி மதிப்பளிக்கப்பட்டுள்ளது அத்துடன் புலம்பெயர் தமிழர் ஒருவரின் நிதிஉதவியுடன் தமிழினத்திற்காக தீக்குளித்து உயிரிழந்த ஈகிகளின் குடும்பங்களுக்கு தலா பத்தாயிரம்ரூபா பணத்தினை வைகோ அவர்கள் வழங்கி மதிப்பளித்துள்ளார்கள். இன்நிகழ்வினை தொடர்ந்து வைகோ அவர்கள் சிறப்புரை ஆற்றிக்கொண்டுள்ளார்.





No comments:

Post a Comment